Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, August 31, 2013

Varagooran Narayanan தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே…!!?

தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.
”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது. பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.
‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா
நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப்
பெரியவாகிட்டே சொன்னோம்.
அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.
அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.
பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.
விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து
ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!
காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்! அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.
மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு
சொன்னார்.
ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!
தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா
அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!
காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே…!!?

தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.

”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது. பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.

‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா
நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப்
பெரியவாகிட்டே சொன்னோம்.

அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து
ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!

காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்! அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு
சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா
அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!

காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!

Thursday, August 29, 2013

Varagooran Narayanan ஒரு வெள்ளைகாரருக்கு போதித்த "கர்மம்" கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன் தீபம் இதழில் (கட்டுரை-சுருக்கமான பகுதி

ஒரு வெள்ளைக்காரர், பெரியவரைச் சந்திக்கிறார். மனம்விட்டுப் பேசுகிறார்:
‘கடவுள் அன்புமயமானவர். கருணாமூர்த்தி – பரம தயாளன் என்றே எல்லா மதமும் கூறுகிறது. ஆனால், உங்கள் மதம் அப்படிக் கூறினாலும் வாள், திரிசூலம், வேல், சங்கு, சக்கரம் என்று ஆயுத பாணியாக கடவுளை வடிவப்படுத்தியிருப்பது, சொன்ன கருத்துக்கு எதிராக உள்ளதே?’ என்று கேள்வி எழுப்புகிறார்.
‘அந்த ஆயுதங்கள் அன்பு மயத்தை, கருணையை, தயாபரத்தைப் பாதுகாக்கவே உள்ளவை. தேவ சக்திக்கு எதிராக அசுர சக்தி என்பது எல்லா மதத்திலும் தானே உள்ளது? நாங்கள் அசுரர்கள் என்பதை நீங்கள் சைத்தான் என்றோ, கெட்ட சக்தி என்றோ தானே குறிப்பிடுகிறீர்கள்? அந்த கெட்ட சக்திகளை, சைத்தானை, அடக்கவும் எதிர்க்கவுமே அந்த ஆயுதங்கள். அவை நமக்கெதிரானது அல்ல’ – என்கிறார் பெரியவர்.
‘எங்கள் கடவுள் தன்னிடம் சரணடைபவர்களை மன்னித்து, அவர்களுக்கு தன் மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம் கொடுத்து விடுகிறார். ஆனால், உங்கள் கடவுள் சொர்க்கம் நரகம் என்று வைத்து தண்டிப்பதாகத் தெரிகிறது. இது கடவுள் செயல் போலில்லையே! ராஜாக்கள் செயல் போலல்லவா உள்ளது?’ என்கிறார் வெள்ளைக்காரர்.
பதிலுக்கு, பெரியவர் திருப்பிக் கேட்கிறார்.
‘எல்லோரையும் கடவுள் மன்னித்து விடுகிறாரா..? எல்லோருமே மோட்சத்துக்குத்தான் போகிறார்களா? நன்றாகத் தெரியுமா உங்களுக்கு?’ என்று திரும்பக் கேட்கிறார் பெரியவர்.
‘ஆம்… அவரிடம் சரணடைந்து விட்டால் போதும். நமக்கு மோட்சம் உறுதி..!’ என்கிறார் வெள்ளைக்காரர்.
‘சரி… அருகே ஒரு பிரசவ விடுதி உள்ளது. அங்கே போய் இன்று பிறக்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வாருங்கள். பிறகு, நாம் நம் பேச்சைத் தொடரலாம்’ என்கிறார் பெரியவர்.
அவரும் பிரசவ விடுதி நோக்கிச் செல்கிறார்.
அந்த வெள்ளைக்காரர் சென்று நின்ற பிரசவ விடுதியில் அன்று பல குழந்தைகள் பிறந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்று கருப்பு… ஒன்று சிவப்பு… ஒன்று மாநிறம்… ஒன்று புஷ்டி, ஒன்று சவலை!
இப்படிப் பிறப்பது இயற்கைதானே? நமக்கும் இது நன்றாகத் தெரியுமே! இதைப்போய் எதற்காக மெனக்கெட்டு கவனித்துவிட்டு வரச்சொன்னார் பெரியவர்? அதையும்தான் பார்ப்போமே!
அந்த வெள்ளைக்காரர் பார்த்துவிட்டு திரும்பி வந்தார். திரும்பவும் இருவரிடையே பேச்சு தொடங்கியது.
என்ன… பிரசவ விடுதிக்கு போய்ப் பார்த்தீர்களா?”
பார்த்தேன்… பல குழந்தைகள் பிறந்திருந்தன.”
எல்லாமே பச்சிளம் குழந்தைகள்தானே?”
ஆமாம்.”
அந்தக் குழந்தைகள் அவ்வளவும் ஒன்றுபோல இருந்தனவா?”
அது எப்படி இருக்க முடியும்? ஒவ்வொரு தாய்க்கும் ஒரு உடல்வாகு. அதற்கேற்பதானே குழந்தைகளும் பிறக்க முடியும்?”
என்றால், ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதம்! அப்படித்தானே?”
ஆம்…”
உடல் வாகை விட்டுவிடுவோம். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அவ்வளவு பேரும் செல்வந்தரா?”
இல்லை. ஒவ்வொரு பெற்றோர் ஒவ்வொரு விதம். இதில் ஒரு குழந்தை மிகவே சவலை…”
என்றால், இந்தப் பிள்ளைகள் பிறக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன்தான் பிறந்துள்ளன. அப்படித் தானே?”
ஆம்.”
நாம் வளர வளரத்தான் பாவம் செய்கிறோம். குழந்தைகள் இனிதான் வளரப் போகிறார்கள். பாவம் செய்யாத அவர்களை, அந்தக் கடவுள் படைக்கும் போதே ஏன் சமமாக, ஒரே அழகாக உடல்நலத்தோடு படைக்கவில்லை?”
- பெரியவர் பாயின்ட்டைத் தொடவும், வெள்ளைக்காரரிடம் சிந்தனை.
என்ன யோசிக்கிறீர்கள்? அளவற்ற அருளாளனும், கருணாமூர்த்தியுமான இறைவன், நாம் பாவங்களைச் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டாலே மன்னித்தும் விடுகின்றவன், அதாவது பாவிகளான நம்மையே மன்னிப்பவன், பிள்ளைகளை மட்டும் எதனால் ஏற்றத்தாழ்வுடன் படைக்க வேண்டும்?”
- அவரிடம் சிந்தனை தொடர்ந்தது.
இப்படிப் பிறக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன் படைக்கும் கடவுள், ஒன்று கடவுளாக இருக்க முடியாது. இல்லாவிட்டால், இந்தப் படைப்புக்குப் பின்னாலே கடவுளாலும் குறுக்கிட முடியாத ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும் என்றுகூட இருக்கலாம் அல்லவா?”
ஆம்… இங்கே அப்படித்தான் நினைக்க வேண்டியுள்ளது. ஆனால், கடவுளால் கூட குறுக்கிட முடியாத ஒரு சக்தி இருக்க முடியுமா என்கிற கேள்வியையும் புறந்தள்ள முடியவில்லை.”
கடவுள் மீதுள்ள நமது பக்தி அப்படி எண்ண வைக்கிறது. அவரைவிட பெரியவரோ பெரியதோ இல்லைதான். அவர்தான் அண்டசராசரங்களைப் படைத்து, நம்மையும் படைத்து இந்த உலக இயக்கம் நடந்தபடி உள்ளது. அவர் அளவற்ற கருணை உடையவர்தான். அவர் மன்னிக்கிறார், ரட்சிக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆனால், எப்போது எங்கே எப்படி என்று மூன்று கேள்விகள் அதன் பின்னால் ஒளிந்துள்ளன.
முதலில் ஏற்றத்தாழ்வே இல்லாத சமத்துவமான மனிதகுலம் இருந்து, அவர்களுக்கெல்லாமும் அழகான பிள்ளைகள் பிறந்து, பேதமில்லாத பிறப்பாகத்தான் மனித குலத்தின் தோற்றம் இருந்தது. அதன்பின் யுகங்கள் தோன்றின. அந்தந்த யுகத்திற்கென்று தர்மங்கள் மாறின. ஏற்றத்தாழ்வில்லாத மனித குலமும், இதனால் ஏற்றத்தாழ்வுக்கு ஆளானது. ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளே கூட, ஒன்று வீடு வாசலோடு வசதியாக இருக்க, இன்னொன்று பிச்சை எடுக்கும் நிலையை எல்லாம் பார்க்கிறோம். இதற்கெல்லாமும் ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்தக் காரணத்துக்குப் பேர்தான் கர்மம்!”- என்கிறார் பெரியவர்.

