Welcome to My Blog.....
PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN
Sunday, June 30, 2013
Bhaskaran Shivaraman திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்…
சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான், அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவராயிற்றே…
Friday, June 28, 2013
From: nagarajan ramaswamy <nramaswamy58@gmail.com>
Date: 2013/6/5
... -------------------------------------------------
பெரியவாவை பத்தி இன்னொரு சம்பவம் , என் மன்னிமூலம் கிடைத்தது . அவரின் பக்தையை பற்றியது .
கல்கத்தாவில், அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.
அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி .
naxalites கள் 3டு 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.
பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு , அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.
சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார் .
நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார் .
வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கு,ம் காளி மாதாவின் படத்தையும் பார்த்து
பூரண பக்தி யோடு நமஸ்கரித்தார் . இன்னிக்கு ஏகாதேசி .இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார்
அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள்.வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார்.
பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார்.தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார்
அப்ப அந்த அதிசயம் நடந்தது.naxalites மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில்
பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .
ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள்.
காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர் .
"மன்னித்து விடுங்கள் தாயே " என்று எடுத்தனர் ஓட்டம் .
கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார்
மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க , "காமாக்ஷி காப்பதினாளா " என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு
தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம் .
உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .
Wednesday, June 26, 2013
Varagooran Narayanan யோகி ராம் சுரத்குமாரும் பெரியவாளும் — பி. சுவாமிநாதன்
அது 1980 -களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில்இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரைஅழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்தஉதவியாளர். மகானின் உத்தரவைநிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.
“திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார்தெரியுமோ உனக்கு ?”
உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும்பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காகதிருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவைஅவரை நான் சேவிச்சிருக்கேன்.”
“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப்போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி,உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா” என்றார்.
“உத்தரவு பெரியவா” என்று நமஸ்காரம் செய்து விட்டுஅந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம்பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலைசெல்லும் பேருந்தில் ஏறினார்.
திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்றுஅவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்” என்று ஆசீர்வதித்தார் அந்தஉதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும்பயணமானார்கள்.
அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹாபெரியவாளின் முன்னே இருந்தார் யோகிராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில்அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழேதரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்குமுன்னால் — அதாவது அவரை நேர் பார்வைபார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும்ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடையஅதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்துவிழவில்லை.
யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த
உதவியாளருக்கு வியப்பு. ‘ஏதோ பெரிய விஷயம்பேசப் போகிறார்கள்’ என்று ஓரமாக நின்று வேடிக்கைபார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம். யோகியும் பேசக்காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டேஇருக்கிறார்களே என்று குழம்பினார்.
சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப்புன்னகைத்தார் பெரியவா.
‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப்போகிறார்கள் போலிருக்கிறது’ என்று தீர்மானித்தார்உதவியாளர்.
அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார்பெரியவா.
உதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாகநின்றார்.
“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டுவிட்டு வா” என்றார்.
உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவேஇல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்துவிட்டது என்கிறாரே ?’ என்று குழம்பி நின்ற போது,யோகி எழுந்து விட்டார்.
இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.
பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன ?
விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் ?
மடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர்தவித்துப் போனார்.
‘அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகிரம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்திஇருப்பார்கள். இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வாஎன்கிறாரே மஹா பெரியவா ?’
உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள்இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார்யோகி.”என்னப்பா….உள்ளே நாங்கள் என்ன செய்தோம்என்று யோசிக்கிறாயா ?” என்று மெள்ளக்கேட்டார்.”ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே?” என்றார் படபடப்பாகஉதவியாளர்.”ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்” என்று யோகிசொல்ல…. உதவியாளர் விழித்தார். பிறகு, யோகியேஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.
பெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப்பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடிபீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில்ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில்கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்துவந்தார்
”யோகி: “ஆம்….”
பெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும்பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்குஅடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு,கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின்மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாமஜபம் உச்சரிக்கச் செய்தார்.”
யோகி: “ராம்…. ராம்…”
பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல்பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாமஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறது என்றுபிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.”
