ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.
“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!……இன்னும் இருக்கோ?….”
“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காயக்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”
... “கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..ப்ல ஆயிருந்துதே!..”
“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”
“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”
“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”
“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”
“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”
“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”
“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”
“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”
“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”
“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”
“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”
கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”
பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..
“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!
குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.
Welcome to My Blog.....
PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN
Friday, May 31, 2013
Wednesday, May 29, 2013
Walking- Periyava treatment
A very stout devotee came to Periyava with a complaint. He said that he suffered from blood pressure,diabetes and excessive cholestrol and other such chronic problems. No matter how much of medication he took and went on a strict diet, he just could not lose weight. The gentleman was a Nattukottai Chettiar.
"It is good that you to go to Tiruvannamalai. Stay there for a mandala. Circumambulate the hill. When you cannot walk take an auto or go by car,but somehow complete the circumambulation. Walk one kilometre,then take an auto.. what do you say?"
...
The Chettiar did as he was told. A week later his weight began to go down. At the end of the mandala,he had lost so much weight that he was almost normal. When the mandala was completed he came to Periyava and prostrated.
"Why!. You are able to prostrate without difficulty.!" Periyaval told the devotee.
The gentleman glowed in happiness.
From In the presence of the divine
copyright- Sujatha Vijayaraghavan.
Sunday, May 26, 2013
பெரியவாளின் அதிரடி நகைச்சுவை-இரண்டு ரா.கணபதி எழுதிய புத்தகத்தில் இருந்து; தட்டச்சு;வரகூரான் mama
பிரமாணர்கள் கடல் கடந்து போவது ஆசாரக்
காவலரான ஆசார்யப் பெருமானுக்கு உகந்ததல்ல
என்று அறிந்த ஓர் அந்தண அடியார், சீமை சென்று
திரும்பியபின், அங்கும் நமது ஆசாரங்களைத் தாம்
வழுவாது பின்பற்றியதைப் பெரியவாளிடம்
தெரிவித்தால் அதை ஏற்றுக் கொள்வார் என்று
எண்ணினார். "இங்கிலாண்டில் கூட விடாமல்
அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணினேன் என்றார்."
"அதாவது நீ போனது போதாது என்று உன்
பித்ருக்களையும் மேல் நாட்டுக்கு வரவழைத்து
விட்டாயாக்கும்?" என்று பெரியவாள் சிரித்துக்கொண்டே
ஒரு வெட்டு வெட்டினார்.
[2] பெரியவாளின் முன் உளறிக் கொட்டிக் கிளறி முடிய
ஓர் உபந்யாஸகர் [உபன்யாசம் செய்கிறவர்] ,
"ஒரே அபத்தமாகச் சொன்னேன். விருத்தியாவதற்குப்,
பெரியவாள்தான் அனுக்கிரஹிக்கணும்" என்றார்.
"அபத்தம் விருத்தியாவதற்கு நான் வேறே
அனுக்கிரஹிக்கணுமா?" என்றார் குறும்பா!.
Friday, May 24, 2013
மாம்பலத்தில் 'சங்கர விஜயம்' சொல்றேன். அப்போ காமகோடி பெரியவா(ஸ்ரீ மாமா வாய் நிறைய இப்படித்தான் ஐயனை விளிப்பார்) மயிலாப்பூர் ல Sanskrit காலேஜ் ல கேம்ப்.
பாலகிருஷ்ணன் 'சங்கர விஜயம்' சொல்றானாம், நாமுளும் போவோம் ன்னு சொல்லிட்டு அங்கே இருந்து நடந்து வந்துட்டா. அவா மட்டும் இல்லே, புது பெரியவா, அவளோட நிறைய ஜனம். ஏற்கனவே கூட்டம் நெருக்கி வழியறது. ஒக்கார இடம் இல்லே.
பெரியவாளப் பார்த்தேனோ, இல்லையோ, எனக்கு கையும் ஓடலே, காலும் ஓடலே. அவா முன்னாடி நாம்ப என்னத்தை சொல்றதுன்னு ஒரே பயம். வெலவெல ன்னு வந்துடுத்து.
