Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, July 31, 2012

Significance of Sundara Kanda

MAHA PERIYAVA on SUNDARA KANDAM of RAMAYANAM !!!

In Sundara Kanda Hanuman paves the way for reunion of the divine couple Rama and Sita. Similarly if we worship Hanuman by reciting the Sundara Kanda he helps a devotee by taking him near the Lord. Kanchi Mahaperiyava used to tell that Lord Hanuman or Anjaneya is an embodiment of all auspicious qualities which are very rare to find. He excelled in Intellect, Valor, Courage, Wisdom, Fearlessness and Bhakti. It is very rare to find such great strength in one person. Hanuman is also a very learned one and is referred as Nava Vyakarna Panditha. He is very very humble to Lord Rama and at the same time showed his prowess to demon Ravana by setting ablaze the entire Lanka. When Rama returned to Ayodhya along with Sita there was the coronation ceremony and while parting, Rama gave gifts to all attendees. When it was Hanuman’s turn Rama told him that He cannot give him anything better than Himself and thus gave himself to Hanuman and hugged him. Hanuman also said he is interested in receiving nothing but kainkaryam, i.e. doing service to Him. Even when Rama had departed from this mortal world to his heavenly abode Hanuman refused to accompany Him since he cannot hear Ramayana in Vaikunta and decided to stay back in this world to hear Ramayana. He told Rama that wherever and whenever Ramayana is recited (Yatra Yatra raghu natha keerthanam, tatra tatra krida masta kanchalim, pashpavari pari poorna lochanam) he will be there to listen and dance in ecstacy with tears flowing. Hence a devotee can feel the presence of Hanuman if he recites Ramayana even in his house.

 

Monday, July 30, 2012

இங்கேயானா என்ன, அங்கேயானா என்ன - தொடர்ச்சி

 

ஒரு சமயம் வயது முதிர்ந்த எங்கள் பாட்டியுடன் ஆச்சார்யாளை தரிசிக்க சென்றேன். பாட்டி நான் அவளுடன் சில நாள் காஞ்சிபுரத்திலேயே தங்கி, பெரியவாளை தரிசித்து கொண்டு இருக்க வேண்டும் என்று சொன்னாள். நான் அதற்கு சம்மதிக்காமல் ஆசிரமம் போக வேண்டும் என்றேன்.

இந்த விவரத்தை ஆசார்யாளிடம் சொல்லி என்னை அங்கு தங்கும்படி சுவாமிகள் சொல்லவேண்டும் என்று பாட்டி கேட்டுக்கொண்டாள். பாட்டி சொன்ன வார்த்தைகளை கேட்ட மகான் புன்முறுவலுடன் 'இங்கேயானா என்ன, அங்கேயானா என்ன' என்று என்னை பார்த்தவாறே அன்புடன் கூறினார்.

அந்த வார்த்தைகளை கேட்டதும் என் மனம் பூரித்தது. இதை காட்டிலும் வேறு என்ன வேண்டும்? அந்த தெய்வ வாக்கே எனக்கு பெரிய அருளாசி அல்லவா? கண்ணீர் மல்க, நின்று அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். சரி சரி என்று தலை அசைத்தபடியே உத்தரவு கொடுத்தார்.
அந்த அருட்கண்கள், தரிசிப்பவர்களின் மனத்தில் மின்சாரம் போல் பாய்ந்து சிலிர்க்க வைத்து விடுகின்றன. ஆன்மீக வழியில் மனதை உள்முகம் ஆக்குவதற்கு அந்த பார்வை ஒன்றே போதும். எத்தனை நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாலும் அலுக்காத ஆராவமுதம் போன்றவர் சுவாமிகள்.

முற்றும்.

Saturday, July 28, 2012

இங்கேயானா என்ன, அங்கேயானா என்ன?