பெரியவா: “அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிறஇடத்தில் இன்றைக்கும் ராம ராம என்று ஜப ஒலி வந்துகொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள்உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடிகொண்டிருக்கிற இடமே — கோவிந்தபுரமே ராம நாமபூமியாக இருக்கிறது.”
யோகி: “ராம்…. ராம்…”
பெரியவா: “பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராமநாம சிந்தனையில் வாழும் நீ அங்கேயே நிரந்தரமாகஇருந்து விடேன்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குத்திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயேதங்கி விடுகிறேன்.”
பெரியவா: “உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி.”
யோகி: “ஆம். இந்தப் பிச்சைக்காரன்திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.
பெரியவா: “ஆஹா… அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச்சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பியவேலை பூர்த்தி ஆகி விட்டது. நீ புறப்பட்டு.”
இந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம்சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய்மூடவில்லை. மௌனத்தின் மூலமே மிகப் பெரியசம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பதுஉதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
நூலின் தலைப்பு : மஹா பெரியவா
நூலாசிரியர் : பி. சுவாமிநாதன்
TRISAKTHI PUBLICATIONS
56 / 21 ,
FIRST AVENUE
, SASTRI NAGAR ,
ADYAR , CHENNAI – 600 020 .தொலைபேசி : 044 – 4297 –0800
Monday, June 24, 2013
Well-bred Kannan Narrated by எஸ்.சீத்தாராம்ன், சென்னை
புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.
...
(பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?)
”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..”
பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…”
அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள்.
பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!
Saturday, June 22, 2013
Well-bred Kannan Narrated by எஸ்.சீத்தாராம்ன், சென்னை
வானகரத்தில் ஒரு சவுக்குத் தோப்பில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. முன்னர் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தைக் கொடுத்தேன். அப்போது, பல்வேறு காரணங்களால் புகைப்படங்களில் குறைகள் ஏற்பட்டிருந்தன.
இந்தத் தோப்பில் எவ்விதக் குறைகளுமில்லாமல் புகைப்படம் எடுக்க முடியும் என்பது என்னுடைய துணிபு.
...
பெரியவா, ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, ஒரு தாழங்குடை கொண்டுவரச் சொல்லி, அதைத் தன் தலைக்கு மேல் பிடிக்கச் சொன்னார்.
“இப்போ போட்டோ எடுத்துக்கோ…”
அப்போது நான் எடுத்த புகைப்படம் மிக அருமையாக வந்திருந்தது. (பின்னால் கல்கி தீபாவளி மலர் ஒன்றில் ஸ்ரீருத்ர வாக்கியமான, ‘நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச’ என்ற விளக்கத்துடன் முகப்புப் படமாக வெளியாயிற்று).
பெரியவாள் தாழங்குடையைப் பிடிக்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. மரங்கள் வழியே வந்த ஒளி, அவர்கள் மேல் திட்டுத் திட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் படம் எடுத்தால் நன்றாக வராது என்பதால், அந்த ஷாட் நன்றாக அமைய வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தார்கள்.
மெய்ப் படங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள். நிழற் படங்களின் நுட்பங்களை எந்தக் குருகுலத்தில் கற்றுத் தெளிந்தார்கள்?
ஆயிரம் படம் படைத்த ஆதிசேஷ்னே அறிவார்!
Thursday, June 20, 2013
Varagooran Narayanan மகா பெரியவா காட்டிய வழி! [தீபம் இதழில் வந்த கட்டுரை]
சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை பூஜையறையில் வைக்க வேண்டும். பழங்கள் கெட்டுவிட்டால், ஏதாவது மரத்தினடியிலோ ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளிலோ போட்டுவிட வேண்டும். ஜூஸ் செய்தோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடக்கூடாது’ என்று பதிலளித்திருக்கிறார். இந்தப் பதிலை படித்ததும், எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
...
