பொதுவான கேள்விகளுக்கு கூட பலருக்கு விடை தெரியவில்லை.
ஆனால், இந்த மாதிரி கேள்விகளுக்கு மட்டுமல்ல… என்னுள் எழும்பியிராத கேள்விகளுக்கும்கூட, ஒருவரிடமிருந்து விடை கிடைக்கத் தொடங்கியது. அதற்கு காரணம், கல்கி வார இதழ் என்றுதான் கூற வேண்டும்.
ஆம்… அதில்தான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மகா பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’ பிரசுரமாகி வருகிறது. அவர் பேசியதில் இருந்து அரைப்பக்கம், கால் பக்கம் என்று ஒரு ஓரமாய் பிரசுரித்து வந்த விஷயம் கண்ணில் பட்டது. அப்பா தவறாமல் கல்கிக்கு சந்தா கட்டிவிடுவார். கடைகளுக்கு வருவதற்கு ஒருநாள் முன்பாகவே தபாலில் வந்துவிடும். அப்பா சொல்லாத பதிலினை, பெரியவர் மூலம் கல்கி சொல்லியது. நானும் கல்கி வந்தவுடன் முதலில் அதையே வாசிக்கலானேன். ஒரு வாரமா? இரு வாரமா?
பல வருடங்கள் – அதாவது, 1970ல் இருந்து 1994 வரை… தெய்வத்தின் குரலால் நான் மெல்ல மெல்லத் தெளிந்தேன். ஆசாரமான வைணவ குடும்பத்தில் பிறந்துவிட்டபோதிலும், அந்த மகானிடமே மனது போப்போ நின்றது. அவரது லாங்வேஜ் எனப்படும் பாஷை மிகமிகப் பிடித்துப்போனதும் ஒரு காரணம்.
அவர் எதைப் பேசி முடித்தாலும் முடிவில் ‘நாராயணா நாராயணா!’ என்றே முடிப்பதால், அவரை வைணவத்துக்கு அன்னியமாகவோ எதிராகவோ கருதவே முடியவில்லை.
இத்தனை தூரம் மனத்தில் நிரம்பி விட்டவரை, நேரில் தரிசிக்கும் வாய்ப்பு தான் ஒருமுறைகூட வாக்கவில்லை; தரிசிக்கும் எண்ணமும் பெரியதாக தோன்றவில்லை; லௌகீகமான வாழ்க்கைப் போக்கும் ஒரு காரணம். காலம் இப்படியே போய்விடுமா என்ன?
1993ஆம் வருடம் மார்கழி மாதம் என்பதாக ஞாபகம். குளிர வேண்டிய அந்த மாதத்தில், பெரும் புயலும் மழையும் ஏற்பட்டு ஊரே மழைக்காடாக இருந்த வேளையில், எனக்கும் டைஃபாடு காய்ச்சல் ஏற்பட்டது.
இந்த காய்ச்சலை மீறிக்கொண்டு, காஞ்சிபுரம் சென்று மகாபெரியவரை தரிசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியது. ஏன்? எதனால்? என்றெல்லாம் தெரியாது. என் அம்மா மற்றும் மனைவியிடம் கூறவும் அவர்கள் வெறித்தனர். ‘இந்த உடம்போட காஞ்சிபுரத்துக்கா…?’ என்றும் கேட்டு முறைத்தனர். ‘உங்களுக்கு என்ன ஆச்சு… இப்பபோ பெரியவரை பார்க்கணும்னா என்ன அர்த்தம்?‘’ என்று கேட்டாள் மனைவி.
என்னமோ தெரியலை… தரிசிக்கணும்னு தோண்றது” என்றேன்.
உடம்பு குணமாகட்டும். அடுத்த மாதம் போகலாம்” என்றாள் மனைவி!
ஆனால், நான் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
நீங்கள் யாரும் வர வேண்டாம். நான் போகிறேன்” என்று வைராக்யமாய் புறப்பட நான் முயலவும், வேறு வழியில்லாமல் என் அம்மா, மனைவி, மகள் என்று நாங்கள் நான்குபேர் புறப்படத் தயார் ஆனோம்.
எனக்கு ராஜப்பா என்று ஒரு நண்பர். தற்செயலாக என்னைப் பார்க்க வந்தவர், ‘நானும் என் மனைவி உமாவும் கூட வருகிறோம்” என்றார். நான்குபேர் ஆறு பேராகிவிட்டோம். வெளியிலோ மழை நிற்கவில்லை. அதனால் என்ன என்பது போல, நான் மேற்கொண்ட குரு தரிசன யாத்திரைக்குள் நம்பமாட்டாத அதிசயங்களும் அரங்கேறத் தொடங்கின.