நான் ஆசிரமத்திற்கு வந்து ஸ்திரமாக தங்கியபோது எனக்கு வயது இருபத்தி நான்கு. அதற்கு முன்பும் அவ்வப்போது நான் வந்து பகவானை தரிசித்து சில நாட்கள் தங்குவதுண்டு. அதற்கு அவர்கள் யாரும் மறுப்பு கூறியதில்லை. ஆசிரமத்தில் தங்கி, தியான வழியில் ஈடுபட்டு நான் இங்கேயே இருக்க தீர்மானித்தது தான், அவர்களுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது.
வருத்தம் இருந்ததே தவிர, யாரும் என்னை தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம், என் தந்தை எனக்கு அளித்த சலுகை தான். நான் தனித்து இருந்து ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டதில் என் தாயாருக்கு விருப்பம் இல்லை. அதிலும் இளமை பருவத்தில் இருந்தே என்னை தனியாக விட்டு வைக்க மனம் இடம் கொடுக்காமல் சங்கட பட்டார்கள்.
காஞ்சி பரமாச்சாரியாரிடம் நெருங்கிய தொடர்பு உடைய அவர்கள் என்னை பற்றிய இந்த விவரத்தை எல்லாம் கட்டாயம் சுவாமிகளிடம் சொல்லி இருக்க கூடும். அதனுடன் என்னை குடும்ப வாழ்க்கையில் ஈடுபட செய்யும் படி சுவாமிகளிடம் பிரார்த்தனையும் செய்து இருக்கலாம்.
நான் பலமுறை ஆசார்ய சுவாமிகளை தரிசிக்க சென்றிருக்கிறேன். ஆனால் அவர் ஒரு போதும் எனது வாழ்க்கை முறையை பற்றி நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ, ஒரு நாளும் குறைவாக கூறியதே இல்லை. 'உலகியலுக்கு மாறாக, ஏன் ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டாய்?' என்று கேட்டதே கிடையாது.
நான் எப்போது சென்றாலும் பரிவுடன் விசாரித்து, புன்முறுவலுடன், கையமர்த்தி, ஆசீர்வதிப்பார். நான் அதையே ஒப்புதலாக ஏற்று மகிழ்வேன். என்னுடைய சகோதரன் மனைவி அவரை தரிசிக்க செல்லும்போது 'ஆசிரம கனகா எப்படி இருக்கிறாள்?' என்று குசலம் விசாரிப்பாராம். அதை மன்னி என்னிடம் சொல்லி பெருமை படுவாள்.
தொடரும் ……
நன்றி : நினைவில் நிறைந்தவை, டி. ஆர். கனகம்மாள்

Friday, July 27, 2012

கருணை தெய்வம் காஞ்சி மகான்

 

காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்'' எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.
''ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ''எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். 'காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்'' என்றார் குரல் தழுதழுக்க.
''ஓஹோ... அப்படியா சொன்னார்..?'' என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து... ''எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா... இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா... தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்'' என்று கதறினார்.
பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க... நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ''இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!'' என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பி¬க்ஷயில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பி¬க்ஷ செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ''எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!'' என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, '''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு... இப்ப ஏன் போகணும்கறே?'' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ''இல்லே பெரியவா... சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்...'' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் 'வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். 'வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.
''என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். 'யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் 'வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
'பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே... பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன... சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
''பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்'' எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ''சரிதான்... என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!'' என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!

Thursday, July 19, 2012

கேட்டை-மூட்டை-செவ்வாய்

 

Source: Shri. Varagooran Narayanan

ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில்
பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர-
யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம்
என்பது சாஸ்திர வாக்கியம்.

ஒரு அமாவாஸ்யை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை
நட்சத்திரமும் கூடியிருந்தன. "இன்னைக்கு கேட்டை,மூட்டை,
செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு,அதை ஒரு தோஷம்
என்பார்கள், பரிகாரம் செய்யணும்" என்றார்கள்.

