Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, February 28, 2015

BLESSINGS FOR PUBLISHING `TAMIL SHORTHAND' BOOK

One day, the event of Shri MahaswamigaL visiting Raja Annamalaipuram was scheduled. En route, at the junction of the Nallappan street and Adam street, we were waiting for Periyaval's arrival. The mena--palanquin, came. Giving purnakumbham, we bowed to Periyaval. Calling me suddenly, Periyaval asked, "ni enge inge--How come you are here?" I pointed out to Nallppan street and said, "I am living in this street." He asked for the mena to proceed through our street. The karanam--reason, was not known. Before we could run to our house, open the doors and light the lamp, the mena had come there.

Calling me near him, he said, "You said you have written a book of shorthand in Tamil? Bring it, let us see."

Going inside my house, I brought the manuscript of the book and submitted it to him. Leafing through every page, showing no hurry at all, with a speck of smile lingering in his face, he glanced through that book until the last page. His face shining like a lotus flower, when he said, "As suitable for Tamil, you have written the book, relating the P in Pitman to (the Tamil alphabet) 'pa' and M to 'ma'", his subtle power of knowledge that took everything at a glance made thrilled us in ecstasy.

"Has this book been published?" he asked me. "No", I said. Taking the bhilva garland from his shiras--head, and placing it on the book, he gave it back to me.

The Tamil Nadu government itself published this book in 1964. Its 4th editing coming out in 1998, adding honour to Tamil and the Tamil world. Such is the power of grace of that deivam--God!

author: Ananthan (G.S.Ananthanarayanan)
compiler: T.S. Kothandarama Sarma
source: Maha Periyaval - Darisana Anubhavangal vol.2

குஞ்சிதபாதம்

நிரஞ்சனா

காஞ்சி பெரியவர் காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் உடல்நலம் இல்லாமல் இருந்தார். அப்போது ஒருநாள் மாலையில் தன்னுடைய சீடர்களை அழைத்து, “நான் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும். நடராஜரின் பூஜையில் அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும்” என்றார்.

குஞ்சிதபாதம் என்றால் என்ன?

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை ந்டராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது. சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன், மார்கண்டயனை துரத்தி பாசக்கயிற்றை வீசியபோது மார்கண்டயன், சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசகயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்கண்டயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்திதேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தாலும் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்திதேவியின் அம்சம் என்கிறது புராணம்

அதனால் ஆடல்நாயகனை தரிசிக்கும்போது கண்டிப்பாக இடதுகாலை தரிசிக்க வேண்டும். அப்படி தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனிஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்

மகாபெரியவர், குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்.. இதை கேட்ட சீடர்கள், மகாபெரியவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், எப்படி பெரியவரை சிதம்பரத்திற்கு அழைத்து செல்வது? என்று சிந்தித்தார்கள். குஞ்சிதபாதத்தை தரிசித்தால் தமக்கு உடல்நலம் சரியாகும் என்று நினைத்து மகாபெரியவர் அப்படி சொல்லவில்லை. மோட்சம் கிட்ட வேண்டும் என்றுதான் மகான்கள் விரும்புவார்கள். அவர்களின் உண்மையான எண்ணத்தை புரிந்துக் கொண்ட இறைவன் அமைதியாக இருப்பாரா? உடனே தன் பிள்ளை விரும்புவதை நிறைவேற்றுவார் அல்லவா. ஆம், அப்படிதான் நடந்தது. மறுநாள் சூரியனை விட வேகமாக செயலில் இறங்கினான் இறைவன்

. மகாபெரியவரை தரிசிக்க சிதம்பரத்தில் இருந்து குஞ்சிதபாதத்துடன் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்தார்கள் சிதம்பர நடராஜப் பெருமானுக்கு சேவை செய்யும் சில தீட்சிதர்கள். “நாங்கள் பெரியவரை தரிசிக்க வந்தோம். பெரியவருக்காக பிரசாதம் கொண்டுவந்து இருக்கிறோம்.” என்ற கூறி பெரியவரை தரிசிக்க அனுமதி கேட்டார்கள் இதை கேட்ட மகாபெரியவரின் சீடர்களுக்கு வார்த்தையே வரவில்லை. “நேற்று இரவுதானே நம் மகாபெரியவர், நடராஜப்பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்றார்.