என் தந்தைக்கு, ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள்தான் குலதெய்வமே. அவர் எங்கு முகாமிட்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது தரிசிக்காமல் இருக்கமாட்டார். (1952ஆம் ஆண்டு ‘வியாஸ பூஜை’ ஆடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் (‘திருமூலர்’ சாத்தனூர் என்பார்கள்) எங்கள் கிரஹத்தில்தான் நடைபெற்றது! அநேக தடவைகள் எங்கள் கிராமத்தில் மகா பெரியவர் முகாமிட்டிருந்தாலும், அந்த முறை மூன்று மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம்போல் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்தபோது, அவர் ஆந்திர மாநிலம் ‘ரேப்பள்ளி’யில் முகாமிட்டிருந்தார். ‘ரேப்பள்ளி’க்கு நானும் என் தந்தையுடன் சென்று ஸ்ரீபெரியவரையும், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜையையும் இரண்டு நாள் தங்கி தரிசனம் செய்தோம்.
மூன்றாவது நாள் என் தந்தை வந்தனம் செய்து, ‘அப்ப நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா…” என்று பெரியவாளிடம் உத்தரவுக்காக பணிந்து நின்றார். உடன் அவர், “ஊருக்குத்தானே நேரே போகிறாய்…” என்றார். “ஆமாம்” என்று என் தந்தை கூறவும், தன் கழுத்திலிருந்த எலுமிச்சம் பழ மாலையை கழட்டி என் தந்தையிடம் கொடுத்து, இன்னும் ஒரு மாலையையும் கொடுத்து, “இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” என்றார். என் தந்தை உடனே “பெரியவா உத்தரவு” என்றபடி மாலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் கூட தங்காமல் சாத்தனூர் வந்து ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு கொடுத்தார்! எலுமிச்சம் பழ மாலையைப் பார்க்கும் போதெல்லாம், பெரியவாளின் கருணை முகம்தான் பளிச்சிடும்!
- ஜி.நீலா, சென்னை
–நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்See More
Tuesday, June 18, 2013
Varagooran Narayanan பொருந்தக் காட்டும் விருந்தில்-பதஞ்ஜலி ரா.கணபதி எழுதியது
"சிரிக்க வைத்தே சிறக்க வைப்பார்" என்ற கட்டுரையில்
காலும் கொம்பும் இல்லாத பதஞ்ஜலி காலும் கொம்பும்
இல்லாத துதி செய்த பொருத்தத்தை- பெரியவாள்
வாக்கில் கேட்டதையும் நினைவு கொள்வோம்.
பழைய கோயில் ஒன்றில் பதஞ்ஜலி பிம்பத்தின் கீழ்
பதஞ் சொல்லி என்று எழுதியிருக்கு.
பெரியவாளின் கூடச் சென்றவர்கள் "தப்பும் தாறுமாக
எழுதியிரூக்கிறான்" என்று சிரிக்கிறார்கள்.பெரியவாளும்
சிரிக்கிறார். ஆனால் இது இசைவு கண்ட இனிய சிரிப்பு.
தப்பிலும் கூடச் 'சரி'யைக் காணும் பொருந்தக்காரர்
அல்லவா?.
"தப்புமில்லை, தாறுமில்லை" பதஞ்ஜலிதான்
வியாகரண மஹாபாஷ்யம் எழுதினவர்.பதங்களின்
லக்ஷணங்களை யெல்லாம் அதிலே எடுத்துச்
சொல்லியிருக்கிறார்.வியாகரண சாஸ்திரத்திற்கே
பதம் என்று ஒரு பெயர்.அதனால் அவர்
"பதஞ்சொல்லி"யும் கூடத்தான் என்கிறார்"
"அறியாமையில்கூட ஒரு ஞானம் இருக்கிறதென்று
இதிலிருந்து தெரிந்து கொண்டேன்" என்று
அர்த்த புஷ்டியுடன் கூறுகிறார்!.
Sunday, June 16, 2013
Varagooran Narayanan பாவ புண்ணிய உயிராக இருந்தால், அதற்கான வினையை அனுபவித்தே ஆக வேண்டும்.! இதற்கு என்ன ஆதாரம்? எதை வைத்து இதை நம்புவது? பெரியவர் வாழ்விலேயே ஒரு சம்பவம். (இந்திரா சௌந்தர்ராஜன் தீபம் இதழில் எழுதிய முற்றுப்பெறாத ஒரு கட்டுரையின் ஒரு பகுதி) ...
பலரும் அறிந்த சம்பவம்தான்! இருந்தும் இங்கே ஒருமுறை அதை சிந்தித்தாலே, இதுவரை எழுப்பிய கேள்விகளுக்கான விடையை நாம் குழப்பமின்றி நெருங்க முடியும்.