ஒரு வெள்ளைகாரருக்கு போதித்த "கர்மம்"

கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன் தீபம் இதழில்
(கட்டுரை-சுருக்கமான பகுதி)

ஒரு வெள்ளைக்காரர், பெரியவரைச் சந்திக்கிறார். மனம்விட்டுப் பேசுகிறார்:

‘கடவுள் அன்புமயமானவர். கருணாமூர்த்தி – பரம தயாளன் என்றே எல்லா மதமும் கூறுகிறது. ஆனால், உங்கள் மதம் அப்படிக் கூறினாலும் வாள், திரிசூலம், வேல், சங்கு, சக்கரம் என்று ஆயுத பாணியாக கடவுளை வடிவப்படுத்தியிருப்பது, சொன்ன கருத்துக்கு எதிராக உள்ளதே?’ என்று கேள்வி எழுப்புகிறார்.

‘அந்த ஆயுதங்கள் அன்பு மயத்தை, கருணையை, தயாபரத்தைப் பாதுகாக்கவே உள்ளவை. தேவ சக்திக்கு எதிராக அசுர சக்தி என்பது எல்லா மதத்திலும் தானே உள்ளது? நாங்கள் அசுரர்கள் என்பதை நீங்கள் சைத்தான் என்றோ, கெட்ட சக்தி என்றோ தானே குறிப்பிடுகிறீர்கள்? அந்த கெட்ட சக்திகளை, சைத்தானை, அடக்கவும் எதிர்க்கவுமே அந்த ஆயுதங்கள். அவை நமக்கெதிரானது அல்ல’ – என்கிறார் பெரியவர்.

‘எங்கள் கடவுள் தன்னிடம் சரணடைபவர்களை மன்னித்து, அவர்களுக்கு தன் மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம் கொடுத்து விடுகிறார். ஆனால், உங்கள் கடவுள் சொர்க்கம் நரகம் என்று வைத்து தண்டிப்பதாகத் தெரிகிறது. இது கடவுள் செயல் போலில்லையே! ராஜாக்கள் செயல் போலல்லவா உள்ளது?’ என்கிறார் வெள்ளைக்காரர்.

பதிலுக்கு, பெரியவர் திருப்பிக் கேட்கிறார்.

‘எல்லோரையும் கடவுள் மன்னித்து விடுகிறாரா..? எல்லோருமே மோட்சத்துக்குத்தான் போகிறார்களா? நன்றாகத் தெரியுமா உங்களுக்கு?’ என்று திரும்பக் கேட்கிறார் பெரியவர்.

‘ஆம்… அவரிடம் சரணடைந்து விட்டால் போதும். நமக்கு மோட்சம் உறுதி..!’ என்கிறார் வெள்ளைக்காரர்.

‘சரி… அருகே ஒரு பிரசவ விடுதி உள்ளது. அங்கே போய் இன்று பிறக்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வாருங்கள். பிறகு, நாம் நம் பேச்சைத் தொடரலாம்’ என்கிறார் பெரியவர்.

அவரும் பிரசவ விடுதி நோக்கிச் செல்கிறார்.

அந்த வெள்ளைக்காரர் சென்று நின்ற பிரசவ விடுதியில் அன்று பல குழந்தைகள் பிறந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்று கருப்பு… ஒன்று சிவப்பு… ஒன்று மாநிறம்… ஒன்று புஷ்டி, ஒன்று சவலை!

இப்படிப் பிறப்பது இயற்கைதானே? நமக்கும் இது நன்றாகத் தெரியுமே! இதைப்போய் எதற்காக மெனக்கெட்டு கவனித்துவிட்டு வரச்சொன்னார் பெரியவர்? அதையும்தான் பார்ப்போமே!

அந்த வெள்ளைக்காரர் பார்த்துவிட்டு திரும்பி வந்தார். திரும்பவும் இருவரிடையே பேச்சு தொடங்கியது.

என்ன… பிரசவ விடுதிக்கு போய்ப் பார்த்தீர்களா?”

பார்த்தேன்… பல குழந்தைகள் பிறந்திருந்தன.”

எல்லாமே பச்சிளம் குழந்தைகள்தானே?”

ஆமாம்.”

அந்தக் குழந்தைகள் அவ்வளவும் ஒன்றுபோல இருந்தனவா?”

அது எப்படி இருக்க முடியும்? ஒவ்வொரு தாய்க்கும் ஒரு உடல்வாகு. அதற்கேற்பதானே குழந்தைகளும் பிறக்க முடியும்?”

என்றால், ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதம்! அப்படித்தானே?”

ஆம்…”

உடல் வாகை விட்டுவிடுவோம். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அவ்வளவு பேரும் செல்வந்தரா?”

இல்லை. ஒவ்வொரு பெற்றோர் ஒவ்வொரு விதம். இதில் ஒரு குழந்தை மிகவே சவலை…”

என்றால், இந்தப் பிள்ளைகள் பிறக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன்தான் பிறந்துள்ளன. அப்படித் தானே?”

ஆம்.”

நாம் வளர வளரத்தான் பாவம் செய்கிறோம். குழந்தைகள் இனிதான் வளரப் போகிறார்கள். பாவம் செய்யாத அவர்களை, அந்தக் கடவுள் படைக்கும் போதே ஏன் சமமாக, ஒரே அழகாக உடல்நலத்தோடு படைக்கவில்லை?”

- பெரியவர் பாயின்ட்டைத் தொடவும், வெள்ளைக்காரரிடம் சிந்தனை.

என்ன யோசிக்கிறீர்கள்? அளவற்ற அருளாளனும், கருணாமூர்த்தியுமான இறைவன், நாம் பாவங்களைச் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டாலே மன்னித்தும் விடுகின்றவன், அதாவது பாவிகளான நம்மையே மன்னிப்பவன், பிள்ளைகளை மட்டும் எதனால் ஏற்றத்தாழ்வுடன் படைக்க வேண்டும்?”

- அவரிடம் சிந்தனை தொடர்ந்தது.

இப்படிப் பிறக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன் படைக்கும் கடவுள், ஒன்று கடவுளாக இருக்க முடியாது. இல்லாவிட்டால், இந்தப் படைப்புக்குப் பின்னாலே கடவுளாலும் குறுக்கிட முடியாத ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும் என்றுகூட இருக்கலாம் அல்லவா?”

ஆம்… இங்கே அப்படித்தான் நினைக்க வேண்டியுள்ளது. ஆனால், கடவுளால் கூட குறுக்கிட முடியாத ஒரு சக்தி இருக்க முடியுமா என்கிற கேள்வியையும் புறந்தள்ள முடியவில்லை.”

கடவுள் மீதுள்ள நமது பக்தி அப்படி எண்ண வைக்கிறது. அவரைவிட பெரியவரோ பெரியதோ இல்லைதான். அவர்தான் அண்டசராசரங்களைப் படைத்து, நம்மையும் படைத்து இந்த உலக இயக்கம் நடந்தபடி உள்ளது. அவர் அளவற்ற கருணை உடையவர்தான். அவர் மன்னிக்கிறார், ரட்சிக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆனால், எப்போது எங்கே எப்படி என்று மூன்று கேள்விகள் அதன் பின்னால் ஒளிந்துள்ளன.

முதலில் ஏற்றத்தாழ்வே இல்லாத சமத்துவமான மனிதகுலம் இருந்து, அவர்களுக்கெல்லாமும் அழகான பிள்ளைகள் பிறந்து, பேதமில்லாத பிறப்பாகத்தான் மனித குலத்தின் தோற்றம் இருந்தது. அதன்பின் யுகங்கள் தோன்றின. அந்தந்த யுகத்திற்கென்று தர்மங்கள் மாறின. ஏற்றத்தாழ்வில்லாத மனித குலமும், இதனால் ஏற்றத்தாழ்வுக்கு ஆளானது. ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளே கூட, ஒன்று வீடு வாசலோடு வசதியாக இருக்க, இன்னொன்று பிச்சை எடுக்கும் நிலையை எல்லாம் பார்க்கிறோம். இதற்கெல்லாமும் ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்தக் காரணத்துக்குப் பேர்தான் கர்மம்!”- என்கிறார் பெரியவர்.

Tuesday, August 27, 2013

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு- மஹா பெரியவா

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.
''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, 'ஸம்ஸ்காரம்'பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?'' என்று கேட்கலாம்.
சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.
ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.
சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - அதாவது 'இறுதியான வேள்வி' என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.
'ஸம்ஸ்காரம்'என்றால் 'நன்றாக ஆக்குவது' என்று அர்த்தம். ('நன்றாக ஆக்கப்பட்ட'பாஷைதான் 'ஸம்ஸ்க்ருதம்'.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் - அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
'தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்' என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம் செய்ய முடிகிறது.
பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு - என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!
ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை 'பம்ப்' பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும் மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை - என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக் கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு 'பர்பஸ்' இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.
இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.
யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே? கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் 'நிஷித்தம்' என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ''தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?''- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் - என்று வசனமே இருக்கிறது. '' தேஹோ தேவாலய : ப்ரோக்தா '' - உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ' காயமே கோயிலாக ' என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ''முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்'' என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.
ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று 'டிஸ்போஸ்' பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.
செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது? அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?
ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ''அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்'' என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.
சைவ ஸித்தாந்தத்தில் ஈஸ்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை (தநுவை) ஸ்ருஷ்டி செய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக்கொள்ளும்வரை போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான தநுவைக் கரணங்கள் ஓய்ந்த பிற்பாடும் அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து ஸம்ஸ்கரித்துத்தான் அவனிடம் வேள்விப்பொருளாகத் திரும்பக்கொடுக்க வேண்டும்.
இதிலே ஒரு வித்யாஸம். மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை அவன் பண்ணமுடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா? அதனால் அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம்.
'உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்; போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்; ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?' என்று முதலில் கேட்டுக்கொண்டோம். இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே சேர்பிப்பிக்ப்பட வேண்டும்; உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் முழுக்க நம் பொறுப்பில் இருப்பது; அதனால் இதைச் செய்யாவிட்டாலே நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது!