...
முதல் வரிசைல மேடை க்கிட்ட தரையிலே ஒக்காந்துட்டா.
மூணு மணி நேரம். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் நகறலே. முழுசா கேட்டா.
எனக்கா இருப்பு கொள்ளலே. ஏன்னா அவா முன்னாடி என்னால பொடி போட முடியலே, . (மூக்கு பொடி) உபய சாந்தி பண்ணி பூர்த்தி பண்ணிக்கட்டுமா ன்னு கேட்டேன்.
ஏற்கனவே மூணு, மூணரை மணி நேரம் ஆயிடுத்து, மனசே இல்லே அவருக்கு. முடிக்கேறேங்கிறியா? சரி, முடிச்சுப்பிடு ன்னுட்டு ஆசிர்வாதம் பண்ணினார்.
நான் சொல்றேன்னா அவா வந்தா, இல்லே, சொன்ன விஷயம் பகவத்பாதாள் பத்தினது. குழந்தை சொல்றான் நாம்ப போய் கேக்கணும் ன்னு. அவாளுக்கு தெரியாததா? சர்வஞா ன்னா அவா.
அது மாதிரி, 'தியாக ப்ரும்மம் சொல்றார் அப்பா ராமா. ஒன்னைபத்தி எத்தனையோ பேரு நெறைய பாடிட்டு போயிருக்கா. நானும் பாடறேன். இந்த குழந்தை பாடறதையும் கேட்பா. ஏன்னா, நான் படறது ஒன்னை பத்தி அப்பா'.
Tuesday, May 21, 2013
Bhaskaran Shivaraman காஞ்சி முனிவருடன் — சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
ஒருமுறை என்னுடன் பணிபுரியும் சகாவின் குடும்பத்துடன் சென்றபோதுதான். என் சகாவின் மனைவி ஆறாத் துயரத்துடன் இருந்தார். மன அமைதி தேடி அவர்கள் காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இது ஒருவருக்கும் தெரியாது. வந்தவர்கள், பரமாச்சார்யாரின் முன்னால் சில நிமிடம் சிறு குழுவாக ஒரே சமயத்தில் உட்கார அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தங்களுடன் பழம் முதலிய பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். எனது சகாவின் மனைவி ஒரு பெட்டி நிறைய உலர்ந்த பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அந்தப் பெட்டி பல அறைகள் கொண்டதாகவும் ஒவ்வொரு அறையும் வெவ்வேறு உலர்ந்த பழங்கள் கொண்டதாகவும் இருந்தது. அத்தனையும் பரமாச்சார்யார் முன் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவரது சீடர்களில் ஒருவர் அவற்றை அப்பால் எடுத்துச் செல்வார். பரமாச்சார்யார் எப்போதும் இதில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால் அன்று பெட்டியை அவர் முன்னால் இருந்து அகற்ற, ஒருவர் எடுத்தபோது ஒரு குழந்தையைப்போல அவர் அதைத் தடுத்தார். பெட்டியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். பின் உடனே பெட்டி மூடியைத் திறக்கும்படி வற்புறுத்தினார். குனிந்து அதில் உள்ளவற்றைப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வைக் குறைவினால் அவற்றில் இருந்த சிலவற்றை அவரால் அறிய முடியவில்லை. உடன் சீடர்களில் ஒருவர் அதிலிருந்த திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, அத்திப்பழம் முதலியவற்றைப் பற்றி அவரிடம் தெரிவித்தார்.
