Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, March 31, 2015

KNOWLEDGE IN CHILD PSYCHOLOGY

For one who severed all relationships at the age of thirteen, Sri Maha Periyavaal did many things that made one wonder how that yatiraja (king of ascetics) could have that sort of knowledge in child psychology. One such example.

During the Navaratri Kanya Puja, our Deiva Mahaguru would do puja, considering as the Navadurgas, nine girl children aged from one to nine years, treating them as Kaumari, Tripura, Kalyani, Rohini, Kamini, Chandika, Saankari, Durga, and Subhadra.

One such Kaumari Puja. The one year old child, selected as Kaumari started crying non-stop. The cry did not subside whatever the pacifications. The child did not relent for its mother's coos and cuddles, the fruit she dabbed to its mouth or any such gifts.

Periyava came. And saw the relentless cry of the child.

Since it was Navaratri time, it was mauna vrata (vow of silence) for him. With the abhinaya caturam (dexterity of gestures) unique for him, he gestured that a silver coin of half a rupee of those days be given to the child.

They did as directed.

What wonder! The moment the coin fell on its palm, Kaumari's weeping stopped! Its eyes and nose still oozing, it opened its mouth widely in a laugh, displaying only the few teeth (though we can't call it a mouthful of teeth) it had in its mouth!

author: Raa. Ganapathi
source: Maitrim Bhajata

Sunday, March 29, 2015

"பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா"

கட்டுரையாளர்; ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்
ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது
ஸ்ரீ ஸி.எஸ்,விக்கு (விச்வாநாதையர்) பொத்துக்கொண்டு
வந்து விட்டதாம்.

"எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா
கிடக்கிறது? இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் இத்தனை
யானையையும்,ஒட்டையையும்,ஜனங்களையும் கட்டித்
தீனி போடுவதென்றால் எப்படி?" என்கிற ரீதியில்
பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.

பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக " நீ ஏன்
பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப்
பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா
அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே
எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய
அளப்பா"என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை!
அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா,
அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே
நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை
செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை.
ஆனால் சொல்லத் தெரிந்தது, மறுநாள் காலையிலிருந்து
அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப்
பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்துகொண்டேயிருந்ததுதான்.
வந்தது மட்டும் இல்லை.அக்காலத்தில் வெள்ளி நாணயம்
வழங்கி வந்ததல்லவா?

வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு
வந்து கொட்டினார்கள்.

"நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா

{இதை ஸி.எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து
ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்)

அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி
குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே எல்லாத்தையும்
சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச்
சாக்கிலே போட்டுக் கட்டினோம்.

பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன்.
ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே'
அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!.

"பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை.
பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை.
இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு
ஆட்டம் போட்டிருக்கா.

Friday, March 27, 2015

Periava turned to the singer and said, “ I am going on talking some thing. Whether you understand or not, you are also listening to it , thinking, ‘Periava is talking; let me keep listening’. Your bus will go away. What is the time now?”.

As many looked at their watches and told Him the time, His anxiety disappeared as there was still half an hour before his bus was expected here.

He started telling me about the singer. The readers will not understand the full impact of the sympathy and love He had for this man, by merely reading this; it should be witnessed in person. It was akin to the love Lord Krishna had for the shepherd people who do not know their right and left hands.

“ The singer comes from a village just beyond Velur. I don’t recollect the name as it was a strange name; Periava also did not tell me his name. But where is the necessity for knowing the name when he happens to be the representative of those innocent persons who are fortunate to have the ‘Poornaanugraham’ ( full blessings) of Periava?

‘ He has a small inherited land. Their livelihood comes from that. He survives without being affected by the bad effects of education ( Only Periava, the personification of Simplicity, can express the person’s inability to learn in such a beautiful and camouflaged way that gives him merit!, and at the same time, it serves as a mischievous prick for us, the ‘wise’ people!). He and his widowed mother live there all by themselves; he hasn’t thought about marriage; they survive by themselves and do not do any harm to others ( by this He also indicates the innumerable harms we do to others, and how we live without any peace of mind). He had a liking for singing from his tender age; but could not afford to learn from a teacher; whenever some neighbor or a nearby hotel plays a song from the radio or gramophone, he used to rush there, listen to it; he absorbed whatever he could with his ability to absorb. Aim and attitude are more important than what one can do actually, is it not? That way, he has run here and there and has learnt as much as he could. ( see how sympathetically He values a person’s ability or the lack of it!).

“When he learnt about me,” He turned to him and asked, “when did you hear about me?”

“At the time of Periava’s Kanakaabhishekam.”------replied the singer.

“That means, for about six or seven years. When some persons mentioned about Ambal, he developed a staunch devotion towards me. He also wanted to sing before me but was worried whether he would be allowed to; more over, for coming to Kancheepuram some money is required, which he didn’t have then

By now, the sobbing from the singer attracted His attention. He turned and looked at him kindly and said, “Do not cry! Money will come and go. You are not running after it! Who has, today, that attitude? Nobody! Even boys who earn five hundred and thousand ( He mentioned this thirty years ago! Today it is fifty thousands!) are looking to go to America; why boys? Take the case of retired persons who have earned in thousands; these persons go to unethical ways to get extension; the thought, ‘yes, this is enough’ doesn’t occur to such persons. Even if that thought comes, it goes off immediately!. This has come to you naturally, and it should not vanish! Even for the sake of seeing me, do not go after money. I will always be with you, you can rest assured.”

Who will get this sort of promise?

The fortunate ‘innocent’ prostrated once again before Him. And so many other souls joined him in that.

Deciding not to make him more emotional, He turned towards me and said, “From the moment he came to know about me, he became too eager to see me. He has waited for seven/ eight years, it was like a penance for him. Now only he could save about fifteen rupees. He immediately kept that money separately for me ( When He said this, although He hid His emotion, it showed in His words!). After keeping the exact amount for the bus fare, he bought all these fruits, flowers and this garland I am wearing for the remaining money and rushed here ( Oh! That is the secret behind the garland which He didn’t remove from His neck!). All he has got now is just the bus fare for the return journey.”
Oh! My innocent friend, we will never experience the sort of Devotion, and the sense of sacrifice that you exhibited!------thought I.

I got motivated that I should do some service to this fortunate guy and appealed to Periava, “ I am returning only after witnessing the night pooja; therefore, may I arrange to take him to his place in our car and leave him?”

Periava quickly said, “ No! don’t expose him to such conveniences! ( the Tamil word used here for ‘don’t expose’ is ‘காட்டிக்குடுக்காதே!, what a meaningful expression! )

After Periava completed the briefing about the singer, he asked Him about me. SriSaranar told him about me, which I felt was very much exaggerated and which did not please me also; on the contrary, it gave me immense pain; pain because, what He told him was all about my fame as a writer, which I have always disliked. A writer , with his own ability, what he learns by seeing and hearing, and above all with the Divine blessing , can write a lot that will please and elevate the minds of those who read them; but what of the writer himself? And the elevation of his mind? There have been any number of literary greats, pundits and those who wrote specifically on matters of ‘Atma’; but how many among them would have elevated their own souls to higher levels? Caught between the force of writing on one side and the downward pull of the fame achieved, it is a cruel race for the writer to make progress.

Why then, Periava not only calls me as ‘writer’ repeatedly but also talks about the fame which hurts me? Is my whole life going to be spent this way, writing for others’ benefit
When is He going to ‘win’ me over to His side? Has He forgotten my appeal to Him made two years ago?.

Unable to contain myself, I told Him, “Why Periava is always talking about this so—called fame as a writer? Has Periava forgotten my request made two years ago?”

He looked at me with those big eyes, full of love and kindness! That itself calmed me quite a bit and assured me that He will not let me ‘down’.

Then, He looked at all the others present there, and said, “It is only four years since he started writing; many people say that he is doing it because of my Anugraham; but, within two years, he wants me to bless him for stopping that!”

Then, He turned towards me and said, “ Let that go on; let it continue for the benefit of the world; Why should we think that it is an obstacle? If it has to happen for the benefit of others, let it continue; along with that, let us not lose sight of what we desire, and pray Ambal to bless us and guide us for achieving that also. I will also pray on your behalf!”

Could I have asked for more than what He said in the end?

But still, I persisted, “ But, I feel why Periava also should repeatedly keep mentioning about my carrier and the fame, as if what other people say is not enough? Why Periava should stress on the ‘writer’ identity. I dislike this ‘writer’ identity.”

He laughed mischievously and said, “ So, you want to identify yourself with the soul, without any other external identity? ( I do not know how far my translation of this is correct. Hence, I will mention what Ganapathy anna wrote in Tamil. “ ஒரு ஐடென்டிடியும் இல்லாம, அப்படியே ஆத்மாராமனா இருந்துண்டிருக்கணுமோ?)

“ I don’t desrve to ask for such an exalted status. But, since I hope I have some little of Periava’s and Sri Ramana Bagavan’s blessing, I can’t say that I do not have THAT desire at all. And, should there be an identity at all, then it…..” I couldn’t speak further.

“Come on! Tell me! Come close and tell me!”-----urged Periava, and gestured with His hands for others to move away.

But before they moved, I, from a distance, propelled by the clarity of mind that He filled my mind with, said, “ Should there be an identity at all, then, I want to be ‘Ambal’s child; although everything and every being is Ambal’s children, I want to experience that truth with my personal experience”.

Though I mentioned the word ‘Ambal’, I never saw Him different from Her. But though I could ask openly for the personal experience of ‘being Her child’, I couldn’t ask ( rather, I hesitated to ask) Him for ‘being His child’.

SriSaranar closed and re opened His eyes, filled with Her love and affection.

Then, He said , “ The fact that you have such a claim, itself shows that, She has kindled this desire in a corner of your mind , with or without your knowledge. As She has sown this desire in you, She will certainly help in its growth. You also pray for it; I will also pray.” Again the plentiful blessing!