பெரியவா, "அப்பா குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு.
லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச்சொல்லு..."
பரிகார ஹோமம் நடந்து கொண்டிருந்தபோது பெரியவா
அங்கே வந்து பார்த்தார்கள். "கேட்டை,மூட்டை,செவ்வாய்க்கிழமை
என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம்,
செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?"
என்று கேட்டார்கள்.எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
பெரியவாளே சொன்னார்கள்.

"அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை,
பேச்சு வழக்கில் மூட்டை,மூட்டை என்று மோனை முறியாமல்
வந்துடுத்து"
தொண்டர்களுக்கெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. "பெரியவா
இம்மாதிரி நுட்பமான விஷயங்களை எங்கிருந்து
தெரிந்துகொண்டார்கள்?"

Wednesday, July 18, 2012

ஒரு சங்கீத விவாதம். ரா.கணபதி எழுதியது.

 

Contributed by Shri. Varagooran Narayanan

ஒரு தேர்ந்த கர்நாடக ஸங்கீத ரஸிகர்:  முன்னேயெல்லாம்
கச்சேரில தவறாம மஹான்களோட பாடல் ஏதாவது
ராகமாலிகை விருத்தமாகப் பாடுவா, அதுல கேதாரகௌளைதான்
அநேகமாக மொதலாவதா இருக்கும்.  மனஸை ஒரு தூக்குத்
தூக்கற வசியம் அந்த ராகத்துக்கு விசேஷமாயிருந்தது.
இப்ப அதெல்லாம் போயிடுத்து. தேஷ் மாதிரி திராபையான
வடக்கத்தி ராகங்களுக்குத்தான் மவுஸாயிருக்கு.

ஸ்ரீசரணர்.[பெரியவா] : நீ இப்டி சொல்றே! ஆனா, "தேஷும்
கேதாரகௌளையும் ஒரே 'ஸ்கேல்'தான். [ஒரே ஆரோஹண
-அவரோஹணம் உடையவைதான்]: ஒரே ஒரு வித்யாஸம்
ஆரோஹணத்துல நிஷாதம் மட்டும் வித்யாஸப்படறது'ன்னு
கேள்விப்பட்டாப்பல இருக்கே.

ரஸிகர்; [லேசாக முனகிப் பார்த்துகிட்டு,ஆச்சர்ய உணர்ச்சியுடன்]
ஆமாம். பெரியவா சொன்னாப்பலதான்!. ஆனா ஹிந்துஸ்தானிப்
பாடகாள் ஸ்வரங்களைப் பிடிச்சு நிறுத்திப் பாடறதுக்கும்
நம்மவா போன தலைமுறை வரை பண்ணிண்டிருந்ததுக்கும்
இருந்த வித்யாஸத்தாலே ஒண்ணு லைட்டாகவும்
இன்னொண்ணு புஷ்டியாகவும் இருந்திருக்கு.

ஸ்ரீசரணர்: [அவரையும் விஞ்சிய ரஸிகராக,ஆயினும்
அடக்கத்துடன்]
லைட்,புஷ்டி- அந்த 'டிஸ்டிங்ஷன்'லாம் எனக்குத் தெரியாது.
ரெண்டுல ஒவ்வொண்ணுலயும் ஒரு தினுஸு அழகு
இருக்கறதாத்தான் என் லெவல்ல தோண்றது.
நாம 'ஸிந்து பைரவி'ன்னு சொல்ற அவா பைரவி கூட
முழுக்கவே நம்ம தோடி ஆரோஹண-அவரோஹணம்தான்.
கமக மயமா எழைச்சு எழைச்சு நாம தோடி பாடறதுல
ஒரு கம்பீரமான அழகு இருக்குன்னா, அவா ஸிந்துபைரவின்னு
ஸ்வரங்களைப் பிடிச்சு வின்யாஸப்படுத்தறதுலேயும்
மனஸைத் தொடற ஏதோ ஒண்ணு இருக்கறதாத்தான்
என் மாதிரியானவாளுக்குத் தோணறது.