ஒரு வெள்ளைக்காரர், பெரியவரைச் சந்திக்கிறார். மனம்விட்டுப் பேசுகிறார்:
‘கடவுள் அன்புமயமானவர். கருணாமூர்த்தி – பரம தயாளன் என்றே எல்லா மதமும் கூறுகிறது. ஆனால், உங்கள் மதம் அப்படிக் கூறினாலும் வாள், திரிசூலம், வேல், சங்கு, சக்கரம் என்று ஆயுத பாணியாக கடவுளை வடிவப்படுத்தியிருப்பது, சொன்ன கருத்துக்கு எதிராக உள்ளதே?’ என்று கேள்வி எழுப்புகிறார்.
‘அந்த ஆயுதங்கள் அன்பு மயத்தை, கருணையை, தயாபரத்தைப் பாதுகாக்கவே உள்ளவை. தேவ சக்திக்கு எதிராக அசுர சக்தி என்பது எல்லா மதத்திலும் தானே உள்ளது? நாங்கள் அசுரர்கள் என்பதை நீங்கள் சைத்தான் என்றோ, கெட்ட சக்தி என்றோ தானே குறிப்பிடுகிறீர்கள்? அந்த கெட்ட சக்திகளை, சைத்தானை, அடக்கவும் எதிர்க்கவுமே அந்த ஆயுதங்கள். அவை நமக்கெதிரானது அல்ல’ – என்கிறார் பெரியவர்.
‘எங்கள் கடவுள் தன்னிடம் சரணடைபவர்களை மன்னித்து, அவர்களுக்கு தன் மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம் கொடுத்து விடுகிறார். ஆனால், உங்கள் கடவுள் சொர்க்கம் நரகம் என்று வைத்து தண்டிப்பதாகத் தெரிகிறது. இது கடவுள் செயல் போலில்லையே! ராஜாக்கள் செயல் போலல்லவா உள்ளது?’ என்கிறார் வெள்ளைக்காரர்.
பதிலுக்கு, பெரியவர் திருப்பிக் கேட்கிறார்.
‘எல்லோரையும் கடவுள் மன்னித்து விடுகிறாரா..? எல்லோருமே மோட்சத்துக்குத்தான் போகிறார்களா? நன்றாகத் தெரியுமா உங்களுக்கு?’ என்று திரும்பக் கேட்கிறார் பெரியவர்.
‘ஆம்… அவரிடம் சரணடைந்து விட்டால் போதும். நமக்கு மோட்சம் உறுதி..!’ என்கிறார் வெள்ளைக்காரர்.
‘சரி… அருகே ஒரு பிரசவ விடுதி உள்ளது. அங்கே போய் இன்று பிறக்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வாருங்கள். பிறகு, நாம் நம் பேச்சைத் தொடரலாம்’ என்கிறார் பெரியவர்.
அவரும் பிரசவ விடுதி நோக்கிச் செல்கிறார்.
- தொடரும்…
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Friday, June 14, 2013
அரே, அல்லா…!!!
=============
ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி சிமெண்ட் ஆலையினுட...ைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள்.
அந்தப் ப்ரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது கர்நாடகாவினுள் அடங்கியுள்ளது.
அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது. தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டுமென்று அழைத்ததற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள்.
அன்று மத்தியான வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் தரிச்னத்திற்கு வந்தார். அவரிடம் பெரியவா, “உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளே?’ என்றதும் அவருக்கு ஆச்சர்யம். அவர் சொன்னார். ”நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலையில் நான் ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு போனபோது “பாபா’ என்னைப் பார்தீர்கள். எனக்கு அல்லாவையே நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு தோன்றியது. மேலும் என்னுடைய தாய் பாஷையான உருது மொழியில் ஏதோ பேசியது போல தோன்றியது. வேலை முடிந்து இப்போதுதான் வரமுடிந்தது. வீட்டில் என் மனைவியும் தரிசனம் செய்த விஷயத்தைச் சொன்னாள்.’
அவருக்கு பெரியவா பழங்கள் கொடுத்து ஆசிர்வாதிதார்கள்.
