சுவாமிநாதன் எனும் ஓர் தூயபக்தர்!அதிகாரி
அவாமிகுதியால்,ஆழ்ந்த தொண்டுள்ளத்தால்,
காஞ்சி மாமுனிவரை அடிக்கடி கண்டு வந்தார்
வாஞ்சைமிகு அவர் பேரன் 'ப்ரேம்சங்கர்' கூட வந்தான்.
இரண்டுவயது பாலகன்! இவனுக்கு மாமுனிவர்
கற்கண்டு கொடுத்தபின், "எனக்கென்ன தரப்போற?
என்றே கேட்டவுடன் இளம்குழந்தை துள்ளலுடன்
மின்னும் ஓர் துளசிமாலை எடுத்து இவர் கழுத்திலிட,
பெருமையுடன் வருகையில் "காட்ச்" என்றே பிடித்துவிட்டார்!
அருமைப் பெரியவாளை அன்று முதல் "காட்ச் தாத்தா"
என்றுதான் அவன் நாக்கு இனிமைபட அழைத்தது.;
(வன்மையாய்) அவன் பெற்றோர்,"காஞ்சித்தாத்தான்னு
சொல்லணும்டா,காட்ச் தாத்தான்னு சொன்னா அடி" என்றார்!
மெல்லிய தென்றலைக் கிளையை ஒடி என்றால் ஒடித்திடுமா?
நிலவைப்போய் மிரட்டினால் நிமிர்ந்து அது சுட்டுடுமா?
குலவும் குயிலைப்போய் "கர்ஜி" என்றால் கர்ஜிக்குமா?
அதுபோல் அவன் வாயில் காட்ச் தாத்தா தான்! அடடா!
அவன் போக்கில் அழைப்பதையே மாமுனியும் மிக ரசித்தார்.
"ரசனை"யின் மறுபேரே குழந்தையடா!- (இது) ரட்சகர்!
ரசனையிலா "ராட்சஸம்" நம்மிடமே",என்றாராம்.
பிரேம் சங்கர் கனவில் போய்ப் ப்ரம்மமாய் காட்சி தந்தார்!
பிரேமையுடன் நமஸ்கரித்தேன்! "பெரும் லீலை" யார் அறிவார்?
No comments:
Post a Comment