இன்று அதிகாலையிலேயே மகாபெரியவரை தேடி குஞ்சிதபாதத்துடன் தீட்சிதர்களை நடராஜப் பெருமான் அனுப்பி இருக்கிறாரே.” என்று மெய்சிலிர்த்து போனார்கள்.

மகாபெரியவரிடம் தீட்சிதர்கள், பிரசாத தட்டில் குஞ்சிதபாதத்தை வைத்துக்கொடுத்தார்கள். அதை தம் தலையில் வைத்துக்கொண்டார் மகாபெரியவர். மகான்கள் முக்தி கிடைக்கதான் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றகிறார். நாம் சராசரி மனிதர்கள் அல்லவா. நல்ல உடல்நலத்திற்குதான் அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். உடல்நலமாக இருந்தால் எல்லா பொருள் நலமும் தேடி வரும். சகலமும் நலமாக அமையும். ஆகவே நாமும் ஒருமுறையாவது சிதம்பர நடராஜப் பெருமானுக்கு மூலிகைகளால் தயாரிக்கபடும் குஞ்சிதபாத பிரசாதத்தை தரிசிப்போம். அத்துடன் நடராஜப்பெருமானின் இடதுகாலை வணங்கி சக்திதேவியின் ஆசியை பரிபூரணமாக பெற்று நலமோடும் வளமோடும் வாழ்வோம்.

Thursday, February 26, 2015

ஜய ஜய சங்கர....

ஜய ஜய சங்கர....

இந்த நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தில் நடந்த
ஒன்றாகும். எங்கள் பூர்விகம் பூங்குளம்
என்ற திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும்
கிராமமாகும். என் தாத்தா அங்குள்ள சிவன்
கோவிலில் மிக்கஈடுபாடு கொண்டவர்
மட்டுமல்லாமல் நித்யானுஷ்டானகளையும்
பூஜையையும் வெகு சிரத்தையாகச் செய்து
வந்தவர். அவர் நீதிக்கும் நேர்மைக்கும் மிக
முக்யத்வம் கொடுத்து வந்தவர். எல்லா ப்ரச்நைக்கும்
அவரே தீர்ப்பு சொல்வார் என்பது அக்காலத்தில்
மிக ப்ரஸித்தம். பெரியவாளிடம் அசாத்ய பக்தி
கொண்டவர். ஆத்தில் ஸாலக்ராம் பூஜைகளைச்
செய்துவந்ததும் அல்லாமல் க்ருஷ்ணாஷ்டமி அன்று இரவு முழுதும் பூஜை ஒவ்வொரு கால்த்துக்கும் ஓர் நேவேத்யம் செய்து சிரத்தையுடன் செய்வார் என என் அம்மா கூறக் கேட்டிருக்கிறேன். தன் அந்திம காலத்தில்
நித்யானுஷ்டானங்களைச் செய்யமுடியாதபோதும்,
தன் பிள்ளைகளை செய்யச் சொல்லி கையில் தீர்த்தம்
வழங்கச் சொல்லி அதன் பலனைப் பெற்றவர்.

ஒருனாள் விடியற்காலை ப்ரம்ம முஹூர்த்தத்தில்
என் அப்பாவின் அத்திம்பேர் வாசல் திண்ணையில்
படுத்திருந்தார். யாரோ வாசலில் நிழல் தட்டவே
பார்த்ததில் பெரியவா மேனாவிலிருந்து இறங்கி
வருவதைப் பார்த்து உள்ளேய்ருந்த எல்லாருக்கும்
குரல் கொடுத்து ''பெரியவா வந்திருக்கா, வாசலில்
வந்து பூர்ணகும்பம் கொடுத்து அழை யுங்கோடா''
என்று கூறவும் அதன்படி அவர்கள் அழைக்க உள்ளே
நுழைந்த பெரியவா நேரே என் தாத்தா படித்திருந்த
இடம் சென்று ''ராமச்சந்த்ரா உனக்கு இனி நியம நிஷ்டை
எதுவும் தேவை இல்லை, உனக்கு மறு ஜன்மா கிடையாது,
நீ உன் இஷ்ட தெய்வ நாமாவையை ஜபித்தால் போதும்,
வேறு பூஜை எதுவும் வேண்டாம்'' என்று சொல்லி உடனே
புறப்பட்டு விட்டார் என என் மூதாதையர் கூறுவர்.
இதில் என்ன அதிசயம் என்றால் அன்று காவேரியில்
பயங்கர வெள்ளம்! அதில் அதைக் கடந்து மேனாவில்
அவர் எப்படி வந்தார், திரும்பிப் போனார் என்பது
இது வரை கேள்விக்குறி!! அவரன்றி ஓர் அணுவும் அசையாதல்லவா!!!

