Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Friday, March 4, 2022

"அது யார், ஜகத்குரு?"-ஒரு பண்டிதரின் கேள்வி

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி. பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில்ஸ்ரீ பெரியவாள் 'விசிட்'.

பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பைய தீட்சிதர் எழுதிய 'விதிரஸாயனம்' என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள் சொக்கிப் போனார். உடன் வந்திருந்த 'ஆத்ம வித்யா பூஷணம் 'இஞ்சிக்கொல்லை பிரும்மஸ்ரீ ஜகதீஸ்வர சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். (பின்னர்தான்,அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.

காசிமன்னர்அரண்மனையில்,பெரியவாளுக்குவரவேற்பு.நகரத்தின்முக்கியப்பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான பண்டிதர்கள்.

அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை. 'இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது?... ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !...'

பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக்கே ட்டார், "அது யார், ஜகத்குரு?"

"நான் தான் !..." என்றார், பெரியவாள்.

"ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?"

"இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு- என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:"

(உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான் ஜகத்குரு)

வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள்.

இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பெரியவாள்,அந்தப்பெரியஅறையின்சுவர்களின்மேற்பகுதியில் ,புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக் கூடுகளைப் பார்த்தார்.

பண்டதர்களிடம் காட்டி, "கிமிதம்"? (இது என்ன?) என்று கேட்டார்.

"நீட:" (கூடு)

"கேன நிர்மிதம்?" (யாரால் கட்டப்பட்டது?)ருந்தார்கள்
சடகே.." (குருவிகள்)

"கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு. .என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.

இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள்

. "நீங்கள் தான் ஜகத்குரு" என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.

பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை, அவர்கள் எல்லாரும் தினமும் முகாமுக்கு வந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்

Thursday, March 3, 2022

சோமாஸ் செய்து கொண்டு வா" (குழந்தைத்தனமாகக் கனவில் கேட்ட பெரியவா)

 (வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின்

கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம்
உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது)

கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மகா பெரியவாள், தன்னுடைய பக்தர்களின் கனவில்
தோன்றி அருள்பாலிப்பது உண்மை என்பதை அனுபவப்
பூர்வமாக பல பக்தர்கள் அறிந்த விஷயம்.

"மீளா அடிமை" என்னும் பிரதோஷ மாமா, மகா 
பெரியவாளை சாட்சாத் சந்திரமௌலீஸ்வரராகவே
நினைப்பவர். அவரது மனவியும் கணவருக்கு சற்றும்
சளைத்தவர் அல்ல..அவருக்கு வந்த கனவு அலாதியானது.

மகாபெரியவா ஆகாரம் என்று ஏற்றுக் கொள்வது வெறும்
பொரி மற்றும் வாழைக்காய் மாவு இவைகளே. இதுவும்
ஓரிரு பிடிதான். இப்படி,உண்டு தான் உயிர்வாழ்வதாக
உலகத்தோரை ஏமாற்றும் எம்பிரான், மீளா அடிமையின்
துணைவியாரின் கனவில் தோன்றி,

"சோமாஸ் செய்து கொண்டு வா" 
என்று குழந்தைத்தனமாகக் கேட்டு இருக்கிறார்.

அந்த மாதரசிக்கு ஒரே பூரிப்பு....பகவான் நம்மிடம்
கேட்டு விட்டாரே என்று மட்டற்ற மகிழ்ச்சி.

காலையில் எழுந்தவுடன் "சோமாஸ்" செய்து கொண்டு
நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க விரைகிறார்.

அங்கே தான் அதிசயம் காத்துக்கொண்டு இருக்கிறது.

"நான் தான் கேட்டேன்" என்று அந்தப் பெண்மணியிடம்
சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

"கொண்டு வந்ததை வேத பாடசாலை பசங்களுக்கெல்லாம்
கொடு" என்றார் பெரியவா.

மகானின் சார்பில் மாதரசி பிள்ளைகளுக்கு விநியோகம்
செய்தார். வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின்
கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம்
உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது.

Wednesday, March 2, 2022

சின்னப்பையன் பூஜை செய்ய சிபாரிசு செய்த பெரியவா

 (சின்னச் செடியா,மரத்தை நடறச்சே யாரும் அது நேரா முளைக்குமா,சாய்வா முளைக்குமான்னு பார்க்க மாட்டா

ஒரு கதை சொல்லி மகத்தான அறிவுரை தந்த பெரியவா)

நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
தொகுப்பு-என்.அக்ஷிதா.
29-11-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மகாபெரியவா பூஜை,புனஸ்காரம்,ஆசாரம்,
அனுஷ்டானம்னு எல்லா விஷ்யத்தைப் பத்தியும்
விவாதிக்கவும், வேத,புராணாத்தைப்பத்தி
விளக்கங்கள் சொல்லவும், மத்தவா
தெரிஞ்சுக்கவும் வித்வத் சபைகளை திடீர் திடீர்னு
கூட்டச் சொல்வார்.


அப்படி ஒரு சமயம் வித்வத் சபை நடந்துண்டு
இருக்கறச்சே,அதைப் பார்க்கறதுக்காக தன் பையனோட
வந்திருந்தார் ஒரு பக்தர்.அவர் பையனுக்கு அஞ்சு ஆறு
வயசு இருக்கும். சின்னக் குழந்தைகளுக்கே உரிய
குறுகுறுப்பு இருந்தாலும்,அளவுக்கு மீறி சுட்டித்தனம்
பண்ணாம, அமைதியா அப்பாகூடயே இருந்து அவனும்
எல்லாத்தையும் கேட்டுண்டு இருந்தான்.

பகவானுக்கு ஆராதனை செய்யறச்சே ஆசாரம் மீறக்கூடாது..
ரொம்ப சிரத்தையா பண்ணணும்..இப்படியெல்லாம் பலரும்,
பரமாசார்யா முன்னிலையில சொல்லிண்டு இருந்தா.
அதையெல்லாம் கேட்டுண்டு இருந்த அந்த பக்தருக்கு ஒரு
சந்தேகம் வந்திருக்கு.

வித்வத்சபையோட இடைவேளியில பரமாசார்யா
எல்லாருக்கும் தரிசனம் குடுத்துண்டு இருந்த சமயத்துல
அவரை நமஸ்காரம் பண்ணின அந்த பக்தர், தன்னோட
சந்தேகத்தை அவர்கிட்டேயே கேட்டார்.

"பெரியவா எனக்கு ஒரு சந்தேகம். நான் தெனமும் பூஜை
செய்யறதைப் பார்த்துட்டு எம் புள்ளையும் பூஜை
செய்யணும்கறான். சமீபத்துல கொஞ்சநாளா, ஏதாவது
புஸ்தகத்துலயோ,பேப்பர்லயோ சுவாமி படம் ஏதாவது
இருந்தா, அதைக் கிழிச்சு எடுத்து வைச்சுண்டு,கலர்
பென்சிலால் பொட்டு வைச்சு, கையில கிடைக்கற பேப்பரை
பூ'ன்னு சொல்லிக் கிழிச்சுப் போட்டு விளையாட்டா
பூஜை பண்றான்.

இங்கே எல்லாரும் பேசினதைக் கேட்டதும், இவன் சிரத்தை
இல்லாம பூஜை பண்ணி பாவத்தை சேர்த்துக்கறானோன்னு
தோணறது. இவ்வளவு நாளா கண்டிக்காம இருந்துட்டேன்.
இதனால் ஏதாவது தோஷம் வந்துடுமோன்னு பயமா
இருக்கு!" என்று சொன்னார்.

அமைதியா கேட்டுண்ட பெரியவா."குழந்தே,உன் பேர் என்ன?'
அப்படின்னு அந்தச் சிறுவன்கிட்டே கேட்டார்.

"எம்.பிச்சுமணி!" சொன்னவனை வாத்ஸல்யமாகப் பார்த்தார்,
மகாபெரியவா. "ஒனக்கு உம்மாச்சிக்கு பூஜை 
செய்யப்பிடிக்குமோ?" என்று கேட்டார்.

"ஓ...ரொம்ப பிடிக்கும்.அப்பா செய்யற மாதிரியே நானும்
செய்யணும்னு ஆசை...ஆனா,அப்பாதான் சம்மதிக்க
மாட்டேங்கறார்!" அப்பாவியாகச் சொன்ன சிறுவன் கையில்
கொஞ்சம் கல்கண்டைக் குடுத்தார். பரமாசார்யா.

"நீ ஒண்ணும் கவலைப்படாதே...நான் உன் தகப்பனார்கிட்டே
ஒனக்காக ரெகமண்ட் பண்றேன்!" சொன்னவர் பக்தரின்
பக்கம் பார்வையை நகர்த்தினார்.

"ஒனக்கு ஒரு கதை சொல்றேன்.கவனமாகக் கேளு

பழைய காலத்துல ஒரு பாட்டி சாளக்ராமம் வைச்சு பூஜை
பண்ணிண்டு இருந்தாளாம். அவளோட பேரன் அதை
வேடிக்கை பார்த்துண்டு இருந்தானாம்.

