சதாவதானமும் சாத்தியமே!
சதாவதானம் என்பது மிகவும் அற்புதமான, அரிய கலை.
சதாவதானி எனப்படுபவர் ஒரே சமயத்தில், கவிதை, கணிதம், ஜோதிடம், வேதாந்தம், புராணம், இசை போன்ற பல துறைகளைப் பற்றி, மற்றவர்கள் கேட்கும் நூறு கேள்விகளை மனதில் வாங்கிக் கொள்வார். பிறகு விடைகளை, வரிசையாக, ஒன்றுகூட விடாமல், தவறு இல்லாமல் சரியாகச் சொல்லுவார்.
ஒரு முறை வயது முதிர்ந்த ஸ்ரீவைஷ்ணவ சதாவதானி ஒருவர் மடத்துக்கு வந்திருந்தார். அவரிடம் வித்வான்கள் பல கேள்விகளைக் கேட்டனர்.
கேள்விகள் கேட்கப்படும்போதே, பரமாச்சார்யார் அருகில் இருந்த ஒருவரிடம், தான் கூறும் விடைகளைத் தனியே குறித்துக் கொள்ளுமாறு கூறினார்.
பின்னர், அந்த முதியவர் விடைகளைச் சொன்னபோது, அந்த விடைகளும், பரமாச்சார்யார் சொல்லிக் குறித்து வைத்திருந்த விடைகளும் ஒன்றாகவே இருந்தன.
ஸ்வாமிகள் அருளின் வடிவம் மட்டுமல்லாமல், அறிவின் வடிவமும் கூட என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்.
No comments:
Post a Comment