இதில் இன்நும் ஓர் விசேஷம் என்ன்வென்றால் எங்கள் குல தெய்வம் வடுவூர் கோதண்டராமர். ஆகையால் ராம நாமாவை ஜபிக்கும்படி என் தாத்தவைப் பணித்திருக்கிறார்.
ஹர ஹர சங்கர

Source: Smt. Saraswathi Thyagarajan

Monday, February 23, 2015

பழைய பீடாதிபதிக்கு ஏத்த வாரிசுதான் !’

1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக் அம்ருதத்தாலும், சாஸ்திரங்கள் சொன்னதை இம்மியளவு கூட பிசகாமல், சிஷ்டாச்சாரத்தோடு தானே கடைப்பிடித்து காட்டியதாலும், நூறு வர்ஷங்கள் அல்பங்களான நம்மிடையே நடமாடி, இன்றும் ஆத்மார்த்தமாக நினைப்போர்க்கு அபயம் அளிக்கும் மஹா பெரியவா………

இந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்ட அன்று மாலை, உபன்யாஸம் பண்ணச் சொல்லி மடத்தில் உள்ள பெரியவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.

கும்பகோணமே நிரம்பி வழிந்தது! பெரியவா பேச ஆரம்பிக்கும் முன் கூட்டத்திலிருந்த ஒரு வயஸானவர் இந்த பால ஸ்வாமிகளை வியப்போடு பார்த்தார்.

“66 வது ஆச்சார்யாள் ரொம்ப அழகா உபன்யாஸம் பண்ணுவார்..அவரோட வாக்வன்மை எல்லாரையும் ஆகர்ஷிக்கும். ஆனா, இவரோ…… ரொம்ப சின்னக் கொழந்தையா இருக்காரே! என்னத்தை பேசப் போறார்?” என்று மனஸில் சந்தேகம் அலைபாய கூட்டத்தில் முன்னால் வந்து உட்கார்ந்தார்.

அன்று பெரியவாளுடைய முதன்முதல் உபன்யாஸம் “ஸ்யமந்தகமணி” திருட்டுப் போனது, கிருஷ்ணனுக்கு அபவாதம் வந்தது, அப்புறம் ஜாம்பவானோட சண்டை போட்டு ஜாம்பவதியை கல்யாணம் பண்ணிக் கொண்டு, ஸ்யமந்தகமணியை கொண்டுவந்து அபவாதம் நீங்கப் பெற்றது பற்றி ரொம்ப அழகாக பேசினார். அன்று அத்தனைபேரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். என்ன அருமையான, கோர்வையான உபன்யாஸம்!

அந்த வயஸானவர் ஓடி வந்து பெரியவா பாதத்தில் விழுந்தார்……..”மஹாப்ரபோ!” என்று அரற்றினார். அப்புறம் கூட்டத்தினரை நோக்கி பேசினார்.

” 66 வது பீடாதிபதியான கலவை பெரியவாளோட உபன்யாசத்தை நான் நெறைய தடவை கேக்கற பாக்யத்தை அடைஞ்சிருக்கேன்…..இந்த பதிமூணு வயஸ் கொழந்தை என்ன பேசப் போறார்?…ன்னு நெனெச்சேன்…..ஆனா, இந்த மொதல்உபன்யாசத்லேயே……. ‘தான், பழைய பீடாதிபதிக்கு ஏத்த வாரிசுதான் !’ ன்னு நித்ரூபிச்சுட்டார்! என்னோட தப்புக்கு நான் மனஸார மன்னிப்புகேட்டுக்கறேன் ஆனா, என்னால இப்போ அழுகையை கட்டுப் படுத்த முடியலை………ஏன்னா, எனக்கு இப்போவே எம்பதுக்கு மேல வயசாச்சு. இன்னும் இந்த ஆச்சார்யாளோட உபன்யாசங்களை எவ்வளவு நாள் கேக்கப் போறேன்?..ன்னு நெனைச்சா ரொம்ப தாபமா இருக்கு. அழுகையை அடக்க முடியலை ” என்று அழுதார் அந்த பெரியவர்.

