Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, May 29, 2014

மனச்சுத்தமே முக்கியம்

* பூங்கொடி மரத்தை பற்றிப் படர்வது போல, கடவுளின் திருவடிகளை நம்பிக்கையோடு பக்தன் பற்றிக் கொள்ள வேண்டும்.
* எமன் எப்போது வேண்டுமானாலும் நம்மை நெருங்கி விடலாம். அதற்குள் கடவுள் திருநாமத்தை ஜெபிக்கத் தொடங்குங்கள்.
* கடவுள் நல்ல புத்தியும், அதற்கேற்ற சக்தியும் நமக்கு கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு நல்லதைச் செய்யுங்கள்.
* எந்த முறையில் வழிபட்டாலும் கடவுள் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், மனத்தூய்மை அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்

Source: Dinamalar

Wednesday, May 28, 2014

நிம்மதி நம் கையில்

* பண்டிதர் முதல் பாமரர் வரை, 'எதிலும் கணக்காயிருக்கணும்' என்று அடிக்கடி சொல்கிறார்கள். இது பணத்தை மட்டும் குறிப்பதல்ல, பேச்சையும் குறிக்கிறது
* பேச்சைக் குறைத்தால், நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நிம்மதியை வரவழைத்துக் கொள்ள முடியும்.
* பண விஷயத்தில் கணக்காக இருக்க விரும்புகிறோம். வியாபாரத்தில் பேரம் பேசி சாமர்த்தியமாக வாங்குவது மட்டுமே கணக்காக இருப்பதாகாது.
* நியாயமான வழியில் பணம் சம்பாதிப்பதும், அதை பயனுள்ள வழியில் செலவழிப்பதுமே போதுமானது.
- காஞ்சிப்பெரியவர்

Tuesday, May 27, 2014

அன்னதானம் செய்யுங்க

அன்னதானத்திற்கு என்ன சிறப்பு என்றால், இதில் மட்டும் தான் ஒரு மனிதனை முழுமையாகத் திருப்திபடுத்த முடியும்.
* உயிரோடு உடம்பைக் காப்பது அன்னம். அதனால் தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்கிறார்கள்.
* அம்பிகையே அன்னதானத்தின் மகிமையை நிலைநாட்டும் விதத்தில் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தருளியிருக்கிறாள்.
* ஒருவன் தனக்காக மட்டும் உணவு தேடக் கூடாது என்பதை கீதையில் கிருஷ்ணர் உபதேசித்துள்ளார்.
- காஞ்சிப்பெரியவர்

காஞ்சி மகாபெரியவர் தியானம் செய்வதற்காக, காஞ்சி அருகிலுள்ள தேனம்பாக்கத்திற்கு செல்வது வழக்கம். ஒருமுறை, அங்கு பக்தர்கள் ஏராளமாக கூடியிருந்தனர். அப்போது, பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், தன் நண்பர் கவிஞர் நெமிலி எழில்மணியுடன் அங்கு வந்தார். தான் அங்கு வருவது தெரிந்தால், கூட்டம் கூடிவிடக்கூடாது என்பதால், யாருக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லாமல் வந்து விட்டார். தனது உதவியாளரிடம் கூட, காஞ்சிபுரம் செல்வது பற்றி அவர் சொல்லவில்லை. தான் பாடிய பாடல் அடங்கிய இசைத்தட்டுகளை பெரியவரிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது நோக்கம்.
பெரியவர் அப்போது பூஜையில் ஈடுபட்டிருந்ததால், திரை போடப்பட்டிருந்தது. ஒரு சில பக்தர்களே பெரியவரைக் காண காத்திருந்தனர். அவர்கள் வரிசையில் சீர்காழியும் சேர்ந்து கொண்டார். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அனைவரும் பெரியவர் தரிசனம் தர வெளியே வருகிறார் என எண்ணி தயாராக நின்றனர். ஆனால், பெரியவரின் சீடர் ஒருவர் மட்டுமே அங்கே வந்தார்.
கூட்டத்தினரை நோக்கி, ""இங்கே சீர்காழி கோவிந்தராஜன் வந்திருக்கிறாரா?'' எனக் கேட்டார். பரபரப்புடன் எழுந்த சீர்காழி, ""இதோ இருக்கிறேன்'' என்று பதிலளித்த படி அவர் முன் வந்தார்.
""உங்களை மகாபெரியவா பாடச் சொன்னா'' என்று சொல்லி விட்டு உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டார். மெய் சிலிர்த்துப் போய் விட்டார் சீர்காழி. தான் தேனம்பாக்கம் வந்து, ஒரு சில நிமிடங்கள் ஆகாத நிலையில், அதிலும் யாருக்கும் தெரியாத நிலையில், உள்ளே பூஜை செய்யும் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?'' என்று பரவசப்பட்டார். தான் பாடுவதற்கு, பெரியவர் உத்தர விட்டதை எண்ணி மகிழ்ந்தார்.
""ஹிமாத்ரிசுதே பாஹிமாம்'' என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். தொடர்ந்து பெரியவர் மீது, தான் பாடிய பாடல்களையும் பாடினார். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. அதுவரை, சீர்காழியின் இசைமழையில் நனைந்து, இதயம் குளிர்ந்த பெரியவர், பூஜை முடித்து, காவியுடையில் வெளியே வந்தார். சீர்காழி கோவிந்தராஜன் அவரருகே சென்று, இசைத்தட்டைக் கொடுத்து, ஆசி பெற்றார். பின், ஆனந்தக் கண்ணீருடன் புறப்பட்டார்.
சீர்காழி கோவிந்தராஜனின் மகன் டாக்டர் சிவசிதம்பரம் இந்த சம்பவத்தை இசை மேடைகளில், அடிக்கடி சொல்லி மகிழ்வதுண்டு.
சீர்காழியைப் பாடச் சொல்லி உத்தரவிட்ட காஞ்சிப்பெரியவர், ஞானசக்தியால் அனைத்தையும் அறியும் திறமை பெற்றிருந்தார் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு

Sunday, May 25, 2014

சத-ப்ராம்ஹண போஜனம்

தரணிபுகழ் தஞ்சையில் தனிகர் ஒருவரிருந்தார். அவருக்கு ஸ்ரீபெரியவாளிடம் அபார பக்தி.மிகுந்தஆச்சார சீலர்.ஒருமுறை காஞ்சியில் பெரியவாளைத் தரிசித்து சதப்ராம்ஹண போஜனம் செய்யவேண்டும், பெரியவா ஆசீர்வாதம் செய்யணுமென்றார்.
பெரியவா “சதப்ராம்ஹண போஜனம்னா பூணல் போட்டுண்டிருந்தா போறுமோன்னோ?” என்றார்.
வந்தவரோ அப்படியில்லை அத்யயனம் செய்தவர்கள் கிடைத்தால் உத்தமமாயிருக்குமேன்னு.என இழுத்தார்.பெரியவா, “அதான் அதான்சரி. எல்லாரும் போடறா!அதுக்குபேர் அன்னதானம்.ப்ராம்ஹணபோஜனம்னாலே வைதீகாளுக்குத்தான் போடணும். வேதம் தெரிஞ்சுண்டவாதான் ப்ராம்ஹணா!பூணல் மட்டும் போட்டுண்டா போறாது,ஒரு ருத்ரம், சமகம், புருஷஸுக்தமாவது தெரிஞ்சுக்கணும் என்றார்.

சரி! நன்னா போடு! வேதப்ராம்ஹணா குக்ஷில விழற ஒவ்வொரு அன்னமும் உனக்கு ச்ரேயஸை கொடுக்கும், பக்ஷணங்களெல்லாம் போடு! என்றதும் தனிகருக்கு சந்தோஷம்.பெரியவா ஆக்ஞைபடி அப்படியே செய்றேனென்றார்.உங்க ஊர்லயே பண்ணப்போறயோ!என்றார் பெரியவா.பெரியவா எங்க உத்தரவு பண்றாளோ அங்கயே செய்ய சித்தமாயிருக்கேனென்றார்.திருவிடமருதூர்ல பண்ணு! முடிஞ்சா வர பாக்கறேன்!என்றதும் வந்தவருக்கோ பூமி நழுவிற்று.

இப்படியொரு பாக்யமா!என கண்ணீர் மல்கியபடியே ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்.
பெரியவா சொன்ன திருநாளும் வந்தது.
ஏற்பாடுகள் மிகச்சிறப்பான முறையில் நடைப்பெற்றது. பெரியவா இங்கு வரப்போவதின் அறிகுறியும் தெரிந்தது. அனைவரும் வெகு உற்சாகமாய் பணி செய்தனர்.100 வேதப்ராம்ஹணர்கள் வந்தனர்.அவர்களுக்கு உயரிய முறையில் உபசாரம் செய்யப்பட்டது. பெரியவா வருகை! வேத கோஷம் விண்ணைப்பிளந்தது.
அவாளுக்கு இலை போடு என்றார். தஞ்சை மாவட்டமாச்சே, தாட்டு இலை போடப்பட்டது. பரிமாறினர். ராஜபோஜனமாகயிருந்தது. 5 வகை ஸ்வீட்.பேணி,லட்டு,அல்வா,போளி,மைசூர்பாக். இதை தவிர நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல். இதேபோல் எல்லாமும்.தனிகரின் கையோ முறம் போலுள்ளது.ரசம் போட்டு ஸ்வீட் போட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு அதன் மேல் உருக்கிய நெய் வார்க்கப்பட்டது. அனைவருக்கும் திணறியது.சாப்பிடவே முடியவில்லை.பின் வேண்டியவர்களுக்கு அன்னமிடப்பட்டு சந்திரன்போன்ற வெளுத்த தயிர் விடப்பட்டது.
இப்போது பெரியவா சாப்பிடுமிடத்திற்கு வந்தார். எங்கும் பரபரப்பு. பரிமாறும் அன்பர்களை விளித்து ஏதோ பேசினார்.
ஒருபெரிய சாட்டாங்கூடை நிறைய லட்டு கொண்டு வரப்பட்டது. அங்கே முன்னின்று, “எல்லார் எலேலயும் நவ்வாலு லட்டு போடு” என்றார்.
அனைவரும் முழித்தனர்.இலையிலேயே அதிகமாகயிருக்கிறது உபரியாக நாலு லட்டு வேற எப்படி சாப்பிடுவது.பெரியவா போடச் சொல்லி போட்டார்கள், எறிந்தால் பெரியவாளுக்கு மரியாதைகுறைச்சலாகிவிடும், சாப்பிடவோ வயிற்றில் இடமில்லை. செய்வதறியாது திகைத்தனர்.
இதை காண சகியாத கருணைக்கடல், ”முடிஞ்சா சாப்பிடுங்கோ முடியலைன்னா எறிஞ்சுடலாம் தோஷமில்லை என்றார்.
அப்பாடா! பெரியவாளே சொல்லிட்டா எறிஞ்சா தப்பில்லேன்னு!என்று சமாதானம் செய்து கொண்டு கொஞ்சம் போல எடுத்துக்கொண்டு எழுந்து விட்டனர்.
தனிகருக்கோ மிகுத்த வருத்தம் உபரியாக போடச்சொல்லி,அதை எறியவும் சொல்லிவிட்டாரே என.
பெரியவா தக்ஷிணை கொடுத்தபின் இலையெடுக்கலாமென உத்தரவிட்டார்.அதேபோல் சதப்ராம்ஹணர்களுக்கும் தக்ஷிணையளிக்கப்பட்டு, வாசனை தாம்பூலமும் கொடுத்து கௌரவமாக வழியனுபப்பட்டது.
பெரியவா தனிகரை விளித்தார்
எனக்கு 2 சாட்டாங்கூடை வேணும். ஒரு மொழுகினகூடை, ஒருமொழுகாத கூடையும் வேணுமென்றார்.
சடுதியில் கொண்டு வரப்பட்டது.
இப்போ ஒரு ஒத்தாச பண்ணுங்கோ எனக்கு,இந்த மொழுகின கூடைல லட்ட தவிர எறிஞ்சமீதியெல்லாம் ரெண்டு கையால வழிச்சுப்போடணும்.மொழுகாத கூடைல எச்ச எலல இருக்கற லட்டோட போடணும் சித்த பண்ணுங்கோ? என இறைஞ்சினார்.
அப்படியே செய்யப்பட்டது.மொழுகின கூடைய குப்பதொட்டில போடுங்கோ என்றார். அதுவும் செய்யப்பட்டது.
இந்த மொழுகாத கூடைய எடுத்துண்டு என்னோட வாங்கோ! நாலுபேர் போறும் கூட்டம் வேண்டாம்,அப்பா!நீ வா என தனிகரை அழைத்துக்கொண்டு தண்டத்தோடு புறப்பட்டார்.
விறு விறுவென உச்சி வெயிலில் காவேரிப்பக்கம் ஒடினார்.பெரியவா நடந்தால் நாம் ஒடணும், அவர் ஒடினால் நாம்? ஒருவாறு போய்ச் சேர்ந்தபின் தீர்த்தவாரி மண்டபத்தில் நின்றார்.
ஓ!ஷாமி ஷாமீ எங்கிருந்தோ குறவர்களின்கூட்டம் நம் சமயக்குரவரை மொய்த்துக்கொண்டது.
சாட்டாங்கூடையை மண் இல்லாத புல் தரயா பாத்து போடுங்கோ! என்றார்.
அருகிலிருந்த தனிகரை அழைத்து என்ன பாக்கற!சதப்ராம்ஹண போஜனம் குறவா போஜனமா முடிஞ்சுடுத்தேன்னா?ப்ராம்ஹணா குக்ஷிய ரொப்புன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா குறவா குக்ஷியும் என் கண்ணுல பட்டுடுத்து! என்ன பண்றது,நானோ சந்யாசி!எனக்கு எல்லாரும் சமம். நீயோ ரொம்ப ஆச்சாரம்,இவாளுக்கு கொடுன்னா சேஷமாயிடுமேன்னு தோணும்.இவாளுக்கு லட்டு வேணும்னா தனியா செஞ்சுருக்கலாமேன்னு படறதா?படும்!படும்!! ஆனா இவ்வளவு தரமும் ருசியும் வேண்டாமேன்னும் படும் சரிதானே? எச்சல்இலைல இருக்கற பதார்த்ததுக்கு சேஷம்கற தோஷம் போயிடறதோன்னோ! யார் கொடுக்கப்போறா இவாளுக்கு ஸ்வீட்டெல்லாம்,பரிஜாரகாள கேட்டேன் எது உபரியாயிருக்குன்னு,அவா லட்டு தான் மிஞ்சிப்போச்சுன்னா,அதான் ப்ராம்ஹணா எலல போடச்சொல்லி இவாளுக்கு கொடுத்தேன் உன் ஆச்சாரத்துக்கும் குந்தகமில்லாம! இப்படி செய்யலாமோன்னோ!
என்றதும் தனிகர் தடாலென வீழ்ந்தார். அங்கே மறைமுகமான அத்வைத பாடம் நடத்தபட்டதே என.

