Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Monday, September 30, 2013

Free Online Radio Special Broadcast during the days of Navaratri !!

Jai Sriman Narayana !!

Jaya Jaya Sankara Hara Hara Sankara !!

Dear Blog Readers,

Wishing my blog readers A Very Happy & Joyous Navaratri !!

I cordially invite all my blog readers to join our Free Online Radio Special Broadcast during the days of Navaratri. Our Free Online Radio will allows you to listen soul stirring Vedic Chants, Nama Sankeerthana, devotional & classic songs during the hours of broadcast.

Our Free Online Radio Navaratri Special Broadcast begins from 5th October, 2013 to 13th October, 2013. The broadcast starts from 8.30 AM (IST) onwards on all nine days of Navaratri. Just click the link below and have a blissful experience.

http://umasubu123.listen2myradio.com/

Jaya Jaya Sankara Hara Hara Sankara !!

Jai Sriman Narayana !!

சங்கர் பவாருக்கு சங்கரரின் பவர்...

சங்கர் பவார்...ஸ்ரீ மடத்தில் பலர் பார்த்திருக்கலாம். சான்டூர் மஹா ராஜா அவர்களால் ஐயனுக்கு கைங்கர்யம் செய்வதற்காக அனுப்பி வைக்கப் பட்டு, பின் ஸ்ரீ மடத்திலேயே திருத் தொண்டு செய்பவர்.
பெரியவாளின் மூன்றாவது விஜய யாத்திரையின் போது நடந்த சம்பவம் இது.
தாங்களனைவரும் அறிந்த ஒன்று தான். ஸ்ரீ ரா க அண்ணா அவர்கள் சொல்வது போல, 'சல்லிக்' காசு அல்ல, 'செல்லாக்' காசு கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று அருளாணை பிறப்பித்து, தன்னோடு வருபவர்களும் வெறும் கையோடு தான் வர வேண்டும் என்று செய்த யாத்திரை அது.
'நடமாடும் தெய்வம்' அன்றைய பொழுதுக்கு 'நடமாடி' பின்னிரவில் ஓய்வு எடுக்கும் போது அது வேறு ஓர் ஊராகத்தானே இருக்க முடியும்? பெரும்பாலான நாட்களில் சங்கரரோடு செல்லும் கிங்கரர்களுக்கு வெறும் பால், சொற்ப சமயங்களில் சொற்ப பழங்களோடே மட்டும் தான் 'இரவு விருந்து', அதுவும் வெகு நேரம் கழித்து...
அன்றும் அப்படித் தான்...வெகு சில பழங்கள், சொற்ப பால்...எல்லோரும் படுக்கப் போயாயிற்று.
நம் சங்கர் பவார் அவர்களுக்கோ இதெல்லாம் புதிது...(அப்போது!!!), வயிற்றில் அப்படியொரு பசி...ஆனால், யாரிடம் சொல்வது, என்ன கேட்பது? பேசாமல் படுத்துவிட்டார்.
நம் 'அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பல'த்துக்கா தெரியாது?
அழைத்தார் அருகில் அத்யந்த கிங்கரர் வேதபுரி சாஸ்த்ரிகளை...
'எல்லோரும் சாப்டாச்சா?' என்றது அந்த தாயுள்ளம்.
'ஆயிடுத்து' என்றார் பிரம்மஸ்ரீ.
'என்ன சாப்டேள்?'
'ஏதோ, பழம் பால் ன்னு இருக்கறதை எல்லாம் சாப்பிட்டோம்'.
'அது சரி...அந்த புதுசா வந்திருக்கானே ஒரு பையன்...அவன் என்ன சாப்பிட்டான்?'
'அவரும் கொஞ்சம் பழம் பால் எடுத்துண்டார்'
'அவனுக்கு வயிறு ரொம்பித்தோ?'
'ஆமாம். வயிறு ரொம்பி படுத்துண்டுட்டார்'
'அவனை நீ கூப்பிடு.'
வந்தார் சங்கர், சங்கரரிடம்.
கேட்டார் சங்கரர்.
இதற்கு தானே காத்துக் கொண்டிருந்தார் நம் சங்கர்.
'இல்லே, பசிக்கிறது, போறலே' என்றார்.
நடு நிசி. அந்த பெயர் தெரியாத ஊரில்...
அந்த வேளையில்...
ஓர் அன்பர்...
ஐயன் அவர்களை தரிசிக்க வந்ததாக சொன்னார். அவர் கையில் ஓர் உணவு கேரியர். நான்கு அடுக்கு...
ஐயனை வணங்குகிறார் வந்தவர். நம் இந்திரருக்கோ பார்வை எல்லாம் அந்த டிபன் கேரியர் மேலேயே.
'அது என்ன?' கேட்கிறார்.
'நான் வேலை முடிந்து வீட்டுக்கு போகிறேன். நான் மதியம் சாப்பிட்டது போக மீதி உணவு. '
'அப்படியா, அதனை இவருக்கு தருவாயா?'
'தாராளமாக...'
சங்கரிடம் சொன்னார் சங்கரர். 'நீ உள்ளே போய் சாப்பிட்டுவிட்டு டப்பாவை அலம்பி இவர் கிட்டே கொடுத்துடு' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார் தாயிதய தயாமயர்.
உள்ளே சென்றால்... அது மிச்சமான உணவே அல்ல. புத்தம் புதிதாக ஒருவரும் சாப்பிடாத நிறைந்த உணவு. ரொட்டி,கூட்டு, பருப்பு, காய்...போதாதற்கு இனிப்பு வேறு.
அப்புறம் என்ன...
உந்தி குளிர உயிர் குளிர உணவுண்டார் நம் சங்கர் பவார்...
டிபன் கேரியரை வாங்கிக் கொண்டு போனவர் போனவர் தான்...அப்புறம் அந்த ஊரில் எப்போதுமே எவர் கண்களிலும் தட்டுப் படவில்லை...
நன்றி - ஸ்ரீ கணேச சர்மா அவர்களின் மஹா பெரியவா ஸப்தாஹம் உரையில்...

