குரு (ஆசான்) யார்?
குரு என்றால் கனமானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மஹிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை ‘மஹாகனம் பொருந்தியவர்’ என்று சொல்லுகிறோம். கனமென்றால் Weight அதிகமென்றா அர்த்தர்? ஒருவர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர். வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர். வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதேலே சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவுக்கும் சீடனுக்கும் ‘லிங்கா’க உபதேசம் இருக்கிறது. குருவிடம் இருந்து புறப்பட்டுபோய் , சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செலுத்துவது ‘தீட்சை’ என்று அறியப்படுகிறது.
அம்பிகையின் தீட்சைகள்
மீனாட்சி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளைத்தான் தடக்ஷத்தாலேயே ஞான தீட்சை, காமாட்சி, பகதனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாத்தத்தை வைத்உ ஞானியாக்கி விடுபவர். ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீட்சைவேண்டுகிறோம். காசியில் இருக்கும் விசாலாட்சி, பக்தர்களை அனுக்ரஹ சிந்தையோடு மனதால் நினைத்தே ஞானமளிக்கும் கமட தீட்சை குருவாக இருக்கிறாள்.
அன்போடு பணி செய்யவேண்டும்
கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. அபாகரம் செய்வதன் மூலம் நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் உண்டாக வேண்டும். நமக்கு வேண்டியவர்களை நினைத்துகொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த வேண்டியவர்களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக்கொண்டே போனால் அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. ‘நம் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது தான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கவேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு ஆர்வத்தோடு , இதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
‘அனைத்து அறன்’ அதாவது ஸர்வ தர்ம்மும் என்னவென்றால் அவரவரும் மணத்துக்கண் மாசிலன் ஆதல் அதாவது தங்கள் மனதைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். காமானுஷ்டானத்தால் அவரவரும் சித்தகத்தி ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.
உயிர்களுக்கு இதமானதே ஸ்த்யம்
நம் சாஸ்திரங்களில் அவரவரக்குகான அனுஷ்டானங்களைச் சொல்வதற்கு முன் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கவேண்டிய எட்டு ஆத்ம குணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். இதில் முதலாவதே அஹிம்சைதான். ஸ்த்யத்துக்கும் இலக்கணம் கொடுக்கும்போது, வெறுமனே நடந்ததை நடந்தபடி வாயா சொல்வது மட்டுமல்ல, எது ஜீவராசிகளுக்கு இதமாக பிரயமானதாக இருக்கிறதோ அதுவே ஸ்த்யம் என்று சொல்லியிருக்கிறது.
அன்னதானம்
தனக்கென்று ஒன்றுமே வைத்துக்கொள்ளாமல் தானம் பண்ண வேண்டும். ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கும்போது அவர் என்ன ஜாதி என்ன மதம்? நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிராமல், நம்மாலான உபகாரத்தைப் பண்ண வேண்டும். யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது. அன்னதானத்துக்கு என்ன விஷேசம் என்றால் இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்.
In the Gita, emphasis is again and again laid on developing that mental equipoise which is not disturbed either by adversity or by prosperity. This state can be achieved only by completely surrendering ourselves to God. Bhagavan makes this clear by directions like Yuktha Aaseeta Mat Para, Maamekam Saranam Vraja, and Vasudevassarvamiti. An Ayuktha, i.e., one who cannot view everything with equal unconcern and consequently whose mind is easily assailed by desires and passions and who is unable to do his duty in the spirit of dedication, neither profits from knowledge nor acquires a spirit of devoted surrender (Bhaavana). Without Bhaavana he cannot find peace (Saanti) and without Peace, he does not attain absolute happiness (Sukam). It is this teaching of the Gita that inspired Saint Thyagaraja to sing Saanthamu lekha Saukhyamu ledhu. If the mind runs after worldly pleasures, all efforts to find real happiness will go in vain like ghee poured in a leaky vessel. It follows that Yoga in the Gita sense is necessary both for acquiring Paroksha Jnana, knowledge of the Ultimate Reality, and Aparoksha Jnana, Realisation of that Reality.
It is to be noted that the Samatva or equal feeling in the context of Yoga does not denote universal equality, but only the capacity to treat good and bad results with the same feeling. The stress is on the performance of one's allotted duty. That duty should be performed well, without thought of reward and with devotion in the heart. While performing it, the act should be dedicated to God. This is not possible without the control of sense-organs. The Indriyas should be withdrawn from the objects which attract them. If they run away unbridle, the mind will also run away along with them. Such a wavering mind cannot contemplate the Atman within, by which process alone the ultimate Truth can be realised. When the mind is tossed by Indriyas, Prajna will go out of proper cores like a ship tossed by high winds in the ocean. The distinction made in the Gita between mind and Prajna is to be noted. In Sanskrit, the mind is known by different terms according to its functions, like thinking, deciding, contemplating, etc. The mind with the experience of inward contemplation is Prajna. In the above simile, the mind takes the place of the ocean, the ship is Prajna and the wind is the play of the senses.
Complete mastery of the senses is the foundation on which one has to raise the edifice of Stitha Prajnatva. When the functioning of the Indriyas is turned inwards, they get merged with the Atman within. The Atman is not affected thereby even as the ocean remains unaffected by the waters of the numerous rivers flowing into it. A person whose mind is so evolved is a Jnani. He is able to distinguish the real from the unreal and achieve the bliss that flows from the realisation of the all-pervasiveness of the Paramatma and the identification of the Atma with the Paramatma. What the worldly minded person imagines as real will be unreal for such a Jnani. So, Bhagavan wants Arjuna to do his duty, not with the object of gaining a Kingdom, but the object of acquiring the mental discipline which will enable him to attain the state of inaction, namely, Brahmanirvaana or the merger of the Atma with Paramatma. (July 7, 1958)
அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர்.
அவர் மனைவி ஒரு நோயாளி.அவருக்குப் பிறந்த
பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக
அலைந்தார்கள்.இப்படி சிரமங்களையே சந்தித்துக்
கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர்.
மகானின் பக்தர்.
"கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மகானிடம்
ஒரு தடவை சென்று தரிசித்தபின் அவரது ஆசியைப்
பெற்றுக்கொண்டு வா... உன் சிரமங்கள் எல்லாம்
காற்றோடு போய்விடும்"- என்று யோசனை சொன்னார்.
