கட்டுரையாளர்;டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு)
தொகுப்பு;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாரயணன்.
நன்றி;வானதி பதிப்பகம்.
ஒருசமயம் திருப்பதியில் ஏழுமலையானைத்
தரிசித்து பேரானந்தம் அடைந்தேன். அரசு உயர்
அதிகாரியாதலால், வேங்கடவன் மஹாப்ரசாதம்
(ஸ்ரீபாதரேணுகம்) சந்தனம் தந்தார்கள். அன்று
முன்னிரவிலேயே சிவாஸ்தானம் திரும்பி
குருதேவருக்குப் பிரசாதங்களை அர்ப்பணித்தேன்.
அகமகிழ்ந்து எடுத்து அணிந்தார்.
நான் சொன்னேன், "வேங்கடவன் எப்போதும்
ஏராளமான ஆபரணங்களை அணிந்து குண்டாக
குட்டையாகத் தோற்றமளிப்பார். இன்று
புருஷ ஸூக்தம்-திருநாமங்கள் ஜபித்து
அபிஷேகம் செய்தபோது ஒல்லியாக
நெடிதுயரமாகக் காட்சி தந்தார்.எப்போதும்
நிலையற்றுத் தாவிக் கொண்டிருக்கும் என்
மந்தி மனத்தில் இன்று அசாதாரணமாக ஒரே
பிரார்த்தனை நிறைந்திருந்தது.
ஸ்ரீ பெரியவாள் கேட்டார்; நீ தமிழில் கவிஞன்
ஆயிற்றே.அபிஷேகம் என்றா,அங்கே சொன்னார்கள்?"
"திருமஞ்சனம் என்றார்கள்" எனப் பதில் பகிர்ந்தேன்.
தொடர்ந்து, "திருமஞ்சனம் என்றால் என்ன தெரியுமா?"
என்று அருளாளர் வினவினார்.
"பெரியவாள் சொல்லித் தெரிந்துகொள்கிறேன்"
என்று பணிவுடன் கூறினேன்.
"அஞ்சனம்னா எண்ணெய் தடவறது,
மெய் அஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் தடவறது.
திருமெய் அஞ்சனம்னா பகவான் திருமேனிக்கு
எண்ணெய் தடவறது.
திருமெய் அஞ்சனம்தான் மருவி திருமஞ்சனம்
ஆயிடுத்து" என விளக்கினார்.
இரு செவிகள் வழியே இதயத்தில் இன்பத்தேன் பாய்ந்தது.
அருமை
ReplyDelete