Courtesy: shri.Karthi Nagaratnam

Saturday, September 28, 2013

"தீர்தத்தை தொட்டது நம்ம உம்மாச்சி தாத்தாவாச்சே!!!

 

"பெரியவாளிடம் மிகுந்த அன்பு கொண்டு ஒரு அம்மா, தாமிரபரணியில் நீராடிக் கொண்டிருந்தபோது, "பெரியவாளுக்கு தாமிரபரணி தீர்த்தம் கொண்டு போய் குடுக்கலாமே! புண்யநதி தீர்த்தம்...ன்னா ரொம்ப சந்தோஷப் படுவாளே!" என்று எண்ணி, திருநெல்வேலி பாத்ரக்கடையிலிருந்து ஒரு சொம்பு வாங்கி, நதி நீரை நிரப்பி மேலே சீல் பண்ணி வைத்தாள்.
அவருடைய சித்தப்பாவோ கைகொட்டி சிரித்தார், "அடி அசடே! இந்த தீர்த்தத்த எப்போ பெரியவாகிட்ட குடுக்கப் போறே? அதுவரைக்கும் இந்த ஜலம் கெடாம இருக்குமா? புழு நெளிய ஆரம்பிச்சுடும் அதெல்லாம் இந்த ஜலம் கெடாது. சித்தப்பா, சரி சரி. ஒன்னோட நம்பிக்கையை நான் ஏன் கெடுக்கணும்?”.
சோதனையாக ரெண்டு மாசம் கழித்துத்தான் பெரியவா தர்சனத்துக்கு போக முடிந்தது. மனஸ் "திக் திக்" என்று அடித்துக் கொண்டிருந்தது, திருநெல்வேலி போயிருந்தேன். தாமிரபரணி தீர்த்தம் கொண்டு வந்திருக்கேன்” தொண்டர் ஒருவர் சொம்பின் மேல் மூடியை திறந்து பெரியவா" பக்கத்தில் வைத்தார்.
"பரமேஸ்வரா, என்னைக் காப்பாத்து" அந்த அம்மாவின் மனஸ் பிரார்த்தித்தது.
பெரியவா" சொம்பிலிருந்து ஒரு அரை டம்ளர் எடுத்து தன் கமண்டலுவில் விட்டுக் கொண்டு, ஆசமனமும் பண்ணினார் ! அப்பாடா, நிச்சயம் தண்ணீர் கெடவில்லை என்ற நம்பிக்கை. ஒரு சிட்டிகை போட்டு, தொண்டரிடம் மீதி சொம்பு ஜலத்தை பிரசாதமாக அந்த அம்மாவிடம் தரச் சொல்லி உத்தரவானது.
அம்மாவுக்கோ பரம சந்தோஷம், ஆறு மாசம் கழித்து, அந்த சித்தப்பா வந்தார். ஸ்வாமி மாடத்தில் அந்த சொம்பு, "அடடா, இன்னுமா வெச்சிண்டிருக்கே? அட, பைத்தியம்! கொட்டு. கொட்டு. ஒடனே கொட்டிடு” பெரியவா ப்ரசாதமா குடுத்தது என்பதால், பூஜை மாடத்தில் வைத்திருந்த சொம்பை எடுத்துக் கொண்டு போனார் சித்தப்பா, ஒரு பெரிய பாத்ரத்தில் மீதி ஜலத்தை கொட்டினார்.
பாதி ஜலம்! மீதி புழுக்கள்! என்று எதிர்பார்த்தார். ஆச்சர்யம்! ஸ்படிகம் போல் இருந்தது ஜலம், "சித்தப்பா, ஆச்சர்யபடாதீங்கோ! பெரியவா கை பட்ட தீர்த்தம்! தலைமுறைக்கும் அப்பிடியே இருக்கும்."
பெரியவா" திருவுருவப் படத்தின் முன் அந்த அம்மா கை கூப்பி நிற்க, பக்கத்தில் சித்தப்பாவும் கைகூப்பி நின்றார்!
பின்னே, தீர்தத்தை தொட்டது நம்ம உம்மாச்சி தாத்தாவாச்சே!!!