எல்லாவுமாயுள்ள மகாப் பெரியவாள், அல்லாவுமாகக் தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை…. பெரியவா!!!See More
Wednesday, June 12, 2013
முக்கியமான ‘ஏழு’
==============
வைதிக கர்மாக்களைச் செய்து வைக்கும் விற்பன்னர்கள...ின் கூட்டம்..
சிராதம் பற்றி விளக்கினார் ஓர் உபாத்யாயர்..
பெரியவா கேட்டார்கள்: “ச்ராத்தே ஸ்ப்தபவித்ரா: என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்?”..
ஒரு வைதிகர் கூறினார்:
“உச்சிஷ்டம்=(பசும்பால்), சிவநிர்மால்யம்=(கங்கை), வமநம்=(தேன்), சவபர்படம்=(வெண்பட்டு), தொள்ஹித்யம்=(பெண் வயிற்று பேரன்), குதப=(காலம்), திலா=(எள்)”
#“சவபடம் என்றால் பட்டுப்பூச்சியைக் கொண்று, அந்தப் பட்டிழையால் செய்த துணி என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. சவம் என்றால் தானாக இறந்து போன பட்டுப்பூச்சி. அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பட்டு வேஷ்டி. அதனால் தான் இன்னமும் கேரளத்தில், திதி நிமந்த்ரண வைதிகர்களுக்கு வெண்பட்டு கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
அடுத்தது தெளஹித்யம். இந்த வார்த்தை தெளஹித்ர: என்று நினைத்து, பெண் வயிற்றுப் பேரன் சிராத்தத்தில் சாப்பிடுவது ரொம்பவும் விசேஷம் என்று பழக்கத்தில் வந்துவிட்டது.
$தெளஹித்யம் என்றால், காண்டாமிருகத்தின் கொம்பினால் செய்யப்பட்ட பாத்திரம் (அகப்பை;). எல்லா மிருகங்களுக்கும் இரண்டு கொம்புகள் இருக்கும். காண்டாமுருகத்துக்கு மட்டும் ஒரு கொம்பு. அதனால்தான் அதற்கு “ஏகச்ருங்கி” (ஒரே கொம்பு) என்றும் பெயர். தெளஹித்யம்$ – ஏகச்ருங்கி பாத்ர விசேஷ: என்று வியாக்யானம் செய்திருக்கிறார்கள்…”
இம்மாதிரியான நுட்பமான விளக்கங்களை அநாயாசமாக விளக்கக் கூடியவர்கள், நம் உம்மாச்சி தாத்தா மஹாஸ்வாமிகள்…See More
Monday, June 10, 2013
Varagooran Narayanan நானே நாராயணன்!
என் பெண் ஜனா ஒரு ‘ஐஸ்வர்ய கோலம்‘ தயாரித்திருந்தாள். கண்ணாடித் துண்டுகளை ஒட்டி கலர் செய்து நடுவில் மகாலக்ஷ்மி வைத்து கண்ணாடி போட்ட கோலப் படம் அது. அதைப் பெரியவாளிடம் சமர்பித்தோம். அதை எடுத்துப் பார்த்து ரசித்து விட்டு ” இது மகாலக்ஷ்மி, மகாலக்ஷ்மியை நான் எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் ? மார்பில் தான் இருக்கணும் ” என்று சொல்லி அந்தப் படத்தை தன் மார்பில் வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்து எல்லோருக்கும் அனுக்ரஹம் செய்தார். “நாராயணன் அம்சமும் நானே !” என்று பெரியவா உணர்த்துகிறார் என்று, இதிலிருந்து நாங்கள் புரிந்து கொண்டோம்.
திருச்சியை சேர்ந்த சுபலட்சுமி அம்மாள் சொன்னாள்: ” பெரியவா ! இன்று சோமவார அமாவசை, அரச பிரதக்ஷணம் செய்யணும் என்ற நினைவே இல்லாமல் நான் காஞ்சிபுரம் புறப்பட்டு வந்து விட்டேன்” என்று, ஒரு முறை வருத்தம் தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னாளாம்.
...
பட்டென்று பதில் வந்தது: ” அதனாலென்ன ? என்னை 108 முறை பிரதக்ஷணம் செய்துவிடு. அதுவே போதும்!“ பெரியவா நாராயணன் மட்டுமில்லை; அசுவத்த நாராயணனும் கூட!
–ராதா ராமமூர்த்தி, புதுக்கோட்டை.