என் வீட்டுக்கு நூறு மீட்டர் தொலைவில் இருந்தது டவுன்பஸ் நிறுத்தம். பஸ் டிரைவர் தப்பித்தவறிகூட நிறுத்தத்தைத் தவிர, வேறு எங்கும் நிறுத்தமாட்டார். அப்படிப்பட்டவர், நான் வாசலுக்கு வந்த நொடி பஸ்ஸை நிறுத்தி ஏற்றிக் கொண்டார்.
திருவள்ளுவர் பஸ் நிலைய வாசலில் இறங்கி, செங்கல்பட்டு செல்லும் பஸ்ஸை பிடிக்கும் எண்ணத்தோடு நடந்தபோது, ஒரு திருவள்ளுவர் பேருந்து எதிரில் வந்தது. அதில் செங்கல்பட்டு செல்லவும் இடம் இருந்தது. ஒரு ஆச்சரியம்போல, ஆறுபேர் ரிசர்வ் செய்துவிட்டு என்ன காரணத்தாலோ வந்திருக்கவில்லை. அந்த இடம் அப்படியே எங்களுக்கு கிடைத்தது.
செங்கல்பட்டில் இறங்கி அங்கிருந்து காஞ்சிபுரம் செல்ல விழைந்தபோது, காஞ்சிமடத்து வேன் வந்திருந்து, ஆச்சரியமளித்தது. மடத்தில் உள்ள நீலகண்டயர், நான் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு சம்மந்தி. எனவே, வெண்ணீர் குளியல் – மருந்து கஷாயம் என்று அவர் பார்த்துக் கொண்டார். அதன்பின் சற்றே ஜுர உடம்போடு பெரியவரைத் தரிசிக்கப் புறப்பட்டேன்.
முதன்முதலாக தரிசிக்கப் போகிறோம். வெறும் கையோடா போவது என்று வெளியே பூக்காரியிடம் பூ கேட்டேன். ஒரு மல்லிகைப் பூ பந்தையே தந்துவிட்டாள்.
என் மனைவி, அம்மா, ராஜப்பா, அவர் மனைவி எல்லாம் குளித்து தயாரானபடி இருக்க, நான் மட்டும் தனியே பெரியவர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி, மல்லிகை பந்துடன் சென்றேன்.
சுவரில் சற்று சாந்தபடி, கால்களை நீட்டி அவர் அமர்ந்திருக்க, அருகில் ஒருவர் என்றால் ஒருவர் இல்லை. முன்னால் ஒரு மூங்கில் தடுப்பு. அதை பிடித்தபடி நின்ற நான், பூவை என்ன செய்வது என்று தெரியாமல், அதை விரித்து, நீண்டு கிடக்கும் அவர் கால்களின் மேல் சாத்திவிட்டு நிமிர்ந்தேன். அடுத்த நொடி அந்தக் கால்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து நின்றன.
யாருமே இல்லை. நானும் பெரியவரும் மட்டும்தான்…!
பேச விருப்பமாக இருந்தது. ஆனால், அவர் அமர்ந்திருந்த விதம், தோற்றம் தயக்கமளித்தது. மனத்துக்குள் பலவிதமான எண்ணங்களோடு அப்படியே நின்றுவிட்டேன். ஒரு அரை மணி நேரம் நின்றிருப்பேன். பின், என் மனைவி, மகள் மற்றும் ராஜப்பாவும் உமாவும் வந்திட தரிசனம் முடித்தோம்.
அப்படியே காமாட்சி அம்மன், வரதராஜர் என்று ஒரு ரவுண்டு. மாலை வரவும் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டோம். காலை வந்த அதே வேன் செங்கல்பட்டில் எங்களை கொண்டுவிட்டது. முதல் நாள் வந்த அதே பஸ், அதே டிரைவர் – கண்டக்டர் செங்கல்பட்டில்! அடுத்த ஆச்சரியம்போல மதுரையிலும் முதல் நாள் ஏறிய அதே டவுன்பஸ், அதே டிரைவர்-கண்டக்டர். வீட்டு வாசலில் என்றால், வீட்டு வாசலில் இறக்கிவிட்டனர்.
எனக்கு உடல் நலமில்லை என்பதும், நான் குரு தரிசனம் மேற்கொள்ளப் போகிறேன் என்பதும் இவர்களுக்கெல்லாம் எப்படித் தெரியும்?
என் அம்மா, மனைவி, ராஜப்பா, உமா எல்லோருமே மிக ஆச்சர்யப்பட்டார்கள். ‘இது முழுக்க முழுக்க பெரியவரின் க்ருபை’ என்றனர். க்ருபையின் உச்சம் என்ன தெரியுமா?
காலடியில் நின்றிருந்த நிலையில், சொந்தமாக ஒரு வீடில்லாத வேதனையை நான் பிரதிபலித்திருந்தேன். ராஜப்பா தனக்கொரு பிள்ளையில்லாத குறையை பிரதிபலித்திருந்தார்.
அதன்பின் நான் புதுவீடு கட்டி குடியேறினேன். கிரகப் பிரவேசத்தில் ராஜப்பா எனக்கு உதவியாக சாப்பாடு பரிமாறும்போது தகவல் வருகிறது – உமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக… ஒரே நாளில் இருவருக்கும் வரம்!
இதை தற்செயல் என்று கூறமுடியுமா?
மிக முக்கியமான ஒரு விஷயம். அந்த காய்ச்சலில் விழுந்தடித்துச் சென்று நான் தரிசித்துவிட்டு வந்த 30ஆம் நாள், மகா பெரியவர் முக்தியடைந்துவிட்டார். ‘குணமடைந்த பிறகு செல்வோம்’ என்று கருதியிருந்தால், பெரியவர் தரிசனமே கிடைத்திருக்காது!
இதை என்னவென்று சொல்வது?
மனத்துக்குள் குருவாய் கருதி உருகிக் கொண்டிருந்த எனக்கு கல்கி வழியாக விடை தந்தவர் – திருவடி தீட்சை தரவும் விரும்பி, அதற்கான விருப்பத்தை ஏற்படுத்தி பயணிக்க வைத்து அழைத்து அனுக்கிரகம் செய்திருக்கிறார் என்பதையன்றி வேறு எதைச் சொல்ல?
Welcome to My Blog.....
PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN
Monday, December 31, 2012
இந்திரா சௌந்திரராஜனின் முதல் அனுபவம்
Saturday, December 29, 2012
மேட்டூருக்கு அருகே, நெருஞ்சிப்பேட்டை என்றொரு கிராமம். 1928-ஆம் வருடம் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா.
ஊரின் முக்கியஸ்தரான சுந்தர ரெட்டியாருக்கும் அப்போ தைய எம்.எல்.ஏ. குருமூர்த்திக்கும& #3021; பெரியவாளிடம் அதீத பக்தியும் அபிமானமும் உண்டு. நினைத்தபோதெல்லாம் ஊர்ப் பெரியவர்களுடன் சென்று, அந்த மனித தெய்வத்தைத் தரிசித்து வருவார்கள். அப்படியிருக்க, அவரே தங்களது கிராமத்துக்கு விஜயம் செய்திருக்கிறார் என்றால், கேட்கவேண்டுமா?!
ஒருநாள்… ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, பெரியவாளைச் சுற்றி அமர்ந்திருந்தனர் ஊர்மக்களும் பக்தர்களும். அப்போது சற்று தூரத்தில், ‘கோவிந்த… கோவிந்த’ எனும் கோஷம் ஒலித்தது. உடனே பெரியவா, ‘இந்த கோவிந்த கோஷம் எங்கேயிருந்து வர்றது?’ என்று கேட்டாராம்.
”பக்கத்திலேயே பாலமலைன்னு ஒரு மலை… அதன் உச்சியில், ஸ்ரீசித்தேஸ்வரர் கோயில் இருக்கு. அந்த ஈஸ்வரனை தரிசிக்க மலையேறும் பக்தர்கள், ‘கோவிந்த, கோவிந்த’ன்னு கோவிந்த நாமாவைச் சொல்லிக்கிட்டுதான& #3021; மலை ஏறுவார் கள். கிட்டத்தட்ட 12 மைல் துரம்!’ என்று ஊர்ப் பெரியவர்கள் பதில் சொல்லியிருக்கிறார& #3021;கள்.
மகா பெரியவாளுக்கு ஏக ஆனந்தம். ‘ஈஸ்வரனைத் தரிசிக்க ‘கோவிந்த’ கோஷமா?!’ என்று வியந்து சிலா கித்தவர், ‘நானும் ஸ்ரீசித்தேஸ்வரரை தரிசிக்கணுமே’ என்று தனது ஆசையைக் கூறினாராம். ‘ஸ்வாமிகளுக்கு 12 மைல் மலையேறுவது கஷ்டம் ஆயிற்றே!’ என்று பக்தர்களுக்கு தயக்கம். ஆனால், மகா பெரியவரோ தயங்காமல் கிளம்பிவிட்டார்.