மகிழ்ந்து போன அவர், மாசற்ற ஒரு குழந்தையைப் போல, அனைவரும் அதிசயிக்கும்படியாக, அந்தப் பெட்டியுடனும் அதிலிருந்த பொருள்களுடனும் பதினைந்து நிமிடங்கள் விளையாடினார். அங்கு வந்திருந்த அனைவரும் இதை ஒரு அபூர்வ ஆன்மீக அனுபவமாக ரசித்துச் சிரித்தார்கள். பல ஆண்டுகளாகச் சிரித்து அறியாத சிரிப்பையே மறந்துபோன என் சகாவின் மனைவிகூடத் துயரத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் சமர்ப்பித்த பொருள்களைஅவர் விசேஷமாக நடத்திய பாங்கு, அவளைப் பிரத்தியேகமாக வாழ்த்தி ஆசி வழங்கியதாக அவள் உணர்ந்தாள். அவளது மனவேதனை துடைத்து எறியப்பட்டது என்பதை நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறிவிட்டது.
===========================================================
மடத்தில் எனது அடுத்த சந்திப்பு ஆரவாரம் மிகுந்த அனுபவமாக இருந்தது. அந்த முறை காஞ்சி முனிவரைத் தரிசிக்க விரும்பிய முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்றேன். அந்த சமயத்தில் யாரோ பரமாச்சார்யாரிடம் நான் தமிழ்நாடு அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், நான் காஷ்மீரைச் சேர்ந்தவள் என்றும் சொல்லி இருக்கலாம் என்றும் நான் நினைக்கிறேன். திடீரென அவர் எனக்குத் தமிழ் நன்கு தெரியுமா என்று கேட்டார். நான் நன்கு தமிழ் அறிவேன் என்று தெரிவித்தேன். உடனே அவரது உதவியாளரிடம் ஏதோ சொல்ல அவர் உள்ளே ஓடி உடனடியாக ஒரு தட்டு நிறைய வாழைப் பழங்களுடன் வந்தார். பரமாச்சார்யார் தட்டை சுட்டிக்காட்டி அந்தப் பழத்தின் பெயரைக் கேட்டார்.
நான் ‘பழம்’ என்றேன்.
“ஆம், என்ன பழம்?” என்றார்.
“பச்சை வாழைப்பழம்” என்றேன்.
நான் நிம்மதியாகப் பெருமூச்சு விடுவதற்குள் என் முன்னால் இன்னொரு தட்டு வாழைப்பழம் வைக்கப்பட்டது. அதைப்பார்த்து விட்டு நான் “ரஸ்தாளிப் பழம்” என்றேன். அடுத்து இன்னொரு தட்டு வந்தது. “மலைவாழை” என்று சொன்னேன். அடுத்த வினாடியே இன்னொரு தட்டு வருகை தந்தது! அதிர்ஷ்டவசமாக அதை நான் புரிந்து கொண்டு “பூவன் பழம்” என்றேன். அடுத்த தடவைதான் நான் பெரும் தொந்தரவில் இருந்தது எனக்கு உறைத்தது. இந்த மண்ணில் விளையும் அத்தனை வாழைப் பழங்களின் பெயரையும் சொல்வது எனக்குச் சாத்தியமானதாக இல்லை. ஒவ்வொன்றாகத் தட்டுகள் வந்து கொண்டிருந்தபோது யாரும் நான் தோற்றுப் போக விரும்பவில்லை. ஆகவே அவரது அடியவர்கள் பக்கத்தில் இருந்து எனக்கு ஜாடையாகத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். கடுமையான ஆனால் ஆரவாரமான இந்தச் சோதனை முடிந்த பிறகு, நான் தமிழ்த் தேர்வில் வெற்றிபெற்று விட்டதாகப்பெரியவர் பிரகடனம் செய்தார். எப்போதுமே இப்படி பரமாச்சார்யார் தமது நகைச்சுவை உணர்வை மனப்பூர்வமாக வெளிப்படுத்துவதில்லை. அதனால் அன்று நிறைந்திருந்த கூட்டம், அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில் தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தனர்
Sunday, May 19, 2013
Source:Mannargudi Sitaraman Srinivasan
மகாபெரியவாளுக்கு அவரோட பரமகுரு ஸ்வர்ண வஸ்து ஒன்றைக் கொடுத்திருந்தார். பொன்னாலான அந்த அங்கியைப் போட்டுக் கொண்டுதான் கனகாபிஷேகத்தில் அமர்ந்திருந்தார் மகாபெரியவா. இன்னிக்கும், குருவாரம்தோறும் (வியாழக்கிழமைகளில்) காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் இருக்கும் ஆதிசங்கரர் திருமேனிக்கு அந்த சொர்ணத்தைச் சாத்துகிறோம்…” என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், ஓரிக்கையில் நிகழ்ந்த மகாபெரியவாளின் சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தைப் பற்றி விவரித்தார்…‘சின்ன காஞ்சிபுரம் ஆனைக் கட்டித் தெருவுல ஒரு வேத பாடசாலை இருக்கு. ஐம்பதுகளில் அங்குதான் மகாபெரியவாளுக்கு கனகாபிஷேகம் நடந்தது. அந்த வைபவத்தைப் பக்கத்துல இருந்து தரிசித்தது, நாங்கள் செய்த பெரும் பாக்கியம்!