Source: Shri.Surya Narayan

Wednesday, March 25, 2015

விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்

(கோபப் புயலாய் இருந்த பெரியவா
அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி)

ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012) சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக

வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள்

பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும்.

சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்.
ஆசிரியர்------ஸ்ரீ ரா. கணபதி.

ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப் பிரஸாதம் கேட்டபோது, " நாளைக்கு விடிகாலை ஊருக்குப் போறயா? ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!" என்றார் ஸ்ரீசரணர்.

'அடியார்' என்று மரியாதையை உத்தேசித்துச் சொல்லப்பட்ட அந்நபர் ஒரு விதண்டாவாதி. மரியாதை முறை பாராது ஜகத்குருவிடமும் விதண்டை செய்பவர். அதற்கேற்பவே இப்போது, " நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான் பண்ணுகிறது. வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே அவாளும்? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக்கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது." என்றார்.

அப்படியானால், அவர் வேதோக்த கர்மாக்கள் செய்வாரா என்றால் அதுவும் மாட்டார்! இது ஸ்ரீசரணாளுக்கா தெரியாது?
'புரு, புரு, புரு' என்று ஒரு வேகம் ஏறி, பெரியவர்தானா பேசுகிறாரென வியப்புறுமாறு பெரியவர் விளாச ஆரம்பித்தார்!

"ஓ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லியிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்--ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன்னதுதானாடாப்பா? எல்லாத்தையும் விட, 'ஆபீஸ்'னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?" என்றார். அதோடு விட்டரா? மேலும் மேலும், மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட் என்பதாக அடியாரது அனுபவத்திற்கு உரிய பலவற்றை அடுக்கிக் கொண்டே போய், அது ஒவ்வொன்றும் 'வேதத்தில் சொல்லியிருக்கா/" என்றோ, 'எந்த வேதத்தில் சொல்லியிருக்கு' என்றோ முத்தாய்ப்பு வைத்தார்!

முடிவாக, " வேதத்துல எங்கேயும் 'டைரக்'டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு 'பப்ளிக்' பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே--ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்--னு ஆகறது. போய்ட்டு வா!" என்றாரே பார்க்கலாம்!
விதண்டாவாதி ஆடியே போய் விட்டார்! தடாலென்று தண்ட நமஸ்காரம் செய்து ஸ்ரீசரணரிடம் தம்மை க்ஷமித்து நல்லறிவு தர வேண்டினார்!

கோபப்புயலாயிருந்த ஸ்ரீசரணாள் அக்கணமே அருட்தென்றலாகிக் கூறலானார்.
வேதகாலத்திற்குப் பிற்பட்டும் அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, அந்த விருக்ஷத்துடைய புதுப் புதுக் கிளை, இலை என்றெல்லாம் காலம் தோறும் அநேகம் ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாமும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு 'தியரி' இருந்து அதை அப்புறம் காலம் தோறும் 'அடாப்ட்' பண்ணிப் புதுப் புது 'டிஸ்கவரி' கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணீயிருக்கிறது----என்பதை தீர்க்கமாக விளக்கி விட்டுத் தொடர்வார்:
"இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம், வேதத்தில் என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ, அந்தக் கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்தில் சொல்லாத உபகரணங்கள் பிற்காலங்களீல் கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த தாவனம்--னு பல் தேய்ச்சுக்கறது, அப்புறம் ஸ்நானம் பண்றது, சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கை--ன்னு ஏற்பட்டிருக்கிறதில அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, 'ரிக்ரியேஷன்' னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது---எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம். அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணிணா--ன்னா இன்னிக்கு ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கலாம். இதுகளை வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு 'பாலிஸி'யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் 'ஸ்பிரிட்' டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரத்தை உண்டாக்கறதோ அதையெல்லாம்தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ]

. சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு---ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி--ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய்ய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, 'நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்'னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, 'இப்படி இருக்கே'ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய 'டயம்' ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும்.
"ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை--ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான மொறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப்படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்™ பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப்போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட்™ எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல்லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்கிறா?
அதுலயுந்தான் நமக்குப் பரிசயம் வேணும்னு நம்மை உத்ஸாகப்படுத்தற இன்ஸென்டிவ்கள்! பல்லவியானாலும், துக்கடாவானாலும் எல்லாம் ஸங்கீதம்தானே? அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து, ஹரி போல்வரை எல்லாமே ஒரே ஸனாதன தர்மத்தின் ஸ்பிரிட்டில் தோணினதுதான். துக்கடா கேக்கறதுலேயே ஆரம்பிச்சவா அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே போய் ராகம் கண்டு பிடிக்கறது, தாங்களே பாட்டுக் கத்துக்கறதுன்னு போய், பல்லவி பாடறதுலேயே ˜எக்ஸ்பெர்ட்டா ஆனதாக்கூட ஒண்னு ரெண்டு கேஸ் நானே பார்த்திருக்கேன். கச்சேரின்னா அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். ˜இன்னிக்கு என்ன மெய்ன்னு அதைத்தான் மெய்னாகவே வெச்சிருக்கறதாத் தெரியறது? அப்படி வேத ஸம்ப்ரதாய பத்ததின்னா, அதுக்கு வேத யக்ஞாதிகள்தான் மெய்ன். அதுதான் நமக்குப் பூர்த்தி ஸ்தானம்.
அந்த யக்ஞாதிகளைப் பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா அதையும் பண்ணாம, அதுக்கு அழைச்சிண்டு போறதுகளையும் பண்ணாம விட்டுடறது தனக்குத்தானே ஹானி உண்டாக்கிக்கறதுதான். இப்படி அழைச்சுண்டு போறதுகளும், எந்த லக்ஷ்யத்துல கொண்டு சேர்க்கிறதோ அந்த லக்ஷ்யத்தின் ˜ஸ்பிரிட்டிலேயே பொறந்ததுதானானதால், இதுகளையும் ஒரு போதும் தள்ளாம யக்ஞாதிகள் பண்றவா அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாத்தம் உண்டாகாம வழிகாட்டினதா இருக்கும். இன்னி வரைக்கும் நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கிறவா அப்படித்தான் ரெண்டையும் அநுஷ்டிச்சுண்டும் வரா.

நீயும் ஸ்ரீராமநவமி பூஜை மாதிரி சின்னதா ஒரு பூஜைல ஆரம்பிச்சு வாஜபேயி ஆற வரைக்கும் மேலே மேலே அபிவ்ருத்தியா [வாயாக]!. நாளைக்கு இங்கேயே வழக்கமான மடத்துப் பூஜையோட ராமர் பூஜையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன். ஸந்தோஷமாப் போய்ட்டு வா!
உருகிவிட்டார் உருகி, மாஜி விதண்டாவாதி!

Monday, March 23, 2015

நன்றி: Periyavaa Adimai

'சுவாமிகளை இந்த மாதிரி ராப்பகல் போட்டு பிடுங்கப்படாது' என்று மடத்து காரர்களும் என்னை சுற்றி இருக்கிறவர்களும் ஜனங்களை கோபித்துகொள்கிறார்கள்.

'சுவாமிகளுக்கும் சரீரம் இல்லையா? அதற்கு சிரமம் இருக்காதா? என்று சொல்லி (குறை சொல்லிகொள்ள வருகிறவர்களை) தடுக்கிறார்கள், விரட்டிக்கூட அடிக்கிறார்கள்.

இது சரிதானா? என் ஒருத்தனுக்கு சரீர சிரமம் ஏற்படும் என்பதற்காக இத்தனை பேர் மனசில் இருக்கிற ஸ்ரமத்தை, கொதித்து கொண்டு இருக்கிற தவிப்பை சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு தாபசமனம் அடைவதை தடுப்பது நியாயம் ஆகுமா?

நான் எதற்காக இருக்கிறேன்? இந்த வாழ்க்கை - வாழ்நாள் எதற்காக ஏற்பட்டு இருக்கிறது? ஜனங்களுடைய கஷ்டங்களை கேட்டு ஆறுதல் சொல்வதற்காகத்தான் இந்த வாழ்க்கை ஏற்பட்டு இருக்கிறது. ஜனங்கள் ராவும் பகலும் படுகிற துக்க பாரத்தை லேசாகுவதற்கு தான் இந்த சரீரம் ராவும் பகலும் தன்னால் ஆன உபகாரத்தை செய்ய வேண்டும் என்று ஏற்பட்டு இருக்கிறது.

நான் லேசாக்குகிறேன் அதற்காக ஏதோ பண்ணுகிறேன். பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறது - என்றெல்லாம் இல்லை. ஜனங்கள் தாங்களே தங்களை லேசாக்கி கொள்வதற்கு என்னை ஒரு கருவியாக வைத்து இருக்கிறது என்று சொல்லுகிறேன்.

காரியத்தில் நான் பரிஹாரம் பண்ணினாலும், பண்ணாவிட்டாலும், வாய் வார்த்தையாக ஆறுதல் சொல்லி விட்டாலே கஷ்டப்படுகிறவர்களுக்கு ரொம்பவும் நிம்மதியாகி விடுகிறது.

'யாவார்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!' என்று திருமூலர் சொன்ன வாயுபகாரம் தான் நான் பண்ணுவது.

நன்றி: மைத்ரீம் பஜத புத்தகத்தில் அண்ணா ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள்.

இவர் தான் குரு. லோக குரு. ஜகத்குரு. நடமாடும் தெய்வம். வேறு யாராலும் இந்த வார்த்தைகளை கூற இயலாது.

Source: Shri. Halasya Sundaram Iyer

Saturday, March 21, 2015

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால்(பெரியவா) மட்டுமே முடியும்! கட்டுரை-ரா-கணபதி.

பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர் ஏற்று கொள்வார் என்று எண்ணினார்

“இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா!

ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடுசென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயேதீர்த்தம் குடுத்துக் கொண்டிருந்தார் பெரியவா.அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு ரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன் கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம்
தருவது சாஸ்த்ர விரோதமாகையால் சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு
நிதர்சனமாக தெரிந்திருந்தது.

ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்
தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து கொண்டிருந்தார்

. இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காககையைநீட்டிவிட்டார்…….

பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்டசந்தோஷம்! ரா.கணபதிக்கோ நிம்மதி பெருமூச்சு!

“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம் குடுத்துட்டார்!…”

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால் மட்டுமே முடியும்

 

Source: Shri.Varagooran Narayanan

பிராமணனும் மரியாதையும் மஹா பெரியவா சொன்ன கதை

துரோணரும், இளவரசனான துருபதனும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது துருபதன் தன் நண்பனான துரோணரிடம், ''நான் அரசனானால் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருவேன்'' எனச் சொல்லியிருந்தான். எங்கே... சொன்னபடி நடந்துகொண்டானா துருபதன்? அதுபற்றி காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகளே இங்கே மனம் திறக்கிறார்.

'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!' என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship கொண்டாடவா?' என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணிவிடுகிறான்.

இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார். இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னி யிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான்.

பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, 'நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறைப் பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?' என்று த்ருபதன் நினைக்காமல், ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில், இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமே உண்டாயிருந் தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப் படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷ£த்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடமே வன்மம் கொண்டான்.

கடைசியில் பாரத யுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடுகொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக் கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப் போய்விட்டான் என்று, ஸத்ய ஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, ''அச்வத்தாம: ஹத: குஞ்ஜர:'' என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து, ''குஞ்ஜர'' (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில், பாஞ்ச ஜன்யத்தைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே, த்ரோணர் மனஸ் உடைந்து போய் அப்படியே ஆயுதங்களைப் போட்டு விட்டு உட்கார்ந்து விட்டார். அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரைக் கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதைப் பார்த்துப் பாண்டவ ஸைன்யத்தினர் உள்பட எல்லாரும் 'தகாத கார்யம் நடக்கிறதே' என்று விக்கித்துப்போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.

இன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனஸுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் ஸஹபாடியான குசேலர், த்ரோணர் மாதிரியே தாரித்ரிய ஸ்திதியில் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப் படுத்தாதது மட்டுமில்லை; அவருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.

தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்தி பற்றி எதுவும் சொல்லவொட்டாமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, 'இது நம் அகந்தானா?' என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.

இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும், அஸயத்மாகவும் மனஸை உறுத்துகிறாற் போல் போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது...

குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், நஷ்டம் ஆகட்டும், ப்ராம்மண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து, எளிமையுடனும் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

த்ரோணரும் மஹா பெரியவர்தான் என்றாலும், ப்ராம்மண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப் பதோடு நிற்காமல், அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால்தான் எல்லாம் கோளாறாகப் போயிருந்திருக்கிறது.

த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் ஏதோ சொல்லிவிட்டானென்று ப்ராம்மணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமான மும் க்ஷ£த்ரமும் பாராட்டிப் பழிவாங்க நினைத்ததே ஸரியில்லைதான்.

ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனஸைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமல்லாமல், பரசுராமரிடம் அஸ்த்ர சி¬க்ஷ கற்றுக்கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படிச் செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரியே பிற்பாடு அவர் கதை போயிருக் கிறது. நியாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கே எத்தனை வேதனையாயிருந்திருக்கும்?

யுத்த பூமியிலானால், அர்ஜுனன் போடுகிற அம்பை விடக் கூராகத் துளைக்கும் வார்த்தையம்புகளை பீமஸேனன் அவர்மேல் வீசி, அவர் பிராம்மண தர்மத்தை முறைப்படி நடத்தாதற்காக ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத் திறக்காமல் அவர் அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.

ப்ராம்மணன் ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால், மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன!.

Thursday, March 19, 2015

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” ரா.கணபதி கருணைக் கடலில் சில அலைகள்

நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதிராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை.

ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..க்யூ விலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்

. “ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே ! வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா! “ என்று ஆவி சோரக் கூவிக்கொண்டிருந்தாள்.

வெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க்கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத் தம்பி. அந்த ரத்த பந்தத்வத்திற்கு ஏற்ப நல்ல இதயக்கனிவு பெற்றவர். பாட்டியின் தாபக்குரல் கேட்டதும் நடையை விரைவு படுத்தி, உள்ளே சென்றார். முக்யமான ஆலொசனையிலிருந்த ஸ்ரீசரணரிடம் “ வெளியிலே ஒரு பாட்டி, நூறோ, நூத்திருபதோ, என்ன வயசிருக்குமோ, பெரியவா தரிசனத்துக்காகத் தவிச்சிண்டு நிக்கறா” என்றார்.

அவர் சொல்லி முடித்துக்கூட இருக்க மாட்டார், பெரியவாள் புறப்பட்டு விட்டார், புயலாக!

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” --- நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி! இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்” என அன்பின் சார சாரமாக அமுத மொழி கூறினார் அருளாளர்.

“ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது!

முகத்தைத் தூக்கி ஸ்ரீசரணரின் திருமுகம் கண்ட விருத்தாம்பிகை, “எனக்கோசரம் நீ ஓடோடி வந்து எதிற்கே நின்னும் இந்தக் கண்ணு மங்கல்ல தெளிவாத் தெரியல்லையே! என்னப்பா, நீதான் நல்ல கண்ணைக் குடுத்துக் காட்சி தரணும் “ என்றாள்.

அது நல்ல வெயிலடித்த சமயம். ஆனாலும் க்யூ வரிசைக்காரர்களுக்கு மேலெ கூரை அமைக்கப்ப்பட்டிருந்தது. பக்த பராதீனர் சட்டென்று அந்த கூரைக்கு வெளியே துள்ளீ சுடு வெய்யிலில் நின்றார். பாதுகை அணீயாத பாதத்துடன்!

“ இப்பத் தெரியறதோன்னோ பாட்டி?” என்றார்.

“நன்னாத் தெரியறது, என்னப்பா, நன்னாத் தெரியறது!” என்ற பாட்டி கன்னத்தில் படபடவென்று போட்டுக்கொண்டாள்.

பெரியவாள் தன் முகத்தை வெயில் படுமாறு பல கோணங்கள் தூக்கி, தழைத்து, திருப்பியெல்லாம் காட்டி, முழு உடலையே திருப்பி முதுகுப்புற தரிசனமும் தந்தார்.

என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் உணர்ச்சிப்பெருக்கில் மூதாட்டி குழறிக் குழறி ஏதோ சொல்லி அழுது ஆனந்தித்தாள்.

ஸ்ரீசரணர் மீண்டும் அவளை நெருங்கி வந்து , “நன்னாப் பாத்துட்டயா பாட்டி! நான் போகலாமா?” என்றார்.

“பாத்துண்டேம்பா, பாத்துண்டேன். இந்த அனாமதேயத்துக்கும் ,கருணாமூர்த்தி , ஒன் காட்சி குடுத்துட்டே. ஒன்னைப் பாக்கணும் பாக்கணும்னுதான் உசிரை வெச்சிண்டிருந்தேன். பார்த்துட்டேன். என்னை எடுத்துக்கோ அப்பா, என்னை எடுத்துக்கோ!” என வேண்டினாள் அந்த பரம பக்தை.

“ பாட்டீ! அதுக்கான ஸமயம் வரச்சே எடுத்துக்கலாம். இப்போ ஒன்னை, நீ இருக்கிற எடத்துலே கொண்டு விடச் சொல்றேன். போயி ஸ்வாமி ஸ்மரணையாகவே இருந்திண்டிரு. மறுபடி என்னைப் பார்கணும்னு ஓடி வராதே! நான் ஒன்னை விட்டு எங்கேயும் போகாம எப்போவும் ஒன் கூடவே தான் இருந்துண்டிருப்பேன்” என்று வாக்குதத்தம் தந்தார், க்ருபா வர்ஷர்.

தமது அடக்க குணத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும்போதும் ,அடக்கமாகவே வார்த்தைகளை உபயோகிக்கும் ஸ்ரீசரணரிடம் இப்பேர்பட்டதொரு வாக்கு பெற்ற பாட்டியம்மையின் பாக்யத்திற்கு ஈடேது!

 

Source: Shri Varagooran Narayanan

Tuesday, March 17, 2015

இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே!

பெரியவாளிடம் ஒரு பக்தர் வந்தார். அவருடைய முகம், எல்லோரையும் ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்தது. காரணம்? ஏதோ ஒரு வித skin disease அவரைத் தாக்கியதால், முகம் மட்டும் பயங்கர கருப்பாக ஆகியிருந்தது. பாவம். முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?
“பெரியவாதான் எனக்கு ஒரு மருந்து சொல்லணும். வெளில போகவே ரொம்ப கஷ்டமா இருக்கு. போகாம இருக்கவும் முடியாது. எல்லா வைத்யமும் பண்ணிட்டேன்….”
மஹா வைத்யநாதம் தீர்க்காத வியாதியா!
“ஒங்காத்துப் பக்கத்ல ஆஞ்சநேயர் கோவிலோ, சன்னதியோ இருக்கோ?.”
“இருக்கு பெரியவா…பெருமாள் கோவில்ல ஆஞ்சநேயர் சன்னதி இருக்கு”
“ரொம்ப நல்லதாப் போச்சு. நீ தெனோமும் அந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தி, அதை வழிச்சு எடுத்துண்டு போயி, ஒன்னோட மூஞ்சி முழுக்க தடவிண்டு கொஞ்ச நேரம் ஊறணும். அப்றம் அதை சோப்பு கீப்பு போட்டு அலம்பாம, ஒரு துணியால நன்னா தொடச்சுக்கோ!…பண்றியா?”
“பெரியவா உத்தரவு. கட்டாயம் பண்றேன் ”
கொஞ்ச நாள் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணையை முகத்தில் தடவிக் கொண்டு வந்தார். கொஞ்சங்கொஞ்சமாக வெண்ணையை துடைத்து எடுக்கும்போது, கூடவே அட்டக் கருப்பும் சேர்ந்து வர ஆரம்பித்து, முகம் பளிச்சென்று ஆகிவிட்டது!
தர்சனத்துக்கு மிகவும் சந்தோஷமாக வந்தார்.
“என்ன? த்ருப்தியா? சொஸ்தமாச்சா? எப்டி ஆஞ்சநேய வைத்யம்?..” என்று சிரித்தார்.
“ஆஞ்சநேய வைத்யம் இல்லே; ஆச்சார்யாள் வைத்யம்” என்று நன்றியும் சந்தோஷமும் கலந்து கூறினார் பக்தர்.
இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே!