Friday, May 23, 2014

மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த சமயம், பூகோள ரீதியாக ஒரு பெரும் வறட்சியை நம்நாடு சந்திக்க நேர்ந்தது. வறட்சி என்றால் சாதாரண வறட்சி அல்ல… ஜனங்கள் எப்படி உயிர் வாழ்வார்களோ என்று அஞ்சும் அளவிலான வறட்சி. இதுபோன்ற வறட்சியும் இயற்கை சார்ந்ததே… இது ஒன்றும் நடந்துவிடக்கூடாத, நடக்க முடியாத ஒன்றல்ல.
ராஜாஜி ஆட்சிக்காலத்திலும் வறண்ட போது, மிகுந்த இறை நம்பிக்கையும் நேர்மையும் உடைய ராஜாஜி, இதுகுறித்து மிகவும் கவலைப்பட்டார். அப்போது வருணஜெபம் செய்தால் மழை பொழியும் என்று சட்டசபையிலேயே பேசப்பட்டது. அதற்கு எதிரான கருத்துகளும் பேசப்பட்டதாக தகவல்.
ஆனால், ராஜாஜி இறைவழிபாட்டை நம்பினார். அதிலும் இறங்கினார். மறுநாளே ஒரு பெரும் மழை பெய்யவும் நம்பிக்கை வலுவானது. ஆனால், அன்று இருந்த வறட்சிக்கு, ஒரு மழை எல்லாம் ஒரு மூலைக்குத்தான். ஆறுகளில் வெள்ளம் பாய்ந்து, ஏரி-குளங்கள் நிரம்ப வேண்டும் என்றால் பருவ காலம் முழுக்க தவறாமல் மழை பொழிய வேண்டும். அவ்வேளையில் பெரியவரிடமும் இதுகுறித்து ஆலோசனை கேட்கப்பட்டபோது, ‘பாரதம் படிப்பது – குறிப்பாக விராட பர்வதம் படிப்பது மிகுந்த நன்மையைத் தரும்’ என்றாராம்.
உடனேயே, அன்றைய வேத வித்தகரான வழுத்தூர் ராஜகோபாலசர்மா என்னும் அன்பர், தன் இல்லத்திலேயே பாரதம் படிக்கத் தொடங்கிவிட்டார். பாரதம் பதினெட்டு பருவங்கள் கொண்டது. அதை முழுவதுமாய் வாசித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும். ஞாயிற்றுக் கிழமைதோறும் அன்பர்கள் ஒன்றுதிரள வாசிக்கும் செயலும் தொடங்கியது.
கூடவே, சர்மாஜி ஒரு சங்கல்பமும் செய்துகொண்டார்.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் 18000 முறை பாராயணம் செய்துவிடுவது என்பதே அது!
நன்றாக கவனியுங்கள். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல… 18000 முறை! இதுபோக பாரதத்தின் பதினெட்டு பருவங்கள் எல்லாமே தேச நலனுக்காக… மழை வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; தர்மம் வாழ வேண்டும் – நீதி, நியாயம் விளங்க வேண்டும். வருங்காலம் மக்களுக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.
சரி; மழை பெய்ததா – வறட்சி நீங்கியதா என்கிற கேள்வியும் எழுகிறதல்லவா? அது எப்படி நீங்காமல் இருக்கும்? அன்று தர்ம தேவனாக ரிஷ்ய ஸ்ருங்கர் இருந்து தீர்த்தார் என்றால், இன்று பெரியவர்தானே அந்த இடத்தில் இருப்பவர். அவரே வழிகாட்டியபிறகு, வருணன்தான் வழிக்கு வராமல் போவானா? வானமும் பொழிந்து, பூமியும் மலர்ந்தது!
சர்மாஜியின் மகாபாரத வாசிப்பும் தொடர்ந்தது. நான்காவது வருடம் அது பதினெட்டாவது பருவத்தை அடைந்தது. இடையில் எவ்வளவோ தடங்கல்கள் வரப்பார்த்தது – பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டன. ஆனால், அவ்வளவையும் மீறி, ஞாயிறுதோறும், பக்தி சிரத்தையுடன் பாரதம் படித்து, சர்மாஜி கடந்துவிட்டார்.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் 18000 என்கிற அந்த அளவை நெருங்க ஆரம்பித்தது. இது ஒரு சாதாரண விஷயமல்ல. மிகப்பெரும் செயல்!
கல்கத்தா சேட்ஜி பதினெட்டு புராணத்தை வெளியிட்டு, மகா பெரிய வியாதியில் இருந்தே, விடுதலை பெற்றுக் கொண்டார். என்றால், இந்தச் செயலுக்கு எத்தனை பெரிய அனுக்கிரகம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திகன்கூட இப்படி ஒரு எத்தனத்தை கேள்விகேட்க யோசிப்பான். ஏனென்றால், இதன்பின்னால் அப்படி ஒரு நம்பிக்கை – அப்படி ஒரு முயற்சி ஒளிந்து கிடைக்கிறது. இதன் உச்சக்கட்டம்தான் நாம் அறியவேண்டிய முக்கிய விஷயமாகும்.
பன்னிரெண்டு கோடி முறை ராம நாமம் ஜெபித்தவருக்கு ஹனுமனின் தரிசனம் வாய்க்குமாம். பதினெட்டு கோடி முறை ஜெபித்தவருக்கு ராம தரிசனம் சித்தியாகுமாம். இது அனுமானமாய் சொல்லப்படுவதல்ல… நடந்திருக்கிறது. ராம தரிசனமும், ஹனும தரிசனமும் வாய்க்கப் பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.
என்றால், இந்த 18000த்துக்கு அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?
வந்தான் – பெரியவர் வடிவில்!
சர்மாஜி பதினெட்டாயிரத்தை நெருங்கிய சமயம், பெரியவர் சென்னையில் வந்து முகாமிட்டிருந்தார். சர்மாஜியும் அவரை சந்தித்து, தனது பாரத வாசிப்பையும், சஹஸ்ரநாமம் 18000த்தை தொட இருப்பதையும் கூறினார். பெரியவர் பூரித்துப்போனார். அந்த பதினெட்டாயிரக் கணக்கு, இங்கே என் எதிரிலேயே பூர்த்தியாகலாமா என்று கேட்டார். சர்மாஜிக்கும் பழம் நழுவி பாலில் விழுந்தது போலானது. அன்பர்களோடு கூடி, அங்கேயே பாராயணம் செய்து பூர்த்தி செய்தார். பெரியவரும் அன்றைய நிகழ்வில் பூர்ண கும்ப கலசத்தை, தன் கரம் தொட்டு ஆசீர்வதித்து தரவும் அது வினியோகமாயிற்று.