”ஓரிக்கையில், காங்கிரஸ் பிரமுகர் மட்டப்பாறை வெங்கட்ராமய்யரின் பேரன் வீட்டில் வைத்துதான் மகா பெரியவாளுக்கு சஷ்டியப்த பூர்த்தி நடந்தது. அந்தத் தருணங்களில் மடத்துக்கு மிகவும் பணக் கஷ்டம். அங்கே வைத்துதான் நடத்தணும்னு மகாபெரியவா சொல்லிட்டார். மிக அருமையாக நடந்தது அந்த வைபவம்.
ஹோமம் மற்றும் வைதீக காரியங்கள் நடத்துவது குறித்த...ு விளக்கிய மகாபெரியவா, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்துச் சத்திரங்களிலும் இலவசமாகச் சாப்பாடு போடணும்னும் உத்தரவு தந்தார். போதும் போதும்னு சொல்ற அளவுக்கு அன்னம் பரிமாறுவதுடன், இனிப்பு வகையறாவும் நிறையப் பரிமாறணும்னு சொன்னார். அன்பர்கள் சாப்பிட்டு எஞ்சியது நரிக்குறவர்களுக்குப் போகும்; அவர்களுக்கும் இனிப்புப் பலகாரங்கள் கிடைக்கணும் என்பதுதான் காரணம். அதேபோன்று, கிராமத்து ஏழைகளுக்கும் வயிறு நிறையக் கூழ் காய்ச்சி ஊத்தணும் என்பதும் பெரியவாளின் விருப்பம். அவரது ஆசியுடன் எல்லாம் தடபுடலாக ஏற்பாடு ஆனது.
அதேபோன்று, காஞ்சி காமாட்சியம்மன் கோயில் முழுக்க முழுக்கக் காய்-கனிகளால் அலங்கரிக்கணும்னு சொல்லிட்டார். அம்பாளுக்கு சாகம்பரின்னு ஒரு பெயர் உண்டே! சாகம்பரிதேவிக்கு காய்- கனிகள் உகந்தவை. அதனால்தானோ என்னவோ காய்- கனி அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் மகா பெரியவா. காய் – கனி அலங்காரத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அந்தத் தருணத்தில் ஒரு சம்பவம்!
மகாபெரியவா இனிப்பு நிறையப் பரிமாறணும்னு சொல்லியிருந்தார், இல்லையா? அதனால, அவருக்கு இனிப்புன்னா ரொம்பப் பிடிக்கும் போலன்னு முடிவு பண்ணிவிட்டார் ஓர் அம்மணி. ஒருநாள், மலாடு செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து எடுத்துக் கொண்டு மடத்துக்கு வந்தார். மகாபெரியவா முன், இலையால் மூடி கிண்ணத்தை வைத்து விட்டுத் தரிசித்துச் சென்றார்.