Courtesy: Shri varagooran Narayanan


 

Thursday, September 26, 2013

Maha Periva's Upadesam for Children/Youth

நீங்கள் போட்டுக் கொள்ளும் உடை அழுக்கு மயமாக இருந்தால் எத்தனை குளித்தும் பிரயோஜனம் இல்லை. துணியில் அழுக்கு இருந்தாலும் சொறி சிரங்கு வரத்தான் செய்யும். சலவைக்குத் துணியைப் போட்டால் நன்றாக வெளுத்துத் தருவார்கள். அதைவிட நீங்களே உங்கள் உடைகளை நன்றாகத் துவைத்துக் கொள்ளுவது சிறந்தது. துணியைத் துவைத்துப் பிழிவது உங்கள் தேகத்துக்கே ஓர் ஆரோக்கியப் பயிற்சியாக இருக்கும். நாமே நம் துணியை இவ்வளவு நன்றாகச் சுத்தப்படுத்தி வெள்ளை வெளேரென்று ஆக்கியிருக்கிறோம் என்றால் உங்களுக்கே அதில் ஒரு பெருமை, திருப்தி, சந்தோஷம் இருக்கும். உங்கள் பெற்றோர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். சலவைச் செலவும் இதனால் குறையும்.
உடம்பைத் தேய்த்துக் குளிப்பது, உடுப்பைத் துவைத்துக் கட்டுவது – இவை இரண்டாலும் அழுக்கிலிருந்து, சொறி சிரங்கிலிருந்து விடுபட வேண்டும்.
உடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக்கூடாது. அதாவது கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது.
ஆனாலும் காரியம் என்று வந்து விட்டால் நல்லதைச் செய்கிறபோதுகூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்து விடலாம். இதனால் பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள்கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிற போது அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணறுவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வது தான் சரி. அதுவே அழுக்கைக் கழுவிவிடும்.

Coutesy: Shri. Balaji Kothandan

Tuesday, September 24, 2013

மனிதனின் சக்தி (தினமணி 06-09-2013)

உயர்ந்து மேல் நோக்கி வளர்கிற மனிதன் மற்ற பிராணிகளைக் காட்டிலும் அதிகமான சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் துக்கத்தைத்தான் நாம் அதிகம் அனுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மைப் போல இத்தனை காமம், இத்தனை கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களைத்தான் நாம் அனுபவிக்கிறோம்.
மிருகங்களுக்கு கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திரும்ப முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். உடம்பைப் பாதுகாத்துக்கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வையை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார்.
இவன் ஒருவனைத்தான் வழித்து விட்டிருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. ஓடலாம் என்றால் வேகமாக ஓட முடியாது. குதிரைக்கு ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். இவனுக்கு ஓடுகிற சக்திகூட இல்லை. இப்படி இருந்தாலும் ஸ்வாமி இவனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.
குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் மற்ற பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக்கொண்டு விடுகிறான். வண்டியிலே குதிரையைக் கட்டி அதன் வேகத்தை இவன் உபயோகப்படுத்திக்கொண்டு விடுகிறான். எல்லாவற்றையும் உபயோகப்படுத்திக் கொள்கிற சக்தியை இவனிடத்தில் வைத்திருக்கிறார். புத்தியை வைத்துவிட்டு மிருகங்களுக்கு கொடுத்ததுபோல இவனுக்கு ஏன் கொம்பு முதலியவற்றைக் கொடுக்கவில்லை? மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும்.
குளிர்பிரதேசத்துக் கரடி நம் ஊரில் இருக்காது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். ஆங்காங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாக செய்துகொள்வான் என்று இப்படி செய்திருக்கின்றார்.
- காஞ்சி மகா பெரியவர்


Sunday, September 22, 2013

குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு. கட்டுரை;இந்திரா சௌந்தரராஜன் (தகவல் உதவி;தீபம் இதழ் $ பால ஹனுமான்)

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,
சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.
பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.
குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.
சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”
ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.
உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”
ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”
அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”
ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”
அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”
என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”
நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”
அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”
காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”
அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”
நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.
அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.
சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!
சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”
அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”
அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.
சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?
ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”
- பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?
ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”
- பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.
நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.
இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.
ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.
எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?
ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.
(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)


Friday, September 20, 2013

தினமுமே அரை மணியாவது மௌனமாகத் தியானம் பண்ண வேண்டும்.