Source: Shri Mannargudi Sitaraman Srinivasan

Sunday, March 15, 2015

குரு உபதேசம் 42 இளைஞன்:

"இளமையிற் கல்" என்று சொல்லி இருக்கிறது. அதுவே பிரம்மசரிய ஆசிரமம்.

ஒருவனுக்கு விவாகம் ஆவதற்கு முந்தி வினாத் தெரிந்த பிறகு இருக்கக் கூடிய காலம் - அதற்குள் படிக்க வேண்டும்.

தேகபலம், அஹிம்ஸை, பயமற்ற நிலை இவற்றோடு சொந்த கஷ்டங்களையும் பாராட்டாமல் பிறரைக்காகும் மனப்பான்மையும் (க்ஷத்ர தர்மம்) சேர்ந்தால், அது பெரிய சீலமாகும்.

இப்போது நம் நாட்டு யுவர்கள் இந்த க்ஷத்ர தர்மத்தை மேற்கொள்ள நிரம்ப அவசியமிருக்கின்றது.

மெஜாரிட்டி, மைனாரிட்டி என்ற பயம் இல்லாமல், தர்மத்துக்கு ஆபத்து வந்தால், உயிரைத் திரணமாக மதித்து போராடுகிற நெறி இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இதுவே சேவையில் ஈடுபட யுவர்களின் தர்மம்.

பிள்ளைகள், அப்பா அம்மாவிடம் வாதம் பண்ணி, "வரதக்ஷிணையும், சீரும் கேட்காவிட்டால் தான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்று ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும்.
இந்த வரதக்ஷிணை ஒழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம் பண்ண வேண்டும்.

நெடுங்காலமாகப் பயிராகவும், எதிர்காலத்துக்கு உத்தரவாதமாயும், தார்மீகப் பாதுகாப்பாகவும் இருக்கிற விவாகம் என்ற விஷயத்தில் பெரியவர்கள் பார்த்துப் பெண்ணை நிச்சயம் செய்கிறபடிதான் பிள்ளைகள் செய்யவேண்டும்.

ஆனால் அந்தப் பயிரையே பூச்சி அரிக்கிற மாதிரி வந்திருக்கிற வரதக்ஷ்ணைக் கொடுமைக்கு உடந்தையாக இருந்து விடக் கூடாது.

குரு உபதேசம் 42 இளைஞன்:<br /><br />"இளமையிற் கல்" என்று சொல்லி இருக்கிறது. அதுவே பிரம்மசரிய ஆசிரமம்.<br /><br />ஒருவனுக்கு விவாகம் ஆவதற்கு முந்தி வினாத் தெரிந்த பிறகு இருக்கக் கூடிய காலம் - அதற்குள் படிக்க வேண்டும்.<br /><br />தேகபலம், அஹிம்ஸை, பயமற்ற நிலை இவற்றோடு சொந்த கஷ்டங்களையும் பாராட்டாமல் பிறரைக்காகும்  மனப்பான்மையும் (க்ஷத்ர தர்மம்) சேர்ந்தால், அது பெரிய சீலமாகும்.<br /><br />இப்போது நம் நாட்டு யுவர்கள் இந்த க்ஷத்ர தர்மத்தை மேற்கொள்ள நிரம்ப அவசியமிருக்கின்றது.<br /><br />மெஜாரிட்டி, மைனாரிட்டி என்ற பயம் இல்லாமல், தர்மத்துக்கு ஆபத்து வந்தால், உயிரைத் திரணமாக மதித்து போராடுகிற நெறி இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இதுவே சேவையில் ஈடுபட யுவர்களின் தர்மம்.<br /><br />பிள்ளைகள், அப்பா அம்மாவிடம் வாதம் பண்ணி, "வரதக்ஷிணையும், சீரும் கேட்காவிட்டால் தான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்று ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும்.<br />இந்த வரதக்ஷிணை ஒழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம் பண்ண வேண்டும்.<br /><br />நெடுங்காலமாகப் பயிராகவும், எதிர்காலத்துக்கு உத்தரவாதமாயும், தார்மீகப் பாதுகாப்பாகவும் இருக்கிற விவாகம் என்ற விஷயத்தில் பெரியவர்கள் பார்த்துப் பெண்ணை நிச்சயம் செய்கிறபடிதான் பிள்ளைகள் செய்யவேண்டும்.<br /><br />ஆனால் அந்தப் பயிரையே பூச்சி அரிக்கிற மாதிரி வந்திருக்கிற வரதக்ஷ்ணைக் கொடுமைக்கு உடந்தையாக இருந்து விடக் கூடாது.

Friday, March 13, 2015

சரணாகதி நன்றி: K.N.Ramesh

பாரத்வாஜ சம்ஹிதை பல தர்மங்களைக் காட்டுகின்ற ஒரு உயர்ந்த சம்ஹிதை. அதிலே பாரத்வாஜர் சொல்கிறார்:

"பிரபத்தியைக் காட்டிலும் உயர்ந்த வித்யை இல்லை
விஷ்ணுவைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை".

வித்யைகள் பல உண்டு. அவற்றிலே 32 முக்கியமான வித்யைகள் ஆசார்யர்களால் எடுத்துக் காட்டப் படுகின்றன.
இவற்றிற்கு பிரம்ம வித்யைகள் என்று பெயர்.

" அது என்ன பெரிய பிரம்ம வித்யையா?" என்று உலக வழக்கிலே கேட்பது உண்டு.

ஏனென்றால் பிரம்ம வித்யை என்பது அவ்வளவு கடினமானது. அந்தக் காலத்திலே மகரிஷிகள் இந்த பிரம்ம வித்யைகளை சிரமப் பட்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்த அவசர உலகத்திலே நம்மால் அரை மணியில் பண்ணி முடிக்கிற சந்தியா வந்தனத்தையே பண்ண முடியவில்லை. ஆகவே பிரம்ம வித்யைகளைப் பார்த்து நாம் இரு கை கூப்பி வணங்க வேண்டும். நம்மாலே நினைத்துப் பார்க்கக் கூட முடியாத வித்யைகள் அவை.

பஞ்சாக்னி வித்யை என்று ஒரு வித்யை. நல்ல வெயில் காலத்திலே ஐந்து அக்னிகளுக்கு நடுவே தவம்!.

நமக்கோ காற்று கொஞ்சம் கம்மியாய் இருந்தாலே முன்னாலே ஒரு மின்விசிறி பின்னாலே ஒரு மின்விசிறி தேவைப் படுகிறது.
குரலைப் பலப்படுத்திக் காட்ட இரண்டு ஒலிபெருக்கிகள். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு ப்ரவசனம் பண்ணுவதில் ஒரு கஷ்டமும் இல்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ப்ரவசனம் பண்ணலாம்.

ஆனால் பிரம்ம வித்யையில் போய் இறங்கினோமானால், சித்திரை வெயிலில் கார்பஹத்யம் , ஆஹவநீயம், தக்ஷினாக்னி என்று மூன்று ஹோம குண்டங்களில் தீ ஜொலிக்கும். இதற்கு இடையிலே ஒரு காலை மடித்துக் கொண்டு இரு கைகளையும் உயரத் தூக்கித் தகிக்கின்ற சூரிய வெப்பத்திலே நின்று கொண்டு தியானம் பண்ண வேண்டும்.

அதே மாதிரி மார்கழி மாதக் குளிரில் கழுத்தளவு ஜலத்தில் நின்று கொண்டு உபாசனை பண்ண வேண்டும். அப்படி ஒரு கடினமான நியமங்கள்.

ஆகவே தான் பிரம்ம வித்யைகளை நோக்கி நாம் நமஸ்காரம் பண்ண வேண்டும்.

கூர்ம புராணத்திலே ஒரு கதை. அனுஷ்டானங்கள் எவ்வளவு சிரமமானவை என்பதை எடுத்துக் காட்டும் கதை.

ஒருத்தர் பஞ்சாக்னி ஹோமம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நாரதர் அவரிடம் போய் " ஸ்வாமி! எதற்கு இவ்வளவு சிரமப்பட்டு இதைப் பண்ணுகிறீர்கள்?" என்றார். அவர் சொன்னார் " வேறு எதற்கு ஸ்வாமி? எல்லாம் மோக்ஷார்தத்திற்குத்தான்" என்றார். நாரதர் கேட்டாராம் " நான் ஸ்ரீவைகுந்ததிற்குத்தான் போய்க் கொண்டு இருக்கிறேன். நாராயணனிடம் உமக்கு எப்போது மோக்ஷம் என்று கேட்டு வரட்டுமா?" என்றாராம். " அவசியம் கேட்டு வாருமே" என்றாராம் அந்த ஸ்வாமி.

அங்கே இருந்து கிளம்பி போகிற வழியில் ஊருக்குள்ளே ஒரு பஜனை கோஷ்டியைப் பார்த்தார். நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள். நடுவிலே ஒருத்தர் கால்களில் சதங்கை கட்டிக் கொண்டு ஆடிப் பாடிக் கொண்டு வருகிறார்.அவரைப் பார்த்து நாரதர் கேட்கிறார் " ஸ்வாமி! எதற்காக இப்படியெல்லாம் பண்ணுகிறீர்?. அதற்கு அவரும் " ஸ்வாமி! மோக்ஷார்த்தத்திற்குத்தான்: என்றார். நாரதரும் " நான் வைகுந்தம் தான் போய்க் கொண்டு இருக்கிறேன். உமக்கு எப்போது மோக்ஷம் என்று நாராயணனைக் கேட்டுக் கொண்டு வரட்டுமா?"என்றார். அவரும் " அவசியம் கேட்டுக் கொண்டு வாரும் " என்று சொல்லி அனுப்பினார்.