பாராயணம் புரிந்தவர்களுக்கு மடத்திலேயே பிரசாத போஜனம். சொல்லி வைத்த மாதிரி ஆனந்தம் ஆனந்தம் என்று வானமும் குதூகலித்தது. நனைந்து கொண்டுதான் போனார்கள்.
சர்மாஜியும் வீட்டை அடைந்தார்.
அதுவரை நடந்த பாராயணங்கள் எல்லாம் ஒரு லக்ஷ்மி நாராயணர் படத்தின் முன்தான் நடந்தது. நிறைவு பெரியவர் முன் நிகழ்ந்துவிட்டிருந்தது. அந்த நினைவுகளோடு அந்தப் படத்தை பார்த்து வணங்கினார்.
உள்ளே ஒரு சிறு நெருடல்.
இறுதிப் பாராயணத்தில் இந்த படம் இருந்திருக்கலாமோ? இவர் இடத்தில் பெரியவரே இருந்துவிட்டார். இருந்தாலும் சற்று நிரடியது. அந்த உச்சக்கட்டமும் இனிதான் வேலை செய்தது. மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து சர்மாஜியிடம், பெரியவர் உங்காத்துக்கு வரப் போறதா தகவல் சொல்லிவிட்டார்” என்றார்.
சர்மாஜி பாதாதி கேசம் சிலிர்த்துப் போனார். ‘என் வீட்டுக்கா… அவர் பாதம் இங்கே படப்போகிறதா? நான் அவ்வளவு புண்ணியசாலியா?’ – அவருக்குள் கேள்விகள் ஓடத் தொடங்கிவிட்டன.
சர்மாஜி வீடு மைலாப்பூரில்… வழியில் நாகேஸ்வரராவ் பூங்கா, லஸ் கார்னர், கற்பகாம்பாள் நகர், விவேகானந்தர் கல்லூரி தெரு வழியாகத்தான் வந்தாக வேண்டும். விஷயம் பரவி ஜனங்களும் அவரை தரிசனம் செய்யத் தயாராகிவிட் டனர்.
சர்மாஜி என்ன செய்தார் தெரியுமா?
அந்த லட்சுமி நாராயணர் படத்தை வீட்டு வாசலில் ஒரு மேஜை போட்டு, அதன்மேல் வைத்து மாலை போட்டு ஒரு விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டார்.
அதேசமயம், பெரியவரின் இந்த வருகை தெரிந்து, நாத்திக வாதிகளும் தங்கள் எதிர்ப்புணர்வை காட்டும் விதமாய், கறுப்புச் கொடி மற்றும் தங்கள் வாதங்களுடன் நிற்பதாக தகவல்.
பெரியவரும் புறப்பட்டுவிட்டார்.
இந்த நாத்திகவாதிகள் பார்வையில் படாமல், அவரை அழைத்துச் செல்ல முயன்றவர்களை தவிர்த்தவர், ‘ஒளிபவனாய் துறவி – இம்மாதிரி இடங்களில் ஒளிர்பவனல்லவா துறவி’ என்பது போலவும், ‘வாழ்த்தும் வசவும் எனக்கு சமமானதே’ என்பதை உணர்த்துவது போலவும், அதேவழியில் அவைகளை ஏற்றுக் கொண்டபடியே, சர்மாஜி வீட்டு வாசலுக்கும் வந்து சேர்ந்தார்.
காத்திருந்தது அந்த லக்ஷ்மிநாராயணர் உருவப்படம்!
அதை நோக்கி நின்றார் பெரியவரும். சர்மாஜியின் உறுத்தலுக்கு விடைபோன்ற அந்த வேளையில்…
வாசலில் லக்ஷ்மி நாராயணர் படத்தை வைத்துக்கொண்டு சர்மாஜி காத்திருக்க, பெரியவரும் வந்து சேர்ந்தார். உடனே சர்மாஜி பெரியவரை உபசரிக்கத் தொடங்கினார். படத்துக்கு பக்கத்திலேயே ஒரு பலகை போடப்பட அதில் பெரியவரும் ஏறி அமர்ந்தார்.
ஒன்று வைகுண்டபதியின் வரிவடிவத் தோற்றம்!
இன்னொன்று அவனுடைய மானுட ஞானத்தோற்றம்!
சர்மாஜியும் தம் குடும்பத்தோடு பெரியவரையும் படத்தையும் சுற்றிவந்து கீழே விழுந்து வணங்கிச் சேவித்தார்.
நான்கு ஆண்டுகாலம் அவர் செய்த உபன்யாசத் தவத்துக்கு வரமானது வீட்டு வாசல் தேடி வந்துவிட்டது. பெரியவரும் சுற்றி நிற்பவர்களை எல்லாம் விலகச் சொல்லிவிட்டு சர்மாஜியின் வீட்டை ஒரு பார்வை பார்த்தார்.
எளிமையான ஓட்டுக்கூரை வீடு!
இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டுதான் இதை நீ சாதித்தாயா?” என்று கேட்டு ஆசீர்வதித்தார்.
அதன்பின் வெகு சீக்கிரத்தில் அந்த வீடு, தன் முதுமைக்குரிய பலவீனங்களைப் போக்கிக் கொண்டு பலமானதாக மாறி, அதன்பின் பல நல்ல காரியங்களும் அந்த வீட்டில் அடுத்தடுத்து நடந்தன.
அதுமட்டுமல்ல; பத்ரிநாத், கேதார்நாத் என்று சர்மாஜி யாத்திரை சென்று வரவும் வாய்ப்பு உருவாகியது. பெரியவரே ஒரு ஸ்படிக மாலையை அணிவித்து அனுப்பி வைத்தார்.
மொத்தத்தில் சர்மாஜியின் கடைத் தேற்றத்துக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் நிகழத் தொடங்கியது.
அவ்வளவுக்கும் ஒரு ஆரம்பம்தான் காரணம்.
ஊரும் உலகும் வாழ்ந்திட, பாரதம் படிப்பது என்கிற அந்த சுயநலமில்லாத ஆரம்பம், படிப்படியாக சர்மாஜியை அவர் குடும்பத்தையே சுத்திகரித்து நமக்கும் ஒரு நல்ல உதாரணமாக மாறிவிட்டது.
பதினெட்டு புராணங்கள் ஒரு சேட்ஜி வாழ்வில் மறுமலர்ச்சி புரிந்தது என்றால், மகாபாரதம் சர்மாஜி வாழ்வில் அவரை தெய்விக அனுபவங்களுக்கு ஆட்படுத்தி ஞானியாக்கியது.
பின்னாலே, கண்களைத் திறந்துவிட்ட ஒரு குருநாதராய் நம் பெரியவர்!
thanks to sri.magesh - sage of kanchi
மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