தீக்ஷிதாவாள், ஐயர்வாள் மாதிரியான நம்ம பெரியவாள்ளாமும்
ஹிந்துஸ்தானி ராகங்களை 'அடாப்ட்'பண்ணிண்டிருக்காளே!
ஒரே ஸ்கேல், ஆனாலும் ஸவரங்களைக் கையாளற
விதத்தினாலேயே ரொம்ப வித்யாஸமாயிருக்குன்னா
ஆச்சர்யமாத்தான் இருக்கு. ஆனாலும் வடக்கத்தி-
தெற்கத்தி ஸங்கீதங்களில் இது ஸஹஜமாவே 'ப்ரூவ்'ஆறது.

ரஸிகர்: கர்நாடக ஸங்கீதத்துலேயே கூட அப்படி உண்டு.
தோடியையேதான் மத்திமம் பண்ணி நிஷாதாந்தமா பாடினா
அது புன்னாகவராளி ஆயிடறது! ரெண்டும் ரொம்ப
வித்யாஸமான வெவ்வேறே ராகம் மாதிரிதானே தோணறது?

ஸ்ரீசரணர்: [வியப்புடன்]: அப்படியா? தோடி-புன்னாகவராளி
ஒரே ஸ்வரங்களா? நான் 'நோட் பண்ணினதில்லையே!
கொஞ்சம் பாடிக் காட்டறியா? ஆலாபனையும் பண்ணு,
க்ருதிகளும் பாடு. "கமலாம்பிகே" தோடியும்,
"கனகசைல" புன்னாகவராளியும் பாடு.

ரஸிகர் நன்றாகப் பாடவும் கூடியவர். ஸ்ரீசரணர் கூறிய
விசேஷம், வெகு சிறப்பாகப் பாடினார். அதில் சின்னச் சின்ன
நுட்பங்களையும் ஸ்ரீசரணர் அனுபவித்து ரஸித்ததுண்டே.

..

Thursday, July 5, 2012

வேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. 'emergency ' கொட்டகையில் இரவு கடுங்குளிராக இருக்கும் என்று எண்ணினார். பழுத்த கனபாடிகளுக்கே வழங்கப்படும் சால்வைகளை, அந்த பிஞ்சு வித்யார்த்திகளுக்கே வழங்க செய்தார். அதுகளுக்கு கொள்ளை சந்தோஷம். பாதாள கங்கை சென்றார்.
திடீரென்று அங்கே ஒரு பழுத்த கனபாடிகளே வந்துவிட்டார். தரிசனம் முடிந்தவுடன் புறப்பட வேண்டிய அவசரத்தில் இருந்தார். பெரியவா அவரை சம்மானிக்க சால்வை கொண்டுவர சொன்னார். மானேஜருக்கோ அந்த குறுகிய நேரத்திற்குள் முகாமுக்கு சால்வை எதுவும் கொண்டு வரவில்லை. சட்டென்று அன்று பாடசாலை பசங்களுக்கு புது சால்வை கொடுத்தது நினைவு வந்தது. எனவே, பெரியவாளிடம் எதுவும் பிரஸ்தாபிக்காமல், காதும் காதும் வைத்தாற்போல் ஒரு பையனிடமிருந்து சால்வையை திரும்ப பெற்றுவந்து, கனபாடிகளுக்கு கொடுத்துவிட்டார்.
இரவு ஏமாற்றத்துடனேயே கையை காலை முடக்கி கொண்டு, அந்த பையன் தூங்கிபோனான். காலையில் எழுந்திருக்கும்போது,அதி சொகுசும், கதகதப்பும் தன்னை ஆற அணைதிருப்பதால் அதிசயித்தான். அவன் இழந்ததைவிட உயர் ரகமான சால்வை அவன் மீது போர்த்தபட்டிருந்ததே அந்த சுகத்துக்கு காரணம்.
"போர்வை வந்துதாடா?" மனேஜரின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை புரியவைத்தது.
கூர்ந்த திருஷ்டி கொண்ட பெரியவா, கனபாடிகளுக்கு கொடுத்த சால்வை, பாடசாலை சிறுவனுடையது என்று கண்டுபிடித்து விட்டார். அதற்குபின் மாலை அனுஷ்டானம், இரவு பூஜை, எல்லாம் முடிந்ததும், மனேஜரை கூப்பிட்டு விசாரித்தார். அவர் செய்தது தனக்கு திருப்தி இல்லை என்றும், தன் சகாக்களுக்கு கிடைத்தது தனக்கு தங்கவில்லையே என்று எப்படி அந்த குழந்தை வருந்தும் என்று விளக்கினார். விட்டால், எங்கே தன்னுடைய சால்வையையே கொடுத்துவிடுவாரோ என்று மனேஜருக்கு கவலை வந்துவிட்டது. எனவே தாம் முந்திக்கொண்டு "எனக்கு போர்த்திகொள்ள நல்ல கம்பிளி போர்வை இருக்கு. அதையே பையனுக்கு கொடுத்துடறேன்" என்றார்.
"தூங்கிண்டு இருந்தா எழுப்பாதே! நைஸா மேலே போத்திட்டு நீயும் போய் விஸ்ராந்தி பண்ணிக்கோ"
"நைஸ்" இதயத்தால், அதி நைஸ் போர்வை பாலனுக்கு கிடைத்து.