சில காலம் கழிந்து நாரதர் திரும்பி வந்தார்.

முதலில் பஜனை பாடிக் கொண்டிருந்தவரைத் தான் பார்த்தார். அந்த ஸ்வாமி நாரதரிடம் கேட்டதையே மறந்து போயிருந்தார். அவரிடம் போய் நாரதர் சொன்னார் " ஸ்வாமி! உமக்கு இன்னமும் எழுபது ஜன்மா உள்ளது, அதன் பிறகே மோக்ஷம் என்றார்" நாரதர். அவர் ஒன்னும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்த அவர் " எனக்கு ஒரு விசனமும் இல்லை. எழுபதென்ன எழுநூறு ஜன்மம் ஆனாலும் பரவாயில்லை. நான் நாம சங்கீர்த்தனம் பண்ணியே எல்லா ஜன்மாக்களையும் கடந்து விடுவேன். எனக்கொன்றும் கஷ்டமேயில்லை" என்று அடித்துச் சொல்லி விட்டாராம்.

"ஸ்வாமி! எனக்கென்ன குறை, பஜனை பண்ணப் போகிற க்ருஹத்தில் எல்லாம் நல்ல சுண்டக் காய்ச்சின பால் கொடுக்கிறார்கள். பழங்கள் விதம் விதமாகக் கொடுக்கிறார்கள். நான் பக்த குழாங்களுடன் ஆடிப் பாடிக் களித்து இருக்கிறேன். நரகமோ சுவர்கமோ புவியோ எங்கு இருப்பினும் நாம சங்கீர்த்தனம் இருந்தால் போதும் ஸ்வாமி எனக்கு. எத்தனை ஜன்மாவானாலும் ஆனந்தமாகக் கடந்து விடுவேன்" என்றாராம் அவர்.

நாரதர் பஞ்சாக்னியிலே தபஸ் பண்ணிக் கொண்டிருந்த ஸ்வாமியிடம் போனார். அவரோ சாதகப் பட்சி மாதிரி நாரதர் எப்போது வருவார் என்று காத்துக் கொண்டு இருக்கிறார். அவரிடம் போய் நாரதர் சொன்னாராம் " ஸ்வாமி! உமக்கு இன்னமும் ஏழு ஜன்மா உள்ளது". அவர் " ஹா! இன்னமும் ஏழு ஜன்மாவா!" என்று மயங்கி விழுந்து விட்டாராம்.

ஏனெனில் அவர் பண்ணுகிற வித்யை அவ்வளவு கடினமான வித்யை. ஆகவே சீக்கிரம் மோக்ஷம் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்படிப் பட்டவரிடம் இன்னமும் ஏழு ஜன்மா போறுக்க வேண்டும் என்றதும் அவர் நடு நடுங்கிப் போய் மயங்கி விழுந்து விட்டார்.

ஆகவே தான் அகிஞ்சனர்களாக, அனந்யகதிகளாக இந்த யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு பாரத்வாஜ மகரிஷி சுலபமான வித்யையைச் சொல்லிக் கொடுக்கிறார். அது என்ன என்றால்--- அதுவே பிரபத்தி --பர சமர்ப்பணம், ஆத்ம சமர்ப்பணம், பரண்யாசம். அந்த எம்பெருமானிடத்திலே சரணாகதி அடைவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லாதவர்கள் நாம். உடனடியாகப் பண்ணி விட வேண்டும். அதைத் தான் பகவான் நம்மிடம் எதிர் பார்க்கிறான்.

தைத்ரிய உபநிஷத்திலே " அஹம் அன்னம் " அஹம் அன்னம் " என்று வருகிறது. பகவானுக்கு நமது ஆத்மாவை அன்னமாகப் படைக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

புளியோதரை, வெண்பொங்கல், தத்யோனம் எல்லாம் பகவானுக்கு நிவேதனம் பண்ணுகிறோம். இவைகளெல்லாம் பகவானிடம் இல்லாத வஸ்துக்களா? அவற்றை நாம் கொடுத்துத் தான் அவன் ஏற்க வேண்டுமா என்ன. இந்த நிவேதனம் என்கிற காரியம் நமக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே இதைப் பண்ணுகிறோம். இதை விடப் பெரிய நிவேதனம் ஒன்றை நாம் பண்ண வேண்டும் -- அது தான் ஆத்ம நிவேதனம். அதை பழக்கிக் கொள்ளவே இந்த நிவேதனத்தை பகவானுக்கு நாம் பண்ண வேண்டும் என்று நம்முடைய ஆசார்யர்கள் இவற்றை ஏற்படுத்தினார்கள்.

இந்த ஆத்ம நிவேதனத்திற்கு ஐந்து அங்கங்கள்.

ஆனுகூல்ய சங்கல்பம்

ப்ராதி கூல்யஸ்ய வர்ஜனம்

மகா விஸ்வாசம்

நீயே எனக்கு ரக்ஷகன். நீ என்னை ரக்ஷிக்காவிட்டால் வேறு யார் என்னை ரக்ஷிப்பர்கள் என்று மனமுருகிப் பிரார்த்திப்பது.

கார்ப்பண்யம்

Wednesday, March 11, 2015

குரு உபதேசம் 40 குடும்பம்:

எத்தனை டொமஸ்டிக் ட்யூட்டி இருந்தாலும், அதைப் பண்ணிவிட்டு, அதைப் பண்ணின அப்புறம் தான் ஸோஷல் ட்யூட்டியும் செய்யவேண்டும்.

தன் காரியத்தைப் பிறர் கையில் விட்டு விட்டும், அகத்து வேலையைக் கவனிக்காமலும் ஊர்க்காரியம் என்று போவதில் பிரயோஜனமில்லை.

ஒரு ஸ்தீரியானவள் ஒழுங்காக, பொறுப்பாக வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால் (சமைத்துப் போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்வதென்றால்) அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும்.

பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி, உலகத் தொண்டுதான். பரோபகாரம் தான்.

லோகத்துக்கு நல்லது பண்ணனும் என்றே ஆர்வமிருந்தாலும் நமக்கும் நம் குடும்பத்துக்கும் செய்தேயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதை உணர்ந்து இந்த ட்யூட்டிக்கு ஹானி இல்லாமல் தான் லோக ஸேவை செய்யவேண்டும்.
நம் வேலையை இன்னொருத்தனிடம் விட்டு விட்டு "ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்" என்று போனால் அது பரிகாஸம் தான். FRAUD (மோசடி) தான்.

தாயார் தகப்பனார், ஸகோதரர், பத்னி, புத்ரர் இருந்தால் அவர்களுக்குச் செய்யவேண்டிய ட்யூட்டிகளைச் செய்யாமல் லோகத்துக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது ஹிபாக்ரிஸி (போலி வேஷம்) தான்.

Source: Shri.Halasya Sundaram Iyer

Monday, March 9, 2015

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை.....
பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி" என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க. "அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா.. பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம் என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.. பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறதுஎன் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி.அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும். இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?
"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் பண்ணணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார். மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள் அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை. "நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்குஅடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஓடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன். நண்பர் பக்கத்துல இருக்கார். அவா கிரஹத்துல தங்கிட்டு நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன். காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள். சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவாவில். ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர், சதாசிவத்தின் தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார். பின் தொடர்ந்தனர் தம்பதிகள் ."வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா.. அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..பஸ்ஸும் இல்லை..." "அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக."மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்த பரப்பிரம்மம். சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது. "பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.
நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.
"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்" சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார். சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. "அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார், "பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்..... பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம் கூடவே அவரது மனைவியும்..

 

Source: Shri. Mannargudi Sitaraman Srinivasan

Saturday, March 7, 2015

பெரியவாளின் விளக்கத்தோடு ஒரு கவிராயர் பாடல். கவிராயரின் ஸ்ரீரங்கநாதப் பாடல்

அதுதான் நான் சொன்ன நிந்தா ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.

முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.

எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.

(இப்படிச் சொன்னாலும் நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்ட ஸ்ரீசரணர் இப்பாடலையும் பின்னர் வர இருக்கும் இன்னொரு பாடலையும் வசனமாகச் சொல்லிப் போகும்போது ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய்விட்டுமே கூடவோ அழகாகப் பாடவுந்தான் செய்தார்.)

அரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது என்று முன்னே பார்த்தோமில்லியா? அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.

‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’

என்று முதல் கேள்வி.

‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் –

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’

அதுதான் பல்லவி.

அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:

ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த

இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)

‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகுதேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.

கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணானபோது தானே மாலையாகி திருமாலை இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.

உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.

காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.

அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!

வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?

கோசிகன் சொல் குறித்ததற்கோ?

கோசிகன் என்பது குசிக வம்சத்தில் பிறந்ததால் விச்வாமித்ரருக்கு ஏற்பட்ட பெயர். ராமர் அவதார காரியமாக முதல் முதலில் பண்ணினது விச்வாமித்ரர் சொல்படி தாடகை மேலே பாணம் போட்டதுதான். ‘அப்படிப் பண்ணும்படி பெரிய மஹர்ஷி சொல்லி விட்டார். ஆனாலும் ஸ்த்ரீ ஹத்தி கூடவே கூடாது என்று சாஸ்த்ரமாச்சே!’ என்று ராமர் தயங்கத்தான் தயங்கினார். தர்ம விக்ரஹம் என்றே பெயர் வாங்கப் போகிறவரில்லையா, அதனால்! அந்தக் கோசிகரோ, “லோகத்துக்குப் பெரிய உத்பாதத்தை உண்டாக்குபவர் விஷயத்தில் ஸ்த்ரீ-புருஷ பேதமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. போடு இவள் மேல் பாணம்!” என்றார். விநய விக்ரஹமுமான ஸ்வாமி மறுக்க முடியாமல் அப்படிப் பண்ணி விட்டார்.

