சம்பவம்-ஒன்று.-ரா.கணபதி.இரண்டு -ஸ்ரீமடம் பாலு
சமய குருவை [பெரியவர்] சமையல் துறையில் கொஞ்சூண்டு ருசிக்கலாம்.[ரா.கணபதி எழுதியது]
'உப்புமா' என்ற பெயர் அந்த உணவகைக்கு ஏன் வந்தது என்று அந்த விநோத வித்தகர் கேள்வி எழுப்புகிறார். எவராலும் 'கன்வின்ஸிங்'காக காரணம் சொல்ல இயலவில்லை.
அவரே சொல்கிறார், "அது uppuma இல்லே,ubbuma! ப [pa]- காரத்தை,ப [ba] காராமாச் சொல்லணும்.
ஒடச்ச மாவையோ,ரவையையோ வென்னீர்ல கொட்டின ஒடனேயே அது வாணலி பூரா உப்பிடறதோல்லியொ? சாதம் வடிக்கறச்சேயும் அரிசி உப்பறது.ஆனா அதுக்கு ரொம்ப நாழி ஆறது.நொய்யும், ரவையுமோ சட்னு பாத்திரம் பூரா உப்பிடறது.அதனால்தான் 'உப்புகிற மாவு'ங்கிற அர்த்தத்துல அந்தப் பேர் ஏற்பட்டிருக்கு."பச்சை மாவும் பவள வாயும்.
------------------------------ ------------------------------ ------------------------------ --------------
இரவு வேளை.
விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.
“ஆகாரம் பண்ணியாச்சா?”
” ஆச்சு”
“என்ன சாப்பிட்டே?”
“உப்புமா”
ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள். “உனக்கு ஒரு கதை தெரியுமோ?உப்புமாக் கதை”
“தெரியாது”
“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்கு; போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். உ ப்புமா சரியாக
வேகவில்லை.சின்னச் சின்னதாய் நிறைய கல் வேறே இருந்தது. பல்லில் அகப்பட்டு,
வாயெல்லாம் புன்ணாகி , சிவப்பாகி விட்டது. நிறைய மிளகாய் தாளித்துப்
போட்டிருந்ததால், காரம் தாங்கவில்லை. கண்களில் நீர் வழிந்து, சிவந்து
போச்சு. அப்போ, ரொம்ப சிரமத்திலே ஒரு பாட்டுப் பாடினான். உனக்குத்
தெரியுமோ?”
“தெரியாது”
“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”
“இது எனக்குத் தெரியும்.”
“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினான் . பச்சை மா (வேகாத மாவு) , மணி போல் மலை (உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), அச்சுதா….”
அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்
சமய குருவை [பெரியவர்] சமையல் துறையில் கொஞ்சூண்டு ருசிக்கலாம்.[ரா.கணபதி எழுதியது]
'உப்புமா' என்ற பெயர் அந்த உணவகைக்கு ஏன் வந்தது என்று அந்த விநோத வித்தகர் கேள்வி எழுப்புகிறார். எவராலும் 'கன்வின்ஸிங்'காக காரணம் சொல்ல இயலவில்லை.
அவரே சொல்கிறார், "அது uppuma இல்லே,ubbuma! ப [pa]- காரத்தை,ப [ba] காராமாச் சொல்லணும்.
ஒடச்ச மாவையோ,ரவையையோ வென்னீர்ல கொட்டின ஒடனேயே அது வாணலி பூரா உப்பிடறதோல்லியொ? சாதம் வடிக்கறச்சேயும் அரிசி உப்பறது.ஆனா அதுக்கு ரொம்ப நாழி ஆறது.நொய்யும், ரவையுமோ சட்னு பாத்திரம் பூரா உப்பிடறது.அதனால்தான் 'உப்புகிற மாவு'ங்கிற அர்த்தத்துல அந்தப் பேர் ஏற்பட்டிருக்கு."பச்சை மாவும் பவள வாயும்.
சம்பவம்-இரண்டு ஸ்ரீமடம் பாலு.
இரவு வேளை.
விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.
“ஆகாரம் பண்ணியாச்சா?”
” ஆச்சு”
“என்ன சாப்பிட்டே?”
“உப்புமா”
ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள். “உனக்கு ஒரு கதை தெரியுமோ?உப்புமாக் கதை”
“தெரியாது”
“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்கு; போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். உ
“தெரியாது”
“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”
“இது எனக்குத் தெரியும்.”
“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினான் . பச்சை மா (வேகாத மாவு) , மணி போல் மலை (உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), அச்சுதா….”
அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்
No comments:
Post a Comment