KANCHI MAHA SWAMIGAL ARULURAI

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்"

Sunday, August 25, 2013

ஸ்ரீ பட்டு சாஸ்திரிகள்.[சக்தி விகடன்] [பெரியவா ஜெயந்தி -ஸ்பெஷல் போஸ்ட்] காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் ஜயந்தி 25-05-2013

... பத்தாவது வயதில்… சிறுவனாக இருக்கும்போதே மகா பெரியவாளிடம் சேர்ந்து, அவருடனேயே இருக்கின்ற பாக்கியத்தைப் பெற்ற ஸ்ரீபட்டு சாஸ்திரிகளுக்குத் தற்போது 84 வயது. ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி பக்த ஜன டிரஸ்ட்டை நிறுவி, வருடந்தோறும் காஞ்சிப் பெரியவருக்கு உத்ஸவ விழா எடுத்து வருகிறார். சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில், வைகாசி மாத அனுஷ நட்சத்திர நன்னாளில் துவங்கி, 15 நாள் நடைபெறும் இந்த உத்ஸவத்தைக் காண, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர்.
லக்ஷ்மி நாராயணனைத் தொடர்ந்து… காஞ்சி மகான் பற்றிய சில அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ஸ்ரீபட்டு சாஸ்திரிகள்:
”மகா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது.
ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மகாபெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.
அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மகாபெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க’ என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணாங்க.
அப்புறம்… மகாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்கிரகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மகாபெரியவாள்மேல ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும், மகாபெரியவாளோட பஞ்சலோக விக்கிரகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, விக்கிரகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்கிரகம்தான், அவர் பண்ணின கடைசி விக்கிரகம்).
இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்கிரகத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரியமா இருந்தேன். திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.
‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலைல, மகா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ்குமார் சொல்லிருக்கார். சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல் லிக் கொடுத்தப்ப, ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!
பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே, 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார்கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மகாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!
பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.
பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசைவேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. அந்த நேரத்துல, விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த் தனை செஞ்சுட்டுதான் கூலி வேலைக்குப் போவாராம்.
எங்ககிட்ட வந்த அந்தக் குடியானவர், ‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!
‘மகா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம, விக்கிரகத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.
மகா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மகான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்கிரகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்கிரகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மகா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!
ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மகா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மகானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.
நன்றி – சக்தி விகடன்

Friday, August 23, 2013

என்கிட்ட எந்த சக்தியும் இல்லை - மகா பெரியவா !

கா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.

அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, ‘கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்’னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய்தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், ‘அம்மா… இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு’ என்று சொல்லியிருக்கிறார். இவளும், ‘பரவாயில்லை… எடுத்துக்கோங்க’ என்றாளாம். உடனே அந்தக் குருக்கள், ‘நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறாள். ‘காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்… அவரை தரிசனம் செய்யுங்கோ’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.

இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கும் வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தையும் கண்கலங்கச் சொன்னாள்.

உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, ‘என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!’ என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.

அதே நேரம் அந்தப் பெண், ‘குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!’ என்றாளாம் சத்தமாக… பரவசம் பொங்க!

ஆமாம்… காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. ‘நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.

ஆனால் இது குறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்” எனக் கண்கள் பனிக்க விவரித்த பாலு இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.

”பக்தர் ஒருவர் வெளிநாடு போயிட்டு வந்திருந்தார். அவருக்குப் பெரியவா கிட்ட அசாத்திய பக்தி. பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் வந்திருந்தார். தரிசனம் எல்லாம் ஆச்சு. ஆனால், அவருக்குப் பெரியவா தீர்த்தம் கொடுக்கலை (கடல் கடந்து போயிட்டு வந்தா தீர்த்தம் கொடுக்க இயலாது).

பக்தருக்கு மிகுந்த வருத்தம். கிட்டத்தட்ட ஒருவாரமா சாப்பிடவும் பிடிக்காமல் மனம் வாடிக் கிடந்தார். மேலும், ஒரு நல்ல காரியம், சிராத்தம் போன்றவற்றிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த பக்தரின் நிலை, அன்பர்கள் சிலரது மூலம் பெரியவாளுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர், ஒரு ஸனாதன மடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து விலகி எதுவும் செய்ய முடியாதே!

அதே நேரம் அந்த பக்தரை அப்படியே விட்டுவிடவும் முடியாது. மகா பெரியவா ஒரு வழி செய்தார். மணக்கால் நாராயண சாஸ்திரிகளை அழைத்தார். அவரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து, ‘இதை உடைத்து எடுத்துக் கொண்டு வா; இளநீர் கீழே சிந்தாமல் கவனமாக உடைக்க வேண்டும்’ என்றார். அவரும் அப்படியே தேங்காயை உடைத்து எடுத்து வந்தார். அதைத் தொட்டு ஆசி வழங்கிய பெரியவா, அந்த பக்தரைக் கூப்பிட்டு, ‘இதோ தீர்த்தம். இந்த இளநீரை வாங்கிக்கோ!‘ என்றார். பக்தருக்கு அளவில்லா மகிழ்ச்சி; பெரியவா தீர்த்தம் கொடுத்துட்டார்னு பரம சந்தோஷம். ஒரு வாரம் காத்திருந்தது வீண்போகவில்லை என்று அவருக்குத் திருப்தி.

மகா பெரியவாளுக்கோ, தானும் சம்பிரதாயத்தை மீறி (நேரடியாக) தீர்த்தம் கொடுக்காமல், தேங்காயை உடைத்து அதன் இளநீரைத் தந்து, பக்தரை மகிழ்வித்த நிம்மதி.

ஆமாம்… மகா பெரியவா எதைச் செய்தாலும், அதில் மற்றவர்கள் நலனே உள்ளடங்கி இருக்கும்.

நீ ஐந்தாம் கிளாஸ் படித்திவிட்​டு வா - மஹா பெரியவா

சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் ஏன் அக்காவின் கணவர், அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர்.

ஒரு சமயம் பெரியவா, விழுப்புரத்தருகே உள்ளே எல்லீஸ் சத்திரம் என்ற ஊரில் கேம்ப். அன்று பிரதோஷம். சிறிய கிராமமானதால் கூட்டம் அதிகம் இல்லை. நான், ஏன் அக்கா, கே.வி.கே. சாஸ்திரி, அக்காவின் பையன் வித்யா சங்கர் பிரதோஷ பூஜைக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி. அனைவருக்கும் தரிசனம் ஆயிற்று.உத்தரவு பெற்று வீடு திரும்பலாம் என்று நாங்கள் பெரியவா உட்கார்ந்திருந்த கீத்து கொட்டகையில் நுழைந்தோம்.

“கிருஷ்ணசுவாமி, எப்படி இருக்கே?” ஏகாதசி புராணம் எல்லாம் நன்னா நடக்கிறதா?” என்றார் பெரியவா.

நாங்கள் அனைவரும் நமஸ்கரித்தோம். சிறுவன் போட்டனே ஒரு கேள்வி.

“பெரியவாளைப் பார்த்து “தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” என்றான்.

உடனே ஏன் சகோதரி, “அப்படி பேசப்படாது” என்று பிள்ளையை இழுக்க, பெரியவா கருணையுடன், “உனக்கு அந்த மாடு வேணுமா? தரேன் – ஆனா ஒரு கண்டிஷன்” என்றார்.

“நீ இப்போ என்ன படிக்கற?” என்று வினவினார்.

“மூணாம் கிளாஸ்” என்று உடனே பதில் வந்தது.

பெரியவா உடனே, “நீ ஐந்தாம் கிளாஸ் படித்திவிட்டு வா, நான் உனக்கு மாடு தருகிறேன்” என்றார்.

நாங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் சங்கர் பெரியவாளை பார்த்து “சத்தியமாக?” என்று கேட்டான்.

பெரியவா, “குழந்தாய் நான் சொன்னா வார்த்தையை தவற மாட்டேன். நீ போய்விட்டு வா” என்று சிரித்துக்கொண்டே பிரசாதம் வழங்கினார்.

இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. இப்போது சங்கர் ஆறாம் வகுப்பில் போர்ட் ஹைஸ்கூலில் படிக்கிறான். அப்போது பெரியவா மறுபடியும் வளவனூருக்கே வந்திருந்துந்தார். பெரியவாளை தரிசிக்க சென்றோம். வழக்கம்போல் குசலப்ப்ரச்னம் ஆன பிறகு, பெரியவா புன்முறுவல் பூத்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை.