வெறும் நெல் பொரி, வேகவைத்து இறுகிய வாழைக்காயைப் பொடியாக்கி, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் குடிப்பது என்று மிக மிகக் குறைவான ஆகாரம்தான் மகாபெரியவாளுக்கு. அவர் எப்படி மலாடு சாப்பிடுவார்? நாக்கு ருசிக்கு அடிமையாவது கூடாது என்பது அந்த மகானுக்கா தெரியாது?
ஆனால், அந்தப் பெண்மணி திரும்பி வந்த போது, காலியான கிண்ணத்தை அவரிடம் கொடுத்துக் கை தூக்கி ஆசீர்வதித்தார். பரம திருப்தியுடன் திரும்பிச் சென்றார் அந்தப் பெண்மணி. தான் கொடுத்த மலாடுவை பெரியவா ருசித்து சாப்பிட்டிருப்பார் என்ற மகிழ்ச்சி அந்த அம்மாவின் முகத்தில். ஆனால், பெரியவா அதைச் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். தமக்கு உரிய நியமங்களுக்கு பங்கம் ஏற்படாமல், அதே நேரம் அந்த பக்தையின் மனதும் புண்படாதபடி மகாபெரியவா செய்த அனுக்கிரகம் அற்புதமானதுதான்.
Friday, May 17, 2013
முழங்காத வாத்தியம்..கலங்காத மனம்! கோபமாக வெடித்த பெரியவாள். கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி தட்டச்சு;வரகூரான் நாராயணன்
மகா பெரியவா விடியற்காலையில் குளத்துக்குச்
சென்று குளிப்பது வழக்கம். மகான் குளிக்க
வருகிறார் என்பதை வாத்திய ஓசை மூலம் ஒருவர்
முன்னால் வாத்தியத்தை இசைத்தபடி ஓசை
எழுப்பிக்கொண்டே போவார்.
ஒரு நாள் வாத்தியம் இசைக்கப்படவில்லை.
வழக்கம்போல் மகான் அன்றும் குளிக்கப் போனார்.
குளித்துவிட்டு மடத்துக்குத் திரும்பி விட்டார்.
மடத்து மானேஜர் மெதுவாக எதிரில் வந்து நின்றார்.
"என்ன"
"இன்னிக்கு வாத்தியம் வாசிக்கப்படவில்லை!"
"அதனால் என்ன இப்போ?"
"இல்லே...வாத்தியத்தோட சத்தம் கேட்டா,
குளத்துல குளிச்சுண்டு இருக்கிற பெண்டுகள்
அங்கிருந்து போயிடுவா.இன்னிக்கு வாத்திய
சத்தம் இல்லை!"
"அதனால...என்ன சொல்ல வர்றே நீ?"-சற்றுக்
கோபமாகக் கேட்டார் மகான். அவரே தொடர்ந்தார்.
"இன்னிக்கு தமரு வாத்தியம் வாசிக்காததுனால,
குளிச்சிண்டு இருந்த பெண்கள் அங்கிருந்து
போயிருக்க மாட்டா. நானும் அங்கே போய்க்
குளிச்சதுனால, என் மனம் சலனம் ஏற்பட வழி
இருக்கும்னுதானே சொல்ல வர்றே?"
இப்படி மானேஜர் சொல்லாவிட்டாலும், அவர்
சொல்ல வந்ததன் அர்த்தம் இதுதானே?!
மானேஜர் பேசாமல் இருந்தார்.
தூய்மைதான் தெய்வம் என்பதற்கு மகானைவிட
வேறு உதாரணம் தேவையா?
மகானே தொடர்ந்தார்- "நான் அங்கே போனபோது,
அங்கே யாரும் இல்லை.என் மனசுல தூய்மையும்
கண்ட்ரோலும் இருக்க வேண்டியது அவசியம்னு
எனக்குத் தெரியாதா? உன் வாத்தியத்தினாலேயா
கண்ட்ரோல் கிடைக்கும்? இல்லை...
எல்லாவற்றுக்கும் மூலகாரணம் மனசு. அது தூய்மையா
இருந்தா,சுற்றுப்புறம் எதுவும் கண்ணுக்குத் தெரியாது?