Wednesday, May 21, 2014

குரு உபதேசம்: உணவு:

ஸ்தோத்ரங்களையோ, பகவான் நாமாவையோ சொல்லிக் கொண்டுதான் ஒரு ஸ்திரீ அரிசி பொறுக்குவதிலிருந்து, காய்கறி நறுக்கவதிலிருந்து, ஆரம்பித்து அரிசி களைந்து உலையில் போடு அது பக்குவமாகிப் பரிமாறுகிற வரையில் இதைத் தொடர்ந்து செய்யணும்.
சாப்பிடுகிறவனும் "கோவிந்த கோவிந்த" என்று சொல்லிக் கொண்டே சாப்பிடணும்.
இப்படிச் செய்தால் போஜனத்தின் ஷட்ரஸத்தோடு அறுசுவையோடு நாமரஸமும் சேர்ந்து அதன் தோஷத்தையெல்லாம் போக்கிவிடுமென்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
காபி, டீ குடிப்பது:
புத்தியைக் கெடுப்பதில் கள்ளு, கஞ்சா அளவுக்குப் போகாவிட்டாலும், "அடிக்ட்" ஆக அடிமைப்படுத்துகிற சக்தி காபி, டீக்கும் இருப்பதால் தான் அவை உதவாது என்பது.
போதையை உண்டு பண்ணுவது - Intoxicant என்று இவற்றைச் சொல்ல முடியாவிட்டாலும், நரம்பை ஊக்குவிக்கிறவை - stimulant - என்பதால் இப்படித் தூண்டப்பட்ட நரம்புமண்டலம் முடிவிலே பலஹீனம் தான் அடையும் என்பதால், தள்ளத்தான் வேண்டும்.
காபி குடிப்பதை நிறுத்தவேண்டும். காபியினால் குடியே அழிந்து போகிறது. உடம்புக்கு அது கெடுதல் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
காபியை நிறுத்திவிட்டால், மாசக் கடைசியில் ஒரு சிரமம் சாமான்ய குடும்பங்களுக்கு வருகிறதே, அது இல்லாமல் இருக்கும்.
டீயும் அநாசாரம் தான் என்றாலும் காபி போல் அவ்வளவு மோசமில்லை. காபி, டீ மாதிரி ஏதாவது இல்லாமல் முடியவே முடியாது என்று இருக்கிறவர்கள் வேண்டுமானால் டீ கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டு, அதையும் படிப்படியாக விட்டு விட வேண்டும்.
நல்ல வஸ்துவான பாலில் இந்தச் சாமான்களை (காபி, டீ போன்றவற்றை) கலந்து கொடுக்க வேண்டியதே இல்லை. அதிகாலையில் வெறும் பாலே சாப்பிடலாம். பகலில் மோராக்கிக் குடிக்கலாம். மோர்க் கஞ்சியாகவும் சாப்பிடலாம்.
நாமே அகத்திலே பார்த்து அரைத்து வைத்துக் கொள்கிற மாவுகளைப் போட்டுக் கஞ்சியாக்கிக் குடிப்பது தான் ஆசாரம்.
எத்தனையோ ஏழைக் குழந்தைகள், துர்பலர்கள், நோயாளிகள் பாலுக்குப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய பாலைக் காபி-விஷமாக்கி மற்றவர்கள் மூன்று நாலு வேளை சாப்பிடுகிறார்கள். இது தான் தப்பு.
காபியை நிறுத்திவிட்டு, அந்தப் பாலை ஏழைக் குழந்தைகளுக்கோ, பலஹீனருக்கோ விநியோகம் பண்ணுவதென்று வைத்துக் கொண்டால் பெரிய புண்யமாகும்.

Monday, May 19, 2014

ஸங்கீதமும் ஸ்த்ரீகளும்: (THANKS TO SRI.MAGESH - SAGE OF KANCHI)