திடீரென சங்கர் எல்லீஸ் சத்திர உரையாடலை ஞாபகப்படுத்தி, “இப்போது நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன். எனக்கு மாடு வேணும்” என்று கேட்டான். பெரியவா அதிர்ச்சி அடைந்தா மாதிரி பாவனையுடனே “என்ன படிக்கிற ஆறாம் கிளாஸா?” என்று கேட்டார்.

“ஆமாம்”

“அது சரி, அப்போ நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்துவிட்டு வந்தால் மாடு தறேன் என்று சொன்னேள். இப்போ நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்” என்று நிறுத்தினான். நாங்கள் பயந்து விட்டோம்.

பெரியவா தொடர்ந்தார், “மறுபடியும் நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்து விட்டு வந்தால்…”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சியா?”, பெரியவா கேட்டார்.

“எங்கம்மா எனக்கு டியூஷன் வெச்சு நாலாம் கிளாஸிலிருந்து ஆறாம் கிளாஸில் சேத்துட்டா, அப்போ நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சா மாதிரிதானே?”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். மறுப்பு ஏதும் சொல்லாமல் “நீங்க சொல்வது சரி” என்று சங்கர் வீடு திரும்பினான்.

என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே?

Wednesday, August 21, 2013

ல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈஸ்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது: ‘ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி’ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும் கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால், எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்… எந்த ஆஸாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும்… ஏக பரமாத்மாவையே சென்றடைகிறது. ‘கேசவம்’ என்று சொல்லியிருப்பதை கிருஷ்ணர் என்ற அவதாரம் என்றோ அல்லது அநேக தெய்வங்களில் ஒன்றாக இருக்கப்பட்ட விஷ்ணு என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது.க, அ, ஈச, வ என்ற நாலு வார்த்தை களும் சேர்ந்து ‘கேசவ’ என்றாகி யிருக்கிறது. ‘க’ என்றால் பிரம்மா; ‘அ’ என்றால் விஷ்ணு; வேத புராணாதிகளில் பல இடங்களில் பிரம்ம- விஷ்ணுக்களுக்கு இப்படி (முறையே ‘க’ என்றும், ‘அ’ என்றும்) பெயர் சொல்லியிருக்கிறது. ஈச என்பது சிவன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. க, அ, ஈச மூன்றும் சேர்ந்து ‘கேச’ என்றாகும். அதாவது பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களான த்ரிமூர்த்திகளைக் ‘கேச’ என்பது குறிக்கும். ‘வ’ என்பது, தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். த்ரிமூர்த்திகளை எவன் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ, அதாவது த்ரிமூர்த்திகளும் எவனுக்குள் அடக்கமோ, அவனே கேசவன்.ஆசார்யாள் இப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான மூவரையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவன் என்றால், அவன் ஏக பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஸாமிக்கும் ஆஸாமிக்கும் செய்கிற நமஸ்காரத்தை அந்த ஸாமிக்குள், ஆஸாமிக்குள் இருந்துகொண்டு அவன்தான் வாங்கிக் கொள் கிறான். ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி.நமஸ்காரம் என்றால் என்ன? உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா? இல்லை. இங்கே காரியம் இரண்டாம் பக்ஷம். பாவம்தான் முக்கியம். பக்தி பாவத்தைப் பலவிதமாகத் தெரிவிக்கத் தோன்றுகிறது. அப்போது, பகவானுக்கு முன்னால் தான் ஒண்ணுமே இல்லை என்று மிக எளிமையோடு விழுந்து கிடப்பதைக் காட்டவே நமஸ்காரம் என்ற க்ரியை. ஆக, நமஸ்காரம் என்று க்ரியையைச் சொன்னாலும், அது பக்தி என்ற உணர்ச்சியைக் குறிப்பதுதான். எவருக்குச் செய்கிற நமஸ்காரமும் ஒரே பரம்பொருளான கேசவனுக்குப் போய்ச் சேரும் என்று சொன்னால், எவரிடம் செலுத்தும் பக்தியும் பரமாத்மா என்ற ஒருவனுக்கே அர்ப்பணமாகும் என்றே அர்த்தம்.(‘தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து…)

Monday, August 19, 2013

பதினோரு ரூபாயில புது வாழ்க்கை

ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம்.   எனக்கு மட்டுமல்ல…   என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!

காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’  (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான்.   அந்த நாளின் போது,  நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று,  ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து,  லட்டுகள் செய்து,  கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம்.  இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.
http://balhanuman.files.wordpress.com/2013/02/maha_periyava_014s5b15d.jpg?w=200
இந்த சாதாரண சமையல்காரன்,  ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து  ‘இதோடு எல்லாம் போதும்’  என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில்,  நம்பிக்கை கொடுத்து,  “நீ நன்றாகத்தான் இருப்பாய்’  என்று அபயக்கரம் நீட்டிய அந்த மாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது  சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார்.  தினந்தோறும்  மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில்  அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும்.    இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும்.  மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர்.  அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்)   உட்பட நாலைந்து பேர் இருந்தனர்.  என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.

ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள்.  படுவெயிட்டாக இருக்கும்.  இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது,   கூடைக்குள்ளிருந்து  மிச்சம் மீதி சாம்பார்,  ரசம், பாயசமெல்லாம்  காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும்.   அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும்.   ‘எச்சில்’   என்று தோன்றாது.   பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி,  இறைவனால்  கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!

இப்படி இலைக்கூடையைக்   கொண்டுபோய் கொட்டிய கையோடு,  காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும்,  அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!

சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர் அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார்.  இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான்.  அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி.  தானே கடை கடையாக ஏறி இறங்கி,  வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.

‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’   என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும்,  மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான்.  தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது,  சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன்,  இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’  என்று பெரியவர் கேட்பார்.

‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’  என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார்.  (இந்த அன்னதான சிவன் பேரிலேயே  பெரிய கமிட்டி போட்டு,  பல பெரிய மனிதர்கள் சேர்ந்து  ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள்.  அந்த ‘டிரஸ்ட்’  இப்போது  இருக்கிறதா எனத் தெரியவில்லை).

இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது.   திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று.    ஒரு குழந்தையும் பிறந்து விட்டது.   என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை.    வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது.   வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’   என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.

இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய்,  மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.  இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன்.   பெரியவரை தரிசனம் செய்தேன்.   என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல்  அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி!   இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம்.  இங்கேயே தூங்குங்கள்.  நாளை போய்க் கொள்ளலாம்!’   என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல….  கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட  எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம்.  பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால்,  தூக்கம் நன்றாக வந்தது.

காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம்.  புது வேட்டியும்,  புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி,  அதை எங்களிடம் கொடுத்து  உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.
http://balhanuman.files.wordpress.com/2013/02/maha_periyava_014s5b15d.jpg?w=200
உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும்,  எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார்.  ‘போ!  எல்லாம் சரியாயிடும்! ‘   என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.   என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது.   ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம்.  தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது.  வெற்றி நிச்சயம் கிடைக்கும்’  என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.   கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு,  மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர்.    அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.   ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது,  ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா….  இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே…  முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’  என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து  பார்த்தும் சல்லிக்காசு இல்லை.   என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன்.  காதில் தோடு தெரிந்தது.   அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது)  கொண்டு போனேன்.   பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன….  லட்டு செய்ய முடிஞ்சுதா?  ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’   என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை.    ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே….  அதுவே போதும்’   என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்)  அன்று  லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன்.  லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது…   இன்று எங்கள் குடும்பம் முழுவதும்  மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால்,  அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

Saturday, August 17, 2013

சங்கரனாவது,கிங்கரனாவது

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம்
ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில்
பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு
தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும்
வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது
பயணிக்கமாட்டார்.

அப்படி ஒரு அனுஷதினத்துக்கு
முதல் நாள் மாலை.....
பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு
ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை
இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி
"என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப்
பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல்
பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக
திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச்
சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க.
"அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!"
என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட
வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா..

பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து?
நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு
தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர்
மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக்
கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம்
என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும்
பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார்.
வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே
வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து
நின்றது.பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான
வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்
காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும்
சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

"சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறது
என் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம்.
மனைவிக்கு திடீர்னு தலைவலி.அவளுக்கு நல்ல டிகிரி
காபி சாப்பிட்டா சரியாயிடும்.இன்னிக்குன்னு பார்த்தா
ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா
இரண்டு பேருக்கும் ஸ்டாராங்கா காபி போட்டு கொடுக்க
முடியுமா?

"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் வேணும்னா
கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார்.
மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள்
அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப்
பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று
சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற
ஒரு நப்பாசை.

"நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப்
போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில்
இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன்.
நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா?
என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்கு
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து
ஒடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே
அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில்
இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன்.நண்பர்
பக்கத்துல இருக்கார்.அவா கிரஹத்துல தங்கிட்டு
நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன்.
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன்.

காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய
பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு
மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும்
மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக
காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள்
.சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல
வேண்டும் என்ற அவாவில்.
ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர்,சதாசிவத்தின்
தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..
அப்படி யாரைத் தேடறேள்?

பெரியவா உங்களைக்
கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு
விறுவிறுவென்று நடந்தார்.பின் தொடர்ந்தனர் தம்பதிகள்.
"வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம்
ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே
வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது
ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா..
அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..
பஸ்ஸும் இல்லை..."
"அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே
மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...
இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில்
சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு
கண்களில் ஒற்றிக் கொண்டார்.

பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..
அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு
வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.
அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக.
"மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......
இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்
குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம்.
சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால்
புரியாதது மாதிரியும் இருந்தது.
"பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம்
பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று
ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள
முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு
தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில்
இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து
""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு
ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து
வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி
ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு
வந்தாரா?" என்று கேட்டார்.
"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே
இல்லியே சாமீ...காலையில்தானே நான் வந்திருக்கேன்"
சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து
ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து
வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ
நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க..
நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு
இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார்.
சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது.
"அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும்
என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து
இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?"
என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும்
உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா
ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார்,
"பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து
அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்.....
பெரியவா இருக்கும் திசையை நோக்கி
சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம்
கூடவே அவரது மனைவியும்..

Thursday, August 15, 2013

மகா பெரியவாளி​ன் பரிபூர்ண அனுக்கிரக​ம் இருந்தா போதும்

கனகல் மருத்துவம்!

இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.

ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் ...புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள்.
பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.
‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல்என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.

அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது. (துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)”

'காஞ்சி மகா பெரியவாளை ஒரு மகானாக மட்டுமின்றி, தங்களின் கண்கண்ட தெய்வமாகவே போற்றித் துதித்த பக்தர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களது வாழ்வில் பல இக்கட்டான நேரங்களிலும், அவர்களுடைய அடுத்தகட்ட நகர்வுக்கான தருணங்களின்போதும் தம்முடைய தீர்க்க தரிசனத்தால்- தீட்சண்யத்தால் அந்த அன்பர்களின் பிரச்னைகளைக் களைந்ததோடு, அவர்களது வாழ்க்கையையும் செம்மைப்படுத்தியவர் என்பதால், மகாபெரியவாமீது அவர்களுக்கெல்லாம் அதீத அன்பு; மிதமிஞ்சிய பக்தி!'' - பரவசத்துடன் விவரித்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அதற்கு உதாரணமாகச் சில சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

''அது, 1950-ஆம் ஆண்டுன்னு நினைக்கிறேன். மடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அன்பர் சுவாமிநாதனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குக் கண்ணில் குறைபாடு; பார்வை இல்லாம போச்சு! சென்னையில் இருக்கும் பிரபல கண் ஆஸ்பத்திரிகளுக்கெல்லாம் குழந்தையைக் கொண்டுபோய்க் காண்பிச்சார் சுவாமிநாதன். ஆனால், டாக்டர்கள் கைவிரிச்சுட்டாங்க. சுவாமி நாதன் மனசு ஒடிஞ்சு போயிட்டார்.

திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை! ஒருநாள்,குழந்தையை எடுத்துக்கொண்டு நேரே மடத்துக்கு வந்துட்டார் சுவாமிநாதன். மகாபெரியவா முன்னால் குழந்தையைக் கிடத்தி, விஷயத்தைச் சொல்லி, ''பெரியவாதான் கருணை பண்ணணும்''னு கண்ணீர் விட்டுக் கதறினார்.

மகாபெரியவா மெள்ள அருகில் வந்து, குழந்தையின் கண்களை உற்றுப் பார்த்தார். கொஞ்சம் கற்கண்டு கொண்டுவரச் சொல்லி, குழந்தையில் மார்பில் வைத்தார். குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுவதுபோல் மீண்டும் ஒரு ஆழமான பார்வை. பிறகு, ''குழந்தையைத் தூக்கிட்டுப் போ. எல்லாம் சரியாயிடும்'' என்று கருணை பொங்க உத்தரவு தந்தார்.
சுவாமிநாதன் முகத்தில் அப்படியரு மகிழ்ச்சி! 'இனி கவலை இல்லை. மகா பெரியவா சொல்லிட்டதால, குழந்தைக்கு நிச்சயம் பார்வை கிடைச்சிடும். ஏதோ கர்ம வினை... அதுவும் பெரியவாளோட அனுக்கிரகப் பார்வையால் சரியாயிடும்’ என்று மனப்பூர்வமாக நம்பினார் அவர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. சில நாட்களிலேயே, குழந்தைக்கு மெள்ள மெள்ள பார்வை வந்துவிட்டது.

அதன்பிறகு, சுவாமிநாதன் சென்னை- பெருங்களத்தூரில் வந்து குடியேறினார். அவரோட குழந்தை வளர்ந்து பெரியவளாகி, அந்தப் பெண்ணுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் ஆகி, இப்ப சுவாமி நாதனுக்கு 'அனுராதா’ன்னு ஒரு பேத்தி இருக்கா. எல்லாம் மகா பெரியவாளோட அனுக்கிரகம்'' என்று விவரித்து முடித்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அருகிலிருந்தவரைச் சுட்டிக்காட்டி, ''அதுசரி... இவரை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கலையே, இவர் யாரு தெரியுமா?'' எனப் பூடகமாகக் கேட்டார். அந்த அன்பரை அப்போதுதான் கவனித்தோம். கண்களில் நீர்மல்க அமர்ந்திருந்தவர், சிறு புன்னகையுடன் சொன்னார்: ''நான்தான் அந்தச் சுவாமிநாதன்!''

நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் தொடர்ந்தார்... ''இன்னொரு சம்பவமும் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டியார் சமூகத்து அன்பர் ஒருத்தர், மகாபெரியவா மீது பக்தி மிகுந்தவர். அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருவார். அவரோட குழந்தைக்கும் பார்வை இல்லைன்னு குழந்தையைத் தூக்கிட்டு வந்தார். அன்னிக்கு லட்சார்ச்சனை நடந்தது. கற்பூர ஆரத்தி முடிஞ்சு, தோடகாஷ்டகம் எல்லாம் சொல்லி முடிச்சதும், மகாபெரியவாகிட்ட விஷயம் சொல்லப்பட்டது. பெரியவா எழுந்து வந்து குழந்தையை அப்படியே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். ''குழந்தையை எடுத்துண்டு போங்கோ..! எல்லாம் நல்லபடியா ஆயிடும்''னு கை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணுவது போல் சொன்னார். வெகு சீக்கிரமே அந்தக் குழந்தைக்கும் பார்வை கிடைச்சுது. குழந்தை வளர்ந்து பெரியவளாகி, அவளுக்குக் கல்யாணமும் ஜாம்ஜாம்னு நடந்தது.

ரெட்டியார் மகாபெரியவாளின் அனுக்கிரகத்தால் தன் மகளுக்குப் பார்வை கிடைச்சதை அவரே வந்து சொன்ன பிறகுதான் எங்களுக்கும் தெரிய வந்தது. மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு பக்தர்கள் வெறுமே ஒரு போற்றுதலா மட்டும் சொல்லிடலை. அவர் அனுக்கிரகத்தை, அருட் கடாட்சத்தை அனுபவித்து உணர்ந்துதான் அப்படிச் சொல்லியிருக்காங்க. அவரோடு இருந்ததும், அவருக்குச் சேவை செய்ததும் எங்கள் பாக்கியம்!''

- பரவசத்துடன் சொல்லி நிறுத்தியவர், ஒரு கணம் கண்மூடி யோசித்தவராகப் பேச்சைத் தொடர்ந்தார்... ''தேனம்பாக்கத்தில் மகாபெரியவாகூட இருந்திருக்கேன். நிறையச் சொல்வார். அப்போதெல்லாம் ஒரு சிநேகிதராகத்தான் தெரிவார். ஒரு பெரிய மடத்துக்கு அதிபதின்னு தோணாது எனக்கு. 'எனக்குப் பாடத் தெரியும். பாடட்டுமா?’ன்னு ஒருநாள் படுத்திருக்கும்போது கேட்டார். அவர் சங்கீதத்துல சிறந்த வேங்கடமஹி பரம்பரையில் வந்தவர் என்கிற விஷயம் பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்தது. அதனாலதான் சங்கீதத்தின் மேல் அவருக்கு அத்தனை ஆர்வம் இருந்திருக்கு.
ஒருமுறை, மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிச்சுக் கேட் கணும்னு விரும்பினார் மகாபெரியவா. இந்த விஷயம் மணி ஐயருக்குத் தெரிய வந்ததும், உடனே புறப்பட்டு மடத்துக்கு வந்துட்டார். அவருக்கு மகாபெரியவா மீது அபார பக்தி! அவரை 'அபிநவ நந்தி’ன்னு சொல்வார் மகா பெரியவா.

