அவர்கள் ஐந்தாறு பேர். திருமண். வைணவ கறை வேஷ்டி. எல்லோரும் ‘வந்தனம்’ சொன்னர், ஒருவரை தவிர. அவர் ‘பரப்ப்ரமமாக’ இருந்தார். வயதானவர். ‘இவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. எல்லா டாக்டரையும் பார்த்தாச்சு. இப்போ, குணசீலம், சோளிங்கர், வரதர்,.. கோவில் எல்லாம் போயிட்டு வரோம். பெரியவாதான் குணப்படுத்தணம்’. ‘விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண க்ரமத்திலிரிந்து ‘அச்சுதானந்த கோவிந்த நமோ சரண, பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோக, சத்யம் சத்யம் வதாம்யஹம்‘ என்ற ஸ்லோகத்தை 108 முறை சொல்லச் சொன்னார். அடுத்தது அவர் சொன்னதுதான் அனைவரயும் அதிர்ச்சி அடைய வைத்தது. பயில்வான் போன்ற ஒருவரை கூப்பிட்டு, ஓங்கி ஒரு குட்டு அக்கிழவரின் தலையில் குட்டச் சொன்னார். அடுத்த நொடி அப்பெரியவர் ‘ஏன்டா ரகு, நாம எங்க இருக்கோம், இது மடம் மாதிரி தெரியறது’ என்றார். எல்லோருக்கும் கண்களில் குளம் கட்டியது. ‘பெரியவா காப்பாத்திட்டேள்’. அவர் எப்போதும் போல் ‘நான் என்ன பண்ணினேன், நீங்க திவ்ய தேசம் போயிட்டு வந்திருக்கேள். அந்த பெருமாள் தான் காப்பாத்தி இருக்கார்’ என்றார்.
No comments:
Post a Comment