அப்போதிலிருந்து அவரது மனதில் "காஞ்சி மகானைப்
பார்க்க வேண்டும்" என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.
தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது
காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே,காஞ்சியில்
இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது
மனதில் அந்த எண்ணம் தோன்றியது.
"உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம்
தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும்
இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது" என்கிற
எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச்
சென்று கொண்டு இருந்தார்.
இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ..ஆரவாரமோ
ஏதும் தென்படவில்லை.
"அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது"
என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம்
பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது
கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.
யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று
அவரது கண்கள் தேடியபோது,ஒரு பெரியவர் மட்டும் அவரது
கண்களில் தென்பட்டார்.
வந்தவர் அவரிடம் கேட்டார்.
"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே...அவர் எங்கே போயிருக்கார்?"
"அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?"
இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும்
வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின.
அதனால் வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது
ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி,
தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து
ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.
"அவர் கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?"
கேள்வி பிறந்தது.அவருக்கு
வந்தவரோ, 'இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி
ஒரு கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார்.
வயதான பெரியவர் தொடர்ந்தார்.
"சிரமம்..சிரமம்னு சொல்றியே..அதை ஏன் நீ படறதா
நினைக்கிறே..அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ
நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..."
இது எப்படி சாத்தியம் என்று வந்தவருக்கு மனதில் சந்தேகம்.
"அது எப்படி சுவாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும்
தாங்கிக்க வேண்டிருக்கு..என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?"
வயதான பெரியவர் சிரித்தபடியே சொன்னார்.
"இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க..உங்களோட
பெட்டி,மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு
போய்த்தானே ஆகணும்? அப்ப என்ன பண்றோம்?
யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம்
இல்லையா? அது போலத்தான் நாம படற சிரமங்களை
நம்மது இல்லே,பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி
அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.."
அதனாலே இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.
அவர் வயதான பெரியவரைப் பார்த்து,
"பெரியவரே இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல
இருக்கு.என்பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே
சொல்லிடறது நல்லதுதான்..நீங்கள் சொல்ற மாதிரி இந்த
சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப்
போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே..
எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்...காத்திருந்து
அவரைப் பார்க்க முடியாது.எனக்கு இன்னமும் நல்ல காலம்
வரலே போலத் தோணுது.
ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம்
இதமாக இருக்கு...ஆமா நீங்க யாரு? இதே ஊரா?"என்று கேட்டார்.
வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு.
"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று
சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம்
ஒன்றுமே தோன்றாமல்...மலைத்து நின்றார்.
அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப்
பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத்
தவமுனிவரைத் தரிசிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.
இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாகப்
பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி
அந்தப் பக்தர் வியந்தார்.
"நமஸ்காரம் பண்ணிக்கிறேன்" என்ற பக்தரை சட்டையை
கழற்றும்படி சொன்னார் மகான். தான் பூணூல் அணியாததால்
சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் யோசிக்க, மடத்து
சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக்
கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மகான்.
யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.
தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின.....
எளிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு காரியத்தை சிரத்தையாக ஒருவன் பண்ணினால் 'மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ணுகிறான்' என்று சொல்லுகிறோம். வாஸ்தவத்தில் இந்த அர்க்ய காரியத்தையே மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ண வேண்டும்! தினந்தோறும் இதைப்பண்ணி வந்தால் அந்த சத்ருக்கள் நாசமாய்ப் போய் விடுவார்கள். இது பண்ணுவதற்கு முதலில் மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது ச்வாஸத்தை அடக்க வேண்டும். இப்பொழுது நாம் மூக்கை மட்டும் தான் பிடிக்கிறோம்.
சாஸ்திரம் 'நாஸிகாம் (மூக்கை) ஆயம்ய' என்று சொல்லவில்லை. 'ப்ராணான் (மூச்சை) ஆயம்ய' என்றுதான் சொல்லியிருக்கிறது. அதாவது வெறுமே மூக்கைப் பிடிக்காமல் பிராணனையே கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். 'ப்ராணாயாமம்' என்பது 'ப்ராண ஆயாமம்', அதாவது 'ச்வாஸக் கட்டுப்பாடு', 'ஆயம்ய' என்றால் 'கட்டுப்படுத்தி'.
எந்தக் காரியம் பண்ணினாலும் மனது ஒருமைப்பட வேண்டும். ஜலத்தைக் கொண்டு அஸ்திரப் பிரயோகம் செய்வதற்கும் மனது ஒருமைப்பட வேண்டும். அதற்காகத் தான் மூச்சைப் பிடிக்க வேண்டும். 'மூச்சைப் பிடித்தால் மனது எப்படி நிற்கும்?' என்று கேட்கலாம். மனது நிற்கிற பொழுது மூச்சு நிற்பதைப் பார்க்கிறோமே!
பெரிய ஆச்சரியம் உண்டாகிறது, பெரிய துன்பம் வருகிறது, பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மனசுலயித்துப் போய் ஏகாந்தமாக நிற்கிறது; 'ஹா!' என்று கொஞ்ச நேரம் மூச்சும் நின்றுபோய் விடுகிறது. அப்புறம் வேகமாக ஒடுகிறது. நாமாக அதை நிறுத்தவில்லை; தானாக நிற்கிறது. மனசு ஒன்றிலே நன்றாக ஈடுபட்டவுடன் மூச்சு நின்றுவிடுகிறது. பின்பு பெருமூச்சு விடுகிறோம். எதற்காக? முன்பு விடாத மூச்சையும் சேர்த்து விடுகிறோம். இப்படி மனது ஒருமைப்படுகிற போது மூச்சு நிற்கிறதென்றால் மூச்சை நாமாக நிறுத்தினாலும் மனது ஒருமைப்படும் என்று ஆகிறதல்லவா? இதற்காகத்தான் பிராணாயாமத்தால் மூச்சை இறுக்கி, அப்புறம்அர்க்கயம் தருவது.
நாம் அர்க்கியம் விடும்போது சித்த ஐகாரியத்தோடு (மன ஒருமைப்பாட்டோடு) விடவேண்டும். பிராணாயாமம் பண்ணினால் சித்தைக்காக்கிரியம் உண்டாகும். அதை நிறையப்பண்ணுவது யோகத்திற்கு அவசியம். அப்படி நிறையப் பண்ணுவது கஷ்டமானது; உபதேசத்தின்படி செய்ய வேண்டியது.