வயிற்று உபவாசம் மாதிரியே மௌனத்துக்கும் தர்ம சாஸ்திரத்திலே அனேக காலங்களை விதித்திருக்கிறது. "மௌநேந போக்தவ்யம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்குள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது இன்னொரு வேலையும் தரப்படாது. இப்படி விதித்த போதே ருசியையும் கட்டுப் படுத்தியதாக ஆகிறது. "இது வேண்டும். அது வேண்டாம் ; இதற்கு உப்பு போடு, அதற்கு நெய் விடு என்றல்லாம் சொல்ல முடியாதல்லவா?
சோம வாரம், குரு வாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அனுஷ்டிக்கலாம்.
சோமவாரம், குருவாரம், ஆபீஸ் இருப்பதால் ஞாயிற்றுக கிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.
எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒரு நாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஓர் example.
மௌனமும் பட்டினியும், சேர்ந்தால் அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பார மார்க்கத்திலே நன்றாக ஈடுபடுவதை அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக சிவராததிரியோ, சஷ்டியோ, ஏகாதசியோ, பட்டினி கிடக்கிற போது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாசிக்கிறவர்கள் நவராத்திரி பூராவும் மௌனமாயிருப்பார்கள்.
நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக் தேவியான சரஸ்வதிக்கு அபச்சாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நக்ஷத்திரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு.
தினமுமே அரை மணியாவது மௌனமாகத் தியானம் பண்ண வேண்டும்.
- பரமாச்சார்யார் (கல்கி அருள்வாக்கு)

Wednesday, September 18, 2013

பழங்களில் ‘கள்’ ஐ பிரித்தூட்டிய ஞானி! Thanks to Smt. Saroja Srinivasan for this email forward.

சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு…… கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.
“டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!……..ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!….நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!”
ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை……….மாறாக,
“டேய்! இந்தா…….இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?……..அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா…ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !” என்று சொன்னார்.
அந்யாயம்! அக்ரமம்!…பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்……என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை………..மனசால் கூட நினைக்க முடியாது.
சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் ‘குடி’ மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா ‘ப்ளான்’ படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]
மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது………….”மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !” அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!
சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்………”ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. ‘தண்ணி’ போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!…” வணங்கினார்.
மாற்றத்துக்கு காரணம்…………வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள ‘கள்ளை’ ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.

பழங்களில் ‘கள்’ ஐ பிரித்தூட்டிய ஞானி!<br />Thanks to Smt. Saroja Srinivasan for this email forward.<br /><br />சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா?  ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு…… கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.<br />“டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!……..ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!….நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!”<br /><br /><br /><br />ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால்  பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை……….மாறாக,<br /><br />“டேய்! இந்தா…….இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?……..அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா…ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !” என்று சொன்னார்.<br /><br />அந்யாயம்! அக்ரமம்!…பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்……என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை………..மனசால் கூட நினைக்க முடியாது.<br /><br />சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் ‘குடி’ மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா ‘ப்ளான்’ படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]<br /><br />மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது………….”மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !” அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!<br /><br />சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்………”ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. ‘தண்ணி’ போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம்  இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!…” வணங்கினார்.<br /><br /><br /><br />மாற்றத்துக்கு காரணம்…………வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள ‘கள்ளை’ ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.

Monday, September 16, 2013

மகாபெரியவாளின் மகிமை

எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா. குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ஹக்ரி என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது. கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது . கறையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமாஇருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா. அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்த கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது. அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்ஜாவுர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.
“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.
ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்” உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று. வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.
ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை. சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.
அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.
அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது. நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது. ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார். அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.

மகாபெரியவாளின் மகிமை<br />எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா. குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ஹக்ரி என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது. கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது . கறையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமாஇருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா. அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்த கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது. அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்ஜாவுர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.<br /><br />“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.<br /><br />ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்” உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று. வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.<br /><br />ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை. சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.<br /><br />அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.<br /><br />அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது. நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது. ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார். அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.

Courtesy: Shri Mannargudi Sitaraman Srinivasan

Saturday, September 14, 2013

தியாகம்

'கொடுக்க வேண்டும்'. அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்கும் போது , "நான் தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே ! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது" என்கிற பரம தியாக புத்தியில்...'ந மம ' - எனதில்லை ,எனக்கில்லை ' என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.
மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு , "நான் கொடுத்தேன்" என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டே இருந்தால், இந்த அகங்காரமானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிறஆத்மாபி விருத்தியை அப்படியே ஏப்பம் விட்டு விடும். தியாகம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியாகம் பண்ணினேன் என்கிற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
'சோஷியல் சர்வீஸ் பண்ணுகிறேன்' என்று சொல்லிக் கொண்டு , வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால், இவனுக்கும் பிரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீசால் லோகத்துக்கும் பிரயோஜனமிராது. தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்தது போல் படாடோபமாக தெரியலாம்; ஆனால், அது நின்று நிலைத்து விளங்காது.