பெரியவாளோட முதல் உபன்யாசத்துக்கு அவருடைய பரமகுருவின் மஹா பக்தர் மூலம் கிடைத்த பாராட்டு!

COURTESY: Shri. Jambunathan Iyer

Thanks to : K.THIAGARAJAN, KTR

Saturday, February 21, 2015

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால்(பெரியவா) மட்டுமே முடியும்! கட்டுரை-ரா-கணபதி.

பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர் ஏற்று கொள்வார் என்று எண்ணினார்

“இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா!

ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடுசென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயேதீர்த்தம் குடுத்துக் கொண்டிருந்தார் பெரியவா.அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு ரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன் கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம்
தருவது சாஸ்த்ர விரோதமாகையால் சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு
நிதர்சனமாக தெரிந்திருந்தது.

ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்
தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து கொண்டிருந்தார்

. இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காககையைநீட்டிவிட்டார்…….

பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்டசந்தோஷம்! ரா.கணபதிக்கோ நிம்மதி பெருமூச்சு!

“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம் குடுத்துட்டார்!…”

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால் மட்டுமே முடியும்!

Source: Shri.Varagooran Narayanan

Thursday, February 19, 2015

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” ரா.கணபதி கருணைக் கடலில் சில அலைகள்

நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதிராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை.

ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..க்யூ விலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்

. “ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே ! வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா! “ என்று ஆவி சோரக் கூவிக்கொண்டிருந்தாள்.

வெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க்கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத் தம்பி. அந்த ரத்த பந்தத்வத்திற்கு ஏற்ப நல்ல இதயக்கனிவு பெற்றவர். பாட்டியின் தாபக்குரல் கேட்டதும் நடையை விரைவு படுத்தி, உள்ளே சென்றார். முக்யமான ஆலொசனையிலிருந்த ஸ்ரீசரணரிடம் “ வெளியிலே ஒரு பாட்டி, நூறோ, நூத்திருபதோ, என்ன வயசிருக்குமோ, பெரியவா தரிசனத்துக்காகத் தவிச்சிண்டு நிக்கறா” என்றார்.

அவர் சொல்லி முடித்துக்கூட இருக்க மாட்டார், பெரியவாள் புறப்பட்டு விட்டார், புயலாக!

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” --- நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி! இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்” என அன்பின் சார சாரமாக அமுத மொழி கூறினார் அருளாளர்.

“ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது!

முகத்தைத் தூக்கி ஸ்ரீசரணரின் திருமுகம் கண்ட விருத்தாம்பிகை, “எனக்கோசரம் நீ ஓடோடி வந்து எதிற்கே நின்னும் இந்தக் கண்ணு மங்கல்ல தெளிவாத் தெரியல்லையே! என்னப்பா, நீதான் நல்ல கண்ணைக் குடுத்துக் காட்சி தரணும் “ என்றாள்.

அது நல்ல வெயிலடித்த சமயம். ஆனாலும் க்யூ வரிசைக்காரர்களுக்கு மேலெ கூரை அமைக்கப்ப்பட்டிருந்தது. பக்த பராதீனர் சட்டென்று அந்த கூரைக்கு வெளியே துள்ளீ சுடு வெய்யிலில் நின்றார். பாதுகை அணீயாத பாதத்துடன்!

“ இப்பத் தெரியறதோன்னோ பாட்டி?” என்றார்.

“நன்னாத் தெரியறது, என்னப்பா, நன்னாத் தெரியறது!” என்ற பாட்டி கன்னத்தில் படபடவென்று போட்டுக்கொண்டாள்.

பெரியவாள் தன் முகத்தை வெயில் படுமாறு பல கோணங்கள் தூக்கி, தழைத்து, திருப்பியெல்லாம் காட்டி, முழு உடலையே திருப்பி முதுகுப்புற தரிசனமும் தந்தார்.

என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் உணர்ச்சிப்பெருக்கில் மூதாட்டி குழறிக் குழறி ஏதோ சொல்லி அழுது ஆனந்தித்தாள்.