உன் வாத்யமே எனக்கு வேணாம், போ..." என்று
கோபமாக வெடித்தார் மகான்.
'பீடாதிபதி என்று வந்துவிட்டால்,சில சமயங்களில்
இப்படியும் கோபத்தை வெளிப்படுத்தித்தான்
ஆக வேண்டும்' என்பதை மகான் நன்றாக அறிவார்.
அதே சமயத்தில் மனதில் தூய்மை எவ்வளவு
முக்கியமானது என்பதை அவர் இந்த சம்பவத்தின்
மூலமாக விளக்குகிறார் என்பதையும் நாம்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
Wednesday, May 15, 2013
பெரியவா என்றால் யார்? : சதாசிவ சர்மா
ஒரு நாள் ஏகாந்தமாகவும் விஸ்ராந்தியாகவும் இருக்கும் பொழுது என்னுடன் பேசியது:
ஸ்ரீ பெரியவா: ஏண்டா, பெரியவான்னா என்ன?
...
நான்:(பதில் சொல்ல முடியாமல் முழித்தேன்)
ஸ்ரீ பெரியவா: தெரியலயா……… பெ ரி ய வா …..ன்னா என்ன?
நான்: (உண்மையாகவே ஒன்றும் புரியாமல் இருந்தேன்)
பெரியவா : ரி ………..ரி-ன்னா ரிக் வேதம், ய …………ய -ன்னா யஜுர் வேதம். இப்ப வார்த்த முடியப் போறது ங்கற மாதிரி கடைசி வேதத்தின்……அதாவது அதர்வ வேதத்தின் கடைசி எழுத்தான ‘வ’. இதை சேக்கறதுக்கு முன்னாடி சாம வேதத்துக்கு உயிர் நாடி கானம். அ…..அ…..அ… ன்னு நிறைய வரும். அது சேந்துண்டு இருக்கு.
அதாவது, ரி …….ய…….அ………வ. இப்ப அ+வ = வா……. இப்ப ரி ……ய…… வா சரியாய்டுத்தா..?ஏதோ என்னால முடிஞ்சது பெரியவாளோட வேத சம்பந்தப்படுத்திட்டேன்னு பாக்கிறயா..?ஒரே ஒரு எழுத்து மிச்சமிருக்கே! ‘பெ’ அத என்ன பண்றது?..
(ஸ்ரீ பெரியவா என்னை நிமிர்ந்து பார்த்து என் பதிலை எதிர் பார்ப்பது போல் இருந்தது. நான் ஒன்றும் புரியாமலும், தெரியாததாலும் பதில் சொல்லாமல் இருந்தேன்)
ஸ்ரீ பெரியவா: என்ன முழிக்கறே? ஒண்ணும் புரியாம, தெரியாம இருக்கறதுக்கு என்ன பெயர் தெரியுமா?
அஞ்ஞானம்னு சொல்லுவா. அந்த அஞ்ஞானமா இருக்கறவாள பாத்து பேந்த்த பேந்த்த முழிக்கறத ‘பெ’ ன்னு முழிக்கறதா சொல்லலாம் இல்லையா? அப்போ ‘பெ’ ங்கறது அஞ்ஞான வார்த்தையாயிடறது.
இப்ப எல்லாதையும் சேத்தாக்க, அஞ்ஞானத்தோட இருக்கறவாளை வேதத்தோட சம்பந்தப்படுத்தறது தான் இந்த வார்த்தைன்னு தெரியறதா?.
அஞ்ஞானிகளை யார் ரிக், யஜுர், சாம அதர்வ வேத மார்க்கத்திலே மாத்தறாளோ அவாதான் “பெரியவா“
(எனக்கு இப்போதுதான் புரிந்தது அஞ்ஞானியான என்னை வேத மார்க்கத்தைக் காட்டியவராக இவர் இருப்பதினால்தான் நாம், ஏன், எல்லோருமே “பெரியவா” என்று கூப்பிடுகிறோம்னு.
courtesy: sageofkanchi . weebly . com
Monday, May 13, 2013
Varagooran Narayanan
வெறும் சடங்கு அல்ல..........