நாம் ஸந்தியாவந்தனத்தில் அதிகபட்சமாக ஒரு இடத்தில் பத்துத் தடவை பண்ணுகிறோம். மூன்று பண்ணு என்னும் சில இடத்தில் இருக்கிறது. சிறு வயதில் உபநயனமான காலம் முதற்கொண்டு கிரமமாக நாம் வேளைக்குப் பத்துப் பிராணாயாமம் பண்ணிக்கொண்டு வந்திருந்தாலே, இத்தனை நாளில் யோகீச்வரராக ஆகியிருப்போம். பண்ணுகிறதைச் சரியாகப் பண்ண வேண்டுமல்லவா? அரை நிமிஷம் ச்வாஸத்தை நிற்கப் பண்ண வேண்டும். அதிகமாக வேண்டாம். பிராணன் நின்றால் மனது நிற்கும்.
அந்த நிலையில் அர்க்யம் கொடுத்தால் வாஸ்தவமாகக் கெட்ட அஸுர சக்திகள் ஓடிப்போகும். மனஸ் நின்றால் நாம் விடுகிற ஜலம் அஸ்திரமாகும்.
அர்க்கியமாகிய அஸ்திரப் பிரயோகத்தைப் பண்ண வேண்டும். பின்பு காயத்ரீ பண்ணவேண்டும். பிராணாயாமத்தைக் கூடிய வரையில் பண்ணவேண்டும். மூச்சைக் கொஞ்சம் நிறுத்துகிறது, பின்பு விடுகிறது என்ற அளவில் இருந்தாலே போதும். அதிகம் அடக்கவேண்டாம். ஸங்கல்பம், மார்ஜனம், பிராசனம், அர்க்யப்ரதானம், ஜபம், ஸ்தோத்திரம், அபிவாதனம் இவ்வளவும் பரமேச்வரனுடைய அநுக்கிரஹம் பெறுவதற்காகப் பண்ணகிறேனென்று நினைத்துச் செய்யவேண்டும். முதலில் பண்ணும் ஸங்கல்பம் என்பது அதுதான். ஆரம்ப முதல் கடைசி வரையில் பரமேச்வரார்ப்பணம் பண்ணவேண்டும். இவ்வளவுக்கும் பிராணாயாமம் முக்கிய அங்கம். திரிகாலங்களிலும் இதை ஸ்வல்பமாவது பண்ணவேண்டும்.
தினந்தோறும் மூன்று வேளையும் ரோகிஷ்டன் (நோயாளி) கூடப் பிராணாயாமம் பண்ணவேண்டும் என்று சாஸ்திரத்தில் இருப்பதால் உபத்திரவம் கொடுக்கிற அளவுக்கு இதில் ச்வாஸக் கட்டுப்பாடு இல்லை என்று புரியும். இப்படிப் பண்ணினாலே ரோகமும் போய் தீர்க்காயுஸ் உண்டாகும்
காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து பக்தர் ஒருவர் காஞ்சிப்பெரியவரை தரிசிக்க மடத்திற்கு வந்திருந்தார். அந்த ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், “”உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்றுதானே கூறுவார்கள்,” என்றார். அவரும்,””ஆமாம் சுவாமி!” என்று சொல்லி தலையசைத்தார்.
சிறிது நேர யோசனைக்குப் பின் பெரியவர் மீண்டும் பக்தரை அழைத்து, “”உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்பாட்டி என்றொருத்தி இருந்தாள் தெரியுமா?” என்று கேட்டார். பக்தரும் பயபக்தியுடன்,””நான் கேள்விபட்டிருக்கிறேன்!” என்றார்.
“”உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன்” என்று தொடர்ந்தார்.
“”அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராமநாமஜெபம் நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு “”ராம பிள்ளையார் கோயில் ” என்ற பெயர் வந்தது” என்றார். பெரியவர் பேச்சை பக்தர் மெய்மறந்து கேட்கத் தொடங்கினார். பெரியவர், ””அதுசரி! ராமபிள்ளையார் இருக்கட்டும்.
துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்!” என்று தொடர்ந்தார்.
“”துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி “”அடி! துக்கிரி! துக்கிரி!” என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள்.
ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, “”பூரண குணம் உண்டாகும்” என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை “”துக்கிரிப்பாட்டி” என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர். “”ராமநாம பாட்டி” என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா. எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்,” என்று ஆசியளித்து அனுப்பினார்.
பெரியவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் ராமநாமத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்.
* பல மாமரங்கள் இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகிறது. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம். விளைந்த விதைகள் அனைத்தும் மாமரமாக உருவாகிவிடுவதில்லை. ஒரு சில விதைகள் மட்டுமே மரமாகிறது. இவ்விடத்தில் மற்ற விதைகள் எல்லாம் வீணாக போவதாக தெரிந்தாலும், மரமாகிய ஒரு விதையினால் மேலும் பல கனிகள் கிடைத்து அதன் மூலம் வழிவழியாக பல மரங்கள் வளரும்.
* இதைப்போலவே உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே நல்லவர்களாகவும், இறைபக்தி கொண்டு முழுமையடைந்தவர்களாகவும் இருப்பதில்லை. ஏதாவது, ஒருசிலர்தான் அத்தகைய மேன்மையான நிலையை அடைகிறார்கள். இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு விதையால் பல மாமரங்கள் உருவாவதைப்போல, அந்த ஒருவரால், பல நல்ல ஆன்மா உடையவர்கள் உருவாவார்கள்.
* உறியடி உற்சவம் நடக்கும்போது பலர் கம்பத்தில் ஏறுவார்கள். பலர் வழுக்கி விழ, யாராவது ஒருவர் மட்டுமே உச்சியைத் தொடுகிறார். உச்சியை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி அவருக்கு மட்டுமின்றி, அவரை சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. அந்த ஒருவர் பெறும் வெற்றியை அனைவரும் தமக்கானதாக கருதி மகிழ்கிறார்கள். இதைப்போலவே, நம்மில் பூரணத்துவம் பெற்று சிறக்கும் ஒருவர் அடையும் நன்மையும் அனைவருக்கும் கிடைத்ததாகிறது.
ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு அன்பர் ஒருவரை சந்தித்தேன். அப்போது தன்னுடைய தந்தைக்கு, காஞ்சிப் பெரியவர் அருளிய… நெகிழ வைக்கும் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அன்பரின் தந்தை, சென்னை நீதிமன்றத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது காஞ்சிப் பெரியவர், சென்னை நகரில் முகாமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பரின் தந்தையும் பங்கேற்று சேவை புரிந்தாராம். அன்பரின் தந்தை ஓடியாடி உழைத்த விதத்தை காஞ்சி பெரியவாள் நேரில் கண்டார்.
முகாம் நிறைவுறும் நாள் வந்தது. அன்றைய தினம், அன்பரின் தந்தையைக் கரிசனத்துடன் அழைத்த பெரியவாள், ”எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டிருக்கிறார்.
”கோர்ட்ல கிளார்க்கா வேலை பாத்துண்டிருக்கேன்” என்று பவ்யமாக பதில் அளித்தாராம் அன்பரின் தந்தை.
உடனே பெரியவாள், ”இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?” என்று கேட்க… ”ஷெராஸ்தார்” என்று பதிலளித்திருக்கிறார் இவர்.
இதையடுத்து பெரியவாள், ”நீ ஷெராஸ்தார் ஆயிடுவே” என்று ஆசீர்வதித்திருக்கிறார்.
சாதாரண கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஷெராஸ்தார் பொறுப்புக்கு வருவதற்குக் கல்வி உள்ளிட்ட தகுதிகள் அவசியம். ஆனால் இந்த அன்பரின் தந்தைக்குக் கல்வித் தகுதி மட்டும் இல்லை. எனவே, ‘இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனார்.
இதையடுத்து ஒரு சில நாட்களில் டெல்லியில் இருந்து தலைமை நீதிபதி சென்னைக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான பணிவிடைகளை சிறப்பாகச் செய்து கொடுத்தாராம் அன்பரின் தந்தை.
சில நாட்கள் கழித்து, வேலை முடிந்து தலைமை நீதிபதி டெல்லிக்குக் கிளம்பிச் செல்லும்போது, நீதிமன்ற அலுவலகக் குறிப்பேட்டில், ‘இந்த கிளார்க்கின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் இவர்’ என்று பரிந்துரை செய்திருந்தாராம்!
பிறகென்ன? உரிய நேரத்தில் அந்தப் பரிந்துரை உயரதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, அன்பரின் தந்தைக்கு ஷெராஸ்தார் எனும் பதவி உயர்வு கிடைத்ததாம்.
சில வருடங்களுக்குப் பின், காஞ்சிப் பெரியவர் மீண்டும் சென்னை வர… அன்பரின் தந்தை அந்த முகாமுக்குச் சென்று பெரியவாளை தரிசித்து வணங்கியிருக்கிறார்.
”என்ன… ஷெராஸ்தாரர் ஆயாச்சா?” என்று மெள்ள புன்னகைத்தபடியே பெரியவாள் கேட்டதும், அந்த நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து போனாராம் அன்பரின் தந்தை!
-எஸ். கோபாலன், உத்திரகோசமங்கை
கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.
எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார். யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள். பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்தாடா……….கொழந்தே! இங்க வா” சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் ” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.
அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!
ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!
“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை. அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா?
த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார். அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.
வெளியூரிலிருந்து அடிக்கடி பெரியவாளை தர்சனம் பண்ண ஒரு அம்மா வருவாள். மடத்தில் எல்லாருக்கும் அந்த அம்மா மிகவும் பரிச்சியமாகி இருந்தாள். உள்ளே நுழையும் போது எதிரில் வந்த பாரிஷதரிடம் அந்த அம்மா சொன்னாள் .....
"பெரியவாட்ட முக்யமா ஒரு கேள்வி கேக்கணும்"
"என்ன கேள்வி?"
"எங்க தோப்புல புளியமரம் நாலு வருஷமா காய்க்கவேயில்லே! என்ன காரணம்ன்னு பெரியவாளை கேக்கணும்"
பாரிஷதருக்கு கொஞ்சம் கோபமே வந்துவிட்டது. "என்ன மாமி இது? பெரியவாட்ட ஆன்மீக விஷயமா, பூஜை புனஸ்காரம் பத்தி கேக்கலாம்.... ஒங்காத்து புளியமரம் காய்க்கலைன்னா....அவர் என்ன பண்ணுவார்? இதைப்பத்தி எல்லாம் பேசாதீங்கோ!" என்று கொஞ்சம் கடிந்து சொன்னார். இது போதாதா நம் லீலா புருஷருக்கு? பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு பாரிஷதரிடம், "அந்த அம்மா என்ன சொல்றா கேளு..." என்றார்.
அவர் வந்து விஜாரித்து விட்டு, "அவா தோப்புல புளிய மரமெல்லாம் நாலு வர்ஷமா காய்க்கவே இல்லியாம்! ..."
"புளிய மரத்து பிஸாசு...ன்னு கேள்விப்பட்டிருக்காளா..ன்னு கேட்டுண்டு வா!"
"கேள்விப்பட்டிருக்கேன் பெரியவா....தோப்பு புளியமரங்கள்ள பிஸாசு இருக்கறதா ஊர்க்காரால்லாம் சொல்லுவா"
"ஒன்னோட குடும்பத்துல முன்னாடி ஏதோ தலைமுறைல ஒரு பொம்மனாட்டி, கெணத்துல விழுந்து தற்கொலை பண்ணிண்டா !.....ஒனக்கு அந்த விவரம் தெரியுமோ?"
"கேள்விப்பட்டிருக்கேன்...என் மாமனாரோட அப்பா, தன் மூத்த சம்ஸாரத்தை ரொம்பவே கொடுமைப்படுத்தினாராம். அவரோட ஹிம்ஸை பொறுக்காம, அவா கெணத்துல குதிச்சு உசிரை விட்டுட்டாளாம் !.."
"நீ, ஆனந்ததாண்டவபுரம் ஐயங்காரை போயி பாத்து, அவர் சொல்ற பரிஹாரங்களை பண்ணு! அவர் நல்ல மாந்த்ரீகர்! பரிஹாரம் பண்ணு! அப்றம் ராமேஸ்வரத்ல தில ஹோமம் பண்ணு!.."
