கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
சேலத்தில் ஒரு ஆடிட்டர் தன் குடும்பத்துடன்
மகானிடம் ஐக்கியமாகி விட்டவர்.சுருக்கமாகச்
சொன்னால் காஞ்சி மகான் தான் அவருக்கு எல்லாமே.
மகானிடம் ஐக்கியமாகி விட்டவர்.சுருக்கமாகச்
சொன்னால் காஞ்சி மகான் தான் அவருக்கு எல்லாமே.
பெரியவா ஜெயந்திக்கு மட்டுமல்ல,சாதுர்மாஸ்யத்திற்கு ம்
தாராளமா செலவு செய்யக்கூடியவர். தேவையான எல்லா
சாமான்களையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போய்,
பெரியவா முன் அடுக்கி வைத்துவிடும் பழக்கம் அவருக்கு.
ஒரு தடவை சாதுர்மாஸ்ய விழாவிற்காக வழக்கம் போல்
எல்லா சாமான்களையும் வேனில் ஏற்றிக்கொண்டு போய்,
அதை பெரியவா முன் சமர்ப்பித்துவிட்டு நின்றார்.
உடன் வந்தவர்கள் எல்லோருமே நிற்கிறார்கள்.மகானின்
மனம் குளிரும்படி எல்லா சாமான்களையும் கொண்டு
வந்த திருப்தி ஆடிட்டருக்கு.
"ஆடிட்டர் வேணுகோபால்" என்றவுடன் அவரைப்
பார்த்து புன்முறுவல்.தொடர்ந்து வந்திருந்த சாமான்கள்
பார்த்து புன்முறுவல்.தொடர்ந்து வந்திருந்த சாமான்கள்
அவ்வளவையும் நிதானமாகப் பார்த்தார்.பிறகு சொன்னார்..
"என்னடா முக்கியமான ஐயிட்டத்தையே விட்டுட்டே"
ஆடிட்டருக்கு பகீரென்றது.ஒவ்வொன்றையும் பார்த்துப்
பார்த்து சேகரித்ததல்லவா?
எல்லோரும் சாமான்களைப் பார்த்தார்கள்.
எல்லாம் சரியாகத்தானே இருந்தது.
எல்லாம் சரியாகத்தானே இருந்தது.
என்னவென்று அவரிடம் கேட்கப் பயம்.தாங்களாகவே
தெரிந்து கொள்வார்கள் என்று அவர் நினைத்தது
போலும் இருந்தது.
தெரிந்து கொள்வார்கள் என்று அவர் நினைத்தது
போலும் இருந்தது.
"என்ன தெரியல்லியா? முக்கியமான ஐயிட்டம் என்னன்னு
தெரியல்லியா?" அனைவரும் மௌனமாக இருந்தனர்.
தெரியல்லியா?" அனைவரும் மௌனமாக இருந்தனர்.
"எங்கேடா உப்பு?" என்று பெரியவா கேட்டதும்தான்
அதிர்ச்சியோடு அவர்கள் சாமான்களின் குவியலைப்
பார்த்தனர். அதில் உப்பே இல்லை.
அதிர்ச்சியோடு அவர்கள் சாமான்களின் குவியலைப்
பார்த்தனர். அதில் உப்பே இல்லை.
No comments:
Post a Comment