 

Tuesday, July 3, 2012

நடமாடும் தெய்வம் நடப்பது ஏன் ?

 
சிவந்த சிவப்பழத் திருமேனி; பூசிய வெண்ணீறு; இளம் சிவப்பேறிய காவித் துணி, பாரிஜாத பூச்செண்டு போன்ற பாதாரவிந்தங்கள். கல்லிலும், முள்ளிலும், வெயிலிலும், மழையிலும் உலக க்ஷேமத்திர் காகவும், கலாச்சாரத்தின் தொன்மையைக் காக்கவும், வேத தர்மம் தழைக்கவும் நடமாட வந்ததோ ?
பண்டரிபுரத்தில் பெரியவா தங்கியிருந்த சமயம். அருகேயிருந்த சர்க்கரை ஆலையின் அதிகாரி, பெரியவாளிடம் அவரது பாதாரவிந்தங்கள் தமது ஆலையை ஒரு முறை மிதிக்க வேண்டும் என்று வேண்டி, அப்பொழுதே வருவதாக இருந்தால் தமது வண்டியிலேயே அழைத்துப்போய் வந்து விடுவதாகக் கூறினார். பெரியவாள் உடனே சிரித்து விட்டு, “நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை” என்று கூறினார். வந்த அதிகாரி மிகவும் ஆச்சர்யப்பட்டு “இந்த இருபதாம் நூற்றாண்டிலே தாங்கள் இப்படி இருக்க வேண்டுமா ? வண்டியில் வந்தால் பல மணி நேரம் மிச்சமாகுமே, அதிகமான இடங்களைக் காண வாய்ப்புக் கிடைக்குமே” என்றார்.
பெரியவாள், “நான் பதிமூன்று வயதில் பட்டத்திற்கு வந்த உடனே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்று சங்கற்பித்துக் கொண்டேன். ஒரு முறை நான் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். மழையே இல்லாமல் இருந்த அந்த ஊரில் என்னவோ தெரியவில்லை, நல்ல மழை பிடித்துக் கொண்டது. போகும் வழியில் இருபுறமும் பள்ளமாகவும் நடுவே சற்று மேடாகவும் இருந்ததால், ஓடும் நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்நிலத்திலிருந்த ஜீவராசிகள் பலவும் மேட்டுக்கு வந்து விட்டன. அப்பொழுது சாலையில் சென்ற பல வாகனங்களால் அவற்றிற்கு அழிவு ஏற்பட்டது. அன்றே நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறி ஜீவ ஹிம்சைக்குக் காரணமாகக் கூடாது என்று மீண்டும் சங்கல்பித்துக் கொண்டேன் .
இன்னொரு காரணமும் உண்டு.
வண்டியில் போவதால் பல ஊர்களைக் காண இயலாது போய் விடும். வாஹனத்தில் திடீரென்று ஓர் ஊருக்குப் போய் இறங்கினால் அங்குள்ளவர்களுக்குச் சிரமம். நடந்து போவதால் போகும் இடத்திலுள்ள மக்கள் அடுத்த ஊருக்கு முன்பே தெரியப்படுத்தி வசதி செய்து தருகின்றார்கள் இல்லையா ?” என்ற வினா எழுப்பிச் சுற்றி நின்றவர்களைப் பார்த்து தமது அருளைப் புன்னகையோடு குழைத்து அளித்தார்.
வாருங்கள். பாரதம் வலம் வந்த பாதமலர்களுக்கு பூஜைகள் செய்திடுவோம்!