பெரியவா சொன்னதை அந்த அம்மா பண்ணி முடித்தாள். புளிய மரங்கள் நன்றாக காய்த்து குலுங்கத் தொடங்கின. முதல் உலுக்கலில் கிடைத்த புளியம்பழங்கள், ஒரு கூடை முழுக்க கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தாள். கையைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார்.
"பெரியவாளோட அநுக்ரஹத்தால என்னோட மாமியாரோட மாமியாருக்கு ஸத்கதி கெடைச்சுது! " கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தாள்.
"இந்த மாதிரி துர்மரணங்கள் சம்பவிச்சா...அவா ஆவியா அலைஞ்சு தவிப்பா! அதுக்கான பரிஹாரங்களை நாம பண்ணிட்டோம்..ன்னா, தவிக்கற அந்த உசிர் மேல் லோகத்துக்கு போய்டறது..." என்றார் பெரியவா.
எந்த இடத்தில் ஸதா மஹா மந்த்ர கீர்த்தனம் நடக்கிறதோ, அங்கே அமங்கலம் என்ற பேச்சுக்கே இடமில்லை! இது ஸத்குருவின் வாக்கு!
1971 இல் கொலம்பியா யுனிவெர்சிடியின் Ph.D பட்டத்தை நியூயார்க் நகரத்தில் பெற்றேன். அப்பொழுது, 1955இல் பாலார் நதிக்கரையில் பெரியவா அளித்த கீதோபதேசம் நினைவுக்கு வந்தது. “எவ்வளவு மேல் படிப்பு படிக்க முடியுமோ, அவ்வளவும் படி” டாக்டரேட் டிகிரீ என்பது, மேல்படிப்பில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்லலாம். ‘கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்ற தமிழ் வாக்குப் பிரகாரம், படிப்புக்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஒரு எல்லை வரையறுக்க முடியாது.
பெரியவா யுனிவெர்சிடியில் நான் ஒரு மாணவனாக இன்னும் தொடர்கிறேன். அங்கே, ஒவ்வொருவரும், முழுமனத்தோடும், ஆர்வமுடனும், பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும, கடின உழைப்புடனும், மற்றவர்களை, உன்னிப்பாக கவனிப்பதுடனும், கேள்வி---பதில் மூலமாகவும், தளர்ச்சியில்லாத நம்பிக்கையுடனும், மௌனத்திலும் தியானத்திலும் தங்களை ‘இழப்பதன்’ மூலமும், உண்மையாகவும், நாணயமாகவும், வினயத்தோடும் இருப்பதன் மூலம், தங்களை மேலே மேலே உயர்த்திக் கொள்ளலாம்.
நியூயார்க்கில் இருந்தபொழுது, ஒழிந்த நேரங்களில், சில பொது சமூக சேவைகளில் ஈடுபட்டேன். அவைகளில் இரண்டு நிகழ்ச்சிகள் பெரியவா கவனத்திற்கு வந்தன. ‘Hindu Students Association of Columbia University என்ற அமைப்பை ஆரம்பித்தேன். இதில், ஆர்வமுள்ள மாணவர்கள் வாரத்தில் ஒருமுறை சந்தித்து, பிரார்த்தனை, தியானம், ஹிந்து மதம், வேதாந்தம் ஆகியவை பற்றிய சொற்பொழிவுகள் ஆகியவைகளை நடத்தினார்கள். துரதிருஷ்டவசமாக, நான் 1972இல் இந்தியாவுக்குத் திரும்பி வந்து சில வருஷங்களில் இந்த அமைப்பு மறைந்து போனது.
நான் நியூயார்க்கில் இருந்த சமயத்தில்தான், அமெரிக்காவிலேயே, முதல் ஹிந்து கோயில் கட்டப்பட்டது. இதற்கு வேண்டிய தொடக்கப்பணிகளை ஆரம்பித்து, விடாமுயற்சியுடன் உழைத்தவர், யுனைடெட் நேஷன்சில் ஆஃஃபீஸராக இருந்த, திரு அழகப்பன் அவர்கள். இதில் என்னுடைய பங்கு என்பது, ராமாயணத்தில் வரும் அணிலினுடையது போலாகும். இந்தக் கோயில் திட்டத்துக்கு, முதலில் விளம்பரம் செய்தது, ஹிந்து ஸ்டூடென்ட்ஸ் அசோசியேஷந்தான். நானும், பெரியவாளுடைய பூர்வாசிரம சஹோதரர் திரு. சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் மூலமாக, பெரியவாளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், திரு அழகப்பனைப் பற்றியும், அவர் எடுத்துள்ள இந்த பெரிய திட்டத்திற்கு பெரியவாளோட ஆசியையும், ஆலோசனையையும் வேண்டியும், எழுதியிருந்தேன்.
1970 மேமாதம் 4-ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தின் நகலைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்த வருஷம் கோடை காலத்தில், அழகப்பன், காஞ்சீபுரம் சென்று, பெரியவாளையும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளையும் சந்தித்து, ஆசி பெற்றார். நியூயார்க் திரும்பி வந்ததும், அழகப்பன் என்னிடம் கூறினார், “பெரியவாளை நான் ஒரு புராதனகாலத்து (CONSERVATIVE) சாமியாராக இருப்பார் என்று நினைத்தேன். சந்தித்தபின் அவர் ஒரு சீர்திருத்த சாமியாராக எனக்குத் தோன்றினார். நீங்கள் அந்தக் கடிதம் எழுதியதற்கு மிகவும் நன்றி.”
அப்பொழுது முதல், அழகப்பன் பெரியவாளின் ஒரு பெரிய பக்தராக ஆனார். பெரியவாள் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் ஆகியோரின் ஆலோசனைப்படி, அவர் பல மத சம்பந்தமான திட்டங்களை முன் நின்று நடத்தினார். அவர் இப்பொழுது ஓய்வு பெற்று நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
1972இல் நான் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். ஐந்து வருஷங்களுக்குப்பி்ன், நான், என் மனைவி, மற்றும் மகன் குருப்ரசாத் மூவரும் பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சீபுரம் சென்றோம். அவர் என்னைப் பார்த்ததில் மிக மகிழ்ச்சியுற்றார் என்று எனக்குத் தோன்றியது. அமெரிக்காவில் என்னுடைய அனுபவங்களை எல்லாம் விசாரித்தார். அமெரிக்காவைப் பற்றிய அவருடைய விஷயஞானம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஜனவரி 1973 இல் என்னுடைய இரண்டாவது மகன் ப்ரபாகர் பிறந்தான். 1974 செப்டெம்பரில், அண்ணாமலை நகரில் என் தந்தை உயிர் நீத்தார்.