மடத்துக்கு வந்த மணி ஐயரிடம், 'தனி வாசி! கேட்கணும்போல இருக்கு’ என்றார் பெரியவா. மணி ஐயர் 'தனி’ வாசிச்சார் (தனி என்பது ஒருவகை தாள லயம்). மகாபெரியவாளும் ரசித்துக் கேட்டார். பிறகு, மணி ஐயருக்கு ஆசீர்வாதம் பண்ணி, அவர் மனைவியை அழைத்து, உலகளந்த பெருமாள் கோயிலில் அருளும் ஆரணவல்லித் தாயாருக்குப் பொன்தாலி செய்து சாத்தச் சொன்னார் மகாபெரியவா. அதை உடனடியாக நிறைவேற்றினார் மணி ஐயர்.
புகழ்பெற்ற டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி, மணி ஐயருக்குச் சிநேகிதர். ஐயர் மீது பக்தின்னு கூடச் சொல்லலாம். மகாபெரியவா மணி ஐயரைக் கூப்பிட்டு மிருதங்கம் வாசிக்கச் சொல்லிக் கேட்டதை அறிந்து, ரொம்பவும் வியந்து போனாராம் சி.வி.கிருஷ்ணசாமி.
பாலக்காடு மணி ஐயர் தனது 60-வது பிறந்தநாளுக்கு மகா பெரியவாகிட்ட ஆசீர்வாதம் வாங்க வந்தார். 'நான் எந்தக் கோயிலுக்கும் போறதில்லே. கச்சேரிக்காகப் போனாலும், தரிசனம்னு பண்ணினது இல்லை!’ என்று உண்மையைச் சொன்னார். அப்போது மகாபெரியவா என்ன சொன்னார் தெரியுமா? 'நீ ஆத்மார்த்தமா மிருதங்கம் வாசிக்கறதே அந்த பகவானுக்குப் பண்ற சேவைதான். அந்தப் புண்ணியமே உனக்கு நிறையக் கிடைச்சிருக்கு. அது போதுமே!’ என்றார்.

தன் மீது பக்தி கொண்ட அன்பர்கள்தான் என்றில்லை; வேற்று மதத்தவர்களிடமும் ரொம்பக் கருணையும், அன்பும், அருளையும் கடாட்சித்தவர் மகாபெரியவா'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

''காஞ்சிபுரத்தில் ஓர் அதிகாரி இருந்தார். அவர் வேற்று மதத்தவர் என்றாலும், மகாபெரியவாமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.

ஒருமுறை, அவரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. வயிற்றில் ஒரு கட்டி; அதை ஆபரேஷன் செய்து அகற்றினால்தான் உயிர்பிழைப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். துக்கம் தாளாமல், மகாபெரியவாளைத் தரிசிக்க வந்தார் அவர். அன்று மகா பெரியவா காமாட்சியம்மன் கோயிலில் இருந்தார். அதிகாரியும் கோயிலுக்குச் சென்றார். அங்கே சரியான கூட்டம். பெரியவா வாயே திறக்கலை. அவர் கையில் ஏலக்காய் மாலை ஒன்று இருந் தது. அதிகாரியை அருகில் அழைத்து, கையை நீட்டச் சொல்லி அந்த ஏலக்காய் மாலையைக் கொடுத்துவிட்டு, கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்.

அதிகாரியும் நம்பிக்கையுடன் திரும்பினார். அதன்பிறகு, மறுபடியும் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அந்த அதிகாரி. பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், 'கட்டி இருந்ததாகவே தெரியலையே?! ஆபரேஷன் எதுவும் வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். அதிகாரிக்குத் தெரியும்... இந்த அற்புதம் மகா பெரியவாளின் அனுக்கிரகத்தால் நிகழ்ந்தது என்று. இன்றைக்கும் அந்த ஏலக்காய் மாலையைப் பத்திரமாக வைத்திருக்கிறார் அந்த அதிகாரி.
ஒருமுறை, அவரின் மகனுக்கு பரீட்சை ரிசல்ட் வந்தது. பேப்பர்ல தன்னோட நம்பரை சரியா பார்க்காம, ஃபெயிலாயிட்டோம்னு நினைச்சு, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போதும் மகாபெரியவாளிடமே வந்து சரணடைந்தார் அந்த அதிகாரி. 'பையன் கிடைச்சுடுவான். கவலைப்படாதே!’ என்று அருளினார் மகா பெரியவா. பையன் எங்கேயெல்லாமோ சுத்திவிட்டு, மூணு மாசம் கழிச்சு வீடு வந்து சேர்ந்தான். அதிகாரிக்குச் சந்தோஷம் தாளலை. ஓடி வந்து மகா பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, கண்கள் கசிய வணங்கிச் சென்றார். பரீட்சையில் அவன் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருந்தது கூடுதல் சந்தோஷம்!
மகா பெரியவாளின் பரிபூர்ண அனுக்கிரகம் இருந்தா போதும்.. எல்லாம் நல்லதாகவே முடியும்

போளூர் சுப்ரமண்ய ஐயர், சத்யம் தவறாதவர், போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து வந்தவர், சிகை வைத்துக் கொண்டு த்ரிகால சந்த்யாவந்தனம் செய்பவர்.
பெரியவாளிடம் அபார பக்தி! உண்மையான பக்தனை பகவான் தேடிக்கொண்டு போவான்.
அதுபோல், பெரியவா கலசப்பாக்கத்தில் முகாம்! சுப்ரமண்ய ஐயர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தபோது, பெரியவா அங்கிருந்த ஈஸ்வரன் கோவிலுக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். எனவே ஐயரும் விடுவிடென்று பெரியவா போன வழியில் ஈஸ்வரன் கோவில் போனார். கொஞ்ச தொலைவில் பெரியவா போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அப்போது ஐயரின் பார்வையில் பெரியவாளின் திருவடியும், பாதரக்ஷையும் விழுந்தது.
"பெரியவாளோட பாதரக்ஷையை ஒரு தடவையாவது ஸ்பர்சிக்கற பாக்யம் கெடைச்சா...இந்த ஜன்மா மட்டுமில்லே, இனிமே ஜென்மாவே இல்லாமப் பண்ணிடுமே!..." என்று மனஸ் அடித்துக் கொண்டது. குருவின் பாதுகையின் மஹிமையை குருவால் கூட விளக்க முடியாதே! கடவுளுக்கும் மேலான ஒன்று நம்பிக்கை என்றால், குருவிற்கும் மேலானது குருபாதம், குருபாதுகை!
பெரியவா, கோவில் முன்னால் நின்று கொண்டு சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ஐயர் ஓடிப்போய் கூட்டத்தில் சேர்ந்து கொண்டுவிட்டார். பெரியவா பாதுகையை பத்ரமா யாராவது வெச்சுக்கணுமே என்று அவர் மனஸ் கவலைப்பட்டது.
"இரு, இரு, ஒனக்காகத்தானே இன்னிக்கி நான் கோவிலுக்கே
வந்திருக்கேன் " என்பது போல் பெரியவா.....
"நா.....கோவிலுக்குள்ள போயிட்டு வர்ற வரைக்கும்...என் பாதரக்ஷையை யாராவுது வெச்சுண்டு இருப்பாளா?.."
சுற்றி இருந்தவர்கள் தங்களுக்கு அந்த பாக்யம் கிடைக்குமா என்று ஆவலோடு பார்த்தனர்.
"சிகை வெச்சிண்டு இருக்கறவா, யாரவுது இங்க இருந்தா.....அவா இந்த பாதரக்ஷையை வெச்சுக்கலாம்!"
அங்கிருந்தவர்களில் சுப்ரமண்ய ஐயர்தான் பாரிஷதர்களைத் தவிர சிகை வைத்திருந்தவர். பரதனுக்கு கிடைத்த பெரும் பேற்றை
ராமாயணத்தில் படித்திருப்போம்...இன்று அந்த நிலையில் ஐயர் இருந்தார்.
கண்கள் குளமாக, ஜகத்குருவின் பாதுகையை நடுங்கும் கைகளில் ஏந்தி, பன்முறை கண்களில் ஒற்றிக் கொண்டு, சிரஸில் வைத்துக் கொண்டு, பெரியவாளின் கருணையை எண்ணி எண்ணி உருகிப் போனார்.
பெரியவாளோடு அத்தனை பேரும் கோவிலுக்குள் சென்று விட்டனர். ஐயர் மட்டும் பாதுகையோடு கோவில் வாசலில் ஆனந்தமாக நின்று கொண்டிருந்தார். பக்தனுடைய ஆசை, பகவான் விஷயத்தில் "போதும்" என்று வராது, த்வைத பாவம் இருக்கும் வரையில்! ஐயர் மனம் "பாதுகையை வெச்சிண்டு இருக்கறது பரமானந்தம்தான்! ஆனாலும், பெரியவாளோட கோவிலுக்குள்ள போய் தர்சனம் பண்ண முடியலியே!.." என்று ஏங்கியது!
உள்ளே பெரியவாளுக்கு மரியாதை பண்ணிவிட்டு, ஸ்வாமிக்கு தீபாராதனை காட்ட தயார் பண்ணினார் அர்ச்சகர். அவரைக் கையமர்த்திவிட்டு பெரியவா தன்னுடைய பாரிஷதர் ஒருவரிடம் "வெளில பாதுகையை வெச்சிண்டு ஒர்த்தர் நின்னுண்டு
இருப்பார்....நீ போய் அதை வாங்கிண்டு, அவரை உள்ளே அனுப்பு!" என்று சொன்னார்.
பாரிஷதர் வந்து பாதுகையை வாங்கிக்கொண்டு ஐயரை உள்ளே அனுப்பினார்.
இதோ! அவருடைய இரண்டாவது ஆசையும் இங்கே அமோகமாக நிறைவேறியது! கர்ப்பக்ருஹத்துள் குத்துவிளக்குகள் ப்ரகாசமாக ஒளிவிட, பரமேஸ்வரன் லிங்க ரூபமாக நாகாபரணம்
சூடி, உச்சியில் வில்வ மாலை தரித்து, ஆவுடையாரைச் சுற்றிய மயில்கண் வேஷ்டியும், மேலிருந்து அருவி போல் விழும் அங்கவஸ்த்ரமுமாக காக்ஷி அளிக்க, பக்கத்தில் உத்சவ மூர்த்தியாக பெரியவா நிற்க, அந்த அர்ச்சகர் தீபாராதனை காட்டினார், இருவருக்கும்!
அதேபோல், அம்பாள் சன்னதியிலும் அதே அனுபவத்தைப் பெற்றார் சுப்ரமண்ய ஐயர்!

