Varagooran Narayanan
வில்லுப்பாட்டு தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் ஒரு கலை. அதில் பயன்படுத்தும் வில் ராமேசுவரத்தை- தனுஷ்கோடியை நினைவுபடுத்தும். வில்லுப்பாட்டில் பயன்படும் உடுக்கை கயிலை மலையில் உள்ள சிவனை நினைவூட்டும். கயிலை முதல் ராமேசுவரம் வரை நினைவு வருவதால் வில்லுப்பாட்டு தேசிய ஒருமைப்பாட்டை நினைவுபடுத்தும் கலை என்று
கூறப்படுகிறது.
-காஞ்சிப் பெரியவர் சொற்பொழிவிலிருந்து
கீதையின் சாரம்
LOVE, SERVE, GIVE
அன்பு செய்
சேவை செய்
பிறருக்கு வழங்கு
இதுதான் கீதையின் சாரம்
Source: Shri Sathyanarayan Viswanathan
The mind is the abode of Iswara but we make a rubbish can of it. We must cleanse it, install the Lord in it and be at peace with ourselves. We must devote at least five minutes every day to meditation and resolve to do so even if the world crashes around us. There is nothing else that will give us a helping hand when the whole cosmos is dissolved.
It is by helping the poor and by spreading the glory of the Lord that we will earn merit.
-His Holiness Sri Chandrasekarendra Saraswathi Swamigal.
இதற்கு, பெரியவரின் பதில் அசாத்யமாக மிளிர்கிறது.
‘உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக, விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம், ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகாசக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் விஷயமறிந்த எந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்யதையும் கருணையும் அதற்கு உண்டு என்று ஒரு ஹிந்து நம்புகிறான்.
ஒரே ஸ்வாமி, நம் தேசத்தின் மகாபுருஷர்களுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாசனை மார்க்கம் எல்லாவற்றையும், இந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்துள்ளனர். இவற்றை முறைப்படி அனுஷ்டித்தால் தான் நாம் அந்த தேவதையின் அனுக்ரகத்தைப் பெற முடியும்.
எந்த தேவதையாக இருந்தாலும் சரி, முடிவில் அது பரமாத்வாவே! தாயைப் போல பகவானைக் காண விரும்புகின்றவனுக்கு அம்பாள் உபாசனை. ஒரே சாந்தத்தில் அமுங்கிப் போக விரும்புகிறவனுக்கு தட்சிணாமூர்த்தி. ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்த கிருஷ்ண பரமாத்மா என்று வகுத்துள்ளோம்.
இதைத்தான் இஷ்டதேவதா வழிபாடு என்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அமைப்பு. அந்த அமைப்புக்கு ஏற்ப, பக்தி செலுத்த உதவுவதுதான் இஷ்ட தேவதா வழிபாடு.
முதலில் நம் மனப்போக்குக்கு ஏற்ப, ஒரு தேவனிடமோ தேவியிடமோ பக்தி உண்டாகிறது. பிறகு, போகப்போக அது மாறி, ‘நமக்கென்று எதற்கு ஒரு மனப்போக்கு?’ என்று விட்டுவிட, அந்த தேவதையே அனுக்ரகம் செய்யும்.இங்கே முக்கியமான ஒரு விஷயம், அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இஷ்ட தேவதா வழிபாடு செய்யும் போது, மற்றவர்களின் வழிபாட்டுத் தேவதையை தாழ்வாக எண்ணக் கூடாது.
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நம்மில் இரண்டு தெய்வங்கள் சண்டைபோட்டு, ஒன்றை ஒன்று ஜெயித்ததாக புராணத்தில் சம்பவங்கள் உண்டு.
இதை, சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, ‘நஹிநிந்தா நியாயம்’ என்று பேர். ஒன்று பலமானது; இன்னொன்று அதைவிட பலம் குன்றியது என்பது இதன் உட்பொருளல்ல.
ஒரு தேவதையை உபாசிப்பவருக்கு, அந்த தேவதையிடம் தீவிரப் பற்று உருவாகிட இதுபோல பௌராணிகர்களால் சொல்லப்பட்டன. இதில் லோகத்தின் மானுட மாயா ரசக்கலப்பு உண்டு. ஒருவகையில் சிறுவர்கள் முன்னால் சில பெரியவர்கள் அவர்களை குஷிப்படுத்துவதற்காக சண்டை போட்டுக்கொண்டு கீழே விழுந்து கைகால்களை உதைத்து விட்டுக் கொள்வார்கள். குழந்தை அதைப் பார்த்து பெரிதாய் சிரித்து மகிழும். இது அந்த அளவிலான ஒரு மனோவியல் சார்ந்த விஷயம்!’ என்று பல தெய்வங்களுக்கான காரண காரியங்களை எளிதாகச் சொல்கிறார் பெரியவர்.
அடுத்து, இஷ்டதெய்வம் போலவே குலதெய்வ விஷயம்! இது நமது மதத்தில் ஒரு ஸ்பெஷாலிட்டியான மிக விசேஷமான விஷயம் என்கிறார் பெரியவர்.
இன்று குலதெய்வம் இல்லாத வீடு இல்லை.
இந்தக் குலதெய்வத்துக்குத் தான் முதல் மொட்டை, காதுகுத்தல்… அடுத்து எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், குலதெய்வத்தை வேண்டித் தொடங்கும் ஒரு பழக்கவழக்கம்.
கல்யாணப் பத்திரிகையில்கூட குலதெய்வ நமஸ்காரமே முதலில்! அடுத்து, குருவின் துணை. ஒரு குல தெய்வமும், ஒரு குருவும் இல்லாமல் ஒரு ஹிந்துவின் வீடு இல்லை.
ஒன்று கருணைபுரிய, ஒன்று வழிகாட்ட! பிசகில்லாமல் நாமும் அதில் நடக்கும்போது, வாழ்விலும் ஒரு நிம்மதி இருக்கத்தான் செய்கிறது.
இதில் கோளாறு வரும்போதுதான், நம் வாழ்விலும் ஏற்ற இறக்கம் வந்து ஆட்டிப் பார்க்கிறது.
இந்த குலதெய்வ தாத்பர்யம் பற்றியும், குருவின் வழிகாட்டல் பற்றியும் பெரியவர் மூலமாகவே நாம் தெளிவு பெறுவோம்.
ஏனென்றால், அதில் தான் அவ்வளவு அர்த்தமும் அருளும் உள்ளது. அது…
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)