பதின்மூன்றாம் நாள் காரியத்துக்கு, பெரியவா, எனக்கும், என் அண்ணா கணபதிக்குமாக இரண்டு சால்வைகள் அனுப்பியிருந்தார். இரண்டிலும், ‘பகவத் பாத சேவா’ என்று அச்சடிக்கப் பட்டிருந்தது.
1972 க்கும் 1980க்கும் இடையே, வேலைப் பளுவினால் பெரியவாளை சில முறைதான் சந்திக்க முடிந்தது. 1981 முதல், விடாமல், பல வெளிதேசங்களுக்கும போக வேண்டியிருந்தது. அம்மா 1982இல் காஞ்சீபுரத்தில் உயிர் நீத்தார்.
1993 ஜனவரி 21—ஆம் தேதி அன்று பெரியவாளைத் தரிசனம் செய்த நிகழ்ச்சியோடு, இந்த என் கதையை முடிக்க விரும்புகிறேன்.
1993 ஜனவரி 18இல் என் மகன் குருப்ரசாத்திற்கு், சௌ.வித்யாவிற்கும், திருப்பதியில் நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு, நாங்கள் அனைவரும் பெரியவாளின் ஆசீர்வாதம் பெறுவதற்குக் காஞ்சீபுரம் சென்றோம். ஜனவரி 20 ஆம் தேதி வெங்கடேஸ்வரப் பெருமாளுக்குக் கல்யாண உற்சவம் நடத்திய பின், அடுத்த நாள் காலை புறப்பட்டோம். சீக்கிரமே போய்ச்சேர விரும்பினோம். ஆனால், ரூம் சாவிகளைத் தவறி எங்கோ வைத்துவிட்டதால் தாமதமாகி, காலை 9 மணிக்கே புறப்பட முடிந்தது. நாங்கள் பத்து பேர் இருந்ததால் மூன்று டாக்ஸிகளில் சென்றோம். 11 மணிக்குள் காஞ்சீபுரம் அடைய வேண்டும் என ட்ரைவர்களிடம் கூறியிருந்தேன். திருப்பதிக்கும் திருத்தணிக்கும் இடையே, மூன்று ரெயில்வே கேட்டுகள் உள்ளன. முதல் கேட்டை அடையும்பொழுது அது அடைக்கப் பட்டிருந்தது. இதனால் தாமதம் ஆயிற்று. இரண்டாவது கேட்டை அடையும் பொழுது, மணி 10=30. அதுவும் அடைக்கப்பட்டிருந்து. அருகில் அமர்ந்திருந்த சம்பந்தி ராஜகோபாலிடம், இன்று பெரியவாளைத் தரிசிக்கும் நம்பிக்கை எனக்கு இல்லை என்றேன். அப்பொழுது ஒர் ப்ரைவேட் கார், எங்களைக் கடந்து முன்னால், கேட்டுக்கருகில் சென்று நின்றது. அந்த வண்டியின் பின்புறத்துக் கண்ணாடியில், பெரிய கொட்டை எழுத்தில், “சந்த்ரசேகர்” என்று எழுதப்பட்டிருந்தத ராஜகோபாலிடம் விளையாட்டாக, “ அந்த சந்த்ரசேகர் உதவிக்கு வந்தாலொழிய, கேட் திறக்காது” என்று கூறினேன். அவருக்கு நான் சொன்னதின் அர்த்தம் விளங்கியிருக்காது என்று எண்ணி, விளக்கிக் கூறினேன், “சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி உதவிக்கு வந்தாலொழிய, கேட் திறக்காது, காஞ்சீபுரத்திற்கு நேரத்தில் போய்ச் சேர முடியாது”
வாசகர்கள் நம்புவார்களோ என்னவோ, அந்த சமயத்தில், அந்தக் காரின் டிரைவர், கீழே இறங்கி, கேட்கீப்பரிடம் சென்று பேசிவிட்டுத் திரும்பி வந்து காரில் உட்கார்ந்தார். உடனேயே, கேட் திறக்கப்பட்டது! அந்தக் கார் முன்னே விரைந்து செல்ல, எங்களுடைய மூன்று டாக்சிகளும் அதைப் பின்பற்றி விரைந்து கேட்டைக் கடந்தன எல்லா வண்டிகளும் மூன்றாவது கேட்டை அடைந்தபொழுது, அதுவும் அடைக்கப்பட்டிருந்து! நான் ராஜகோபாலிடம் “இங்கேயும் அதே மாதிரி நடக்கணும்” என்று பிரார்த்திப்பதாகச சொன்னேன். அதே மாதிரி நடந்தது! கொஞ்ச தூரம் கழித்து, அந்தக்கார் வேறு திசையில் சென்று விட்டது. ராஜகோபாலன், அதில் இருந்தது ஆந்திர மாநிலத்தின் மந்திரியோ, பெரிய ஆஃஃபீஸரோவாக இருக்கவேண்டும் என்று யூகித்தார். நான் அதற்கு, “இது எனக்காகப் பெரியவா செய்த ஒரு ஏற்பாடு!” என்றேன்.
அந்தக் கார் யாருக்கு சொந்தம் என்றோ, இல்லை இது ஒரு தற்செயலாக நடந்த காரியம் என்றோ,, அல்லது ஒரு அற்புதம் என்றோ நான் லக்ஷியம் பண்ணவில்லை. கேட்கீப்பர் செய்தது சரியா என்றும் நான் ஆராயவில்லை.