Courtesy: Smt. Vidya raju

Thursday, September 12, 2013

சந்திரசேகரம் –இந்திரா-செளந்தர்ராஜன் [ பெரியவரின் இந்த சிவம்- விஷ்ணு குறித்த சிந்தனை என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. என்னை மட்டுமா?]

பெரியவரின் சைவ-வைணவச் சமநோக்குக்கு அவர் காட்டும் உதாரணங்களும் – வியாக்யானங்களும் ‘அடேயப்பா என்ன ஒரு பார்வை – என்ன ஒரு நேர்மை – என்ன ஒரு நடுவு நிலை’ என்று வியப்பையே ஏற்படுத்துகிறது.
‘எல்லா தேவ தேவியர்களுக்குள்ளும் ஒரே பரமாத்மாதான் இருக்கிறான்’ – இது பொதுவான கருத்து. இதை ‘ஒன்றே குலமென்று பாடுவோம் – ஒருவனே தேவனென்று போற்றுவோம்’ என்னும் கருத்தோடும், பிற மதங்களின் இறைக் கொள்கைகளோடும், இணைத்து ஏற்கவும் முடிகிறது.
இதையும் சொல்லிக் கொண்டு சிவன் – விஷ்ணு – பிரம்மா என்று மும்மூர்த்திகள் என அந்த ஒன்றை மூன்றாக்குவதும், அதைத் தொடர்ந்து சக்தி-சரஸ்வதி-லக்ஷ்மி என்று அது விரிவாவதெல்லாமும் எதனால்?
குறிப்பாக சிவம் -விஷ்ணு என்று இருபெரும் அணிபோல், இந்த ஒன்றை இரண்டாக்கி, இதில் ஒன்று பெரியது மற்றது அதற்கு அடங்கியது என்பதுபோல் பேசுவதெல்லாம் எந்த வகையில் சரி?
இதற்கு பெரியவரின் பதில் மிக இதமாக இதோ…
‘சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறு வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிற போது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால், அதிலும் ஒரு ரசம் இருக்கத்தான் செய்கிறது. பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் நம் மதத்தின் சாரம் (Unity in Diversity)..
இப்படியே சிவன் – விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளையும் வழிபடுகிறபோதும், அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும், ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்கு ரூபமாக வைத்துக்கொண்டு பக்தி செய்வதில் ஒரு ருசி இருக்கத் தான் செய்கிறது.
இப்படிச் செய்யும் போது, சிவத்தை ஏக வஸ்துவான ஞானமாக பாவிக்கலாம். அந்த ஏக வஸ்துவை பலவிதமாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவை பாவிக்கலாம். அதாவது, சிவத்தை பரப் பிரம்மமாகவும், விஷ்ணுவை பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இருக்கிற ஒன்றை இல்லாத பலவாக காட்டுகிற சக்தியே, அம்பாள் அல்லது விஷ்ணு. இதனால் ஜகம் முழுவதுமே விஷ்ணுரூபம்!
விஸ்வம் விஷ்ணு என்றுதானே சஹஸ்ர நாமமே ஆரம்பமாகிறது? உலக பரிபாலனமும் விஷ்ணுவுக்கே உரியது. அதனாலேயே உலகத்தில் இருக்கிற ஆனந்தங்களை உணர்ச்சிகளை எல்லாம் தெய்விகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் உள்ளது. ஹரிகதை, ஹரிநாம சங்கீர்த்தனம் என்று கூறுவதுபோல் ஹரகதை ஹரகீர்த்தனம் சொல்லப்படுவதில்லை.
கதை, பாட்டு இதெல்லாம் விஷ்ணுவிடமே அதிகம். பாகவதர் என்றால் பகவானைச் சேர்ந்தவர் என்றே அர்த்தமாயினும், பொதுவாக பாகவதர், பாகவதம் என்றெல்லாம் சொன்னால் விஷ்ணுபக்தர், விஷ்ணுவின் கதை என்றே எடுத்துக் கொள்கிறோம்.
பிரபஞ்ச சௌகரியங்களை எல்லாம் வைத்து, பூஜை, பக்தி, பஜனை, கதை என்பதெல்லாமே விஷ்ணு சம்பந்தமாயிருக்கிறது.
இதை விட்டு இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது, சிவசம்பந்தம் அதிகம் தோன்றுகிறது. சிவஞானம், சிவயோகம் என்று சொல்கிற மாதிரி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்பன காணப்படவில்லை.
பலவாக இருக்கிற உலகனைத்தும் விஷ்ணு என்பதால், ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்ற வாக்கு தோன்றியது. பலவாக காண்பது போனால், ‘ஸர்வம்’ போய்விடும். அப்புறம் ஏகம்தான் இருக்கும்.
ஏகம் இருக்கும்போது ஸர்வத்துக்கு இடம் ஏது? இந்த ஏகத்தை அனுபவிக்கிறவனைத் தவிர, ஜகம் என்றும் ஒன்று தனியாக இல்லை. ஜகமும் அடிப்பட்டு போய்விடுகிறது. சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால் தான் ‘சிவமயம்’ என்கிறார்கள்.
VIBGYOR என்கிற ஏழு நிறங்களில் கறுப்பும் வெளுப்புமில்லை. இங்கே வெள்ளை சிவன், கரிய திருமால் ஆகிய இருவருமே பிரபஞ்ச வர்ணங்களில், அதாவது லௌகீகத்தில் சேராதவர்கள்தான்.
