மகா பெரியவா விடியற்காலையில் குளத்துக்குச்
சென்று குளிப்பது வழக்கம். மகான் குளிக்க
வருகிறார் என்பதை வாத்திய ஓசை மூலம் ஒருவர்
முன்னால் வாத்தியத்தை இசைத்தபடி ஓசை
எழுப்பிக்கொண்டே போவார்.
ஒரு நாள் வாத்தியம் இசைக்கப்படவில்லை.
வழக்கம்போல் மகான் அன்றும் குளிக்கப் போனார்.
குளித்துவிட்டு மடத்துக்குத் திரும்பி விட்டார்.
மடத்து மானேஜர் மெதுவாக எதிரில் வந்து நின்றார்.
"என்ன"
"இன்னிக்கு வாத்தியம் வாசிக்கப்படவில்லை!"
"அதனால் என்ன இப்போ?"
"இல்லே...வாத்தியத்தோட சத்தம் கேட்டா,
குளத்துல குளிச்சுண்டு இருக்கிற பெண்டுகள்
அங்கிருந்து போயிடுவா.இன்னிக்கு வாத்திய
சத்தம் இல்லை!"
"அதனால...என்ன சொல்ல வர்றே நீ?"-சற்றுக்
கோபமாகக் கேட்டார் மகான். அவரே தொடர்ந்தார்.
"இன்னிக்கு தமரு வாத்தியம் வாசிக்காததுனால,
குளிச்சிண்டு இருந்த பெண்கள் அங்கிருந்து
போயிருக்க மாட்டா. நானும் அங்கே போய்க்
குளிச்சதுனால, என் மனம் சலனம் ஏற்பட வழி
இருக்கும்னுதானே சொல்ல வர்றே?"
இப்படி மானேஜர் சொல்லாவிட்டாலும், அவர்
சொல்ல வந்ததன் அர்த்தம் இதுதானே?!
மானேஜர் பேசாமல் இருந்தார்.
தூய்மைதான் தெய்வம் என்பதற்கு மகானைவிட
வேறு உதாரணம் தேவையா?
மகானே தொடர்ந்தார்- "நான் அங்கே போனபோது,
அங்கே யாரும் இல்லை.என் மனசுல தூய்மையும்
கண்ட்ரோலும் இருக்க வேண்டியது அவசியம்னு
எனக்குத் தெரியாதா? உன் வாத்தியத்தினாலேயா
கண்ட்ரோல் கிடைக்கும்? இல்லை...
எல்லாவற்றுக்கும் மூலகாரணம் மனசு. அது தூய்மையா
இருந்தா,சுற்றுப்புறம் எதுவும் கண்ணுக்குத் தெரியாது?
உன் வாத்யமே எனக்கு வேணாம், போ..." என்று
கோபமாக வெடித்தார் மகான்.
'பீடாதிபதி என்று வந்துவிட்டால்,சில சமயங்களில்
இப்படியும் கோபத்தை வெளிப்படுத்தித்தான்
ஆக வேண்டும்' என்பதை மகான் நன்றாக அறிவார்.
அதே சமயத்தில் மனதில் தூய்மை எவ்வளவு
முக்கியமானது என்பதை அவர் இந்த சம்பவத்தின்
மூலமாக விளக்குகிறார் என்பதையும் நாம்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment