சின்ன குழந்தைகளுக்கு கவடு-சூது தெரியாது. நெஞ்சில் தோன்றுவதை, அப்படியே வெளியில் சொல்லி விடும். அதனால்தான் - நெஞ்சில் கள்ளம் இல்லாததால்தான்- குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம்.
பக்தர்கள் மூங்கில் தட்டுகளில் பழங்கள், கற்கண்டு, புஷ்பம் என்று பலவகை பொருள்களை கொண்டு வந்து சமர்பித்தார்கள்.
ஒரு தட்டில் பெரிய பெரிய தாமரை மலர்கள் இருந்தன. ஒரு மலரை எடுத்து கையில் வைத்து கொண்டு, பொதுவாக, 'இந்த புஷ்பம் ரொம்ப நன்றாக இருக்கு, இல்லையா?' என்று சற்றே மகிழ்ச்சியுடன் கூறினார்கள், பெரியவாள்.
பெரியவாளின் விமர்சனத்தில் பக்தர்களும் ஆனந்தப்பட்டு கொண்டிருந்தார்கள்.
சிறு பெண் குழந்தை, ஓர் அடி முன்னால் வந்தது. 'ஆமாம்.... பெரியவா முகம் மாதிரி இருக்கு' என்றது. எல்லோரையும் பேரின்ப அதிர்ச்சி உலுக்கி எடுத்தது. பெரியவா டக்கென்று பேச்சின் போக்கை மாற்றி விட்டார்கள். 'எண்டா அந்த சாத்தனூர் சாஸ்திரிகள் வந்திருந்தாரே.... இன்னும் பிரசாதம் வாங்கிகொள்ளல்லே... அப்போ இன்னும் ஊருக்கு போகலேன்னு அர்த்தம்...'
(பி.கு அன்றைக்கு சாத்தனுரிலிருந்து எந்த சாஸ்திரிகளும் தரிசனத்துக்கு வரவேயில்லை)
பெரியவாளுக்கு குறுக்கு வழிகள் நிறைய தெரியும்!
No comments:
Post a Comment