'கொடுக்க வேண்டும்'. அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்கும் போது , "நான் தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே ! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது" என்கிற பரம தியாக புத்தியில்...'ந மம ' - எனதில்லை ,எனக்கில்லை ' என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.
மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு , "நான் கொடுத்தேன்" என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டே இருந்தால், இந்த அகங்காரமானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிறஆத்மாபி விருத்தியை அப்படியே ஏப்பம் விட்டு விடும். தியாகம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியாகம் பண்ணினேன் என்கிற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
'சோஷியல் சர்வீஸ் பண்ணுகிறேன்' என்று சொல்லிக் கொண்டு , வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால், இவனுக்கும் பிரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீசால் லோகத்துக்கும் பிரயோஜனமிராது. தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்தது போல் படாடோபமாக தெரியலாம்; ஆனால், அது நின்று நிலைத்து விளங்காது.
Courtesy: Smt. Vidya raju
No comments:
Post a Comment