Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Sunday, March 3, 2013

ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?

 

வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.
ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம்.
வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு. ‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள். மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Friday, March 1, 2013

The Dead Calf

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடுவது வழக்கம். சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். மகான் மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம். ஆனால் பசு வேதனைப்பட்டுக்கொணடே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை. வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டனர். கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல.. காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.
பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர்.
கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள் நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.
தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு..... ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது. துள்ளியபடி நின்றது. இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது.
ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான். அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.
பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின் மகான் உள்ளே போனார்.

Thursday, February 28, 2013

ஒரு புத்தகமும் - சில விஷயங்களும்...

 

நாம் அடிக்கடி ஏதாவது புத்தகங்கள் வாசிக்கிறோம் . அதில் மனதிற்கு நிறைவை தந்த விஷயங்கள் இங்கே.....
"நடமாடும் தெய்வம் " என வணங்கப்பட்ட , காஞ்சி மாமுனிகள் ஸ்ரீ பரமாச்சார்ய சுவாமிகள் குறித்த புத்தகம் ஒன்றை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மகாஸ்வாமிகள் குறித்த எத்தனையோ புத்தகங்கள் வெளி வந்துள்ளன. நான் வாசித்த புத்தகம் "கச்சிமூதூர் கருணாமூர்த்தி " என்பதாகும்.
ஸ்ரீ மடத்திலே மகாஸ்வமிகளுடன் இருந்து தொண்டு புரிந்த திரு. ஸ்ரீ மடம் பாலு அவர்கள் , மகாஸ்வாமி குறித்து தாம் கண்டு, கேட்டு, உணர்ந்த அனுபவங்களை ,திரு சத்யகாமன் அவர்கள் புத்தக வடிவிலே நமக்கு கொடுத்துள்ளார்கள்.
அதில் ஒரு பகுதி ....

ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை
சாயங்காலம் ஐந்து மணி. பெரியவாள், ஸ்நானத்திற்காக உரிய இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.
அவர்கள் வஸ்த்திரத்தில் ஒரு பெரிய சடைப்பூரான் இருந்ததை தொண்டர் பாணாம்பட்டு கண்ணன் பார்த்து விட்டார். பரபரப்புடன் கைகளை நீட்டி , காவி ஆடையை வாங்கிக் கொள்ள முயன்றார்.
"என்ன அவசரம் ? " என்றார்கள் , பெரியவாள்.
"பெரிய சடைபூரான் இருக்கு வஸ்திரத்திலே..."
பெரியவா, கண்ணனிடம் வஸ்த்திரத்தைக் கொடுத்தார்.
" பூரானை ஒண்ணும் செய்யாதே .. ஹிம்ஸை செய்யாதே ... ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு. ... பூரான் , ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை... ஒண்ணை அழிச்சாலும், ஒரு குலத்தையே நாசம் பண்ணின மாதிரி ..."
பூரான் - ஒரு விஷ ஜந்து. அந்த உயிரிடமும் கருணை , பெரியவாளுக்கு.
இதைப் போல பல அனுபவங்கள் இந்த புத்தகத்திலே காணப் படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் , நம்மை பரவசப் படுத்திடக் கூடியவை.
புத்தகத்தின் பெயர் : கச்சிமூதூர் கருணாமூர்த்தி

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top