நம் எல்லோருக்கும் வழிகாட்டிய அந்த மகானுக்கு, ஸ்ரீசித்தேஸ்வரரைத& #3021; தரிசிக்க வழிகாட்டுவதற்காக, அன்பர்கள் குழு ஒன்றை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார் சுந்தர ரெட்டியார்.
மலையில் 12 மைல் தூரம் ஏறிச் சென்று, சுயம்புவான ஸ்ரீசித்தேஸ்வரரைத& #3021; தரிசித்த மகா பெரியவர், ”ஒரு நாள், ஒரேயரு பக்தர், தன் சொந்தச் செலவில் இந்த ஸ்வாமிக்குக் கோயில் கட்டுவார்!’ என்றாராம். மகா பெரியவரின் அந்த தெய்வ வாக்கு அதன்பின் 62 வருடங்கள் கழித்து, 1990-ல் பலித்தது.
அந்த வருடம்… வடநாட்டு சேட்ஜி ஒருவர், ஸ்ரீசித்தேஸ்வரரைத& #3021; தரிசிக்க வந்தார். அவருக்கு அந்த ஈஸ்வரன் என்ன ஆணையிட்டாரோ… அந்த அன்பரே தனியருவராகக் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்து முடித்து விட்டார்!”
Thursday, December 27, 2012
பத்மாவதி பரிணயம்
[இது போன வருடம் நவம்பரில் தட்டச்சு செய்யப்பட்டது
புதிய மெம்பர்களுக்காக ரீ-போஸ்ட்-வரகூரான் நாராயணன்.]
மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள்,
இரண்டு ஆண் குழந்தைகள்.
இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்
மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள்
செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில்
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு
வாடகை பிரச்னை இல்லை.
கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது
தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்'
தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..
மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.
ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
"பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.அடுத்த
வளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே
கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,
மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...
பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..."
தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார்.
"அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம்.
பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.
கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."
பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து
அனுப்பி விட்டார்கள்.
ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே'
என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே.
பெரியவாள்.
வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்
ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக்
கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..
"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.
என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ
பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.
அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..
என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன்,
உதவி செய்யப்படாதா?"
பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"
"சொன்னேனே1 பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி
பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"
பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்
பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்"
ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்;
அனுஷ்டாதா...பெரியவாளுக்குத் தெரியுமே"
"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு
மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"
-----------------------------------------------------------------------------------------------------
அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி
அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்
தங்கப்பூண் கட்டிய ருத்ராட்சமாலை,நவரத்தினமாலை,
ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்
ஒரு டாலர்;
பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப்
பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம்
மார்க்கபந்து சாஸ்திரிகள்.
பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு.
வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில்
ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.
பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்
பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்
யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றக்கு என்ன,இப்படி?
அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக்
காக்க வைக்கலாமா?
ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்து
சாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.
பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது.
பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.
"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா,
ஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு
திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி
ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா
அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..."
பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்
கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்
குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.
அரை மணி ஆயிற்று.
"சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு.
"ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்.
ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன்
சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.
"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...."
உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருக்கும்
ஆச்சர்யமாக இருந்தது.
ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும்
தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?
திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம்
செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம்
உற்சவம் செய்' என்கிறார்களா?
"பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"
சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.
முதுகில் சுளீரென்று சாட்டையடி!
இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,
கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து
விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.
"கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார்.
'கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன்
பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."
"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார்.
"சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு
தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்."
"அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவு
கூட கண்டதில்லே...."
பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து
பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!
"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா?புத்திரிக்குக்
கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?"
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.
"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என்
இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான
சௌ.பத்மாவதியை.." விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி...
பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.
"பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...
அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,
அண்ணா சந்தோஷப்படுவார்..."
தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு.
இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள்
காதருகில் மீண்டும் ஒலித்தன.
'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."
"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா?
மரவக்காடு பத்மாவதியா?
ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி'
என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.
தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை.
மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு
வைத்துக் கொண்டால் போதும்.!
திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!
சங்கரா! போற்றி...போற்றி.
Thursday, December 6, 2012
The Jagathguru Speaks ......