ஒரு நாள்,  குழந்தையோட தகப்பனார்,குண்டுகுண்டா
கொஞ்சம் நவாப்பழம் வாங்கிண்டு வந்தாராம். அதுல
கொஞ்சத்தை குழந்தைக்கும் குடுத்தாராம்.

நவாப்பழத்தை அப்போதான் மொதமொதலா பார்த்த
குழந்தை அதை ரசிச்சு,ருசிச்சு தின்னுதாம். அடுத்த நாள்
வழக்கம்போல பாட்டி பூஜை பண்ணறச்சே,சாளக்ராமத்தைப்
பார்த்த குழந்தைக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்துடுத்தாம்.

'இது நாம தின்ன நவாப் பழம் மாதிரியே பெருசா இருக்கே.
இதுக்கு ஏன் பாட்டி பூஜையெல்லாம் பண்ணறா?ன்னு
தோணித்தாம். அதை ஒடனே பாட்டிகிட்டே கேட்டிருக்கான்
குழந்தை. பாட்டி, சாளக்ராமம்னா என்ன, அதை ஏன் பூஜை
செய்யணும்னெல்லாம் சொல்லியிருக்கா. ஆனா,குழந்தைக்கு
அதெல்லாம் முழுசா புரியலை. அதனால, "நீ சொல்றதை நான்
நம்ப மாட்டேன். அதை எங்கிட்ட குடு.நான் கடிச்சுப் பார்த்து
அது நவாப் பழமா? இல்லையான்னு தெரிஞ்சுக்கறேன்'னு
அடம்பிடிக்க ஆரம்பிச்சுடுத்து.

எவ்வளவோ சொல்லிப் பார்த்தா பாட்டி. குழந்தை
சமாதானமாகலை. இதுவும் பகவானோட லீலைன்னு
நினைச்சுண்டு, " இதோபாரு, ஒரே ஒருதரம்தான் கடிச்சுப்
பார்க்கணும்!" அப்படின்னு சொல்லி அதைக் குடுத்திருக்கா.

வாங்கின சந்தோஷத்துல சாளக்ராமத்தை வேகமா ஒரு கடி
கடிச்சுது.குழந்தை, பல்லு வலிச்சதும்,அது பழமில்லைன்னு
தெரிஞ்சுண்டு திருப்பிக் குடுத்துட்டு விளையாட ஓடிடுத்து.

அதேகுழந்தை வளர்ந்து பெரியவனானதும் சாளக்ராமத்தைப்
பார்த்தான். அதுக்கு பூஜை செய்யறதைப் பார்த்தான். இப்போ
அவனுக்குப் பழைய விஷயம் ஞாபகம் வருது. அட்டா
அன்னிக்கு நாம சுவாமியோட திருமூர்த்தத்தை தெரியாமக்
கடிச்சுட்டோம்னு வருத்தப்பட்டான்.

இப்போ இந்தக் கதையில் வந்த குழந்தைக்குப் பாவம் உண்டா?
நிச்சயமா கிடையாது.பகவானோட ருசியைப் பார்த்ததாலதான்
பெரியவனானதும் தான் சின்ன வயசுல செஞ்சதுக்காக
வருத்தப்படணும்னு அவனுக்குத் தோணியிருக்கு. அந்த 
எண்ணம் வந்துட்டாலே போதும்.சின்ன வயசுல தெரியாமப்
பண்ணின பாவம் எல்லாம் போயிடும்.

சின்னச் செடியா,மரத்தை நடறச்சே யாரும் அது நேரா 
முளைக்குமா,சாய்வா முளைக்குமான்னு பார்க்க மாட்டா.
நன்னா தழைச்சு வரணும்னு மட்டும்தான் நினைப்பா.அப்புறம்
வேர்விட்டு, கிளைவிட்டு வளர வளர படிப்படியா செதுக்கி
எடத்துக்கு ஏத்தபடி வளர்த்துப்பா.அப்படித்தான் பக்தியையும்
சின்னக் குழந்தையா இருக்கறச்சே மனசுல வெதைச்சுடணும்.
அதுல, ரூல்ஸ் எல்லாம் சொல்லி பயமுறுத்தக் கூடாது.
வளர வளர அவாளே ரெகுலரைஸ் பண்ணி, ரூல்ஸ் எல்லாம்
ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுடுவா. 

ஒம் புள்ளைக்கு பால்யத்துலயே பகவான் மேல பக்தி
வந்திருக்கு.அவனை அவன் போக்குல விடு. அவன் தெரியாமச்
செய்யறதால எந்தப் பாவமும் வந்துடாது!"

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top