மஹாபெரியவா அருளியது:
மாதுர்யம் என்றதும் ஸங்கீதம் நினைவுக்கு வருகிறது. ஸங்கீதம் உத்தமமான கலை. பகவத் ஸந்நிதியிலேயே ‘ஈஸி’ யாகக் கொண்டு நிறுத்துகிற கலை. நன்றாக் இசையமைத்துப் பாடும்படி மஹான்கள் நிறைய நிறைய நம் தேசத்தில் வாரி வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏராளமான ஸாஹித்யகர்த்தாக்களும் சிக்ஷை சொல்லிக் கொள்ள வசதியாக முறைப்படி ராகம், தாளம், அமைத்துக் கீர்த்தனங்கள் பாடியிருக்கிறார்கள். ஸ்த்ரீகளுக்குத்தான் இயற்கையாகவே இனிமையான குரல் இருக்கும்படியாக அம்பாள் ப்ரஸாதித்திருக்கிறாள். அதனால் அவர்கள் ஒழிந்த பொழுதில் ஸங்கீதம் அப்பஸிக்கலாம். ஸபா, ஸம்மானம், புகழ் -ஆகியவற்றுக்காக இல்லை. அதெல்லாம் போட்டியிலும், அஹம்பாவத்திலும், ஸ்த்ரீகளுக்கு வேண்டாத வெளி வியாபகத்திலும் இழுத்து விடலாம். ஆகையால் அதற்காக இல்லாமல் ஆத்ம ஸந்துஷ்டிக்காகவும் பகவத் ப்ரீதிக்காகவும் பெண்களை ஸங்கீத அப்யாஸம் பண்ணச் சொல்கிறேன். நம் அகத்திலே ஒரு சுபகார்யம், நவராத்ரி, மற்ற பண்டிகை என்றால் கூடியிருக்கிறவர்களுக்கு ஸந்தோஷம், பகவான் நினைவு இரண்டையும் அளிப்பதாகப் பெண்கள் பாடலாம். ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால், அதிலே வேடிக்கையும் இருக்க வேண்டுமாகையால், கேலிப் பாட்டுகள் கூடப் பாடலாம். வாழ்க்கையில் இதெல்லாமும் அதனதன் அளவுக்கு உட்பட்டு வேண்டியதுதான். இல்லாவிட்டால் உப்புச் சப்பே இருக்காது; ஒரே உம்மணாமூஞ்சியாகிவிடும். வீணா வாத்யம் அம்பாளுக்கு ரொம்பவும் ப்ரீதி, அவளுடைய ஸ்வரூபமாகவே மதிக்கப்டும் ஸ்த்ரீ பிரஜைகள் வீணை கற்றுக் கொள்ளலாம். ப்ரதி சுக்ர வாரமும் ஸாயரக்ஷையில் அம்பாளுக்கு வீணாகானம் ஸமர்ப்பணம் செய்யலாம். கோவிலுக்குப் போய் அப்படிப் பண்ணலாம். ஆனால் அங்கே இதேமாதிரி இன்னும் பல பேரும் வந்தால் போட்டி ஏற்படும். அகத்திலேயே, அம்பாள் பிம்பமோ யந்த்ரமோ படமோ இருக்குமே, அதற்கெதிரில் ஒரு கால்மணி-அரைமணி வீணை வாசிக்கலாம். வாயால் பாடிக்கொண்டே வாசிக்கலாம். ஒரளவுக்கு மனஸ் குவிந்து கானம் பண்ணினாலும் போதும், அதில் கிடைக்கிற விச்ராந்தி தெரியும்.
அகத்தோடு இருந்துகொண்டு பெண்கள் இப்படிக் கலைகளை வ்ருத்தி செய்வது ரொம்பவும் நல்லது. அவர்களுடைய ‘நேச்ச’ருக்கு ஏற்றது. பகல் பொழுதை உழைப்புக்கும் கலைகளுக்குமே அவர்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும். உழைக்கிற ‘ஸ்பிரி’ட்டோடு உழைத்தால் அதுவே ஒரு கலைதான்! ‘நம் அகத்துக்காக, நம் மநுஷ்யர்களுக்காகவாக்கும் செய்கிறோம்?’ என்கிற உணர்ச்சியே உழைப்பில் ஒரு உத்ஸாஹத்தை ஊட்டி, அதையும் ஒரு கலையாக்கிவிடும்.
இதுவரை நான் சொன்ன மாதிரியெல்லாம் ஸ்த்ரீகள் இருந்தால், வீட்டோடு இருப்பதில் பொழுது போகவில்லை என்றில்லாமல் பொழுது போதவில்லை என்றே ஆகிவிடும்!
ஸ்த்ரீகள், உத்யோகத்துக்குப் போகாமல் நாள் முழுதும் நல்ல பொழுதாகக் கழிப்பதற்கு எனக்குத் தெரிந்த (this is the trademark of Periyava!!) யோஜனையைச் சொன்னேன். நல்ல பொழுது என்பது அவர்களுடைய உடம்பை உறுதி பண்ண உதவி பண்ணுவதோடு மனஸைப் பெண்மை என்பதன் மாதுர்யத்தில் குழைக்கவும் உபகாரம் பண்ணவேண்டும் என்ற அபிப்ராயத்தில் சொன்னேன்.