எதை எரித்தாலும் முதலில் அது கறுப்பு ஆகிறது. ஆனால், அப்போதும் எரிபட்ட வஸ்துவுக்கு நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும். நியூஸ் பேப்பரைகூட கொளுத்திவிட்டு பார்த்தால், அது கறுப்பானாலும் அந்த கறுப்புக்குள் அதிக கறுப்பாக எழுத்துக்கள் தெரியும்.
ஒரு துணிக்கும் இது பொருந்தும். எரிந்த இந்த நிலைதான் சர்வம் விஷ்ணு மயம் ஜகத்! எல்லாம் இருப்பதுபோல, இருந்தாலும் லௌகீகமாக இல்லாமல் தெய்விகமாக பக்தி ரூபத்தில் இருக்கின்றன.
யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம்போட்டால் அதுவும் நீற்றுப்போய் பஸ்பமாகிவிடும். எரிகிற வஸ்துக்கள் கறுப்பானாலும், கடைசிவரை எரித்தால் முடிவில் வெள்ளை வெளேரென்று நீராகின்றன.
இதுதான் சிவமயம்!”
- பெரியவரின் இந்த சிவம்- விஷ்ணு குறித்த சிந்தனை என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. என்னை மட்டுமா?
இதை வாசிக்கும் யாருக்குத்தான் சிந்தனைகள் தோன்றாது.
அவரின் வியாக்யானம் தொடர்கிறது. எப்படித் தெரியுமா? ‘அரனை மறவாதே – திருமாலுக்கு அடிமை செய்’ என்று!
‘எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் வைரமாகிறது. உலகம் இருந்த போதிலும் அதன் மாயை விஷ்ணுமயமாக தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் கரியாகிப்போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் கரிமாலாக இருக்கிறார் – கரி வைரமாகிற நிலைக்கு பரமேஸ்வரன் வந்து விடுகிறார்.
கரியும் வைரமும் வேறு வேறா? – கேட்கிறார் பெரியவர். அப்படியே மஹாவிஷ்ணுவின் கறுப்பும், சிவனின் வெளுப்பும் இந்த உலக வண்ணங்களில் சேருவதேயில்லை. கலர் வந்தாலே பொய் வந்து விட்டதாகத்தான் பொருள். இந்த இரண்டும் பொய்யோடு சேர்ந்தது மில்லை; சேரப்போவதுமில்லை. வெண்மைக்கு விபூதி. கருமைக்கு விஷ்ணுமய உலகின் மண் திருமண்ணாகிவிட்டது. இதை எல்லாம் கசடற உணர்ந்த காரணத்தால்தான், ‘பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து…’ என்று ஆழ்வாரும், ‘குடமாடியை (கோபிகா கிருஷ்ணனை) இடத்தேகொண்டு’ என்று சைவத்திரு முறைகளும் பாடுகின்றன.
அவ்வைப் பாட்டியும் ஒரு படி மேலே போய், ‘அரனை மறவாதே, திருமாலுக்கு அடிமை செய்’ என்கிறாள்.
தமிழகத்தில் இம்மட்டில் சமரசபாவம் புரிந்த எல்லோரிடமும் இருந்தே வந்துள்ளது. அதனாலேயே 27 நட்சத்திரங்களில் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் இரண்டுக்கும் மட்டும் திரு சேர்த்து திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம்” என்று விரியும் பெரியவரின் திருவாக்கு, அடுத்தடுத்து பல பரிமாணங்களைக் காட்டுகிறது.
மஹாவிஷ்ணுவானவர் திருபுவன சக்ரவர்த்தி. சிவனோ பிச்சாண்டி. இருவருடைய சொத்துக்களை கொஞ்சம் கணக்கெடுப்போம்.
சிவனிடம் சாம்பல், எருக்கம்பூ தும்பைப்பூ, ஊமத்தை, மண்டை ஓடு, யானைத்தோல், பாம்பு. இவைதான் உள்ளன. இது எதுவுமே விலைபோகாதவையும்கூட.
மஹாவிஷ்ணுவிடமோ கிரீட குண்டலம், முக்தாஹாரம், பட்டுப்பீதாம்பரம், கௌஸ்துப மணி, இத்யாதிகள்… இவற்றுக்கோ விலையை நிர்ணயமே செய்ய முடியாது.
இதிலிருந்து சந்தோஷத்துக்கு விஷ்ணு, வைராக்கியத்துக்கு சிவன் என்பது புரியவருகிறது. இதை ஒட்டியே காலை எழுந்தவுடன் ‘ஹரி நாராயண ஹரி நாராயண’ என்கிறோம். பொழுது நன்றாக சந்தோஷமாக செல்ல வேண்டுமே?
மாலையில் ‘சிவசிவ’ என்கிறோம். என்ன பொருத்தமான வழிகாட்டல் பாருங்கள். பகல் முழுக்க சந்தோஷமாக வாழ, நாராயணன். இரவில் ஒடுங்கி அமைதியாய் தூங்க, சிவன். அண்டம் பிண்டம் இரண்டும் ஒரே சரக்கானதால் உலக நடப்புக்கும் நம் அக உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
காலையில் பஞ்சகச்சம் உடுத்தி, சந்தியாவந்தனம் செய்த ஒருவர், பகலில் சூட் போட்டுக்கொண்டு ஆபீஸுக்கு போகிறார். இது காரியத்துக்கு ஏற்ப போடும் வேஷம். இங்கேயும் ஒன்றான பரமாத்மாதான் விஷ்ணுவாக காரிய மாற்றும்போதும் சிவமாக காரியமுடிக்கும் போதும் செயலாற்றுகிறது.”
இப்படி சிவ- விஷ்ணுவின் பேத- அபேத சிறப்புக்களை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கூறும் பெரியவர், இதை உணராமல், ‘என் ஸ்வாமியே பெரியவர்’ என்று உன்மத்தமாக சிந்தித்த ஒருவரைப் பற்றியும், அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் சொல்லும்போது, சிரிப்போடு சிந்தனையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
- அது ஒரு திருப்பாற்கடல் கதை!