அப்போது பண்ணினாரே தவிர அப்புறம் மனசு ஸமாதானமாகவில்லை. ‘தர்மத்தில் ‘இப்படியா, அப்படியா?’ – சொல்லமுடியாத ஒரு இரண்டும் கெட்டான் விஷயத்தில், தர்மஸங்கடம் என்பதில், எதுவோ ஒன்றைப் பண்ணிவிட்டோம். அதுதான் ஸரி என்று அடித்துச் சொல்ல முடியாது போலிருக்கே!’ என்று ரொம்பவும் வியாகுலப்பட்டார்.

தீராத வியாகுலம் என்றால் அதைத் தீர்க்கமுடியாவிட்டாலும் ஏதாவது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிப் போய் மறக்கவாவது செய்வோம் என்று தோன்றும் – இல்லியா?

“அப்படி ஏதோ சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளி கொண்டு விட்டாயோ?” என்று கேட்கிறார். அதுதான் ‘கோசிகன் சொல் குறித்ததற்கோ?’

அந்தச் சொல்லை இவர் ‘குறித்தது’, அதாவது consider பண்ணியது, பண்ணி வியாகுலப்பட்டது பின்னாடி. அப்போது உடனே பாணம்தான் போட்டார். அது குறி தப்பாமல் ராக்ஷஸியின் குலையிலே தைத்து அவள் ப்ராணனை விட்டு விழுந்தாள். “அந்த மாதிரி வேகமாக பாண ப்ரயோகம் பண்ணின ஆயாஸத்தில் அசந்து (அயர்ந்து) போய்த்தான் படுத்துக் கொண்டாயோ?” என்று அடுத்த கேள்வி:

அரக்கி குலையில் அம்பு தெறித்தற்கோ?

வில் நாணைத் தட்டிப் பார்த்து அதன் பிகு தெரிந்து கொண்டு பாணம் போடுவதுதான் ‘தெறிப்பது’.

ராமர் அநாயஸமாக, மலர்ந்த புஷ்பமாக இருந்து கொண்டேதான் மஹாஸ்திரங்களையும் போட்டது. பக்தியின் ஸ்வதந்திரத்திலும், கவிக்கு உள்ள ஸ்வதந்திரத்திலும் அவரை வேறே மாதிரியாகச் சொல்லிக் கவிராயர் சீண்டுகிறார்! அதையும் அவர் ரஸிக்கத்தான் ரஸிப்பார் என்று தெரிந்தவராகையால்!

பள்ளி கொண்டதற்கு இது காரணமில்லையென்றால்,

ஈசன் வில்லை முறித்ததற்கோ?

என்று இன்னொரு ‘பாஸிபிள்’ காரணத்தை அடுத்த கேள்வியாகக் கேட்கிறார். ஸீதையை விவாஹம் செய்து கொள்ளப் பிரியப்படுபவன் தம்மிடமிருந்த ருத்ர தநுஸை நாண் பூட்டிக் காட்ட வேண்டும் என்று ஜனகர் நிபந்தனை போட்டிருந்தார். ராமருக்கு ஒன்றும் கல்யாண ஆசையில்லை; என்றாலும் விச்வாமித்ரர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தயத்திற்குப் போனார். போனவர் ஒரு வேகம் பிறந்து, வெறுமனே நாண் பூட்டிக் காட்டாமல் அந்த தநுஸையே உடைத்து விட்டார்! ‘அத்தனை வேகம் காட்டினது தான் பிற்பாடு உன்னை tired ஆக்கித் தூக்கம் போட வைத்து விட்டதா?’ என்று கேட்கிறார்.

அதுவும் இல்லையென்றால்,

பரசுராமன் உரம் பறித்ததற்கோ?

அப்புறம் பரசுராமர் – க்ஷத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அறுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டவர் – வந்தார். ராமரிடம், “நீ உடைத்த ருத்ர தநுஸ் ஏற்கெனவே மூளியானதுதான். அந்த ஓட்டை வில்லை முறித்தது ஒன்றும் பெரிசில்லை. இதோ என்னிடம் மூளி, கீளி ஆகாத விஷ்ணு தநுஸ் இருக்கிறது. இதை நாண் பூட்ட முடியுமா, பார்! பூட்டாவிட்டால் உன்னை விடமாட்டேன்!” என்று ‘சாலஞ்ஜ்’ பண்ணினார். ராமருக்கு அதுவும் ஒரு பெரிய கார்யமாக இல்லை. பரசுராமர் கொடுத்த விஷ்ணு தநுஸையும் சிரமப்படாமலே நாண் பூட்டினார். அதோடு, பரசுராமரால் நடக்கிற க்ஷத்ரிய வம்ச நாசத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்து அவருடைய சக்தி முழுதையும் கவர்வதையே குறியாகக் கொண்டு பாணப் பிரயோகமும் பண்ணி விட்டார்! அந்த முன்னவதாரக்காரர் தம்முடைய பின்னவதாரக்காரரிடம் தம்முடைய சக்தி முழுதையும் இழந்துவிட்டுத் தம்முடைய ஸம்ஹார கார்யத்தை ஸமாப்தி பண்ணினார்.

அவருடைய சக்தியை ராமர் கவர்ந்ததுதான் ‘பரசுராமர் உரம் பறித்தது’ என்று பாட்டில் வருவது.

‘சக்தி போனால் ஓய்ந்து போய்ப் படுக்கலாம். ராமருக்கோ சக்தி கூடியல்லவா இருக்கிறது? பின்னே ஏன் படுத்துக்கணும்?’ என்றால்:

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அதை ஜீர்ணிப்பதிலேயே சோர்வு ஏற்பட்டுத் தூக்கம் தூக்கமாகத் தானே வருகிறது? ராமருக்கு ஏற்கனவே மஹாசக்தி. இப்போது இன்னொரு அவதாரத்தின் பெரிய சக்தியையும் சாப்பிட்டிருக்கிறார். ‘இப்படிச் சக்திச் சாப்பாட்டில் அமிதமாகப் போனதில்தான், சோர்வு உண்டாகித் தூங்கிவிடலாம் என்று பள்ளி கொண்டீரா?’ என்றே கவிராயர் கேட்கிறார்.

இன்னும் ஒரு காரணம் – கேள்வி:

மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்

வழிநடந்த இளைப்போ?

’குற்றம் குறையே இல்லாத சுத்தையான ஸீதையுடன் காட்டுக்கு நடந்து போனாயே! அதிலே ஏற்பட்ட களைப்பினால் இளைப்பாறுவதற்கே பள்ளிகொண்டாயா?’

‘இளைப்பு’ என்றால் ஒல்லியாய்ப் போவது மட்டுமில்லை. சோர்ந்து, ஓய்ந்து போவதும் இளைப்புத் தான். அதைப் போக்கிக் கொள்வதையே ‘இளைப்பாறுவது’ என்கிறோம்.

இதற்கு மேலே, வனவாஸ காலத்திலே நடந்தவை ஸம்பந்தமாகக் கேட்கிறார்.

தூசிலாத குஹன் ஓடத்திலே கங்கைத்

துறை கடந்த இளைப்போ?

‘வேடனாயிருந்தாலும் உடம்பிலேதான் தூசி, மனஸு தூசி படாத பரம நிர்மலம் என்று இருந்த குஹனின் ஓடத்தில் கங்கையைத் தாண்டிப் போனாயே! அப்போது ஜிலுஜிலு என்றுதான் இருந்ததென்றாலும் ரொம்ப நாழிப் பிரயாணம், ஒரே மாதிரியான துடுப்போசையை மட்டும் கேட்பது ஆகியவற்றில் ஏற்பட்ட ’bore’-ல்தான், monotony-ல்தான் தூங்கினாயா?

மீசரம் ஆம் சித்ரகூட சிகரத்தின்

மிசை கிடந்த இளைப்போ?

’மீசரம்’ என்றால் உயர்ந்தது. ‘ரொம்ப உயரமான சித்ரகூட சிகரத்துக்கு ஏறிப் போய், அந்த சிரமத்தில் அங்கே அப்படியே கிடந்தாயே, அப்போது பிடித்த தூக்கம்தான் இன்னும் விடவில்லையா?’

காசினி மேல் மாரீசன் ஓடிய

கதி தொடர்ந்த இளைப்போ?

’காசினி’ என்றால் பூமிதான். இங்கே கரடும் முரடுமான காட்டு நிலம் என்று அர்த்தம் பண்ணிக்கணும். அப்படிப்பட்ட ‘காட்டு வழியிலே மாரீச மான், மானுக்கே உரிய வேகத்தோடு ஓடினபோது அதற்கு ஈடுகொடுத்துத் தொடர்ந்து போனாயே! அந்தச் சோர்வுதான் படுக்கையில் தள்ளிற்றா?’

அதற்கப்புறம் சின்னச் சின்னதாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்! பாட்டு வேக வேகமாக ஓடுகிறது!

‘மாரீச மானைத் தொடர்ந்து போனது, முதலில் ஓட்டமும் நடையுமாக, அப்புறம் அந்த ‘நடை’ கூடக் கூடாதென்று ஒரே ஓட்டமாக ஓடினாய்! அதிலே ஏற்பட்ட களைப்பில்தான் தூக்கமா?’ என்று இத்தனை ஸமாசாரத்தை,

ஓடிக் களைத்தோ?

என்று சின்ன வாசகமாக்கிக் கேட்கிறார்.

தேவியைத் தேடி இளைத்தோ?

’அப்படி இங்கே நீ மாரீசன் பின்னே ஓட, அங்கே உன் பர்ணசாலைக்கு ராவணன் வந்து ஸீதா தேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டானே! நீ அவளைத் தேடு தேடு என்று தேடி அலைந்தாயே! அந்த அசர்வா (அயர்வா)?’