சரியாக 11=40க்கு காஞ்சி மடத்தை சென்றடைந்தோம். அண்ணா கணபதியும், மன்னியும், அங்கே ஏற்கெனவே வந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். பெரியவா தரிசனம் குடுத்து முடிக்கப் போவதால், அங்கே சீக்கிரம் போகவேண்டும் என்று அண்ணா கூறினார். 11==50க்கு பெரியவாளின் முன்பு நின்றுகொண்டு, “ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர’ என்று ஜபித்துக் கொண்டிருந்தோம். பெரியவாளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த எங்கள் நண்பர்கள், எங்களை ஒவ்வொருவராக பெரியவாளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். முதலில் என் சம்பந்திக்கும், பின்னர் கல்யாணத் தம்பதிகளுக்கும், பிறகு மற்றவர்களுக்கும் பெரியவாளிடமிருந்து பிரசாதம் கிடைத்தது. சீக்கிரமே, திரை மூடப்பட்டது. பிறகு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸ்வாமிகளையும், ஜெயேந்திர ஸ்வாமிகளையும் தரிசனம் செய்து அவர்களுடைய ஆசிகளைப் பெற்றோம். மருமான் சந்த்ருவின் வீட்டில் மதிய உணவு உண்டுவிட்டு,, காமாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போய் விட்டு, அன்று மாலையே சென்னையை அடைந்தோம். அடுத்த நாள் என் இரண்டாவது பையன் பிரபாகருடன் நான் அமெரிக்காவுக்குக் கிளம்பினேன்.
இதுவரை கூறிவந்த பெரியவாளுடனான என் அனுபவங்களில், பெரியவாளை, நான், ‘என்னோட பெரியவா’’, ‘பெரியவா’, ‘கருணாமூர்த்தி’, ‘தெய்வம்’ என்றெல்லாம் குறிப்பிட்டு வந்திருக்கிறேன். தெய்வம் என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்லவோ, பெரியவாளே தெய்வம்தான் என்று நிரூபிப்பதற்கோ நான் முயலவில்லை. அது என்னால் முடியுமா? அதை நான் வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
மேக்ஸ்முல்லர் ராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றிக கூறியது போல், ‘பெரியவா மனிதனும், தெய்வமும் சேர்ந்த ஒரு அற்புதமான கலவை” என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். என்னைப் பொறுத்த மட்டில், 15 நீண்ட வருஷங்கள் நான் கடவுளுடன் வாழ்ந்தேன் என்பது மட்டும் நிச்சயம்.
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே..
ஆர்.பொன்னம்மாள்.
இந்த புத்தகத்திலிருந்து சில ஸ்வாரஸ்யமான
பகுதிகள் தினமும் வெளியாகும். பெரிய கட்டுரையிலிருந்து
ஒரு சில பாராக்கள் டைப் அடித்து உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்- வரகூரான்.
"இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது.அரிசி மூட்டை
என்ன விலை?"
"நம்ப நிலத்துல வெளஞ்சது ஸ்வாமி! ரொம்ப உயர்ந்த ரகம்..
உங்களைப் போல் மகான்கள் சாப்பிடற விஷயத்துல நான்
மத்தவாளை நம்பறதில்லே..காய்கறிகளும் அப்படித்தான்.
ஒரு சொத்தை,அழுகல் இல்லாம நானே பார்த்து
வாங்கினேன்.
மளிகை சாமானும் அப்படித்தான்..முதல் தரம்!"
மௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மகான்.அவன் பேசி
முடித்ததும் "அது போலத்தான் அர்ச்சனை பூக்களும்,
வில்வத்திலேயும்,துளசியிலேயும்.
எத்தனை ஓட்டை தெரியுமா! நெறைய அழுகல் பூ இருந்தது.
இவன் வீட்டு அர்ச்சனையில் தோஷமுள்ள பூக்கள்தான்
இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா?
தேவதைகள் நம்ப வேண்டாமா? பகவானோட நெருக்கத்தை
நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும்" என்றார்.
வாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி
செய்யறா..அவாளுக்கு கிரகங்களும் நிறைய
உபசரணை பண்றா.
ஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காத்தும்,நித்திய
கர்மாக்களுக்கு மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம்
உபசரிக்க நேரமில்லாமப் போயிடறது. சிரமம் வந்தாதான்
பகவானை நினைக்கறதுங்கிறதை மாத்திக்கணும்.
"வீட்டுலே யாருமே இல்லே...பொழுது போகலே.."ன்னு
தவிக்கற நேரங்கள்லே, பகவானண்டே உட்கார்ந்து
காதுக்கு இனிமையா நாலு ஸ்லோகம்,பாட்டு
சொல்லுங்களேன். மனசு எத்தனை விச்ராந்தியாறதுன்னு
புரியும்.
தகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன், வேளா வேளைக்கு
அன்னமும்,கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது மட்டும்
ரட்சணை இல்லை. அவர் வயசுக்கு மாறி அவருக்குப்
பிடிச்ச பேச்சுக்களை தினமும் ஒரு அரைமணி
சம்பாஷிக்கணும்.அப்படிப்பட்டவனை பிரம்மா
ஆசிர்வாதம் பண்றார்.
தாயார், குடி இருந்த கோவிலில்லையா? இதேபோல
அன்பாய் இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியில்
பூமி சொந்தமாய் அனுபவிக்கும் போகம் கிடைக்கும்.
ஏன்னா பூமி தேவி அப்படி அனுக்ரஹம் பண்றா.
குருவை மரியாதையா நடத்தறவனுக்கு,மத்தவாளுக்கு
படிக்க ஒத்தாசை பண்றவாளுக்கு,அடுத்த பிறவியில்
படிப்பு நன்றாக வரும்.பிரகஸ்பதி அப்படி வரம்
கொடுத்திருக்கார்.
His Holiness Sri Chandrasekarendra Saraswati Swamigal was the 68th Pontiff of the Kanchi Kamakoti Peetam. One of the most glorified saints the history has ever witnessed, He was a Realized Soul. Humility and simplicity were hallmarks of this great Avatara Purusha.
Lovingly called as ‘Maha Periyava’ or ‘Paramacharya’, the Mahaswami ascended the Peetam in 1907 at the age of 13. Intensively educated in all the Vedas and Shastras, He was multi-lingual too. Throughout the century that He was in his mortal form, gracing the world, He traveled the length and breadth of the country by foot spreading the fragrance of Sanathana Dharma and the glory of the Vedas.