எல்லா தர்மங்களுக்கும் ஆணிவேர் பெண்கள்தான்
எப்படியாவது ஸ்த்ரீத்வம் – பெண்மை – என்பதற்கு லக்ஷணமாக இத்தனை ஆயிரம் வருஷங்கள் இருந்து வந்திருக்கிற உத்தம குணங்களையும், உசந்த வாழ்க்கை முறையையும் செத்தே போய் விடாமல் முடிந்த மட்டும் ஆக்ஸிஜனைப் ‘பம்ப்’ பண்ணி ரக்ஷித்துத் தந்தாக வேண்டும். அதுதான் இன்றைக்குத் தலையான கார்யம். ஏனென்றால் ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா: – ‘எல்லா தர்மங்களுக்கும் பெண்டுகளே ஆணிவேர்’ – என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அவர்கள் வீணாகப் போனால் லோகமே போனது போனதுதான். புருஷ ஜாதி வீணாய்ப் போனால் அவ்வளவு ஹானியில்லை. ஸ்த்ரீ ஜாதியின் தார்மிக பலம் அவனைக் காப்பாற்றி எழுப்பிவிடும். அவள் விழுந்தால்தான் ஸமுதாயத்துக்கே வீழ்ச்சி. “ஸ்த்ரீகள் கெட்டுப் போனால் எல்லாமே போய்விடுமே?” என்றுதான் அர்ஜுனனும் கீதாரம்பத்தில் (கீதை ஆரம்பத்தில்) அழுகிறான்.
ஸ்த்ரீக்கு ஸ்த்ரீத்வம் இருக்கவேண்டும், பெண் பெண்ணாக இருக்கவேண்டும் என்பதற்கு இத்தனை சொல்லி முட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதை என்ன சொல்கிறது? ‘காலத்தின் கோலம்’ என்கிறார்களே, அப்படிக் கலி புருஷன் எல்லார் மனஸிலும் புயலாகப் புகுந்து பண்ணுகிற வெறிக் கூத்தால்தான் இப்படி ஏற்பட்டிருக்கிறது.
போகப் போக விளைவு விபரீதமாகும்
போட்டிக்கு இடமே இல்லாத இடத்தில் போட்டி ஏற்பட்டு ஆணுக்குப் பெண் சளைப்பதா என்று ஏற்பட்டு, அதில் ஒரு பெரிய vicious circle -ஆக (விஷக் கூட்டமாக) ஒன்றைத் தொட்டுக்கொண்டு ஒன்றாகத் தப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
ஸ்த்ரீத்வத்தை விட்டுப் பெளருஷத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமலே, பொருளாதார உயர்வுக்காக என்று தப்பாக நினைத்துக்கொண்டு ஒரு பெண் வேலைக்குப் போனாலுங்கூட அதன் தொடர்ச்சியாக அந்த ‘அட்மாஸ்ஃபிய’ரில் அவளுக்குத் தன்னையறியாமல் பெளருஷ அம்சங்கள் வந்து சேர ஆரம்பித்துவிடும். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாக அவளுடைய ஸ்த்ரீத்வம் மேலும் மேலும் மரத்துக் கொண்டே போய், அந்த அளவுக்குப் பெளருஷமும் கூடிக் கொண்டே போகும். அதனால் ப்ரக்ருதி தர்மத்தின் ப்ரதம விதியாகப் பெளருஷ வன்மைக்கு மாற்றாக ஸ்த்ரீத்வ மென்மை லோகவாழ்க்கையை ஸமன் செய்து அழகு படுத்தவேண்டும் என்று இருப்பது சிதிலப்பட ஆரம்பிக்கும். இன்றைய அடங்காப்பிடாரி லோகத்துக்கு அத்யாவச்ய மருந்தான அடக்கம் என்பது ஸ்த்ரீகளை விட்டுப் போக ஆரம்பித்துவிடும். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் அவர்களுக்கும் தாட்பூட் வந்துவிடும்.
இதன் விபரீதம் ஆரம்ப காலத்தில் தெரியாமல் எல்லாம் நல்லதாகவே ஓரு ஸமதர்மப் புரட்சி நடந்ததாகத் தோன்றலாமானாலும் போகப் போக இப்படி ஸ்த்ரீ-புருஷாள் அடங்கிய முழு ஸமூஹமுமே அடங்காமைக் கோலம் கொண்டால் லோகமே க்ரூர ம்ருகங்களோ அல்லது அஸுர ஜாதிகளோ ஒருத்தருக்கொருத்தர் சண்டை பிடித்துக் கொள்வது போன்ற நித்ய நரகமாகிவிடும்.