We spend so much on our youngsters-but what do we spend on their religious instruction? A father spends thousands on his son's Upanayana. But if he were to spend one tenth of the sum towards achieving what constitutes the very purpose of the Upanayana ceremony -making the child a good brahmachaarin - faith in our religion would be kept alive. To repeat, far better would it be to spend money on achieving the goal of upanayana than on the upanayana ceremony itself. The child must be given religious instruction by a private tutor and taught the duties of the brahmachaarin. Why should teachers conversant with such matters be denied an income? If religion is taught in childhood itself, people will be free from doubts as they grow up and the teacher too will be benefited. Today the situation is so lamentable that most of us do not know even the name of the text that forms the foundation and authority of our religion.
The fact that our people are not taught religion at an early age is one reason why there are so many differences among them. One man is a theist and another an atheist. One performs religious rites without devotion while another is devoted but does not perform any rites. The differences and disputes are many. As for the doubts harboured by people about our religion there is no end. If our religion were taught in childhood itself there would be unanimity of views and freedom from doubts. We know it for a fact that there are not so many doubting people among followers of other religions as there are among ours: the reason is that, unlike us, they are better informed about the concepts of their respective religions.
Tuesday, December 4, 2012
பெரியவா சொன்ன நிஜக்கதை.....
=========================
ஒரு ஊர்ல ஒரு பொம்மனாட்டிக்கு நல்ல பாம்பு ஒண்ணு குழந்தையாப் பொறந்தது! மொதல்ல எல்லாரும் ரொம்ப பயந்தா....அப்புறம், அதை குடும்பத்ல ஒரு கொழந்தையாட்டமா நெனச்சு, "நாகராஜன்"ன்னு பேர் வெச்சு ரொம்ப ஆசையா வளர்த்தா. அதுவும் ஒரு கொழந்தை மாதிரி ஆத்ல வளைய வந்துது...."நாகராஜா!.."ன் ;னு கூப்ட்டா, திரும்பிப் பாப்பான்..... "வா"ன்னு கூப்ட்டா வருவான். மடியில படுத்துப்பான்.
அவனுக்கு பால் குடிக்கறதுக்காக கூடத்துல ஒரு சின்ன பள்ளம் பண்ணி வெச்சிரு
ந்தா! அதுல பாலை நன்னா ஆற வெச்சு அந்த குழிக்குள்ள விட்டுட்டா....நாகராஜன் வந்து குடிப்பான். டெய்லி காலம்பற பத்தரை மணிக்கு அவனுக்கு பால் விடறது பழக்கம். இப்டீ இருக்கறச்சே, ஒருநாள் அவனோட அம்மாவுக்கு பக்கத்து கிராமத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்துது. அவளுக்கு தன்னோட பாம்புக் கொழந்தையையும் கையோட அழைச்சிண்டு போகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, எல்லாரும் ஒண்ணு.... கேலி பண்ணுவா ரெண்டாவது, பயப்படுவா..ன்னு தோணினதால, ஆத்துல ஒரு குருட்டுப் பாட்டிகிட்ட நாகராஜனைப் பாத்துக்கச் சொல்லிட்டு, எல்லாருமா கல்யாணத்துக்குப் போயிட்டா....
அந்த பாட்டியோ கண் செரியாத் தெரியாததால, வேலையெல்லாம் மெள்ளமா முடிச்சுட்டு, இவனுக்கு பால் காய்ச்சி எடுத்துண்டு வரப்போ, மணி ஒண்ணாயிடுத்து! பாவம், கொழந்தை பட்டினியால வாடினான். வழக்கமா பத்தரைக்கு பால் ரெடியா இருக்கும்னு வந்து குழில தேடினா, குழி காலி! பசியோட அந்த குழிக்குள்ளேயே சுருண்டு படுத்துண்டுட்டான். ஒருமணிக்கு இந்த பாட்டி பாலைக் காய்ச்சி கொதிக்க கொதிக்க கொண்டு வந்து குழியில விட்டா......அவ்ளவ்தான்! கொழந்தை வெந்து செத்து போய்ட்டான்! பாலுக்காக காத்துண்டு இருந்தவனுக்கு அந்த பாலே எமனா முடிஞ்சுது!