 

Monday, July 2, 2012

சிறுவயதில் இருந்தே மகா பெரியவரிடம் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவன் நான். எனது சட்டைப் பையில், எப்போதும் அவரது புகைப்படத்தை வைத்திருப்பேன்.
அவரது திருவுருவப் படங்கள் எங்கு கிடைத்தாலும், வாங்கி பத்திரப்படுத்துவது வழக்கம். இன்றும் அவரை அனுதினமும் வணங்கி, பிரார்த்தித்து வருகிறேன். அந்த கருணாமூர்த்தியின் அருட் கடாட்சத்தை மெய்ப்பிக்கும் ஒரு சம்பவம்:
நானும் என் மனைவியும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள். எங்களுக்கு ஒரு மகன்; ஒரு மகள்.
என் மகன் ராமனாதன் பி.எஸ்ஸி. மற்றும் எம்.பி.ஏ. முடித்து விட்டு, கல்லூரி விரிவுரையாளருக்கான அகில இந்திய தேர்விலும் (நெட்) தேர்ச்சி பெற்றான். இதன் பிறகு தனியார் மற்றும் அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தான். ‘படித்த படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே’ எனும் வேதனையும் ஏக்கமும் எங்களை வாட்டின.
இந்த நிலையில், ‘காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திரர் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பிரிவில், காலமுறை ஊதியத்தில், விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்தது. எங்கள் மகனும் உடனடியாக இதற்கு விண்ணப்பித்தான். நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டான். ஆனால், நீண்ட நாட்களாகியும் பதிலேதும் வரவில்லை. இதனால் மிகவும் வருந்திய என் மகனுக்குப் பல வகையிலும் ஆறுதல் கூறினோம்.
ஒரு நாள்… எப்போதும் போல, காலையில் எழுந்து காஞ்சிப் பெரியவரை வணங்கினேன். வேலை கிடைக்காமல் வருந்தும் என் மகனின் நிலை குறித்து, உணர்ச்சிபூர்வமாக மகா பெரியவரிடம் பிரார்த்தித்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது.
காஞ்சி (ஏனாத்தூர்) ஸ்ரீசந்திரசேகரேந்திர பல்கலைக் கழகத்தில் இருந்து வந்த அழைப்பு தான் அது! எம்.பி.ஏ. துறையின் விரிவுரையாளராக மகன் தேர்வாகி விட்டதையும், அதற்கான உத்தரவு கூரியரில் அனுப்பப்பட்டுள்ளதையும் தொலைபேசியில் தெரிவித்தனர்.
இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனேன். காஞ்சி மகா பெரியவரை உள்ளம் உருக பிரார்த்தித்த வேளையில்… அவரது பெயரால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில் மகனுக்கு வேலை கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்து போனோம்.
அதுமட்டுமா? அந்த மகான் வாழ்ந்த பூமியில்…சங்கர மடத்துக்கு அருகிலேயே தற்போது வசித்து வருகிறோம். மகனது வேலை, சங்கர மடத்தில் வழிபாடு… என நிம்மதியாகக் செல்கிறது ஓய்வு காலம். காஞ்சிப் பெரியவரின் கருணையே கருணை!
-ச. வெங்கடேஸ்வரன், காஞ்சிபுரம்

 

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top