Saturday, May 17, 2014

அவர் ஏன் நேரில் வரவில்லை ?” மகான் கேட்டார்.
பிரம்ம ஞானிகள் நினைத்தது நடக்கும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா ?
மஹா பெரியவாளிடம் கைங்கரியம் செய்யும் பாக்கியம் பெற்றவர் ஏகாம்பரம் என்கிற அன்பர்.
“பேப்பர் – பேனா எடுத்துவந்து, நான் சொல்வதை எழுதிக்கொள்” என்று மகாகாவ் என்னும் இடத்தில் (குல்பர்கா அருகில்) முகாமிட்டிருந்தபோது, மஹான், ஏகாம்பரத்திடம் சொன்ன விஷயம் இது.
மஹா பெரியவா தன் பதின்மூன்றாவது வயதில் பட்டத்துக்கு வந்த புதிதில், அவருக்கு முன் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்த பரமாச்சார்யாரிடம் கைங்கரியம் செய்தவர்களை வரிசையாக அறிமுகப்படுத்தினார்களாம். அந்த வரிசையில் ஒருவரைக் காண்பித்து, ‘இவர்தான் முந்தைய குருவுக்கு மடிவஸ்திரம் தோய்த்துக் கொடுத்தவர்” என்று பெரியவாளிடம் சொல்லிவிட்டு. அவர் பக்கம் திரும்பி, “இனிமேல் இவர்தான் நமக்குப் பெரியவா, உன்னோட வஸ்திர கைங்கரியத்தை தொடர்ந்து பண்ணு” என்று சொன்னார். ஆனால், அந்த அன்பரிடமிருந்து பதில் வேறுவிதமாக வந்தது. “நான் முந்தைய பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்த கைகளால் வேறு எவருக்கும் செய்ய இயலாது” என்றார்.
இது தவிர, இன்னொன்றையும் மகான் எழுதிக்கொள்ளச் சொன்னார். கலவையில் மகானின் முகாம். பண்ருட்டியில் இருந்து ரெட்டியார் ஒருவர் மடத்துக்கு நிறையக் காணிக்கை அனுப்பியிருந்தார். அத்துடன் தன் வணக்கத்தையும் பெரியவாளுக்குச் சொல்லச் சொல்லி இருந்தார்.
“அவர் ஏன் நேரில் வரவில்லை ?” மகான் கேட்டார்.
அதற்கு காணிக்கை கொண்டுவந்தவர் சொன்ன பதில், “66-வது பீடாதிபதியான குருவை தரிசனம் செய்த கண்களால், அவருக்குப் பின்னர் வரும் குருவைத் தரிசிக்க மனம் ஒப்பவில்லை என்று ரெட்டியார் சொல்வார்”.
இந்த இருவரின் குருபக்தியையும் மெச்சி, இது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்றுதான் ஏகாம்பரத்திடம் சொல்லி எழுதவைத்தார். இதை இப்படியே ரேடியோவில் சொல்லும்படி ஏற்பாடுசெய்” என்று பெரியவா சொன்னார்.
ஆனால், குல்பர்காவில் இருந்து கொண்டு எதையோ சொல்லி, அது ரேடியோவில் வரவேண்டுமென்றால் எப்படி? எவ்வளவோ தடைகளைத் தாண்டியல்லவா இவற்றை ஒலிபரப்ப இயலும் ?
ஏகாம்பரம், “அது முடியாத காரியம் | “ என்று பெரியவாளுக்கு நிலைமையை விளக்கினார் !
“சரி, அதனால் என்ன, பத்திரிகைகளிலாவது வரட்டுமே ! அதற்கான ஏற்பாட்டைச் செய்யேன்” என்றார்.
“சரி” என்ற ஏகாம்பரம் ஓய்வெடுக்கப் போய்விட்டார். சற்று நேரத்துக்குள் ஏகாம்பரத்துக்கு அழைப்பு வந்தது. மகா பெரியவாளைப் பார்க்க ஒரு குழு வந்திருந்தது. அவர்களுக்காக்த்தான் ஏகாம்பரத்தை வரவழைத்திருந்தார் மகா பெரியவா.
“நான் காலையில் சொன்ன குருபக்தியை ஒலிபரப்ப முடியுமானு இவாளிடம் கேட்டுப் பாரேன் !”
குழுவில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்த ஏகாம்பரம் வியப்பினால் ஸ்தம்பித்துப் போய்விட்டார். அவர்கள் அனைவரும் அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன் டைரக்டர்கள். ஒரு டிரெயிங்குக்காக வந்தவர்கள், மகான் இங்கு இருப்பதால் தரிசிக்க வந்திருக்கிறார்கள்.
மகானின் எண்ணப்படி, குருபக்தியில் சிறந்த இருவரைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, “இதை ஒலிபரப்ப முடியுமா? “ என்று அவர்களிடம் கேட்டார் ஏகாம்பரம்.
“இது எங்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. உடனே அதற்கான ஏற்பாடு செய்கிறோம். இப்படி ஒரு நல்ல காரியத்துக்கு எங்களை உபயோகப்படுத்த மகான் நினைத்தது பெரும் பாக்கியம்“ என்று சொன்னவர்கள், அன்றே அதை ஒலிபரப்பவும் செய்தனர்.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top