அன்னிக்கு ராத்ரி, கல்யாண வீட்ல தூங்கிண்டிருந்த அம்மாக்காரியோட சொப்பனத்துல அவளோட அருமைப்பிள்ளை வந்து, "அம்மா! பாட்டி கொதிக்கற பாலை எம்மேல ஊத்திட்டா....நான் செத்துப் போயிட்டேன்! என்னை தாழம்பூக் காட்டுல பொதைச்சுடு! நான் தெய்வமா இருந்து ஒங்களையெல்லாம் காப்பாத்துவேன்.." ன்னு சொன்னதும், அம்மாக்காரிக்கு குலையே நடுங்கிடுத்து! பெத்த வயிறு பத்தி எரிஞ்சுது! ஒடனே ராத்ரின்னு பாக்காம, தன்னோட ஆத்துக்கு வந்து, கருகி
வெந்து போயிருந்த தன் பிள்ளையை பாத்து கதறினா...."ஐயோ! பாட்டி ! என்ன கார்யம் பண்ணிட்டே? கொழந்தையை பாத்துக்கச் சொன்னா.....இப்டி பரலோகத்துக்கே அனுப்பிச்சுட்டியே! .."ன்னு அலறினா. பாட்டியும் பாவம் தன்னால கொழந்தை போய்டுத்தே..ன்னு குமுறி குமுறி அழுதா.....அருமையா பொறந்து, வளர்ந்த கொழந்தையை பக்கத்து தாழம்பூ காட்டுல பொதைச்சா!
அதுலேர்ந்து அந்த குடும்பத்தை சேந்தவா யாரும் தாழம்பூவே வெச்சுக்க மாட்டா...நான் சின்ன வயஸா இருக்கறச்சே, இந்த பாம்புக்குழந்தை பொறந்த குடும்பத்தை எனக்கு தெரியுங்கறதால, "ஏன் அவாள்ளாம் தாழம்பூ வெச்சுக்கறதில்லே?"ன்னு ஆத்துல அம்மாகிட்ட கேட்டப்போ, இந்தக்கதையை சொன்னா..." என்று முடித்தார்.
இன்றும் அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் பர்வதமலையை அடுத்த கடலாடி கிராமத்தில் இருக்கிறார்கள். அக்குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு நாகேஸ்வரன் என்று பெயர் வைப்பது வழக்கமானது! அக்குடும்பத்தில் வந்த நாகேஸ்வர ஐயர் சில தாமிரபட்டயங்களைக் காட்டினார். அது அவருடைய முன்னோர்களுக்கு அச்சுததேவராயர் வழங்கிய ஸாஸனம். மன்னர் அவர்களுக்கு ஐந்து கிராமங்களை தானம் செய்திருக்கிறார். ஆனால் ராஜப்ரதிக்ரஹ தோஷத்திற்காக அவர்கள் அதிலிருந்து 108 பிராம்மணர்களுக்கு தானம் பண்ணியிருக்கிறார்கள்.அந்த ஸாஸனத்தில் நாகராஜன், நாகேஸ்வரன் என்ற பெயர்கள் நிறைய காணப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக,கடலாடியில் உள்ள அக்குடும்பத்தின் தலைவர் திரு நாகேஸ்வர ஐயர் நம் பெரியவாளுடைய பூர்வாச்ரம மூத்த சஹோதரர் திரு கணபதி சாஸ்த்ரிகளின் மாப்பிள்ளை! அவர் மனைவி திருமதி த்ருபுரசுந்தரி சொன்னார்..."காமகோடி பெரியவா 1907 ல பட்டத்துக்கு வந்தப்போதான் நான் பொறந்தேன்...அதான், என்னோட தாத்தா [பெரியவாளுடைய அப்பா] எனக்கு த்ருபுரசுந்தரின்னனு பேர் வெச்சா..."
---------------------------------------------------------------------------------------------------
ரொம்ப ஆச்சர்யமான விஷயம்! சர்வபூத தயை என்பதை இதைப்படித்த பின்னாவது புரிந்துகொள்ள முயலுவோம். "தெய்வம் மனுஷ்ய ரூபேண" என்று சொல்லுவதை, நாம் நமக்கு யாராவது சஹாயம் பண்ணினால் இப்படி சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளுவோம். உண்மையில், இந்த சம்பவத்தில் பாம்புக்குட்டி ஒரு மனித வயிற்றில் பிறந்ததால், அது இறந்த விதத்தை படிக்கும்போது மனஸ் பாடுபடுகிறது. அதுவே சாதாரண பாம்பாக இருந்தால், கண்டதுமே அதை த்வம்சம் பண்ணிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்போம்! மனிதனும் தெய்வமாகலாம் என்பதன் சரியான அர்த்தம்....எல்லா உயிர்களிடமும் தன் உயிர் போல அன்பு காட்டுவதே!
பெரியவா அப்படி நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்.