நான்சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியனவெல்லாம், வெறும் சடங்குதானே என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள் விஷயம். சடங்குகளோ வெளிக் காரியங்கள். இவை இப்படி ஆத்மாநுபவத்துக்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.
உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால், உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமா என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக்கொண்டால், நாம் அதற்கு எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும், எத்தனையே ஜன்மாக்கள் எடுத்து. எத்தனையோ கர்மாக்களைச் செய்து அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம்.
...
ஸ்த்கருமம் செய்தும் ஸத் வாஸனைகளைப் பெருக்கிக் கொண்டுதான் பழைய துஷ்கர்மங்களையும் துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் வெறும் சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே.
உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பதுபோல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால், அது உயர் நிலையில்தான், ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது.
தொன்று தொட்டு ஈசுவரனை இப்படிப்பட்ட அனந்த கல்யாண குணமூர்த்தியாகத்தானே பாவித்து வந்திருக்கிறோம்! “ஈசுவரன்’ என்றவுடன் அவரிடம் கெட்ட குணம் ஏதுமே இருக்காது என்றுதானே நமக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது? அழகு கருணை, சக்தி, ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாக ஒன்று உண்டு என்றால் அது ஈசுவரன் என்ற கருத்துதான் மனோத்தத்துவப்படி நாம் எதை நினைத்துக் கொண்டேயிருக்கிறோமோ, அதுவே ஆகிறோம்.
எனவே சடங்கு, பூஜை இவற்றால் உண்டாகிற மற்ற பலன்களோடு, அவை நம்மை நல்லவர்களாக்க மிகுந்த உதவி புரிகின்றன; காரியமற்ற தியான யோகத்தில், ஞான விசாரத்தில் நம்மைச் சேர்க்க நிரம்ப உபகாரம்
-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
Saturday, May 11, 2013
C.S. Ramachandran
கொஞ்சம் பழைய சம்பவம் இது..காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும். ‘சதஸ்’ என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே களை கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.
மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின் முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு உணர முடியும். ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல்
பறக்கும் வாதங்கள் பூதாகரமாகக் கிளம்புகின்ற சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார். பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.
இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது படிப்பு விஷயத்தில் ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே ஆரம்பித்து வைத்திருந்தார்.
அது ஒரு வெள்ளிக்கிழமை….வழக்கம் போல பண்டிதர்கள் பலரும் காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து
கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும்
சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.
சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள் வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள்,பண்டிதர்கள் ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப் பெற்றுக் ண்டார்.முழு நூறு ரூபாய் நோட்டை சம்பாவனையாகப் பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம் தெரிந்தது. காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை வாங்கியவன்- சிறு வயது பாலகன் ஒருவன். “அவனுக்கும் நூறு ரூபாய்….எனக்கும் நூறு ரூபாய்தானா?” என்கிற வாட்டம்தான் அது.
பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா? ”என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.
தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல்
“சந்தோஷம் பெரியவா..நான் புறப்படுகிறேன்” என்று தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு
வெளியேறினார். உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.
“சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும் சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று” என்று ஓர் உயர் அதிகாரி மகானின் காதில் சென்று பவ்யமாகச் சொன்னார். “சரி…தரிசனத்துக்கு வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா” என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.
முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர் குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய மூங்கில் தட்டுகளில் பல வகையான கனிகள்,புஷ்பங்கள்,கல்கண்டு முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை வைத்து விட்டு குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார். பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன பூக்கிள்ளலுடன் திரும்பக் கொடுத்தார்.
உடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக்0413கொண்ட வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, “பெரியவா……..ஒரு விண்ணப்பம்…” என்று இழுத்தார் வக்கீல் “சித்த இருங்கோ…” என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார்.
அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தான்.