ஸ்ரீசரணர் மீண்டும் அவளை நெருங்கி வந்து , “நன்னாப் பாத்துட்டயா பாட்டி! நான் போகலாமா?” என்றார்.

“பாத்துண்டேம்பா, பாத்துண்டேன். இந்த அனாமதேயத்துக்கும் ,கருணாமூர்த்தி , ஒன் காட்சி குடுத்துட்டே. ஒன்னைப் பாக்கணும் பாக்கணும்னுதான் உசிரை வெச்சிண்டிருந்தேன். பார்த்துட்டேன். என்னை எடுத்துக்கோ அப்பா, என்னை எடுத்துக்கோ!” என வேண்டினாள் அந்த பரம பக்தை.

“ பாட்டீ! அதுக்கான ஸமயம் வரச்சே எடுத்துக்கலாம். இப்போ ஒன்னை, நீ இருக்கிற எடத்துலே கொண்டு விடச் சொல்றேன். போயி ஸ்வாமி ஸ்மரணையாகவே இருந்திண்டிரு. மறுபடி என்னைப் பார்கணும்னு ஓடி வராதே! நான் ஒன்னை விட்டு எங்கேயும் போகாம எப்போவும் ஒன் கூடவே தான் இருந்துண்டிருப்பேன்” என்று வாக்குதத்தம் தந்தார், க்ருபா வர்ஷர்.

தமது அடக்க குணத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும்போதும் ,அடக்கமாகவே வார்த்தைகளை உபயோகிக்கும் ஸ்ரீசரணரிடம் இப்பேர்பட்டதொரு வாக்கு பெற்ற பாட்டியம்மையின் பாக்யத்திற்கு ஈடேது!

Source: Sri Varagooran Narayanan

Tuesday, February 17, 2015

WHAT GURU-STHANAM IS.

"My daughter is getting older and older. There is no boy's horoscope that we missed as an alliance to her. I have tons of such boys' horoscopes!" A daughter's father expressed his predicament with humour.

"Not a single boy's horoscope did match my girl's. The moment I handover both the horoscopes to the astrologer he just pouts his lip and says, 'Boy's horoscope is A-class... But then no match for our Kamala's...'"

Since the gracious look of the navagrahas was absent, the parents came to Kanchipuram, to have guru-parvai (tam)--guru's glance.

"Now, you have any horoscopes with you?" (asked the Guru).

"It's there. Good lineage, gotram. Boy looks good, everyone of us like him. Yet to see if it matches. I am afraid to go to the astrologer."

"You have the girl's horoscope?"

"I have."

"Give me both."

Both horoscopes were submitted to him. Periyava took them in hand and had a second's glance at them.

"It's a match... Proceed with the marriage..."

The marriage was celebrated with all pomp and glory.

Three months later, the boy had an examination to pass, for a promotion at his office. How would be his luck in this? They showed the horoscope to the astrologer.

"There is nothing that can be told with certainty. You have the horoscope of this man's wife?"

He considered the girl's horoscope in elaborate detail. "Sir, What a wonderful match! It is very rare to have such a couple. Great comfort awaits this girl! So I can say with a clap of hand that the boy would get his promotion."

And he got it!

Like a ball struck with a bat, the parents came down to KAnchipuram.

"Owing to Periyava's anugraham, the marriage was conducted... The promotion too has come..."

"What did I do? In the horoscope, guru (the planet Jupiter) is in a good position..."

Aren't dampati--couple have the fortune to have their guru in great position?

Source: Maha Periyaval - Darisana Anubhavangal

WHAT GURU-STHANAM IS...

Sunday, February 15, 2015

நாடி வருபவரை தன்னுடைய ஞானத்தால் தேடி சென்று குறைகளை தீர்ப்பவர் மஹா பெரியவா மலரடி சரணம்

ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா

ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த கணவன், மனைவி விழா காண வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்ததால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர். ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து விட்டான்.
பெருமாளைத் தரிசிக்க வந்த இடத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதை எண்ணி அந்த தம்பதியரின் மனம் மிகவும் நொந்தது. அவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து மகாபெரியவரைத் தரிசித்தால், தங்களுக்கு தீர்வு கிடைக்குமென நம்பி வந்தனர். பெரியவரைத் தரிசிக்க பெரிய கூட்டம் வரிசையில் நின்றது. தம்பதிகளும் வரிசையில் இணைந்து கொண்டனர். அந்த பெண்ணின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. வரிசையில் வந்தவர்கள் சுவாமியை வணங்கி விட்டு, நகர்ந்து கொண்டே இருக்க, அந்தப் பெண்ணைக் கவனித்த பெரியவர் அவரை அழைத்து, ""ஏன் அழுகிறாய்?'' என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார்.
முக்காலமும் உணர்ந்த அந்த நடமாடும் தெய்வத்திற்கா இந்த சம்பவம் தெரியாமல் போயிருக்கும்! இருப்பினும், பெண்ணிடம் அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தார்கள்.
அந்தப் பெண் நடந்த விபரங்களை ஒன்று விடாமல் சொன்னார். உடனே பெரியவர் அவரிடம்,""மடத்துக்கு எதிரே இருக்கிற கங்கைகொண்டான் மண்டபத்தில் தெற்கு நோக்கி ஒரு ஆஞ்சநேயரும், ஏகாம்பரநாதர் கோயில் மண்டபத்தில் மேற்கு நோக்கி தூணில் எழுந்தருளியிருக்கும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் தரிசிக்கச் செல். அந்த ஆஞ்சநேயர்களை 21 தடவை பிரதட்சணம்(வலம்) செய். பிறகு வீட்டிற்கு போ,'' என்றார்.
அந்தப் பெண்,""போலீசில் புகார் கொடுக்க வேண்டாமா?'' என்று கேட்டார்.
""வேண்டாம்...வேண்டாம்...நீ பிரார்த்தனை முடிச்சுட்டு வீட்டுக்குப் போ,'' என்றார் பெரியவர்.
பெரியவர் சொன்னபடி, அந்த அம்மையாரும் அவரது கணவரும் ஆஞ்சநேயர்களைத் தரிசித்த பிறகு பஸ்ஸ்டாண்ட் சென்றனர். அப்போது இவர்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்கள், ""மாமி..மாமி...உங்களைத் தான் தேடிக் கொண்டு இருந்தோம். உங்கள் செயினைப் பறித்தவனை போலீஸ் பிடிச்சு நகையை கைப்பற்றிட்டாங்க. நீங்க ஸ்டேஷனுக்குப் போய் அடையாளம் சொல்லி வாங்கிக்கலாம்,'' என்றனர்.
அவர்களும் ஸ்டேஷனுக்குச் சென்று பொருளைப் பெற்ற பிறகு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்கள். கடவுளின் அருள் வேண்டுமானால், குரு பாதை காட்ட வேண்டும். காஞ்சி மகாபெரியவரை ஏற்று வேண்டுதல்களை வைத்து விட்டால் போதும்! நமது கோரிக்கைகள் உரிய தெய்வங்களின் உதவியுடன் நிறைவேறி விடும். காஞ்சிபுரம் சென்றால், இனி நீங்களும் இந்த ஆஞ்சநேயர்களிடம் உங்கள் வேண்டுதலை வைத்து வரலாம்.

Source: Sri. Hindukkalin Prasad

Friday, February 13, 2015

பிராமணனும் மரியாதையும் மஹா பெரியவா சொன்ன கதை

துரோணரும், இளவரசனான துருபதனும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது துருபதன் தன் நண்பனான துரோணரிடம், ''நான் அரசனானால் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருவேன்'' எனச் சொல்லியிருந்தான். எங்கே... சொன்னபடி நடந்துகொண்டானா துருபதன்? அதுபற்றி காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகளே இங்கே மனம் திறக்கிறார்.

'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!' என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship கொண்டாடவா?' என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணிவிடுகிறான்.

இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார். இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னி யிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான்.

பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, 'நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறைப் பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?' என்று த்ருபதன் நினைக்காமல், ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில், இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமே உண்டாயிருந் தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப் படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷ£த்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடமே வன்மம் கொண்டான்.