மரங்கள் ஏழும் தொளைத்தோ?

’அதற்கப்புறம் ஸுக்ரீவனுடன் ஸக்யம் பண்ணிக் கொண்டு (நட்புப் பூண்டு) அவனுக்கு சத்ருவான அண்ணன் வாலியை வதம் செய்வதாக வாக்குக் கொடுத்தாய். அந்த மஹா பலிஷ்டனை ஜயிப்பதற்கான பலம் உனக்கு இருக்குமா என்று ஸுக்ரீவன் ஸந்தேஹப் பட்ட போது அதை (நி)ரூபித்துக் காட்டுவதற்காக, பர்மா teak (தேக்குமரம்) மாதிரி பெரிய சுற்றளவுடன் வரிசையாக நின்ற ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு போகும்படி பாணத்தைப் போட்டுக் காட்டினாய்! அத்தனை விசையோடு நாணை வலித்தது, உனக்கே ரொம்பவும் வலித்துத்தான் படுக்கை போட்டு விட்டாயா?’

கடலைக் கட்டி வளைத்தோ?

”லங்கைக்குப் போவதற்காக ஸமுத்ரத்துக்கே அணை கட்டுகிற பெரிய கார்யம் பண்ணினாயே! யஜமானனாக உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடாமல் உன்னுடைய உத்தம் குணத்தினால் நீயும் வானரப் படையோடு சேர்ந்து கல்லு, மண்ணு தூக்கி அந்தக் கார்யத்தில் ஈடுபட்டாயே! அதில் ஏற்பட்ட சோர்வுதான் காரணமா?”

அப்புறம் பெரிய வாசகமாகவே இரண்டு கேள்வி கேட்டு – ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாச்சே! – அதோடு முடித்து விடுகிறார்.

இலங்கை எனும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

லங்கைக்குப் போனபின் ஊருக்கு வெளியிலே வானர ஸேனை ராக்ஷஸ ஸேனையோடு போர்க்களத்தில் யுத்தம் செய்ததோடு நிற்காமல், ஊரெல்லைக்குள்ளே போய் அதன் கோட்டை கொத்தளம் முதலானவற்றை இடித்துத் தூள் பண்ணின. அப்போது பதிநாலு வருஷ வனவாஸத்திற்கு ஒப்பி வாக்குக் கொடுத்திருந்த ஸ்வாமி தர்ம விக்ரஹமானபடியால் தாம் நகரப் பிரவேசம் பண்ணப்படாது என்று ரணகளத்தில் பாசறையிலேயே இருந்தார். அப்போது மட்டுமில்லை. இதற்கு முந்தி அவரே வாலிவதம் பண்ணி, ஸுக்ரீவன் கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு ராஜாவாகும்படிப் பண்ணியிருந்த போதிலும், தாம் அந்த ஊருக்குள் போய் அவனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்காமல் காட்டிலேயே தான் இருந்தார்; லக்ஷ்மணரைத்தான் பட்டாபிஷேகம் பண்ண அனுப்பி வைத்தார். பிற்பாடு அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணியதாலேயே விபீஷணன் லங்கா ஸாம்ராஜ்யாதிபதியாகப் பட்டாபிஷேகம் பெற்றுக் கொண்ட போதும் அதையேதான் செய்தார். அப்படித் தம்மைத் தாமே, தர்மத்தை அலசிப் பார்த்து அவர் கட்டுப் படுத்திக் கொண்ட உசத்தியால்தான் இன்றைக்கும் அவரை லோகம் தர்மமூர்த்தி என்று கொண்டாடுகிறது….

லங்கையை வானரங்கள் இடித்தபோது அவருக்கு இரண்டு தினுஸில் வருத்தம். தாமும் அவர்களோடு உடலை வருத்தி ஸஹாயம் பண்ண முடியாமல் தர்மம் கட்டுப் படுத்துகிறதே என்பதில் அவருடைய மனசு வருத்தப் பட்டது ஒன்று. ரொம்ப அழகாகவும், பெரிசாகவும் மயன் நிர்மாணம் பண்ணிக் கொடுத்திருந்த லங்காநகரத்தையும், அந்த நகரவாஸிகள் பண்ணின தப்புக்களுக்காக யுத்தத்தின் அவசியத் தேவையை முன்னிட்டு, இடிக்கும்படி இருக்கிறதே என்ற வருத்தம் இன்னொன்று. “அதை மறக்க ‘ஸ்லீப்பிங் டோஸ்’ போட்டுக் கொண்டாயா?” என்று பழைய கேள்வியை மறுபடியும் அதே மாதிரி மறைமுகமாகப் போடுகிறார்.

அதோடு, ராமர் சரமாரியாக பாணம் போட்ட மாதிரியே தாமும் அவர் மேல் கேள்விக் கணை மாரி போட்டாயிற்று என்று கவிராயர் ‘ஃபீல்’ பண்ணினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி ராம குண மேன்மையைத் தெரிவிப்பதாகக் கேட்டு முடித்து விட்டார்:

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

முதலில் ராவணாதிகள் பண்ணின அக்ரமத்திற்காக அழகான லங்கா பட்டணத்தை த்வம்ஸம் செய்வானேன் என்று ராமர் வருத்தப்பட்டார். அப்புறம் அவர்களையெல்லாம் ஹதாஹதம் செய்து, வீரராகவன் என்றே எல்லாரும் புகழும்படி நின்றபோதோ அவருக்கு உள்ளூர, “இந்த அக்ரமக்காரர்களைக் கூட ஏன் வதம் பண்ணியிருக்க வேண்டும்? அவர்களிலும், ராவணன் உள்பட, மஹா பலம், வீரம், யுத்த சதுரம், அஞ்சா நெஞ்சம், விட்டே கொடுக்காத உறுதி, நல்ல வேத பாண்டித்யம், ஸங்கீதத்திலே அபாரத் தேர்ச்சி – என்றிப்படி சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள் இருந்தார்களே! அவர்களுடைய மனசு திருந்தும்படிச் செய்ய முடியாமல் வதம் அல்லவா பண்ணும்படியாயிற்று?” என்று வருத்தம் ஏற்பட்டது.

பரம சத்ருவிடம் இப்படிப்பட்ட கருணையுள்ளம் படைத்த உச்சாணியில் ராமரைக் காட்டியதே அவருடைய பட்டாபிஷேகத்தைப் பாடின மாதிரி என்று அதோடு கவிராயர் முடித்து விட்டார்.

Source: Shri.Varagooran Narayanan

Thursday, March 5, 2015

குரு உபதேசம்: 41 குழந்தை:

ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால் தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும்.

சிறு பிராயத்தில் இருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அனுஷ்டானங்களை விடாமல் பற்றி, ஒழுகி, உத்தமமாக வாழ்கிற சிஷ்டர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்கவேண்டும்.

குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்துவிட வேண்டும்.

ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்?
பணிவு, அடக்கம், விநயம் கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் இருக்கவேண்டும். அஹங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.

ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம் தான்.

பால பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்துவிட்டால் பசுமரத்தாணியாக அது பதியும்.

காயத்ரீயானது முக்கியமாக மனோ சக்தி (Mental Power) தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் அபரிமிதமாகத் தரவல்லது.
நம் குழந்தைகளுக்கு சாஸ்திர தாத்பரியங்களை முழுக்கவும், நன்றாகச் சேர்த்துப் பிடித்துப் பார்த்துச் சொல்லவேண்டும்.
குழந்தைக்கு பகவந் நாமாக்களாகப் பேர் வைக்க வேண்டும். அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவதே நம்மையும் சுத்தப்படுத்தும் ஸம்ஸ்காரமாகிறது. ஸ்வாமி பெயராக வைத்தாலும் அதைக் கன்ன பின்னா என்று சிதைத்துக் கூப்பிடுவது ரொம்பத்தப்பு.

புருஷப் பிரஜைகளை விட பெண்பிரஜைகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம், புருஷர்கள் மெய்வருந்தி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்வது தான்.
சாஸ்திரத்திலேயே சொல்லி இருப்பது-ஔபாஸனாதிகளைப் பண்ணிக் கொண்டு ஆசார சீலனாகப் புருஷன் இருந்தால் அவன் ஆரோக்கியமாகவும் நல்ல மனவிருத்தியோடும் இருப்பதோடு ஆண் சந்ததியும் உண்டாகும்.

குரு உபதேசம்: 41<br /><br />குழந்தை:<br /><br />ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால் தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும்.<br /><br />சிறு பிராயத்தில் இருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அனுஷ்டானங்களை விடாமல் பற்றி, ஒழுகி, உத்தமமாக வாழ்கிற சிஷ்டர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்கவேண்டும்.<br /><br />குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்துவிட வேண்டும்.<br /><br />ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்?<br />பணிவு, அடக்கம், விநயம் கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் இருக்கவேண்டும். அஹங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.<br /><br />ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம் தான்.<br /><br />பால பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்துவிட்டால் பசுமரத்தாணியாக அது பதியும்.<br /><br />காயத்ரீயானது முக்கியமாக மனோ சக்தி (Mental Power) தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் அபரிமிதமாகத் தரவல்லது.<br />நம் குழந்தைகளுக்கு சாஸ்திர தாத்பரியங்களை முழுக்கவும், நன்றாகச் சேர்த்துப் பிடித்துப் பார்த்துச் சொல்லவேண்டும்.<br />குழந்தைக்கு பகவந் நாமாக்களாகப் பேர் வைக்க வேண்டும். அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவதே நம்மையும் சுத்தப்படுத்தும் ஸம்ஸ்காரமாகிறது. ஸ்வாமி பெயராக வைத்தாலும் அதைக் கன்ன பின்னா என்று சிதைத்துக் கூப்பிடுவது ரொம்பத்தப்பு.<br /><br />புருஷப் பிரஜைகளை விட பெண்பிரஜைகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம், புருஷர்கள் மெய்வருந்தி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்வது தான்.<br />சாஸ்திரத்திலேயே சொல்லி இருப்பது-ஔபாஸனாதிகளைப் பண்ணிக் கொண்டு ஆசார சீலனாகப் புருஷன் இருந்தால் அவன் ஆரோக்கியமாகவும் நல்ல மனவிருத்தியோடும் இருப்பதோடு ஆண் சந்ததியும் உண்டாகும்.