“சின்னக் காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப் போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்…..நீதான் பார்த்திருப்பியே..அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம் பஸ் ஸ்டாண்டுல பாரு..பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு சட்டுன்னு அழைச்சிண்டு வா” என்றார்.
உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த சிஷ்யன்.மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார் ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,பெரியவா சொன்னபடி கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான். அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது. நடத்துனர் டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால் துழாவினான்.ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார்.
அவர் அருகே போய், “பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு வரச் சொன்னார்” என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார்
ஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், “அம்பீ…..முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது காசு வீணாகிப் பொயிடுமேடா” என்றார்.
சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, “அது என்னமோ தெரியல.. உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை என்னால மீற முடியாது. அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ..கையோட உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்” என்று அடமாகிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே ”ஐயரே [ஐயங்காரே]… அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது
காசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும்.
போய்ப் பாரேன். அவனவன் தவம் இருந்து அவரைப் பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா?” என்று சிடுசிடுவென்று சொல்ல….வேஷ்டியில் சுருட்டு வைத்திருந்த கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில் மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான்
சுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. உள்ளே நிழையும் இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து விட்டார், ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.
“என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…கண்டக்டர் கிட்டேர்ந்து முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க மாட்டீராக்கும்?” என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது ஐய்யங்கார் ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.சிஷ்யன் சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களைச்சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.
சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென ”பெரியவா…ஒரு விண்ணப்பம்..” என்று முன்பு ஆரம்பித்த மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.
“சித்த இருங்கோ…உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்..” என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு “வக்கீல் சார் இவரோட அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா குறிச்சுக்கோங்கோ” என்றார் காஞ்சி மகான்.
இவருடைய அட்ரஸை நான் ஏன் குரித்துக் கொள்ள வேண்டும்? என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம் இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது விலாசத்தைச் சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கோன்டார் வக்கீல்.
“நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே…அடுத்த பஸ் மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து.அந்த கண்டக்டர் ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற டிக்கெட் வாங்கிடுங்கோ” என்று சொல்லி, அந்த மண்டபமே அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.
ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். “முப்பது காசுக்கு இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு எப்படித் தெரியும்?” என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்] என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்? யார் அவர்?
அவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா? எதுவும் புரிய மாட்டேங்குதே?” என்று குழம்பி தவித்தபடி மடத்தை விட்டு வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.
பெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக் காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது. விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல் ஓரத்து இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
ஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம் போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.
சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக் குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார் காஞ்சி ஸ்வாமிகள்.
விஷயத்துக்கு வருவோம். சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட சென்னை வக்கீல், “பெரியவா…ஒரு விண்ணப்பம்……நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை ஆரம்பிச்சுட்டேன் …” என்று தொய்வான குரலில் இழுத்தார்.
“உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே.”
“இல்லே பெரியவா…என்னோட விண்ணப்பத்தை நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே…”.என்று தயங்கினார் வக்கீல்.
“உன்னோட விண்ணப்பம் என்ன…. கஷ்டப்படற- வேதம் படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம் அனுப்பணும்னு ஆசைப்படறே…அதானே?” என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம். வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை.”ஆமாமாம் பெரியவா….அதேதான்…அதேதான்!”
இப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்….நீ தேடற ஆள் அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக் கூட்டிண்டு வந்துட்டானே அந்தப் பொடியன்? இப்ப என்ன பண்றே…”-பெரியவா இடைவெளி விட்டார்.
“பெரியவா சொல்லணும்…நான் கேட்டுக்கணும்….”- வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர் பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது. ஏன்னா நாலு மாசம் வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா, ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, “சும்மா
மடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா”னு சொல்லித் தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன் காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். aஅவ்ளோதான்.”
“பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிடறேன்” என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
இதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி அடைந்தார் அந்த மகான்
Thursday, May 9, 2013