Tanjore Sri Santhanaraman shares his thoughts of THE SAGE OF THE KALIYUG – THE YUGA PURUSH - THE PARAMACHARYA OF KANCHI !

about 'SUVISESHAM (Gospel of Easter)'

Once , I had been to Ilaiyatthangkudi camp to have the dharshan of Sri Periyava , on the next day of a Diwali . There was no rush at 4 pm . HE was sitting alone . I did saashtanga namaskaram & stood silently .

Periyava: “ Did you celebrate Diwali ? “

Santhanaraman: “ With the blessings & anugraha of Periyava “

Silence for a little moment, Periyava began again.

Periyava:

Did you see the Diwali Malar ( special issue ) of Ananda vikatan ?

I thought for a moment , to give what reply & kept quiet . Again silence .

Periyava:

All the journalists – their employees & the Editor – each journal group will do bhiksha to me , once a year . The people of Ananda Vikatan , came here two months ago to do bhiksha to me . I asked them “has the Editor come ? “ They replied “ he had gone to Delhi on a work .” I told them “ If possible , inform your Editor to come & see me .” They may have told him so . After about 10/15 days , the Editor came for the dharshan ( Periyava was referring to S.S.Vasan ). In between the talks , I asked him “ you did suvisesham ( propaganda by the Christianity ) to you on your wrapper , do they give plenty of money to you for doing so ? With astonishment , he said “ Yes “

Will you suffer too much , if you don’t get this money ? “

He was worried much & said I can’t understand anything. I don’t know, what Periyava is saying

All the people came here for dharshan, complained to me that ‘ Vasan has allotted the inner wrapper for the publicity of the Christianity ! Can’t Periyava stop this ? ‘ That’s why I asked you.

Vasan: They may have received it on business terms ; I will enquire it in my office . I can understand that this wrong . I will stop this immediately.

Periyava: Will it incur a big loss to you ?

Vasan:

I have done a big blunder. Doesn’t matter, whatever be the loss be, by stopping this. I will see that it doesn’t appear again

He was sitting for some minutes with the mental agony & then said I want to propitiate for the blunder I have done . Periyava has to allow me

Periyava:

I thought for a while & said then do one thing. You publish in your magazine about me (Vasan accepted it). The foreigners are coming to see me, isn’t it? One of them had written about me in their country after seeing me & returning back. He had sent a copy to Srimatam here. Get it from the Manager, read it & then publish it in your magazine. Do you know, what he had said in it about me ? ‘ HE is Jesus ; I saw Jesus ‘ publish it in your magazine ; and this is the suvisesham !

Vasan:

I shall publish this beautifully, in this year’s Diwali Malar itself ! that alone will give me shanthi

So saying he left .

Periyava to Santhanaraman : That’s why i asked you , whether you had seen that?

He was simply smiling & gave me the prasadham . Till I reached my home, I was munching over it !

JAYA SANKARA ; HARA HARA SANKARA !

Tuesday, August 13, 2013

ஓங்கி ஒரு குட்டு

அவர்கள் ஐந்தாறு பேர். திருமண். வைணவ கறை வேஷ்டி. எல்லோரும் ‘வந்தனம்’ சொன்னர், ஒருவரை தவிர. அவர் ‘பரப்ப்ரமமாக’ இருந்தார். வயதானவர். ‘இவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. எல்லா டாக்டரையும் பார்த்தாச்சு. இப்போ, குணசீலம், சோளிங்கர், வரதர்,.. கோவில் எல்லாம் போயிட்டு வரோம். பெரியவாதான் குணப்படுத்தணம்’. ‘விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண க்ரமத்திலிரிந்து ‘அச்சுதானந்த கோவிந்த நமோ சரண, பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோக, சத்யம் சத்யம் வதாம்யஹம்‘ என்ற ஸ்லோகத்தை 108 முறை சொல்லச் சொன்னார். அடுத்தது அவர் சொன்னதுதான் அனைவரயும் அதிர்ச்சி அடைய வைத்தது. பயில்வான் போன்ற ஒருவரை கூப்பிட்டு, ஓங்கி ஒரு குட்டு அக்கிழவரின் தலையில் குட்டச் சொன்னார். அடுத்த நொடி அப்பெரியவர் ‘ஏன்டா ரகு, நாம எங்க இருக்கோம், இது மடம் மாதிரி தெரியறது’ என்றார். எல்லோருக்கும் கண்களில் குளம் கட்டியது. ‘பெரியவா காப்பாத்திட்டேள்’. அவர் எப்போதும் போல் ‘நான் என்ன பண்ணினேன், நீங்க திவ்ய தேசம் போயிட்டு வந்திருக்கேள். அந்த பெருமாள் தான் காப்பாத்தி இருக்கார்’ என்றார்.

Periyava's advice to a rich indian settled in the U.S.

Once in Sri Kanchi , there were some people standing near periyava to have dharshan & his blessings . A richly looking person in his early 60s , came there with his family. They were all in very costly dress & jewels . When his turn came he sat down on the floor opposite to Periyava (a rope was tied as a fence) . Periyava just looked at him .

Rich man started to speak in his Malayalam accent Tamil:

“ Periyava ! I am in the States for the last 25 years . But , I honestly married our Indian girl & came to India only for that purpose . This is my bharyal (wife ) & these are my puthrans & puthris ! ( sons & daughters) . Though we are in the states we strictly follow our Indian Brahmin traditions & customs only . I perform sandhyavandhanam daily in the morning & evening . See , I don’t even miss any annual shraddham ( pithru karma ) of my father & mother . Whatever is required for this purpose I can easily get them from here . I am very much particular about it , you know Periyava ? yes ! ( ekalamana enai petthava nalla paragathi adaiya naan evvalavu venumnalum selavu pannu thayar Periyava ! ) I am ready spend any amount for my late Parents to let them get the good position There in the Heaven . )

Because of two reasons . Firstly they are my Parents who gave me this body . Secondly , I should be the role model to my son , isn’t it ? . Then only , he will follow all these & do these karmas to me too in future ?

If WE the periyava go in the right direction & create a raja paattai ( Royal path ) surely the next generation too will go in that same right direction smoothly & easily . Pithrukkalai vida osandha periya dheivam yaaru irukka , Periyava ? ( other than the pithrus , which other God is in the higher level than them ) And, Finally , I shall be very happy , atleast if some people learn from me & follow these to show their sense of gratitude to their late parents & pithrus , Periyava ! I am right , isn’t it ?

What do you say , Periyava ? “

All the people standing nearby including the Mutt people , were furiously looking at him b’cos of his ill manners & boasting blabberings.

So long Periyava was just looking at the floor with his head down . Now , slowly lifted his head & began to ask him questions “ ( nee indha shraddhatthukku samanlam ingerundhu varavazhaikka etthanai selavaradhu ? ) How much it costs to import the required items to perform a shraddham there ?

Looking around very proudly , he said some amount in dollars & the equivalent Indian rupees , in his manner .

Periyava “ Oh! It costs that much ? I didn’t think it would cost that much ! What about the shraddha manthras & a purohith to conduct it ? “ “

That’s not a big thing at all Periyava . Nowadays science has grown much. And I take advantage of it for such good reasons only . There is one instrument called tape recorder & cassettes . I recorded all the manthras through my permanent family purohith at my home here . And use it while I perform the shraddha there. Mansirundha margam undunnu solluva, illiya ? ( they say that if there is will , there is a way , isn’t it ? )

Periyava: “ Oh ! So there is a way like this to perform the shraddha scientifically too ! “

“ Saraiyaach chonnel Periyava ! “

Periyava: “ To come here & go back to YOUR States , how much it costs , each time ?”