Source: Shri.Halasya Sundaram Iyer

Tuesday, March 3, 2015

ஜீவன் முக்தி நிலை... பெரியவாளின் உரை.....

நம் ஆசார்யாள் ஜீவர்கள் கடைத்தேறும்படி அத்வைத
மதத்தை ஸ்தாபித்திருக்கிறார்கள். அந்தப் பரம்பரையில்
வந்த நாங்கள் எல்லாவிடங்களிலும் சுற்றிக்
கொண்டு வருகிறோம் .இப்படிச் சுற்றுவது அவர்களையும்
அவர்கள் ஸ்தாபனம் செய்த மதத்தையும் நமக்கு அடிக்கடி
ஞாபகமூட்டுகிறது. நாம் எல்லாரும் இங்கு கூடியிருக்கிறோம்.
இந்த சமயத்தில் ஸ்ரீபகவத் பாதாள் ஞாபகமாகவே எல்லாருக்கும்
இருக்கிறது. எங்களை இப்படி சுற்றும்படி அவர்கள் ஏற்பாடு
பண்ணினது இது முக்கியமான ப்ரயோஜனம். மற்றொரு
ப்ரயோஜனமும் உண்டு. சேதுவிலிருந்து ஹிமாசலம் வரை
மதத்தையும், தர்ம மார்க்கத்தையும் ஸ்தாபனம் செய்த
ஆசார்யாள் எங்களுக்கும் ஒரு கட்டளை இட்டிருக்கிறார்.
ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வர பூஜை செய்து கொண்டு அங்கங்கே
சுற்றி வரும்போது மத சம்பந்தமான பல விஷயங்களை
எடுத்துச் சொல்லும்படியாக ஆஜ்ஞை இட்டிருக்கிறார்கள்.
அதற்காக அவர்கள் பெயரையும் வகிக்கச் செய்திருக்கிறார்கள்.
அதனால் சன்யாச்ரமத்திலிருந்து கொண்டு ,பகவத் பாதாளின்
ஸித்தாந்தங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதே எங்கள்
முக்கியமான வேலை.

நாம் எப்போதும் சாகாமலிருக்க வேண்டும் என்பது
எறும்பு முதல் மனிதன் வரையிலான எல்லா ஜீவன்களுடைய
ஆசை. ஆனால் எல்லா ஜீவனும் செத்துப் பிழைத்துதான்
வருகிறது. சாவை ஜயித்த ஜீவென் முக்தர்கள் நம்
மதத்தில் ஸதாசிவ ப்ரம்மேந்திராள் மாதிரி மகான்களுக்கு
லபிக்கும். நம் ஆசார்யாள் ஜீவித்திருக்கும்போதே இந்த
இறவா வரத்தை எப்படி சம்பாதிப்பது என்று உபதேசித்திருக்கிறார்கள்.

மனிதனுக்கு தேஹ சம்பந்தம் ஏற்படுவது ஜன்மம். தேஹ
சம்பந்தம் நீங்குவது மரணம்.நாம் ப்ராணனுடன்
இருக்கும்போதே ஜீவன் முக்தி நிலைக்கு பகவத்
பாதாள் சொல்லியிருக்கிறார். சாகும் நிலையில்
நம் அவயவங்கள் செத்துக் கொண்டிருக்கும். செத்துப்
போன பிறகும் இதற்கு வழி கிடையாது.

தினம் பூஜா காலத்தில் இந்த புருஷ சூக்தம் சொல்கிறோம்
तमेवम् विढ्वानम्रुत इह भवति | नान्य: पन्था विध्यतेअयनाय ||
இந்த ஆத்மஸ்வரூபத்தை நன்கு அறிந்தவன் இந்த
ஜன்மத்திலேயே மரணமில்லா நிலையை
அடைகிறான். இன்னிலை அடைவதற்கு வேறு மார்க்கம்
இல்லை என்று அர்த்தம். அம்ருதம் என்றால் மோக்ஷம்.
மோக்ஷம்மடைந்தவர்களுக்கு பிறப்பு, இறப்பு இல்லாததால்
அம்ருதம் என்று சொல்லப்பட்டது. சரீரம் என்ற வியாதி யானது
மனிதனுக்குப் புதிதாய் ஏற்பட்டதல்ல. நமக்குத் தெரியாமலும்,
கணக்கிடக் கூடாததுமான நாட்களாக இருந்து வருகிறது.
தக்க மருந்து சாப்பிட்டு இத்தகைய சரீரம் எடுக்காமலிருக்க
அனுபவஸ்தர்கள் அனுபவம்தான் நமக்கு வேண்டும்.

நாம் சாகாமலிருக்க வேண்டுமென்றால் உடம்பு என்கிற வியாதி
ஒழியவேண்டும். உடம்பு இல்லாதவன் யார்? ஈசுவரந்தான்.
அந்த ஈசுவரனே நான் என்று(ஸோஹம்) என்ற பாவனை
எப்போதும் செய்து வரவேண்டும். உட்காரும்போதும்,
எழுந்திருக்கும்போதும் சிலர் ஸோஹம் என்றே சொல்வார்கள்.
அப்படியில்லாமல் அதன் அர்த்ததை உணர்ந்து சொல்லவேண்டும்.
நம் சரீரத்தை நம்முடையது அல்ல என்று நினைப்பது கடினமான
விஷயம். யாராவது நம்மை அடித்தால் நமக்கு வலிக்காமல்
இருக்குமா? அதற்கு நாம் உலகத்தில் அனைவரும் நாம்,
எல்லா உடம்பும் நம்முடையது என்று நினைக்க ஆரம்பிக்க
வேண்டும். அதுதான் சரியான உபாயம். அப்படி நினைப்பதால்
பிறர் கஷ்டப்படும்போது அதற்குப் பரிஹாரம் செய்ய எண்ணம்
வருகிறது. எல்லார் சுக துக்கமும் நம்மதாக ஆகிறது. நாம் செய்யும்
எந்தக் காரியமும் நமக்காக இல்லை என்ற எண்ணம் தானாகவே
ஏற்படுகிறது. எல்லாவற்றையும் பகவானுக்கு அர்பணம் செய்யுமாறு
கீதையில் அர்ஜுனனுக்கு பகவான் உபதேசிக்கிறார். எப்போதும்
ஸோஹம் என்று சொல்லிக்கொண்டு, நம: பார்வதீ பதயே என புண்டரீகம்
போட்டுக்கொண்டிருக்கவேண்டும். பிழைத்திருக்கும்போதே ஜீவன் முக்தி,
இத்தேகத்தை விட்ட நிலை.

अश रीरं वाव सन्तं न प्रियाप्रिये स्प्रुशत: |(ப்ருஹதாரண்யகம்)
இந்த வசனமும் இப்படியே கூறுகிறது. சரீரம் இல்லாமல்
பழைத்திருக்கும் புருஷனை ஒரு போதும் சுக துக்கம்
அண்டுவதில்லை என்பது அர்த்தம்.பகவத் பாதாள் நமக்கு சாகமலிருக்க
உபதேசித்த மந்த்ரம் இதுவே!

இதற்குக் காரணமான ஈசுவர பாவனை செய்யவும்,
எப்போதும் நல்ல காரியங்களைச் செய்யவும் அதில்
ப்ரவ்ருத்தி ஏற்படவும் ஸ்ரீ சந்த்ரமௌலீச்வரரை ப்ரார்த்தித்து
அவர் அனுக்ரஹம் பெறுவோமாக.

ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹாதேவா ||

Saraswathi Thyagarajan's photo.

Saraswathi Thyagarajan's photo.

Source: Smt. Saraswathi Thyagarajan

Sunday, March 1, 2015

மகாபெரியவா தீர்ப்பு - ஒரு பழைய கடன் விவகாரம்.

இதைப் பற்றி ஒரு தரம் படித்தது ஞாபகம் வருகிறது. அதை இப்போது சொல்கிறேன்.

இந்த சம்பவம் சுமார் எழுபது- எண்பது வர்ஷங்களுக்கு முன் நடந்தது என்று கூட வைத்துக்கொள்ளலாம். .

பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். அப்போது மகனுக்கே 62 வயது.

கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வருஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே அந்த வயதான மகனுக்கும் தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது? இந்த கவலை அவர் மனதை அரித்தது. ஏன் எப்படி செய்தால் என்ன என்று பொட்டில் அடித்தாற்போல ஒரு எண்ணம் தோன்றியது.

மஹாபெரியவா - அவர் தானே நம்மைப் போன்ற திக்கற்றவருக்கு துணையாக நிற்கும் தெய்வம். ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.

“மடத்ல ஒரு நாள் தங்கு”

பெரியவா உத்தரவு அவரை அந்த இரவு அங்கே தங்க வைத்தது. மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.

ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்……ஆச்சர்யம்! அந்த வீட்டுப் பெரியவர் (கடன் கொடுத்தவர் ) ஏற்கனவே சில வருஷங்களுக்கு முன்னால் காலகதி அடைந்துவிட்டார்.

அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு!

“எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்……..ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்”

திட்டவட்டமாக சொல்லிவிட்டார். கடன் பட்டவர் மகன் கடன் கொடுத்தவர் மகனை அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்ட பெரியவா முகத்தில் புன்னகை.

“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ…….நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை திருப்பித் தரணும்னா……யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி? வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்……..குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்……ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா? அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். நான் ஒரு தீர்ப்பு சொல்றேன் கேக்கறேளா ரெண்டுபேரும்.

ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.

Source: Shri.Jambunathan Iyer

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top