கடைசியில் பாரத யுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடுகொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக் கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப் போய்விட்டான் என்று, ஸத்ய ஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, ''அச்வத்தாம: ஹத: குஞ்ஜர:'' என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து, ''குஞ்ஜர'' (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில், பாஞ்ச ஜன்யத்தைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே, த்ரோணர் மனஸ் உடைந்து போய் அப்படியே ஆயுதங்களைப் போட்டு விட்டு உட்கார்ந்து விட்டார். அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரைக் கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதைப் பார்த்துப் பாண்டவ ஸைன்யத்தினர் உள்பட எல்லாரும் 'தகாத கார்யம் நடக்கிறதே' என்று விக்கித்துப்போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.

இன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனஸுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் ஸஹபாடியான குசேலர், த்ரோணர் மாதிரியே தாரித்ரிய ஸ்திதியில் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப் படுத்தாதது மட்டுமில்லை; அவருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.

தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்தி பற்றி எதுவும் சொல்லவொட்டாமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, 'இது நம் அகந்தானா?' என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.

இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும், அஸயத்மாகவும் மனஸை உறுத்துகிறாற் போல் போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது...

குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், நஷ்டம் ஆகட்டும், ப்ராம்மண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து, எளிமையுடனும் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

த்ரோணரும் மஹா பெரியவர்தான் என்றாலும், ப்ராம்மண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப் பதோடு நிற்காமல், அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால்தான் எல்லாம் கோளாறாகப் போயிருந்திருக்கிறது.

த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் ஏதோ சொல்லிவிட்டானென்று ப்ராம்மணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமான மும் க்ஷ£த்ரமும் பாராட்டிப் பழிவாங்க நினைத்ததே ஸரியில்லைதான்.

ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனஸைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமல்லாமல், பரசுராமரிடம் அஸ்த்ர சி¬க்ஷ கற்றுக்கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படிச் செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரியே பிற்பாடு அவர் கதை போயிருக் கிறது. நியாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கே எத்தனை வேதனையாயிருந்திருக்கும்?

யுத்த பூமியிலானால், அர்ஜுனன் போடுகிற அம்பை விடக் கூராகத் துளைக்கும் வார்த்தையம்புகளை பீமஸேனன் அவர்மேல் வீசி, அவர் பிராம்மண தர்மத்தை முறைப்படி நடத்தாதற்காக ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத் திறக்காமல் அவர் அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.

ப்ராம்மணன் ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால், மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன!.

Source: Shri.Halasya Sundaram Iyer

Wednesday, February 11, 2015

UMMACHI UMMACHI! ------------------------------

A lisping child showed its lisping talents to Periyavaal. He listened to it sweetly.

Thayarkkari (the mother) asked it, "Where is Ummachi?"

"There!", the little finger pointed at Periyavaal.

He asked for a beautiful silk turban, gave it in the hands of the child, and told it with a gesture, "Give it to your mother and ask her to tie it round your head."

The child and the mother did as told.

Adorned by the silk cloth, the child was very happy.

Near Periyavaal, vibuti-kumkumam was there on a Panneer leaf (Tiruchendur?)

"Take it!", he said.

The child took it gracefully without spilling it and gave it to its mother of its own accord.

As she smeared it on the child's forehead, its beauty swelled.

Thinking to give something for its stomach too, Periyavaal extended a banana to the child.

The balan (boy) received it with humility.

"namaskaram pannu (prostrate)", said the mother.

The child prostrated.

Was it a Namaskaram made at the instance of his mother? It did not seem so. Rising, the balan stood for sometime, joining his palms and narrowing his eyes. His small lips moved with happiness: "Ummachi!"

"Ask the child what he wants", said Periyavaal to people around. They asked him.

"Ummachitan venum (Only the Ummachi I want)" said that mouth, smelling of milk!

Opening a book near him, Periyavaal gave it to the child.

There was a picture of Periyavaal in it!

The child babbled loudly, looking at the picture: "Ummachi, Ummachi!"

"You have got that Ummachi all for yourself", saying this Periyavaal went on to attend to his daily routine.

author: Raa. Ganapathi
source: Maitrim Bhajata

Tuesday, February 10, 2015

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,மாரியம்மன் கோயில்,சிவன் கோயில் எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத் திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.
அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்) மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில் கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள். ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!
தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.

அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர். அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு! அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து பையன்களை உடன் வைத்துக்கொண்டு சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச் செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத் தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில் வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள், அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச் சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச் சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.
“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?” (என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்! இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.
ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப் பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி? ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு

தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top