Then , he replied elaborately about the different plane fares & other costly expenses & said finally “ But , I always come & go back in executive class only For the reason to avoid some unwanted elements of the lower class passengers who will take advantage to move with us equally , & sometimes , it will become dangerous too to the people like me ,

Periyava:  “ Do you visit India every year & when ? “

“ Oh ! That I can’t say , Periyava . Because , both officially & un officially I visit here . When I visit officially I come alone . But every year unofficially visiting India during the Christmas Holidays there & also during the Navarathri season without fail. For navarathri I come with my full family, because of 2 reasons . Modhalle, andha Ambal, Lokamatha, ellathaiyum aattip padaikira Akilaanda koti nakai illainna indha lokam edhu? (Firstly, if that Super most power is not there , then how can this World will be there ? “) Secondly, to create intimacy & affection with these religious functions & festivals & to understand their value , I bring my children here . Money is not the only criteria in life . These types of good characters must be absorbed by them to become the best citizen in future .

Periyava:“ “ So , you earn plenty there & spend lavishly only to bring up your children properly & to satisfy your pithrus ! And, you have a good chance of coming to India both officially & unofficially. From the way you explained here , I can understand that , you are meeting the particular relatives only to suit your ‘ standard ‘, because you want to avoid unnecessary low level people to take advantage to come near you !

(Now the other people’s face became bright with smiles as they had understood where Periyava’s talk is leading to ! On the contrary , the rich man’s group began to make curves in their bodies . The main person was simply staring at Periyava to avoid others’ eyes. ) You can spend any amount to import anything required from here to perform the pithrukaryams there only to suit your convenience. And, who advised you to do all this pithrukaryams there? How will they be able to take their pindams offered by you there in that para desa (foreign) bhoomi? They can & are allowed to accept the pindams & the monthly therthams (new moon Tharppanam) & Mahalaya tharppanams & shraddhams in this Bharatha punya bhoomi only. That’s all the more reasons that we, the Indians Brahmins are refrained from crossing the sea/going abroad. These pithru karmas are done to get their blessings & for the welfare of our family & the future generation too. Yes! You are right in saying that there is no dheivam superior than the pithrus. Each time, when you did the shraddha there, they all came there eagerly & hungrily too to receive the pindams & to bless you all . On the contrary, they couldn’t do so & had to return back with empty stomach & cursing you all in all these years . You are able to programme well in advance to come to India to celebrate the Super most power during the Navarathri . And, you thought it was colossal waste to visit India to perform the Pithrukaryam alone Now , all your poor pithrus are awaiting here eagerly & very hungrily to receive your pindams & therthams . Immediately tell your family shasthri to perform the pithru karmas for all these 25 years in one shraddha at the right place convenient to you & him . The pithrus will be very happy at this & bless you all .

The rich man’s ego disappeared & with tears rolling down his cheeks fell at feet of the Real Guru/God who was smiling and happily & blessing them all .

The rich man got up & said in a crying tone & flapping his cheeks “ Mahaperiyava , En dheivame . en kannaith thirandhuttel . ( O! my God . you have opened my eyes . ) thappup pannitten , Maha thappup pannnitten Periyava . ( I have done blunder ) Ippove poyi Periyava uttharavuppadi itthanai varusha shraddhatthaiyum kandippa seyyaren . ( immediately I shall certainly perform the shraddha of all these years’ balance as per the order of Periyava . ) Enga ellaraiyum Periava periya mansudan mannicchu prasadham tharanunun vendikkiren ! idhukku mela enakku onnum sollath theriyale . ! “ ( I request that periyava should forgive us all with great karuna & give us prasadham . I don’t want more to say ) .

Periyava gave them the prasadham of fruits kalkandu kumkum flower and a blouse bit to his wife & said. (Ellarum madatthula aaharam pannittu ambalaiyum darsanam pannittu pogalam. shraddhamlam pannittup oorukkup poradhukku munnadi vandhuttup po) All of you have your meals here in the mutt & visit the Kamakshi temple & proceed. After finishing with the pithru karma, before returning back to your country , visit here again & go ) ellarum shemama iruppel ! ( all of you will be very much alright ) & lifted His palms to them & others too & blessed with His eternal & divine smile !

The rich man & his family again did a sashtaanga namaskaram saying “ adhudhan Periyava venum , adhudhan venum ! ) That’s why we want Periyava ) & slowly went back with bright faces . The man with full of ego and who spoke about him in volumes to Periyava, says “ I don’t what to say more you have opened my eyes .

“ Who else can advise so eternally to such a person without wounding his heart & to realize his great blunder for 25 years to his pithrus ? Further how beautifully HE had got him the blessings of his pithrus too to relieve him from the permanent curse too . Oh ! splendid . Nobody in the world would have tolerated this much lorry load of ego & correct him too in such a mild manner & bless him also !!! This is the foremost lesson we all should learn from our GURU !

JAYA JAYA SANKARA ; HARA HARA SANKARA

Sunday, August 11, 2013

டேய் பாலாஜி உங்க அப்பா அம்மா வந்திருக்காடா .....!“

Dear Devotees please read this (though slightly long ) when I read this i cried

“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ? ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !” “ஆமாம்.” “இருங்க வண்டி வந்திருக்குது.”
“நான் சிவராமன் இல்லைப்பா.” “சரி சிவசங்கர். வாங்க! ங்களுக்குத்தான் வண்டி.” பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி- ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தான்.“டிரைவர் உங்க பேரு என்ன ?” “பால் ராஜிங்கம்மா. “நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”
“நாளைக்கு மெள்ள தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்…..இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கம் !”
“அப்படீங்களா ? சந்தோசங்க.மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தெட்டு முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம் பன்னண்டு பண்ணா நூறாயிரும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?
“ஆமாங்க அதனாலே என்ன சார் ?” “Funny !” என்றார் சிவசங்கர்.
“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ - கோயிலுக்குப் போ — கடைசில — எல்லா தெய்வங்களும் ஒண்ணு தானே ….” “விபூதி வரவழைப்பாரா ?”
“அது சாய்பாபாங்க.-
இவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”
“உனக்கு நடந்ததா ?” “பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !” “அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார். அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.
“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க
“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா!” “அம்மா உங்களுக்கு ?”
“நிம்மதி ” என்றாள். “அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”
“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.” “எனக்குத் தேவைப்படுதுங்க.” “லுக் அவுட் !” என்று கத்தினார்.
வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.
அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னி போட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”
சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது. “இளநி சீவலாங்களா ?”
“வேண்டாம்ப்பா .” “சீவிட்டேங்களே…” பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள். “சரி, குடு” என்றார். நல்ல வேளை. இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !” பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி டைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார். “இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ. “வேண்டாம்மா.பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.” “மயிரிழைல தப்பினம்.”
“எல்லாம் பெரியவர் ஆசிங்க !” “அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.
“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிரலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துரலாம்.”
சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”
“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க விரட்டிக்கிட்டே வந்தேன்.” பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்தது பரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”
“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப் பரவாயில்லை. தலைவலி எனக்கு !”
அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.” “வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.” “நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”
“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.” “அதான் பால் இருக்கானே ?”
“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….” “ச்சே! உன்னோட வேதனை பாகீ !” “ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப் பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”
அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்
“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.” “நான்தான் காரணமா சொல்லு ?”
“சரி நானும்தான் காரணம்.” பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”
சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும் ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”
“சும்மா வாங்களேன் துணைக்கு!” அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!” என்றார். பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.
மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் -உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது. பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள். சிவசங்கரன் ஓரமாக நிற்க,பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க.மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”
அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.
ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர்ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை. அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான்.இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”"தொண்ணூறுங்க ! அய்யா அமெரிக்காலருந்து வராரு”"அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ !” என்று பாகீரதியை அருகே அழைக்க,பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.
“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான். ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் ! உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”
“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”
அந்த இளைஞன் அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல,அவர் கைகளை உயர்த்தி வாழ்த்தினார்.பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது. காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்து அந்த இளைஞன், “எல்லாம் சரியாய்ப் போய்டும். கவலைப்படாதீங்கோ. பையன் பேர் என்ன சொன்னேள் ?” “பாலாஜி.” அவர்கள் வெளியே வந்தனர். சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?”
“சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !”
அவள் அடங்காமல் அழுதாள். “பாகீ ! பாகீ டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்தி அழைத்துச் சென்றார்.
பின்னால் குரல் கேட்டது.
“டேய் பாலாஜி உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !“

Friday, August 9, 2013

விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை - காஞ்சிபெரியவா !!!

1. மாப்பிள்ளை அழைப்பு:
முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.
2. காசியாத்திரை:
முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இதுதான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் (நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்)
3. ஊஞ்சல்:
சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்துவைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.
4. பாணிக்ரஹணம்:
சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.
5. கைகுலுக்குதல்:
மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்துகொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.
6. பட்டுப்புடவை:
விவாஹம் செய்யும்போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.
7. விவாஹப் பணம் (Dowry):
மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.
8. வரவேற்பு:
முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.
9. திருமங்கல்ய தாரணம்:
விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.
10. கூரைப்புடவை:
மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.

NB: 1966 இல் பரமாச்சார்யாள் உத்தரவு: “என் நிபந்தனைகளுக்கு உட்படாமல் செய்யப்படும் விவாஹப் பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்”.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top