Tuesday, September 10, 2013

On 27th August myself with my cousin brother proceeded to Ilayathangudi from Sivagangai. On our way, we saw the whole area very dry (as always) and he was lamenting that there is no rain and the cattles are the worst sufferers as human beings somehow manage drinking water, whereas the cattles suffer the worst in such dry conditions. We were saying that while Ganges is in floods, here cattles are suffering for drinking water. We basically went to Ilayathangudi as it is the place that Maha Periyava liked very much and had stayed there for 3 consecutive years. I started narrating the incidents wherein MahaPeriyavaa had brought rains to rain-starved places... he narrated some incidents where Kaviyogi Maharshi Shuddhananda Bharatiyar brought rains to villages through His prayers. Thus we both were narrating incidents of Maha Periyava and Shuddhananda Bharatiyar one after the other - this continued throughout our journey of nearly 1 hour. We were narrating such incidents one after the other till we reached Ilayathangudi.
We reached Kailasanathar NithyaKalyani temple and offered our simple Pooja. When I asked the PUnditji his age, he mentioned 95! I was thrilled to hear this as he must have spent good number of days and years with MahaPeriyavaa. Punditji mentioned that he had spent a lot of time with Maha Periyavaa and had the good fortune of taking KailasaNathar NithyaKalyani prasadam to Maha Periyavaa all the 3 years that He stayed there. We visited Mahadevendra Saraswathi Adishtanam and the Veda Patasala (7 vidyarthis with a very young Vidyapakar) and were moved with the serenity that the place had. We felt that we were in "Devaloka". We left the place as it was nearing 7:30 pm and we wanted to rush to Thirukoshtiyur temple on our way back to Sivagangai.
We had just taken the car and it started thundering, lightening and heavy downpour started. It rained cats and dogs for the next 2 hours - ThiruKoshtiyur temple had closed early due to heavy rains - and we had some difficulty finding the way due to the heavy downpour. We both were chanting Rama Rama till we reached home safely! From this one can imagine the extent of the heavy downpour!
As we reached home we both realised that just the narration of the incidents related to MahaPeriyavaa's grace in bringing rains to rain-starved villages and His karunyam to villagers had brought in so much rains even today just on mentioning His name and remembering His grace! We felt His blessings and were happy that the cattles would get enough drinking water for at least another 3 months!
Jeya Jeya Sankara! Hara Hara Sankara!