As a Tribute to Mahaswamigal, Let us take a few moments to remember Him, through our beloved Sadguru’s words:
Thiruppaavai and Thiruvempaavai were composed in the Tamizh month of Maargazhi. So they are sung in ‘Ushat Kaala’(early morning) during Maargazhi. Thiruppaavai was composed by Andal and Thiruvempaavai by Manickavaachagar. They are sung in the worship of the Lord because it was in Maargazhi that these two took shape. Thiruppaavai is thirty in number but Thiruvempaavai is only 28 as Siva ‘aagama’ is only 28. Leaving aside the ‘stuti’ Thiruvempaavai together with Thirupalliezhuchhi consists of 28 verses. Even today Thiruppaavai and Thiruvempaavai competitions are held in schools. Today, their records are played in all the temples. The credit for making these two popular goes solely to Kanchi Saint Sri Chandrasekarendra Saraswati Swamiji (Mahaswamiji).
Of all the (Adi) Sankara Jayantis celebrated two have been very special. They were celebrated in a large scale. One was in Pondicherry and the other in Tiruvidaimarudur.
Once, in Pondicherry, Adi Sankara Jayanti was celebrated with the procession (‘purappaadu’) of Sankara’s picture. At that time Pondicherry was ruled by the French Government while the English ruled the other parts of the country. Many French and English bureaucrats used to visit Maha Periyava and this celebration was attended by both French and English officials. The French stood on one side while the English on the other. And the Indians stood in another line. Mahaswamiji invited the foreigners because Adi Sankara was Jagadguru! It was for this reason (that Adi Sankara was Jagadguru) that Mahaswamiji desired that all – the Indians, the English and the French to participate together in that spectacular event.
Once, during Sankara Jayanti celebrations in Tiruvidaimarudur, Mahaswamiji had invited renouned scholars. He conducted Thiruppaavai and Thiruvempaavai conference (‘maanaadu’) and asked the popular carnatic singer M.L.Vasanthakumari to cut a disc. It is these records that are very popular today. Tamizh Poets participated in Tiruvidaimarudur celebrations. Mahaswamiji said that Thiruppaavai and Thiruvempaavai are our two eyes. Poet U.V. Swaminatha Iyer corrected him, “Kann illai! Paavai!” (Not eyes but the ‘pupils’). Mahaswamiji immediately appreciated it, “Nanru Pandidare! Nanru!” (Well said, Oh! Poet, Well said!) Mahaswamiji used to converse with those Tamizh Poets in their own style of pure Tamizh (‘shudha Tamizh’). One should not forget that the popularity of Thiruppaavai and Thiruvempaavai is only due to Mahaswamiji.
நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக, ஆகிறது. ‘இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று’ என்கிறபோது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்றும் ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈசுவரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை. ஆனால், நாமாகவே எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற அகங்காரத்தைவிட்டு ஈசுவரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே, அதுவும் நல்லதுதான். அவனும், நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூடப் பொருட்படுத்தாமல், நம் கர்மாவையும் மீறிப் பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம். ஆனாலும், ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்று லோக வாழ்க்கையில் வந்துகொண்டேதான் இருக்கும். ஆகையால் லௌகிகமான கஷ்ட நிவிருத்திக்காக பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே இராது.
ஒரு சிறுவனின் சருமத்தில் கருந்திட்டுகள் தோன்றி உடல் முழுதும் பரவி விட்டது. பார்க்கவே அருவறுப்பூட்டும் தோற்றம். உடன் படித்தவர்களும் அவனை ஒதுக்கி விட்டனர்.
உடல் வியாதி பாதியும் மனச் சோகம் மீதியுமாக சோம்பிப் போன பிள்ளையை அவனின் அம்மா சுவாமிகளிடம் அழைத்து வந்தாள். பெரியவர் அந்த சிறுவனிடம் கேட்டார்: ‘‘குழந்தே, என்னோட மூணு நாள் இருக்கியா?’’ சிறுவன் ஒப்புக்கொள்ள அம்மாவும் சுவாமிகளிடம் அவனை விட்டு விட்டுப் போனாள்.
‘‘நான் என்ன சாப்பிடறனோ அதையேதான் நீயும் சாப்பிடணும். நமக்குள்ள ஒப்பந்தம். சரியா?’’ என்று சுவாமிகள் கேட்க பையன் சந்தோஷமாய் சம்மதித்தான். அடுத்த மூன்று நாட்கள் பெரியவர் சாப்பிட்ட அதே ஆகாரம்தான் பிரசாதமாய் பையனுக்கும் வழங்கப்பட்டது. அது என்ன உணவு? பச்சை வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்கி எந்தவிதத் தாளிப்பும் சேர்க்காமல் சிறிது தயிர் மட்டு…மே கலந்ததுதான் அந்த உணவு. அதை மட்டுமே சாப்பிட்ட அந்த சிறுவனின் நோய் மூன்றே நாளில் நன்கு நிவர்த்தி ஆகியது. சோம்பி வந்த சிறுவன் மலர்ச்சியோடு வீட்டிற்குத் திரும்பிச் செல்ல ரெடியானான். ‘‘வீட்டிற்குப் போன பின்பும் ஒரு மாசம் உப்பு, புளி, காரம் சேர்க்காமே சாப்பிடு. இந்த வியாதி இனிமே வரவே வராது’’ என்று ஆசி கூறி சுவாமிகள் அந்த சிறுவனை வழியனுப்பி வைத்தார்.
உண்மையில் பெரியவர் அந்தக் காலத்தில் ஓரளவு காய்கறிகளும் சிறிது அரிசிச் சாதமும் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் பையனுக்கு இந்தப் பத்தியம் அவசியம் என்பதால் அந்த மகான் தன் உணவையும் மாற்றிக் கொண்டார். குழந்தை தன் நாக்கைக் கட்டுப்படுத்தும் போது தாமும் அந்தக்கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும் என்று கருதி காரியத்திலும் செய்து காட்டினார். சேய்க்கு வந்த நோய்க்கு தாயும் மருந்து உண்பது போல!
வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.
ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம்.
வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு. ‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள். மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடுவது வழக்கம். சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். மகான் மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம். ஆனால் பசு வேதனைப்பட்டுக்கொணடே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை. வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டனர். கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல.. காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.
பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர்.
கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள் நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.
தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு..... ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது. துள்ளியபடி நின்றது. இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது.
ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான். அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.
பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின் மகான் உள்ளே போனார்.