Courtesy:Uma Shankar

Sunday, September 8, 2013

கஷ்டத்தைப் பெரிதுபடுத்தாதே! ------------------------------------------------

* தர்மத்திற்கு எப்போதும் அழிவு இல்லை. நிலையான தர்மத்தை மதித்து நடக்க வேண்டியது அவசியம். தர்மப்படி நடப்பவனை பஞ்சபூதங்களும், பிராணிகளும் மதித்து வணங்கும்.
* மனதிற்குள் கஷ்டங்களை வைத்துக் கொண்டு வருந்தாதீர்கள். இறைவனிடம் மனம் விட்டு வேண்டினால் நிம்மதி பிறக்கும்.
* குழந்தை அடம் பிடித்தால் தாய் கட்டிப் போடுவது போல், நம்மிடம் உள்ள ஆசை என்ற விஷமத்தை நீக்க, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப் போடுகிறான்.
* நம்முடைய துன்பத்தையே பெரிதாக எண்ணிக் கொண்டு, பிறருக்கான பணியை செய்யாமல் விட்டுவிடக்கூடாது.
* நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீரில் மூழ்கிய குடம் போல துன்பம் லேசாகிவிடும்.
* எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தவறும் போது, அதற்குரிய துன்பத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்


Courtesy: Shri Bhaskaran Shivaraman

Friday, September 6, 2013

"ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று சந்தோஷமாகத்தானிருக்கு" கட்டுரையாளர்;ரா.கணபதி தட்டச்சு;வரகூரான்.

 

"ராமராஜ்யம்,ராமராஜ்யம் என்கிறார்களே,
அப்படிப்பட்ட ராமர் இருந்த காலத்தில்
நாம் இல்லையே என்று எல்லோரும்
நினைக்கிறார்கள். எனக்கு நல்ல வேளையாக
ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே
என்று சந்தோஷமாகத்தானிருக்கு" என்று
பெரியவாள் கூறுகிறாரென்றால் தூக்கி
வாரிப் போடுகிறதா?
ஹாஸ்யக் கலைஞரல்லவோ அவர்?
ஸஸ்பென்ஸ்,ஸர்பரைஸ் எல்லாம்
வைப்பதில் தேர்ந்தவர் தொடர்கிறார்.
"ராமர் மனுஷ்யனாகத் தன்னை ரொம்பவும்
குறைத்துக்கொண்டு க்ஷத்ரிய தர்மங்களையெல்லாம்
சாஸ்திரப்படிப் பண்ணிக் காட்டியவர். அவர் காலத்தில்
என் மாதிரி ஒரு ஸந்நியாஸியை, மடாதிபதியைப்
பார்த்தால் என்ன பண்ணியிருப்பார்?
"அவரே ஓடிவந்து நமஸ்காரம் பண்ண்ணியிருப்பார்!
அதைவிட ஒரு கஷ்டம் உண்டா? அவர் காலத்தில்
பிறக்காமல் இப்போ பிறந்திருப்பதால்தானே
அவருக்கு நமஸ்காரம் பண்ணுகிற பாக்யம்
எனக்குக் கிடைத்திருக்கிறது!"

"ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே<br />என்று சந்தோஷமாகத்தானிருக்கு" <br /><br />கட்டுரையாளர்;ரா.கணபதி<br />தட்டச்சு;வரகூரான்.<br /><br />"ராமராஜ்யம்,ராமராஜ்யம் என்கிறார்களே,<br />அப்படிப்பட்ட  ராமர் இருந்த காலத்தில்<br />நாம் இல்லையே  என்று எல்லோரும்<br />நினைக்கிறார்கள். எனக்கு நல்ல வேளையாக<br />ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே<br />என்று சந்தோஷமாகத்தானிருக்கு"  என்று<br />பெரியவாள் கூறுகிறாரென்றால் தூக்கி<br />வாரிப் போடுகிறதா?<br /><br />ஹாஸ்யக் கலைஞரல்லவோ அவர்?<br />ஸஸ்பென்ஸ்,ஸர்பரைஸ் எல்லாம்<br />வைப்பதில் தேர்ந்தவர் தொடர்கிறார்.<br />"ராமர் மனுஷ்யனாகத் தன்னை ரொம்பவும்<br />குறைத்துக்கொண்டு க்ஷத்ரிய தர்மங்களையெல்லாம்<br />சாஸ்திரப்படிப் பண்ணிக் காட்டியவர். அவர் காலத்தில்<br />என் மாதிரி ஒரு ஸந்நியாஸியை, மடாதிபதியைப்<br />பார்த்தால் என்ன பண்ணியிருப்பார்?<br /><br />"அவரே ஓடிவந்து நமஸ்காரம் பண்ண்ணியிருப்பார்!<br />அதைவிட ஒரு கஷ்டம் உண்டா? அவர் காலத்தில்<br />பிறக்காமல் இப்போ பிறந்திருப்பதால்தானே<br />அவருக்கு நமஸ்காரம் பண்ணுகிற பாக்யம்<br />எனக்குக் கிடைத்திருக்கிறது!"

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top